--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 5, 2008

பிரவீன் – கதை இல்லை நிஜம்!


முன்னுரை எழுதிட்டு யோசிச்சேன், அதுல பிரவீன் பத்தி எதுவும் இல்ல! சரி, உங்களுக்காக அவனபத்தி ஒரு முன்னுரை! ஏதோ கதை எழுதறானு அவன ஏதோ ஒரு நல்லவன்னு நினைகதிங்க! அவனும் ஒரு தில்லாலங்கடி தான்! காபி சாப்பட போலாம்னு கிளம்புவோம்! வரவழில எதாவது பொண்ண பாத்து “அப்புறம்”-னு ஆரம்பிப்பான்.. அப்புறம் அந்தபுரம்னு நீங்க நினச்சா நான் பொறுப்பு இல்ல! பேசுவான் பேசுவான் பேசிகிட்டே இருப்பான் (பெண் விசிறிகள் இதை மனதில் வைத்துகொள்ளவும்)! நாங்க காபி சாப்ட்டு, அரட்டை அடுச்சு திரும்பி வரும்போது லைட்டா கடல தீஞ்சு வாசம் (எங்களை மாதிரி கடலை விரும்பிகளுக்கு அது வாசம்) வரும்! அந்தளவுக்கு கலகலன்னு எல்லார்கிட்டயும் பேசுவான்! எங்களை பாத்து கொஞ்சம் கூட சங்கடபடமா “பிரேக் போலாமான்னு” கேட்பான்!
இந்த கொடுமைய சகுச்சுட்டு, வீட்டுக்குவந்தா அங்க நைட் ரெண்டு மணி வரைக்கும் படிப்பான்! படிக்கறது ஒரு தப்பானு நினைக்காதிங்க.. அவன் படிக்கறது “SMS”. எனக்கெல்லாம் யாராவது மதியம் ரெண்டு மணிக்கு “SMS” அனுப்பறதே அதிசியம்! ஆனா “SIR”-கு ஆல் டைம் ஜாலி டைம்! இதை விட கொடுமை என்ன தெரியுமா, இவன்கூட தனியா ரூம்ல மாட்டறது! “கலகலன்னு எல்லார்கிட்டயும் பேசுவான்”-னு சொன்னேன் இல்ல? சாரிங்க! அத இப்படி மாத்திகோங்க! “கலகலன்னு எல்லா பொண்ணுககிட்டையும் பேசுவான்”. எங்கள் ரூமை பொருத்தவரையில் அவன் ஒரு “மௌன தளபதி” (ஜே. கே.ரித்திஷ் அடைமொழி வைக்கும் போது. என் நண்பனுக்கு என்ன குறைச்சல்?). ரூம்க்கு வந்தா கொஞ்ச நேரம் மௌனமா எங்ககூட உக்காந்து டிவி பார்ப்பான்! இந்தநேரத்தில்தான் எங்களுக்கு தரிசனம்! இந்த நேரத்தில் நாங்கள் எதாவது கேட்கவேண்டும் எனில் கேட்டுகொள்ளலம்! அவர் பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் கூறுவார்!
பிறகு பெட்ரூம் சென்று படிக்க (என்ன படிப்பான் என்று நீங்கள் யுகித்திர்க்ககூடும்) ஆரம்பிப்பான்! முக்கிய படிப்பை தொடரும் போது, எதாவது பெரிய புத்தகத்தை சிறிது படிப்பான்! சில நாட்களில் “தெரு விளக்கில் படித்த லிங்கன் (“abraham lincoln”- கு தமிழ் பெயர்) ” மாதிரி எதாவது தடிமனான புத்தகத்தை வீட்டு வாசலில் படிப்பான்! இவன் இப்படி படிப்பதை பார்த்து ஒருநாள் “இங்க “collecter”-கு படிக்கும் தம்பி யாருங்க” என்று கேட்டு பக்கத்து தெரு பெண்ணின் தந்தையும், அந்த பெண்ணும் வந்தனர். நாங்கள் பயந்தது போல் ஒன்றும் இல்லை. அவர் பெண்ணிற்கு பனிரெண்டாம் வகுப்பு டியூஷன் கேட்டு வந்தார்!
ஆனால் இந்த சம்பவம் எங்கள் ரூமில் பெரும் மாற்றத்தை, இல்லை இல்லை புரட்சியை உண்டாகியது! இப்போது அனைவரும் இரவு ஒரு மணிவரைக்கும் படிக்கிறோம் (அல்லது படிப்பது போல் நடிக்கிறோம்)! ஆனாலும் எங்களை கேட்டு ஒருவரும் வருவதில்லை!
இப்போதுகூட கதை எழுதிவைத்திருந்த “Notebook”ஐ ஏதோ ஒரு பெண்ணிடம் கொடுத்துள்ளான்! (எனவே கதை வெளி ஆகா இன்னும் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஆகும் என தெரிவித்துகொள்கிறேன்!!)
என்னடா இப்படி நண்பனுக்கு ப்லோக் ஆரம்பித்துவிட்டு இப்படி கவுக்கரானே என்று பீலிங் ஆகும் வாசகர்களுக்காக, இதோ கொஞ்சம் பீலிங் ஆகா
“தமிழ் மனப்பாட செய்யுள் படிக்கமுடியாம பள்ளிக்கு மட்டம் போட்ட அசோக் தான் இந்த அசோக் குமார் (). ஒவ்வொரு மனுசனுக்கும் வாழ்க்கையில் உந்துகோல ஒரு மனுஷன் இருப்பான்.எனக்கும் அப்படி ஒரு நண்பன் இருக்கான், சிகப்பு “Pant” (உண்மையாகவே அது அவன் மிகவும் விரும்பி அணியும் ஆடை) போட்ட என் ஆருயிர் நண்பன். சும்மா வெட்டித்தனமா பேசிட்டுஇருந்த என்ன இப்படி எழுத வெச்ச என் தோழன் பிரவீன் பாலகிருஷ்ணன். என் உயிருக்கும் மேலான பப்லூ. பிரேக் நேரத்துல காபி மட்டும் குடிச்ச என்ன பாத்து வருத்த கடல வாங்கி கொடுத்த என் பிரவீன். உண்மைலியே என் வாழ்கையில் நான் முதல் புக் படுச்சது அவன் காசுலதான்! எனக்குள்ள ஒரு இடுகன் இருக்கானு முதல் முதல சொன்னதே அவன் தான். எனக்குள்ள இடுகைனு கனவா உண்டாக்குன்னது அவன் தான். நான் கம்பெனி மாறுனதுக்கு அப்பறோம் அங்க செய்ய வேலை இல்ல. என்ன பண்றதுன்னு தெரியல. உலகமே “போர்” ஆயிடுச்சு. அப்போ என் நண்பன் பிரவீன்
“டே , இடுகை எழுதுனு” சொன்னான்.
“இடுகையா நானா எப்படிடா?” அப்படின்னு கேட்டேன்”
“டேய் நீ கதைக்கு கொடுத்தியே ஒரு முன்னுரை, அப்போ எல்லோரும் பாராட்டுனாங்கலே அது உன் எழுத்த மட்டும் இல்ல டா அதுல இருந்த மொக்கையையும் பாத்துதான்” னு சொன்னான்!
இந்த கடன நான் எப்படி திருப்பி தர போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னது இப்பவும் ஞபகதுல இருக்கு!
நீ எனக்கு தரவேண்டியது ஒன்னும் இல்லடா.நாளைக்கு நீ ஒரு இடுகன் ஆனதுக்கப்புறம், யாராவது இது யார் கதைனு கேட்டா, என் கதைய உன் கதைனு மட்டும் சொல்லிராத அது போதும்னு சொன்னான்!!
நான் இங்க “blog” எழுதறேன், ஆனால் என் நண்பன் எங்க “blog” எழுதறானு தெரியல!!”
பெரியவங்க “அசை தோசை அப்பளம் வடைன்னு சொல்லுவாங்க”
என்னை பொருத்தவரைக்கும் “அசை தோசை அப்பளம் நல்ல கெட்டிசட்டுனி அப்பறம்தான் வடை”

(மேலே உள்ளதை படித்து பீலிங்க்ஸ் ஆகாதவர்கள் , குசேலன் ரஜினி ஸ்டைலில் படித்து பீலிங் ஆகும்படி கேட்டுகொள்ளபடிகறார்கள் !!)
முன்னுரை போதும் என்று நினைக்கிறேன்! ஆனால் அவனை பற்றி யாவும் இதில் நான் கூறவில்லை! அவனை பற்றி என்னகு தெரிந்ததில் பத்து சதவிதம் கூட இது தேறாது! ஆனால் அவனை பற்றி உங்களுக்கு ஒரு முன்னோட்டம் கிடைத்திருக்கும்!


Responses

 1. “ஜே. கே.ரித்திஷ் அடைமொழி வைக்கும் போது. என் நண்பனுக்கு என்ன குறைச்சல்?”……

  Awesome dude….. nice blog, it made me go red(sirichu sirichu dhan)….

  Nice start, looking forward for your next story…

  Apparam evening padikum pothu Pravin ah disturb panatha… Pavam illa 🙂

 2. நன்றி காயத்திரி! உங்கள் பதிலை பிரவீன் பார்த்தல் மகிழ்ச்சி அடைவார்!!
  நாங்கள் யாரும் அவனை தொந்தரவு செய்வதில்லை! இரவு ரெண்டு மணி வரைக்கும் படித்து (!) அவன் கைபேசியில் வரும் அந்த “கீங் கீங்” சத்தத்தால் எங்களை தூங்கவைத்து கொண்டுதான் இருக்கிறான்!!
  உங்கள் ஆதரவுக்கு நன்றி !!

 3. வரவழில எதாவது பொண்ண பாத்து “அப்புறம்”-னு ஆரம்பிப்பான்.. அப்புறம் அந்தபுரம்னு நீங்க நினச்சா நான் பொறுப்பு இல்ல!

  nice nakkal da

  niraya ponnunga comment panranga………
  mmmm kelappu!!!!!!!

 4. பொண்ணுகளா? சிவா சிவா!!
  எதோ ஒரு பொண்ணு கிட்ட அழுது புடுச்சு கமெண்ட் வாங்கிருக்கேன்!
  சின்ன பையனை இப்படி மாட்டி விடாதிங்க!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: