ரொம்ப நாள் கழுச்சு எழுதனும்னு முடிவு செஞ்சாச்சு.. ஆனா வழக்கம் போல என்ன எழுதறதுனு தெரியல..
சரி கழுத, யாருக்காவது அட்வைஸ் செய்யறேன்!!
அட்வைஸ் செய்யலாம் ஆனா யாருக்கு செய்யறது?? எனக்கு அரசியல் தெரியும், ஆனா அதுல இப்பதான் நீந்தி பழகறேன்(!). சரி சினிமா ல இருக்கறவங்க தான் பொது சொத்து. யார் வேணா அவங்களுக்கு அட்வைஸ் சொல்லலாம்!!
நான் ஜாக்கிக்கு அட்வைஸ் செய்யலாம்னு பாத்தா நமக்கு சீன மொழி நோ கமிங்!! தலைவர் ரஜினி க்கு அட்வைஸ் செய்ய சீமான், தங்கர், ராமு (நான் தாஸ் னு போடுவேன்.. அதுக்கு அவங்க ராமதாசு னு போட சொல்லுவாங்க.. ) நிறைய பேரு இருக்காங்க.. கமல்ஜிக்கு கிருஷ்ணசாமி, புதுசா ஏதோ ஒரு இயக்கம்னு ஆள் இருக்கு!!
இப்ப நான் யாருக்கு அட்வைஸ் செய்ய?? “முதல்ல சொன்னதே இப்பவும் சொல்லறேன்.. ” சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல!!”
அட..” சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறது போல!!” — இந்த வார்த்தைகளுக்குள்ள ஒரு ஹீரோ இருக்கார்.. கரெக்ட் விஜய் தான் நம்ம ஹீரோ!! ஹே.. ஹே!!
விஜய் சார்.. தலைவர காப்பி அடிக்கறது ஓகே.. ஆனா அத சரியா செய்யுங்க ப்ளீஸ்! இன்னைக்கு வரைக்கும் ஹீரோயச படங்களுக்கு சிகரமா இருக்கற பாட்ஷா ல கூட தலைவர வில்லன் புகழ்ந்து பேசமாட்டான்!! கொஞ்சம் யோசிங்க அந்த படத்துல ரகுவரன் இப்படி பேசிருந்தா காமெடி ஆகிருக்காது ? “” நாம ஆட்டோ ரேஸ் வெச்சா அவன் ஆட்டோக்கரனா இருக்கான், ஆர்ம்ஸ் (arms) யூஸ் செஞ்சா அவன் ஆர்மிக்கரனா இருக்கான்”.. இந்த மாதிரி தான் உங்க படத்துல வில்லன் பேசற வசனம் இருக்கு!
ஏன் சார் உங்க படத்துல வில்லன் கூட உங்கள புகழ்ந்துட்டே இருக்கான்?
அடுத்து ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியற லாஜிக்!! கெத்தான வில்லன, சாதாரண ஆள் ஜெய்க்கும்போது அவன் ஹீரோ ஆகறான்!! படமும் சும்மா அதிரும்!! உங்க கில்லி கூட சூர் ஷாட் ஆனது இப்படித்தான்! சாதாரண வில்லன கெத்தான ஹீரோ அடுச்சா, படம் வேட்டைக்காரன் மாதிரி தான் இருக்கும்!
தலைவர் படம் பாத்தீங்கனா அண்ணாமலைக்கு அப்புறம் வீரா னு ஒரு காமெடி படம் கொடுத்துட்டு தான் பாட்ஷா பக்கம் வந்தாரு! அதாவது ஆக்சன் தேகட்ட கூடாது !!
விலகி இருக்க வேண்டிய ஆள்: சொல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு! அவரு தான் உங்க அப்பா !
நீங்க வேணா அவருக்கு ஒரு கவிதை எழுதுங்க
அப்பா
நீங்க எனக்கு
ஆப்பா ??
வீட்டு பக்கம் விட கூடாத டைரக்டர்கள்: இந்த டைரக்டர் எல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் உங்க வீட்டு பக்கம் வராம பாத்துகோங்க!!
1. தரணி அண்ட் கோ !!
2. பேரரசு!!
வேலை செய்யவேண்டிய டைரக்டர்:
1. முருகதாஸ் – மாஸ் சுப்ஜெக்ட் நல்லா செய்வாரு!
2. லிங்குசாமி – இவ்வரும் சொதப்ப வாய்பிருக்கு!
- சிவாஜி பில்ம்ஸ்
- தாணு
ஏதோ என்னால முடுஞ்ச அட்வைஸ் சொல்லியாச்சு!!
குறுகுறுப்பு: தலைப்புல இருக்கற மாத்தவே முடியாத மேட்டர், நான் மொக்க போடறது!!

நான் தான் முதல்ல வந்திருக்கேன் போல….
அட்வைஸ்(!) எல்லாம் கொடுத்து மக்களை காப்பாற்றும் நினைக்கும் நல்ல மனசு படைத்த புவனேஷுக்கு ஏதாவது நல்ல பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.நல்லதா suggest பண்ணுங்கப்பா.
கவிதை நல்லாயிருக்கு தம்பி.
எழுதியவர் குந்தவை நாள் ஜூன் 1, 2010
நேரம் 10:01 மு.பகல்
எல்லாம் சரி தான்,
அந்த தங்க வேட்டைக்கு
விடய இப்பவாவது
சொல்லு ராசா…..
எழுதியவர் soundr நாள் ஜூன் 2, 2010
நேரம் 11:44 மு.பகல்
இன்னொரு விஷயமும் மாறல்ல தம்பி… பதிவை எழுதிவிட்டு காணாம போயிடுறது.
எழுதியவர் kunthavai நாள் ஜூன் 7, 2010
நேரம் 3:11 பிற்பகல்
“அப்பா
நீங்க எனக்கு
ஆப்பா ??”……….
ஹிஹிஹி………சூப்பர் பா………..
“மாப்பு
உங்க மொக்க
டாப்பு ??”…….
எழுதியவர் சுரேஷ் நாள் ஜூன் 9, 2010
நேரம் 11:08 மு.பகல்