--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 8, 2008

அவள் வருவாளா? – ஒரு திகில் அனுபவம்


நான் கண்ட சுவாரசியமான இல்லை இல்லை திகில் கனவை பற்றி கூறுகிறேன்! இதில் லாஜிக் இருக்காது, நம் தமிழ் சினிமாவை போல்! என் கனவு சுவாரசியமாக இருந்தாலும் என்னால் அவ்வளவு சுவாரசியமாக சொல்லமுடியுமா என்பது சந்தேகமே! சரி, வழ வழக்காமல் கனவுக்கு வருகிறேன்!

என் கனவிற்கு உங்கள் வரவு நல் வரவாகட்டும்!!

அன்று நான் மட்டும் என் அறையில் படுத்துக்கொண்டு இருக்கிறேன்! நான் முழித்துக்கொண்டு இருகிறேனா இல்லை தூங்கி கொண்டு இருகிறேனா என்று எனக்கே தெரியவில்லை (என்ன புரியலையா! இந்த உலகத்தில் தூங்குபவர் யாருக்கும் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று தெரியாது! நான் தூங்கி கொண்டு தான் இருந்தேன்!! ஹி ஹி!) சரி என்னை சகுச்சுட்டு மேல படிங்க!

அறை முழுவதும் இருட்டு! இருட்டு என்றால் சாதாரண இருட்டு இல்லை (பின்ன ஸ்பெஷல் சாதவா என்று மொக்கை போட்டால் , முட்டை மார்க்)! அந்த அறையில் நான் இருப்பதை என்னால் கூட பார்க்க முடியாத அளவிற்கு ‘கும்’ இருட்டு! இன்னும் அந்த இருட்டை நீங்கள் உணரவில்லை என்றால் உங்கள் கண்களை மூடி ஒரு இரண்டு நிமிடம் அதை அனுபவியுங்கள்! அந்த இடத்தில் அப்படி ஒரு அமைதி! புயலுகுமுன் ஒரு அமைதி என்பார்களே அதைபோல்!! அந்த அமைதியை ‘தடால்’ என்ற ஒரு சத்தம் கலைத்தது! அந்த சத்தத்திற்கு அமைதியை கலைக்க மட்டும் அல்ல, ஒரு பொதுக்கூட்டத்தின் சத்தத்தை கலைத்து அமைதியாக்கும் சத்து இருந்தது! நான் திடுக்கிட்டு எழுந்தேன்! அங்கே யாரும் இல்லை! கதவு சாத்தப்பட்டு இருந்தது! என் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது! குளிரா பயமா என்று பட்டிமன்றம் நடத்த எனக்கு நேரமில்லை! நான் கடிகாரத்தை பார்த்தேன்! நேரம் சரியாக எனக்கு ஞபகம் இல்லை (அது என்ன எல்லா பேய் கதைகளிலும் நேரம் 12:00?)! “டக் டக்” என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டு கொண்டு இருந்தது! அது என் இதய துடிபாகத்தான் இருந்திருக்க வேண்டும்!

நான் என் மனதை திட படுத்திகொண்டு மெல்ல நடந்துசென்று கதவை திறக்க முயற்சித்தேன்! அது தாழ் இடப்பட்டு இருந்தது!
“”ஐயோ! கதவைதிறங்க !! யாரது ?? திறங்க!!”
” (மௌனம்!!)”
“யாராவது இருக்கீங்களா??, விளையாடாதீங்க! ப்ளீஸ்!!”
“என்னடா ஆச்சு” -இது என் அம்மாவின் குரல்!
“அம்மா கதவை திறங்க! பயமா இருக்கு”
“திறக்க முடியல டா! உள்பக்கம் தாழ் போட்டுருக்க”
“இல்ல மா. வெளில தான் தாழ் போட்டுருக்கு”
“இல்ல டா”
ஒரு அலறல்!! நான் மயக்கம் போட்டு விழுகிறேன்!
நான் எழும்போது அந்த அறையில் இருந்து வெளியில் இருக்கேன்! (சத்தியமாக “நான் எங்க இருக்கேன் என்று கேட்கவில்லை”). என் செத்துப்போன பாட்டியை தவிர சொந்தகாரர்கள் அனைவரும் அங்கே ஆஜர்!! என்னை அந்த ரூமிற்கு தனியாக செல்லவேண்டாம் என்று அனைவரும் எச்சரித்தனர்! பிறகு எங்கே சென்றார்கள் என்று நினைவில்லை!

சிறுது நேரத்திக்கு பிறகு, நான் அந்த அறைக்கு மெதுவாக செல்கிறேன். நான் கால் எடுத்து வைத்ததும் கதவு மூடபார்கிறது! நான் வெகுவிரைவாக அந்த அறையை விட்டு வெளியே செல்கிறேன்! என் அக்கா மகன் (வயது: ஆறு) அந்த அறைக்கு சர்வ சாதரணமாக செல்கிறான்!
“அங்க ஒன்னும் இல்ல மாமா!! வேனா என் கூட வந்து பாருங்க!”
“டேய் வேண்டாம் டா”
“அட வாங்க மாமா”
நான் பயத்துடன் உள்ளே செல்கிறேன்! அங்கே நிஜமாகவே ஒன்னும் இல்லை ! ஒன்றும் நடக்கவும் இல்லை! கதவு காற்றுக்கு கூட ஆடவில்லை!!
அந்த பேய்க்கு நான் மட்டும் தான் வேண்டும் என்று எனக்கு தோன்றியது!

இப்போது வீட்டில் யாரும் இல்லை!! கனவில் கூட என்னை ஒரு மனுசனா மதிச்சு எங்கே போறோம்னு யாரும் சொல்லிட்டு போகல!
நான் மெல்ல மெல்ல பயத்துடன் அந்த அறைக்கு செல்கிறேன்!! கதவு “தடால்” என்றது! அங்கே என்ன நடக்கிறது என்று நான் யோசிபதற்குள் அங்கே இருள் சூழ்ந்தது!!

நான் கண் விழிக்கும் போது, நான் , ஒரு அடையாளமும் தெரியாத ஆள், ஒரு அழகான பெண் நின்றுகொண்டு இருக்கிறோம்!!
அடையாளம் தெரியாத ஆளை பற்றி நான் உங்களுக்கு எப்படி கூறுவது? அவரை இங்கேயே விட்டு விடுவோம்!
அந்த பெண்ணை பற்றியும் எனக்கு தெரியாது! ஆனால் அழகாக இருந்தாள்! அழகு ஒரு அடையாளம் தானே! இவளை தாரளமாக அழகுக்கு அடையாளமாக கூறலாம்!!
நான் அந்த அழகான பெண்ணை பார்த்து
“உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன் ?”
“அப்படி பேசாத”
“அப்புறம் ஏன் என்ன இப்படி பயமுறுத்துனா?”
“நீயும் நானும் பூர்வஜென்மத்துல காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டோம்”
“கல்யாணம் பண்ணி நான் உன்ன கொடும படுத்திநேனா?”
“சே சே !! இல்ல!! நீ என்னை இன்னும் அதிகமா காதலிச்ச”
“அப்புறம் ஏன் என்னை பயமுறுத்தறே?”
“நீ ஏன் என்ன பாத்து பயப்படற?”
“பயபடாம என்ன பண்ணறது? எனக்கு பேய்னா பயம்”
“நான் உன் காதல் மனைவி”
“அது புர்வஜென்மதுல! இப்போ உன்ன பாத்த எனக்கு பயமா இருக்கு”
“நீ என்ன பாத்து பயப்படும் போது செத்தரலாம் போல இருக்கு (!)”
“உனக்கு என்ன வேணும்”
“உன்ன பாத்து பேசணும் போல இருந்துச்சு, அதான் வந்தேன் “
“என்ன பேசணும்? ப்ளீஸ் போ “
“சரி போறேன்!! ஆனா என்னகு கடைசியா ஒரு ஆசை”
“என்ன?”
“நான் உன்னை கட்டிபிடுசு ஒரு முத்தம் கொடுக்கணும்”
“நான் சிறுது தயக்கதிருக்கு(நம்புங்க! நிஜமா தயக்கம் இருந்துச்சு!!) அப்புறம், சரி (மிகவும் மெல்லிய குரலில்) “
” (இதை நான் விவரிக்க தேவை இல்லை!! அவர் அவர் கல்பனா சாரி கற்பனா சக்திகேற்ப சிந்தித்துக்கொள்ளுங்கள்!!) “

அவள் எனக்கு முத்தம் இட்டது நெற்றியில்!!உங்கள் கற்பனை வேறு மாதிரி இருந்தால் நானோ என் கனவோ பொறுப்பல்ல!

“சரி நான் வரேன்! உங்களை சிரமா படுத்திஇருந்தா மனுச்சுருங்க!! ” என்று சொல்லிவிட்டு “slow-motion”-இல் திரும்பி நடந்தாள் (அவளை பேய்-ஆகா பாவித்து “அது” “இது” என்று சொல்ல அவள் அழகு என்னை தடுத்துவிட்டது)!!
“ஒரு நிமிஷம்”
என் குரலை கேட்ட ஆனந்தத்தில் திரும்பி “சொல்லுங்க”
“இனி மேல் என்னை பார்க்கணும்னா வந்து பாத்து கட்டிபுடுசு முத்தம் கொடுத்துட்டு போ!! இப்படி வந்து என்னை பயமுறுததே” (நான் எதோ த்யாகம் செய்யும் குரலில் கூறினேன்! என்ன இருந்தாலும் அந்த பேய் மனசுகூட கஷ்டப்பட கூடாதுங்கற நல்ல மனசு எனக்கு!!)
என் குரல் அவளுக்கு “இன்ப தேன் வந்து பாயுது காதுனிலே”-வாக இருந்திருக்க வேண்டும்!! இல்லை எனில் அந்த முகம் அவ்வள்ளவு பிரகாசம் அடைந்திருக்காது!!
என்னை பார்த்து ஓடி வந்து …
நான் இந்த பேய் கனவின் அதிர்ச்சியுடன் (இன்ப அதிர்ச்சி!) தூக்கம் கலைந்தேன்!! என்னை அறியாமல் சிரித்து கொண்டே கண் விழித்தேன்!! என் அண்ணன் எழுந்து அசடு வழியும் என் மூஞ்சியை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்!!
“என்ன நா? “
“தூங்கும் போது என்ன டா இச்சு?”
“இல்ல நா!! கனவு!!”
“உனக்குமட்டும் நல்ல கனவே வரதா?”
“—“
“சரி தூங்கு”
படுத்து தூங்க முயற்சி செய்தேன்!அது (சாரி அவள்) நினைப்பாகவே இருந்தது! நினைத்துகொண்டே தூங்கினேன்! கனவு வரவில்லை!
அவள் வருவாளா ?(அப்பாட தலைப சொல்லியாச்சு)

இந்த கதைக்கு (ஐயோ கனவிற்கு) இன்னொரு தலைப்பு “அழகிய பேயே”. தலைப்புகள் வரவேற்கபடுகிறது!

பின் குறிப்பு: உங்களில் யாருகாவது பேய் கனவு வந்தால் என் பூர்வ ஜென்மத்து காதலியை பற்றி கேளுங்கள் ! ப்ளீஸ் !


Responses

 1. எப்படியோ என்னை இத படிக்க வெச்சு “டைம் waste” பண்ண வெச்சுட்ட! மகிழ்ச்சி!!

 2. குமார் அண்ணா, பீல் பண்ணாதிங்க! படுச்துக்கே டைம் வேஸ்ட்-னா எழுதுன என்னை பத்தி யோசிச்சு பாருங்க! பொது வாழ்கையில் இதெல்லாம் ஜகஜம்!
  Anyway thanks for reading!

 3. Mokkai!
  Intha Mathiri Bayangara Mokkai kanavu epdi thaan Varuthoo……….

 4. Hai,

  Idhu Comedyaa Canavaa……

  Anyway Naa Rompa Sirichutten, Sorrry

 5. ரேவதி,
  ஏங்க என் த்ரில்லர் கனவு உங்களுக்கு காமெடியா?
  சிரிச்சதுக்கு சாரி எல்லாம் வேண்டாம்ங்க, நான் அந்த கனவா கண்டதே அதுக்கு தான்!! நன்றி!!

 6. //(அது என்ன எல்லா பேய் கதைகளிலும் நேரம் 12:00?)//

  அதுதாங்க கலாச்சாரம். காலைல 6 மணிக்கு வற்றதுக்கு அது என்ன பேப்பர்காரனா? :‍)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: