--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 20, 2008

கண்ணதாசன் காரைக்குடி!


எழுத ஒன்னும் கிடைக்காததால் திரு.ஆர்.வி அவர்களுக்கு இட்ட மறுமொழியை இங்கே தருகிறேன்!

மேட்டர் இதுதான்: திரு.ஆர்.வி அவர்கள் “சுஜாதவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்” என்ற தலைப்பில் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை பற்றி கூறியிருந்தார். நான் எப்போதோ திரு.எம்.எஸ்.வி அவர்கள் கண்ணதாசனை பற்றி கூறியது அறை குறையாக ஞாபகம் வந்தது. நான் அறிவாளி என்று என் அதிக பிரசங்கி தனத்தை காட்டி கொள்ள சரியான வாய்ப்பு!! விடுவேனா? நான் இட்ட மறுமொழி இது தான்!

கண்ணதாசன் அவர்களை காப்பி அடிப்பவர் என்று சொல்லி இருக்கிறார்! கண்ணதாசன் அவர்கள் எந்த சூழ்நிலையில் சில பாட்டுகளை எழுதினார் என்று சமீபத்தில் படித்ததை கூறுகிறேன்:

## 1
Recording Studio வில் கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் இருக்கும் போது ஒருவர் வெளிநாட்டு விஸ்கி விற்றுக்கொண்டு வந்திருக்கிறார். கவிஞர் மது பிரியர் என்று எல்லோருக்கும் தெரியும். அதை வாங்க ஆசை! அங்கே இருந்த அனைவரிடமும் கேட்டு பார்த்தும் போதிய பணம் கிடைக்கவில்லை. கடைசியாக தன் அண்ணனை அழைத்து விஷயத்தை சொல்லி இருக்கார். அண்ணன் பணம் தருவதிற்கு பதில் ‘அட்வைஸ்’ தந்திருக்கிறார். அப்போது எழுதுன பாட்டு

“அண்ணன் என்ன டா தம்பி என்ன டா அவசரமான உலகத்திலே”

## 2
காலை எட்டு மணி பாடல் பதிவு. எம்.எஸ்.வி அவர்கள் பின் இரவு ரெகார்டிங் முடித்து தூங்கிவிட்டார்! காலை ‘Recording Studio’ வில் இருந்து அழைத்திருக்கிறார்கள், எம்.எஸ்.வி இன் உதவியாளர் விஷயத்தை சொல்லியிருக்கிறார்! சிறிது நேரம் பொறுத்து இருந்த கவிஞர், நான் பாட்டை எழுதுகிறேன், அவன் வந்து மெட்டு அமைக்கட்டும் என்று கூறி விட்டு எழுதிய பாட்டு
“அவனுகென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானன்றோ!”

## 3
அதில் இருந்த மூன்றாவது பாட்டும் படமும் மறந்து விட்டது. சூழ்நிலை இது தான், எம்.எஸ்.வி ஒரு பாட்டை “மே” மாதம் படம் பிடிக்க இருக்கிறார்கள், பாட்டை எழுதி கொடுங்கள் என்று அடிக்கடி கேட்டு இருக்கிறார். அதற்கு கவிஞர் “என்னய்யா சும்மா மே மே என்கிறாய்” என்று கேட்டு விட்டு எழுதிய பாட்டின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும்.

யாராவது பாட்டை சொன்னால் தேவலை!

காப்பி அடிப்பவரால் இப்படி சூழ்நிலைகேத்தவாறு ‘Spontaneous’-ஆ எழுத முடியுமா?

வாலி தலைமுறைகளை கடந்து நிற்கும் கவிஞர்! கண்ணதசானுகே சவால் விட்டவர்!

இவர்களை பற்றி ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை! சுஜாதா இருந்திருந்தால் அவர் ஸ்டைலில் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார்!

இதை படித்து, திரு. டோண்டு ராகவன் பாட்டை கூறிஇருந்தார்.
அவர் மறுமொழி :
“அன்பு நடமாடும் கலைக்கூடமே என்று ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் மே என்று முடியும்.

சிவாஜி மற்றும் ஜயலலிதா நடித்தது. அவன்தான் மனிதன் என்னும் படம். பாட்டு சீன் என்னவோ மஞ்சுளா சிவாஜிக்குத்தான்.”

இலவச இணைப்பு:
a) தலைப்பில் காரைக்குடி ஏன் வந்தது என்று யோசிப்பவர்களுக்கு,
காரைக்குடி கண்ணதாசன் பிறந்த ஊர்!
b) முன்றாவது பாட்டை நினைவு படுத்திய “டோண்டு ராகவன்” அவர்களுக்கு நன்றி!!


Responses

 1. nice memories da
  do u have any memories about ilayaraja like this
  hi bhuvan
  have u read any sujatha”s books
  if u had read anything post about that

  bye

 2. very interesting.

 3. நன்றி சுரேஷ்! நான் சுஜாதா புக்ஸ் படிப்பேன்! அதை பத்தி என்ன எழுதுவது என்று தெரியவில்லை! இந்த வெப்சைட்ஐ பார்க்கவும்!
  http://ganeshvasanth.wordpress.com
  நானும் ஏதாவது கிறுக்க முயற்சிக்கிறேன்!
  நன்றி!

 4. நன்றி குந்தவை அக்கா !

 5. enna enna books padichirukke
  edhavadhu oru book pathi ezhudhu da

 6. kolai udhir kaalam padichirukkiya da
  adhai pathi ezhudhu da

  enna writing thalaivarodadhu

  orey nightla naan padicha mudhal noval adhu

 7. சுரேஷ்,
  கொலை யுதிர் காலம் சூப்பர் கதை! உங்கள் தொடர் வரவுக்கு நன்றி!
  என் ஆசை எல்லாம் அதை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது தான்! டைம் இல்லை என்பது எல்லாம் சும்மா. நீங்கள் விட்ட எழுத்தை எனக்காக மீண்டும் தொடரவும்! விருந்தினர் பக்கம் ஸ்டார்ட் பண்ணிரலாமா?
  எல்லாம் இருக்கட்டும், சுஜாதா சார் கதைய பத்தி நான் எழுதறதா? என்ன வெச்சு காமெடி கிமெடி பண்ணலியே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: