--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 14, 2008

நான் ரசித்தவை!!


இந்த வாரம் நான் ரசித்த ரெண்டு விஷயம் இதோ உங்களுக்காக!

### 1
ராஜ் தொலைக்காட்சியில் “ஏர்டெல் டாப் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஒரு “எல்லாம் தெருஞ்ச ஏகாம்பரம்”! வீட்டில் போர் அடித்ததால் ரிமோட்டின் உதவியால் எங்கள் டிவி வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது! எங்கள் வீட்டு டிவி கண்டிப்பாக ஆற்காட்டருக்கு நன்றி சொல்லும் (இன்னும் சொன்னால் கடமைபட்டு இருக்கிறது). எங்கள் சாதனை ஒரு நிமிடத்தில் முப்பது சேனல் (ஒவ்வொன்றும் இரண்டு முறை). அப்படி டிவி “ஓடி” கொண்டிருக்கும் போது அந்த ஏகாம்பரத்தை பார்த்து டிவி மூச்சு வாங்கி கொண்டது! எனக்கு தெரியும் அவர் வந்தாலே எதாவது காமெடி இருக்கு. அங்கு வந்த போட்டியாளருக்கு அவர் கொடுத்த கமெண்ட் இதுதான்

“நாம ஒரு விஷயத்தை அமைதியாய் செஞ்சா எல்லோரும் நாம செய்யரத மட்டும் பாப்பாங்க. அதே கொஞ்சம் ஓவரா ஆட்டம் போட்ட எல்லோரும் இவன்கிட்ட எதுவும் இல்லன்னு தப்பு கண்டுபிடிக்க ஆரம்பிப்பாங்க”

இதை சொன்னவர் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு !!

சரி தான் அனுபவ பாடம் போல இருக்கு!

### 2
அடுத்தது ஜெயா டிவியில் அணு (காஃபி வித் அணு புகழ்!) நடத்தும் “ட்வென்டி ட்வென்டி”!
கேள்வி இதுதான்:
மலேரியாவை பரப்புவது கொசு என்று கண்டுபிடித்தவர் யார்?

உங்களை போல் எனக்கும் பதில் தெரியவில்லை! ஆனால் அந்த போட்டியாளர் கூறிய பதிலை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!

பதில் இது தான்

“டாக்டர் மலேரியா”

சொல்லிவிட்டு அவருக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை! அணு, மாற்ற போட்டியாளர்கள் சிரிக்க தொடங்கினார்கள், அவர்கள் முடிக்கும் வரை எங்கள் டிவி பொறுக்கவில்லை, மீண்டும் “ஓட”தொடங்கியது!


Responses

  1. nice bhuvanesh
    i know ur critics are interesting
    write about the programs u like most and interesting in that programs

    bye

  2. தேங்க்ஸ் சுரேஷ்! Thanks a lot for the Idea suresh 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: