வாங்க நண்பரகளே!
உங்க எல்லோருக்கும் புது வருஷம் நல்லா ஆரம்பிச்சு இருக்கும்னு நம்பறேன்! வருஷம் முழுவதும் சந்தோசம் பரவ வாழ்த்துக்கள்!!
எனக்கு ஆரம்பமே அமர்க்களம் தான்!! காலைல எழுந்து முதல் வேலையா டி.வி போட்டேன், அமர்க்களம் படத்துல இருந்து பாட்டு ஓடிட்டு இருந்துச்சு! அதனால தான் சொன்னேன் எனக்கு ஆரம்பமே அமர்க்களம்னு! என் நண்பன் ஒருவனுக்கு ஆரம்பமே அட்டகாசம்! (நீங்களும் உங்கள் ஆரம்பத்தை பகிர்ந்துகொள்ளலாம்)!
நீங்க எல்லாம் சிறப்பு நிகழ்ச்சி பாத்து என்ஜாய் பண்ணி இருப்பீங்க! பண்டிகைனாலும் விடுமுறை நாள்னாலும் (நன்றி மோகன்!) சிறப்பு நிகழ்ச்சி போடறாங்க! அதனால அந்த பண்டிகையோட சிறப்பு கம்மி ஆகுது! புது வருசமும் அதுவுமா குடும்பத்த கண்டுக்காம டி.வி பாத்து இருந்தீங்கனா இன்னைக்கு அதுக்கு சேதி பேசுங்க! (அப்பாடி எப்படியோ மெசேஜ் சொல்லியாச்சு!)
நான் என் புத்தாண்டை தனிமையா கொண்டாடினேன்! எங்க மேனேஜர் கூப்ட்டு “நீ ஜனவரி 1 ஆபீஸ் வர முடியுமான்னு” கேட்டாரு! ஆடு தலைல தண்ணி அடுச்ச உடனே அது தலை ஆட்ற மாதிரி என் தலை என்னை கேட்காமலேயே சரின்னு ஆடிருச்சு. (அந்த ஆளு, என் மேனேஜர் , அந்த அருவா என் அப்பரைசல் ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ ?? )
சரி ஊரே லேஆப் பயத்துல இருக்கு, இனி எனக்கு அந்த பயம் இல்லை! பின்ன வருசத்துல மொதல் நாள் வேலை செஞ்சா வருஷம் முழுவதும் வேலை இருக்கும் இல்ல ?( எப்படி நம்ம லாஜிக் ?) சரி வாக்கு கொடுத்துடோமேனு இங்க வந்தா, மொத்த கம்பெனில நான் ஒருத்தன் தான் வேலை செய்யறேன்!
அதே மாதிரி இந்த புத்தாண்டை நான் சோறு தண்ணி இல்லாமல் கொண்டாடினேன்!!
தலை ஆட்டி லேட்டா தான் ஞாபகம் வந்துச்சு ” நாம் இருப்பது சிறுசேரி. சோறு கிடைக்காது”. இதை போய் என் மேனேஜரிடம் சொன்னால் அவர் “நீ சாப்டுட்டு பத்தரை மணிக்கு வா, அஞ்சரைக்கு கிளம்பிகோ” என்றார். மக்களே நீங்களே சொல்லுங்க ஒரு பெரிய மனுஷன் பேசற பேச்சா இது?? அப்புறம் மதியானம் ஸ்நாக்ஸ் சாப்ட்டு ஓடுனேன்!
சோறு தானா கிடைகல, தண்ணி கிடைச்சுருக்கும் இல்லன்னு கேட்கறீங்களா?? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லுவேன், அத நீங்க கேளுங்க! (எப்படி டா புவனேஷ்? இப்படி கலக்கற? என்னமோ போடா!!)
எனக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாததால் தண்ணியும் அடிக்கல! இப்போ புருஞ்சுதா?
படிச்சது படிச்சுட்டீங்க எதுனா சொல்லிட்டு போங்க!!

6:53 மு.பகல் இல் ஜனவரி 5, 2009 |
//எனக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாததால் தண்ணியும் அடிக்கல! இப்போ புருஞ்சுதா?//
எதுக்கு தண்ணிய அடிகறீங்க, குடிக்க வேண்டியது தானே?
6:54 மு.பகல் இல் ஜனவரி 5, 2009 |
நான் தாம்பா முதல்ல வந்தேன்.
6:56 மு.பகல் இல் ஜனவரி 5, 2009 |
//நான் தாம்பா முதல்ல வந்தேன்.
ஆமா ராசா!
7:01 மு.பகல் இல் ஜனவரி 5, 2009 |
//எதுக்கு தண்ணிய அடிகறீங்க, குடிக்க வேண்டியது தானே?
நேக்கு தெரியல!
6:10 மு.பகல் இல் ஜனவரி 6, 2009 |
வருடம் முழுவதும் சோறு தண்ணியில்லாமல் மாங்கு மாங்கு என்று உழைக்க(?) வாழ்த்துகிறேன்.
6:16 மு.பகல் இல் ஜனவரி 6, 2009 |
டேய் உண்மைய சொல்லு… நீ வேலை பாத்த???
நம்ம எல்லாம் எப்பவும் ஆபீஸ் போனோம்னு தான் சொல்லணும்… வேலை பாத்தோம்னு சொல்ல கூடாது
6:24 மு.பகல் இல் ஜனவரி 6, 2009 |
//வருடம் முழுவதும் சோறு தண்ணியில்லாமல் மாங்கு மாங்கு என்று உழைக்க(?) வாழ்த்துகிறேன்.
இது வாழ்த்தா சாபமா ?? அது என்ன அக்கா உழைக்க னு போட்டு ஒரு கேள்விக்குறி ?? ( அதுக்கு ஆச்சிர்யக்குறி கரக்டா இருக்கும்னு நினைக்கிறேன்!!)
6:25 மு.பகல் இல் ஜனவரி 6, 2009 |
//நீ வேலை பாத்த???
நானும் எங்க மேனேஜர் கிட்ட “நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு சொல்லி பாத்தேன்”.. அவரு கேட்கல!
12:48 பிற்பகல் இல் ஜனவரி 6, 2009 |
// நான் என் புத்தாண்டை தனிமையா கொண்டாடினேன்! //
தனிமையாகவா இல்லை தண்ணி யாகவா?
12:48 பிற்பகல் இல் ஜனவரி 6, 2009 |
எனக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாததால் தண்ணியும் அடிக்கல! இப்போ புருஞ்சுதா?
பேஷா புரிஞ்சது…
நீ பொய் கூட சொல்வேன்னு …
3:45 மு.பகல் இல் ஜனவரி 7, 2009 |
//தனிமையாகவா இல்லை தண்ணி யாகவா?
சிவ சிவா!!
3:45 மு.பகல் இல் ஜனவரி 7, 2009 |
//பேஷா புரிஞ்சது…
நீ பொய் கூட சொல்வேன்னு …//
நான் அவன் இல்லை!
4:24 பிற்பகல் இல் ஜனவரி 7, 2009 |
He he he!!!
3:58 மு.பகல் இல் ஜனவரி 9, 2009 |
அடடா… நான் புது வருசத்தோட முதல் நாள் பகல பாக்கவே இல்ல… அப்போ வருஷம் முழுக்க பாக்க முடியாதா???
7:23 மு.பகல் இல் ஜனவரி 9, 2009 |
//பின்ன வருசத்துல மொதல் நாள் வேலை செஞ்சா வருஷம் முழுவதும் வேலை இருக்கும் இல்ல //
அண்ணே இது புதுசா இருக்குன்னே …
//எனக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாததால் தண்ணியும் அடிக்கல! இப்போ புருஞ்சுதா? //
லைட்டா
10:09 மு.பகல் இல் ஜனவரி 11, 2009 |
எனக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாததால் தண்ணியும் அடிக்கல! இப்போ புருஞ்சுதா?
நாங்க நம்பனுமாக்கும்……
விடுமுறையிலை இருந்த்தாலை வலைப்பக்கமே வரமுடியலைங்க…
6:49 மு.பகல் இல் ஜனவரி 12, 2009 |
//நாங்க நம்பனுமாக்கும்……
என்னங்க இது? ஒரு பச்ச மண்ண இப்படி சந்தேக படலாமா ??
//விடுமுறையிலை இருந்த்தாலை வலைப்பக்கமே வரமுடியலைங்க…//
விடுமுறை கேளிக்கை எல்லாம் முடுஞ்சுதா??
6:53 மு.பகல் இல் ஜனவரி 12, 2009 |
//அண்ணே இது புதுசா இருக்குன்னே …//
அப்புடியா??
6:54 மு.பகல் இல் ஜனவரி 12, 2009 |
//அடடா… நான் புது வருசத்தோட முதல் நாள் பகல பாக்கவே இல்ல… அப்போ வருஷம் முழுக்க பாக்க முடியாதா???//
யோவ் சரவணா, அவன் அவன் வேலைக்கு வந்த கடுப்புல இருக்கான், நீ வேற ஒரு நாள் முழுசா தூங்கினேன்னு கடுப்படிக்காத!
3:50 பிற்பகல் இல் மே 26, 2009 |
// ஆடு தலைல தண்ணி அடுச்ச உடனே அது தலை ஆட்ற மாதிரி என் தலை என்னை கேட்காமலேயே சரின்னு ஆடிருச்சு. (அந்த ஆளு, என் மேனேஜர் , அந்த அருவா என் அப்பரைசல் ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ ?? ) //
Besh besh…..இது ரொம்ப நல்லா இருக்கு…. Nice creativity…