--புவனேஷ்-- எழுதியவை | அக்டோபர் 1, 2008

முன்னுரை!

சுட்ட பழம்! இந்த பெயரை பார்த்து ஏதோ இது “COPY” அடிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இடுகைனு நினைக்காதிங்க! இது அது இல்ல! இதில் மோகன் (மோகன) படமான சுட்டபழம் மாதிரி எதுவும் இருக்காது! நம்ம “S.J.Suryah” மாதிரி சொல்லனும்னா நான் இப்போ திருந்திட்டேன்! அப்பறம் “ஏன்டா சுட்டபழம்னு ஒரு பேரு?”-னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது (இத தப்பி தவறி யாராவது படிச்சா கேட்பீங்க!). இது நட்பு!! என் நண்பன் பிரவீன் நிறைய கதை எழுதறான்! கவிதை எழுதறான்! ஒரு “Blog” ஆரம்பின்னு சொன்னா கேட்கல! அதான்! இங்க அவன் கதைகளை உங்களுக்காக சுட்டு (அல்லது சுட சுட) தருகிறேன்! அவன் கதைகளில் அவன் பெயர் இருக்கும்! பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும்! நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்! இனி உங்கள் பாடு அவன் பாடு! அவன் கதைகளுக்கு “Mark” போடும் வேலை உங்களுக்கு!

அவன் கதை விரைவில்! காத்திருங்கள்! (நீங்கள் படிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்!)
நன்றி !

--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 5, 2009

ஆசையே அலை போலே..

ஆசையே அலை போலே..” என்று என் கைபேசி பாட தூக்கம் கலையாமல் அதை எடுத்தேன்..

 ஹலோ வினோத்..

 ஆமாங்க

 யாரு பேசறேன்னு தெரியுதா ??

 கண்டுப்பிடிக்கறேன்.. நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க..

 சரி கேளுங்க .. 

நீங்க வழக்கமா எத்தன மணிக்கு எழுந்திருபீங்க

 ஆறரை மணி 

 அப்ப நான் அலாரம் வெச்சு எழுந்து அஞ்சரை மணிக்கு கால் பண்ணறேன்.. நீங்க கண்டுபிடீங்க.. ஓகே வா ??

 அய்யய்யோ சாரி.. நீங்க தூங்கிட்டி இருந்தீங்களா..

 “இல்லங்க நீச்சல் அடுசுட்டு இருக்கேன்.. இருங்க கரை ஒதுங்கிக்கறேன்!”

 நான் வேணா அப்புறம் கூப்பிடட்டா..

 வேண்டாங்க எழுந்துட்டேன்.. என்னோட அத்த பொண்ணு கூட டூயட் பாடிட்டு இருந்தேன், அப்ப பாத்து எழுப்பி விட்டுடீங்க அந்த கடுப்பு தான்.. 

 ஹி ஹி.. வெரி சாரி ங்க.. உங்க அத பொண்ணு பேரு என்ன ??

 ஹ்ம்ம்.. தேனி குஜலாம்பாள்.. உங்க பேர மொதல்ல சொல்லுங்க..

 நான் உங்க அத்த பொண்ணுதான்.. ஆனா குஜலாம்பாள் இல்ல.. விமலா

 (படுத்துக்கொண்டு இருந்த நான் படார் என்று எழுந்து உக்காந்தேன்..) “ய்ய்.. யாரு”

 ஹி ஹி ஹி .. வேணும்னா டூயட் கன்ட்டிநியூ செய்யலாமா ?? 

நிஜமா விமலா தான் பேசறதா ??

 அட ஆமாப்பா.. நம்பு..

 நானும் நீயும் டூயட் பாடுனா அருண் என்ன செய்வான் ?

 ஹே.. ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல நானும் அவனும் சேந்து விளையாடுனது பிடிக்காம நீ என்ன அடுச்சு.. நான் அழுது.. உங்க அம்மா அத பாத்து உன்ன அடிக்க.. எங்க அப்பா என்ன போட்டு அடிக்க.. ஒரே பாச மழை இல்ல?

 திருத்தம்.. அது நீங்க சேந்து விளையாண்டதுக்கு அடிக்கல.. நீங்க ரெண்டு பேரும் சேந்து என்ன பிஸ்கட் தராம கடுப்படுச்சீங்க..

 ஆமா.. உன்ன கடுப்படிக்கறது தான் எங்க விளையாட்டு.. 

நாம அப்ப தான் கடைசியா பாத்தோம்.. இல்ல??

ஆமா.. அப்புறம் நாங்க பாம்பே போய்டோம்.. நான் அத்தை கிட்ட பேசுவேன்..நீ என்ன மறந்துட்டியா?

 அது எப்படி மறக்க முடியும்? நீ தான் என் காலுல மார்க் போட்டுட்டு போயிருக்கியே?

 நான் உன்னக்கு மார்க் போட்டனா? அப்படியே போட்டாலும் பெயில் மார்க் தான் போடுவேன்.. ஹி ஹி!

 மொக்க மொக்க..  அன்னிக்கு உங்க அப்பா உன்ன அடிக்க ஏதோ எடுத்தாரு நான் குறுக்கால வந்து தடுத்தப்போ அதுல இருந்த ஆணி கிளுச்சிருச்சு.. ல ல லா.. லல்ல ல ல லா ..

இப்படியே மியூசிக் போடு.. மொதல் நாளே லேட்டா தான் போவ.. நம்ம கம்பெனில எச்.ஆர் எவனும் விக்கரமன் படத்துல வரவங்க மாதிரி இல்ல.. எல்லாம் பேரரசு படத்துல வரவங்க மாதிரி இருப்பாங்க.. நாளைக்கு நான் உனக்கு மியூசிக் போடறேன் “டண்டநக்கா .. டணுக்குனக்கா.. டண்டனக்கா.. “

 ஐயோ.. ஆமா.. பை பை.. இது தான் என் நம்பர் அப்புறம் கால் பண்ணு.. 

************

 ஹலோ..

 சொல்லு டா..

 (டா வா???) சாப்படபோலாம?

போலாமவா? மவனே உனக்காக தான் வைடிங்.. 

 சரி சரி.. வா.. கான்டீன் போலாம்.

என்ன டா கான்டீன் சாப்பாடு இப்படி இருக்கு ??

மொதல் வெளிய சாப்படா எந்த சாப்பாடும் இப்படி தான் இருக்கும்.. போக போக பழக்கம் ஆகிடும்!

சரி பிரேக் போகும்போது கால் பண்ணறேன்.. 

******

ஹலோ.. எனக்கு ட்ரைனிங் முடுஞ்சுது.. 

நானும் என் வேலைய முடிச்சுட்டேன்..

நாம என்ன தகவல் பரிமாற்ற ஒப்பந்தாம போட்டுருக்கோம்.. எனக்கு ட்ரைனிங் முடுஞ்சுருச்சுனா கிளம்பிவா னு அர்த்தம்..  

மாரியாத்தா.. எனக்கு இந்த பொண்ணுங்க கூட எல்லாம் பேசி பழக்கம் இல்ல.. சோ நீ நேராவே சொல்லு..

சீக்கிரம் கெளம்பு..

 ஹாஸ்டல் போக என்ன இவ்வளவு அவசரம் ?

 உனக்கு தெருஞ்ச கெட்ட வார்த்த ரெண்டு மூணு சொல்லிகொடேன்..

 எதுக்கு?

 உன்ன திட்ட தான்..  ஹாஸ்டல் போகவா உன்ன கூப்பிடறேன் ?

 சரி சரி.. இரு வரேன்.. நான் பைக் எடுத்துட்டு வரேன்.. நீ கம்பெனி வாசல்ல நில்லு!

 ***************

 இது என்னங்க அதுக்குள்ள ராத்திரி ரெண்டு ஆகிடுச்சு?? அவள டிராப் செஞ்சுட்டு வரும்போது மணி பத்து.. அதுக்குள்ள நாலு மணிநேரம் ஓடிருச்சு.. இத்தன நேரம் இன்னைக்கு நடந்தத பத்தி மட்டும் நெனச்சுட்டு இருக்கேன்.. நெனச்சது எல்லாம் அவ கூட இருந்த நேரம் மட்டும்!

 நான் இவ்வளவு ப்ரீயா எந்த பொண்ணு கிட்டயும் பேசுனது இல்லங்க.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. இதுக்கு பேரு தான் அதா?? அட விடுங்க வெக்கப்படறேன்.. என்கிட்டே போய் அதுனா எதுன்னு எல்லாம் கேட்டுகிட்டு.. அதே தான்!!

 நாளைக்கு காலைல பசிக்குமா, நைட் தூக்கம் வருமானு த்ரில்லிங்கா இருக்கு.. இந்த தமிழ் படத்துல வேற அது வந்துச்சுனா இது எல்லாம் வரதே. எனக்கு வேற அது வந்து மொதல் நாளா.. அதான் த்ரில்!

 கண்டதும் காதல் வரும் தெரியும்.. இது என்னங்க எனக்கு கண்ட நேரத்துல காதல்?? நான் தூங்க ட்ரை பண்றேன்..

  **********

 ஆசையே அலைபோலே..

 ஹலோ.. சொல்லுங்கம்மா..

 உங்க அத்த பேசுனாங்கப்பா,, சொந்தம் விட்டு போய்டக்கூடாதுனு விமலாவ சொந்தத்துல கட்டி தரலாம்னு இருக்காங்களாம்.. உனக்கு தான் அவளப்பத்தி பேசுனவே சின்ன வயசுல இருந்து பிடிக்காதே.. அதான் அருண் கிட்ட பேச சொல்லீட்டேன்ப்பா,..

 ம்மா.. என்ன பேசவே விடமாடீங்களா.. காலங்காத்தால.. (என்று எரிந்தேன்..)

 சாரிப்பா.. அவள பத்தி பேசுனா உனக்கு பிடிக்காதுன்னு தெருஞ்சும் காலங்காத்தால இத சொல்லீருக்க கூடாது.. அவ உன் நம்பர் கேட்டா.. கொடுத்தேன்.. கூப்டாளா..

 ம்ம்

 சரி.. நான் அப்புறம் கூப்பிடறேன்..

 *********

 “ஆசையே அலைபோலே.. நாமெல்லாம் அதேன் மேலே.. வாழும் நாளில் வாழ்நாளிலே.. வாழ்நாளிலே

 அதுக்குமேல அந்த பாட்டை கேக்க பிடிக்கல..  விளையாட்டா வெச்ச பாட்டு இப்படி விளையாடுது.. செல்லை அமைதியாக்கி யார் என்று பார்த்தேன் “விமி மை லைப்”  காலிங் என்று வந்தது. அப்படியே வைத்துவிட்டு படுத்தேன்… ஹலோ..

நேத்து தான் இது தான் லைப் னு முடிவு செஞ்சேன்.. இப்ப லைப் எனக்கு இது தான் லைப் னு பாடம் எடுக்குது.. ச்ச. இது தான் லைப்!

 விடவில்லை சளைக்காமல் அஞ்சு கால் வந்தது!!

 இத்தன நேரம் என்ன செஞ்ச ?

 தூங்கிட்டு இருந்தேன்

கனவு காணலையா??

 (மயி..)  எல்லாம் கனவு தான்..

 டூயட்டா  ??

 இல்ல ?

 ஏன் ?? அதான் சொன்னேன் இல்ல.. எல்லாம் கனவு தான்!

 நீ ஏன் தத்துவமா பேசற.. சம் திங் ராங்..  நான் யாரு பேசறேன்னாவது தெரியுதா ?

 விமலா..

 ஹி ஹி.. இங்க தான் ட்விஸ்ட் வெச்சிருக்கோம்.. நான் தேனி குஜலாம்பாள்.. டூயட் பாடலாமா ?

 எப்ப இருந்து பேர மாத்துன?

 இப்ப தான்.. நீ உங்க அம்மா கிட்ட எரிஞ்சு விழுந்ததுல இருந்து..

 

--புவனேஷ்-- எழுதியவை | அக்டோபர் 27, 2009

சொன்னா கேளுங்க.. ப்ளீஸ்!

டிஸ்கி:

நீங்க எப்பவும் டிஸ்கிய கடைசில தான் படிச்சிருப்பீங்க.. புது படத்த டைரக்ட் செய்யப்போறவர மாதிரி சொல்லனும்னா “இது கொஞ்சம் வித்யாசமான ப்ளாக்.. அதான் முதலே டிஸ்கி!!”. இதையே ஏன் கவர்ச்சியா நடிக்கறீங்கனு ஹீரோயின் கிட்ட கேட்டா அவங்க சொல்லற பதில் மாதிரி சொல்லனும்னா “இந்த கதை (ப்ளாக்) க்கு இது தேவை பட்டுது” !!

 

நீ ஏன் ஒன்னும் எழுதுலனு போன், மெயில், சாட் மூலம் தொடர்பு கொண்டு கேட்டவங்களுக்கு (கெட்டவங்களுக்கு??) இது சமர்ப்பணம்!! கேட்காதவங்களுக்கு அடுத்த பதிவ சமர்ப்பணம் செய்யலாம்னு இருக்கேன்!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படித்தவுடன் உடைத்துவிடவும்!!

 

 

சொல் பேச்சு கேட்காதவங்களுக்கு:</span>

இப்ப சொல்லுங்க தொடர்புகொண்டு கெட்டவங்கங்கறது தான சரி??

--புவனேஷ்-- எழுதியவை | அக்டோபர் 14, 2009

தீபாவளி கதறல்!

நல்ல கவிதைய எதிர்பாக்கறவங்க நண்பர் அடலேறு எழுதின ஒரிஜினல் கவிதைய படிச்சுகோங்க.. இனி வருபவை மொக்கை மொக்கை.. மொக்கை மட்டுமே !

அடலேறு, முதல்ல வெரி சாரி.. ரெண்டாவது நடக்கபோற விபரீதம் தெரியாம அப்ராணியா படம் கொடுத்து உதவி செஞ்சதுக்கு நன்றி!! (இப்படி அப்ராணியா இருக்காதண்ணே.. )

என்னது?? பஞ்ச் டயலாக் சொன்னாதான் இப்ப எல்லாம் அட்வைஸ் செய்யறதா எத்துக்கறாங்களா?? சரி உங்க ‘தல‘( இல்லைனா ‘தள‘) எழுத்து!!

இங்க அனானியா கூட இருந்திறலாம் அப்ராணியா இருக்கவே முடியாது!! (நீங்க படிக்க கூடாதுன்னு தான் கண்ணு வலிக்கற கலர்.. அதையும் படிச்சுட்டு என்னை கொறை சொல்ல கூடாது!)

 

Kav-1

 

Kav-2

 

Kav-3

 

Kav-4

 

Kav-5

 

Kav-6

 

Kav-7

--புவனேஷ்-- எழுதியவை | அக்டோபர் 1, 2009

ஒரு வயசு பொண்ணு!!

ஒரு வயசு பொண்ணுங்க.. சிலருக்கு அவள புடிக்கும்.. சிலர் அவள பாக்கவே மாட்டாங்க.. ஆனா ஒரு நாலஞ்சு பேரு திரும்ப திரும்ப அவள வந்து பாக்கறாங்க.. சில நேரம் நீ இப்படி இருக்கலாம், அப்படி இரு, இப்படியும் இருந்திருக்கலாமோனு  சொல்லீட்டு போவாங்க! அப்படி வந்து பாத்துட்டு ஏதாவது சொல்லீட்டு போறதுக்கு காரணம் அவள பிடிச்சிருக்கா இல்ல இன்னும் ஒரு வருஷம் கலுச்சு இவ நல்லா இருப்பானு நம்பிக்கையா இல்ல அந்த பொண்ண வெச்சு ‘தொழில்’ செய்யறவனோட இருக்கற நட்பா, இல்ல அவன் கூட இருக்கற பழக்கமா னு தெரியல!! ஆனா வருவாங்க.. அவளுக்கு ஆறுதலா நாலு நல்ல வார்த்த சொல்லீட்டு போவாங்க.. இவங்க எல்லாம் இல்லைனா அந்த ‘தொழில்’காரன் அவள என்னிக்கோ கொன்னு போட்டிருப்பான்!! அந்த தொழில் செய்யரவனும் அடிக்கடி வரவங்கள பாத்து “இந்த பொண்ணு நல்லா இருக்கா?” னு அடிக்கடி கேட்டுட்டே இருந்தான். அதுக்கு அவங்க சொன்ன பதில்…

 

இருங்க.. நான் உங்க கற்பனைல விளையாட விரும்பல.. நான் சொல்லற வயசு பொண்ணு என் எழுத்து தான்.. அவ ஒரு வயசு பொண்ணு தான் ஆனா ஒரு “வயசு பொண்ணு” (நன்றி திரு ரா. பார்த்திபன் சார்!)..

நேத்து தான் பதிவு எழுத வந்தா மாதிரி இருக்கு ஆனா நேத்தோட ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சு!! தொடர்ந்த வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!!

நான் சோர்ந்து போறப்ப எல்லாம் யாராவது வந்து ஆதரவு தந்தீங்க.. நன்றி நன்றி நன்றி!! ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்.. நான் படிச்ச வரைக்கும் என்னை விட எல்லாம் நல்லா எழுதறாங்க.. பொறாமையா இருக்கும்/ இருக்கு… சில சமையம் இனி மேல் எழுத கூடாதுனு கூட தோணும்.. (ஆனா இதுக்கு எல்லாம் பயந்தா “தொழில்” பண்ண முடியுமா னு போய்ட்டே இருக்கேன்!!)!! நான் இப்படி சொல்லறது பலருக்கு ஏதோ ‘பார்மல்’லா சொல்லற மாதிரி இருக்கும்.. நான் ஏதாவது கதை படிச்சு அசந்தா சரவணன் கிட்ட வழக்கமா சொல்லறது இது தான்!(அவன் திருப்பி “அப்ப நீ  எழுதறத நிறுத்து”னு சொல்லமாட்டான்ங்கற தைரியம் தான்!! வேற என்ன?) சமீபத்தில் அசந்தது ‘அடலேறு’வின் காதல் கவிதை !

 நான் இந்த பதிவுலகத்துக்கு ஒன்னும் உருப்படியா செய்யல!! இந்த பதிவுலகம் எனக்கு தந்தது என்னனு யோசிச்சா, நானும் அறிவாளி மாதிரி நடிக்க நிறைய யூஸ் ஆகுது.. யாரவது விடிய விடிய புக் படிச்சு அதுல இருக்கறத ஏதாவது விவாதத்துக்கு மேற்கோள் காட்டுவாங்க.. நாம அத படிச்சுட்டு நண்பர்கள் கிட்ட பேசும்போதும், இல்ல குடும்பத்துல பேசும்போதும், நம்ம தாத்தா காலத்து அரசியல அப்பா கிட்ட பேசும்போதும் “பெரியார் என்ன செஞ்சாருன்னா..” “அண்ணா ஒரு சட்டமன்ற கூட்டத்துல.. “னு அள்ளிவிடனும்.. (உண்மைய சொல்லுங்க.. நீங்களும் இப்படி தான செய்யறீங்க?? ).. அரசியல் வட்டம் இல்லாதவங்களுக்கு இருக்கவே இருக்கு சினிமா!!  கிம் கி டுக் தெரியுமா? லெமன் ட்ரீ தெரியுமா னு அடிச்சு விடுங்க.. அன்பே சிவம் படத்துல கமல் வாய்ல இருந்து செகப்பு கலர் ரத்தம் துப்புவாரு பாத்திருக்கியா? அது ஒரு குறியீடுனு சொல்லுங்க.. அவங்களுக்கு என்ன மறுத்து பேசவா போறாங்க? நீங்க தான் அவங்கள பொறுத்த வரைக்கும் அறிவாளி வட்டத்துக்குள்ள போய்டீங்களே.. அப்படியும் ஏதாவது ஆர்வகோளாறு என்ன குறியீடுனு கேட்டா, ரத்தம் செகப்பா இருந்துச்சு பாத்தியா அது அவரு கம்யூனிஸ்ட்ங்கற குறியீடுனு வாய்க்கு வந்தத சொல்லுங்க!! நம்புவாங்க! ரத்தம் வேற என்ன கலர்ல டா இருக்கும் ங்கொய்யாலனு எல்லாம் கேக்க மாட்டாங்க! ஆனா அப்படி செய்யும்போது தமிழ் இணையம் பக்கம் வராத ஆளுகளா பாத்து கூட்டு நாட்டு வெச்சுக்கறது உங்க சாமர்த்தியம்!! அப்புறம் இந்த வார்த்தைய சொல்லாமா தமிழ் இணையம்னு சொன்னா வரலாறு மட்டும் இல்ல “காட் பாதர்” கூட என்ன மன்னிக்காது.. “பின்நவினத்துவம்” .. ( அந்த வார்த்தைய எப்படி வாக்கியத்துல அடக்கறதுனு இந்த சின்ன குழந்தைக்கு  தெரியாததால ஒன்னும் சொல்லல..! )

 சரி கடைசியா.. இல்ல வேண்டாம்.. இது கடைசியா சொல்லறதா இருக்காதுங்கற நம்பிக்கையோட

 

நன்றி நன்றி நன்றி !! நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் !!

பழைய பதிவுகள் »

வகைகள்