--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 29, 2008

மறக்க முடியாத தீபாவளி!!!


 வணக்கம் நண்பர்களே, எல்லாம் லீவு முடுஞ்சு வந்தாச்சா? என்னது நேத்தே வந்தாச்சா? நான் தான் லேட்டா? சரி சரி! விஷயதுக்கு வரேன்!

இது தீபாவளி சீசன்! தலைப்பு ரெடி! நான் மறக்க முடியாத தீபாவளி சற்று யோசனைக்கு பின் ஞாபகப்படுத்திக்கொண்டேன்! அது நான் US விசா வாங்கிய புதுசு! இரண்டு வாரம் தான் ஆகியிருந்தது! சரி எப்படியும் அடுத்த தீபாவளி நாம் இந்தியாவில் இருக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் சோகமாக (நிறைய சந்தோசமாக) இருந்த காலம்! என் வீட்டிலும் எல்லோருக்கும் இதே மனநிலை (கொஞ்சம் சோகம் நிறைய சந்தோசம்)! ஏனெனில் எங்கள் பரம்பரையிலேயே விசா வாங்கிய முதல் நபர் நான்தான்!  அன்றைக்கு எனக்கு பிடித்த எல்லா பலகாரத்தையும் (எனக்கு எல்லா பலகாரத்தையும் பிடிக்கும் என்பது வேறுவிஷயம்!) தாயார் தயார் (ரைமிங் எப்படி?) செய்து வைத்திருந்தார்! அம்மா, அப்பா, அண்ணன், அக்கா. மச்சான், அக்கா குழந்தைகள், நான் என மொத்த குடும்பமும் சந்தோசமாக இருக்கையில் எனக்கு மட்டும் அடுத்த தீபாவளி இங்கே இருக்க மாட்டோமே என்ற கவலை ஆட்டிப்படைத்தது! எதோ அடுத்த தீபாவளி “WEB-CAM” இல் கொண்டாடவேண்டும், யார் யாருக்கு என்னென்ன வாங்கி  அனுப்ப வேண்டும் என்பதுவரை லிஸ்ட் தயார்! சரி எல்லோரும் கோவிலுக்கு போலாம் என்று ஐடியா கொடுத்து கிளப்பினேன்! நேரா மருதமலை! பிறகு ஈச்சனாரி! பிறகு லக்ஷ்மி கோவில்!
நிலவுக்கு போன “Amstrong” கூட இவ்வளவு பிராத்தனை செஞ்சிருபாரானு தெரியாது! ஆனா நான் செஞ்சேன்! (நிலா தெரியுது. அமெரிக்கா தெரியல அதனால அமெரிக்கா தான் தூரம்னு மொக்கை போட மாட்டேன்)
பின்ன நிலாவ விட அமெரிக்கா போறது பெரியவிஷயம் இல்ல!  எங்க ப்ரொஜெக்ட்ல இருக்குற பாசகார பங்காளிங்க வேற இப்போ “Requirement” இருக்கு ரெடி ஆகுனு அட்வைஸ்! ரொம்ப சந்தோசமாக இருந்தது! எதோ ஒரு சாதனை செய்ய ரெடி ஆனா  மாதிரி இருந்துச்சு!
எல்லா கோயில்களிலும் அக்கா பையனும் பொண்ணும் என்னுடனே சுற்றி வந்தார்கள்! எனக்காக என் அக்கா பையனின் வேண்டுதல் மட்டும் சற்று பலமாக இருந்தது! லக்ஷ்மி கோயிலில் ரொம்ப நேரமாக லக்ஷ்மியிடம் எதோ முனுமுனுத்து கொண்டிருந்தான்! பிள்ளையின் தெய்வ பக்தியாய் பார்த்து மெய்சிலிர்த்தேன்! அவன் ஒரு வழியாக முனுமுனுத்து முடித்து கண்ணை திறந்தபின்,

“சாமிகிட்ட என்னடா கண்ணு வேண்டிகிட்ட? ”
“மாமா “onsite” போககூடாதுன்னு வேண்டிகிட்டேன் மாமா”

சிறது நேரம் ஆசுவாச படுத்திகொண்டு,
“ஏன் டா அப்படி வேண்டிகிட்ட?”
“நீங்க இங்க இருந்த தான் என்னை இந்த மாதிரி வெளில கூட்டிட்டு போவிங்க”
“ரொம்ப தேங்க்ஸ் டா குட்டி”

இப்போ சொல்லுங்க மறக்க முடியுமா அந்த தீபா’வலி’யை?

 

பின் குறிப்பு: இது நடந்தது 2006 தீபாவளி! நான் இன்னும் Onsite போனதில்ல! நம்ம தலைல dependents விசால தான் Onsite போகனும்னு இருந்தா யாரால மாத்தமுடியும் ?


Responses

 1. Hi Bhuvanesh,
  Hope this diwali was good for u….
  The last few lines in the above context are so good….(Nalla Thiruppumunai 🙂 )
  இதை தான் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம்(=குழந்தை – உங்கள் அக்கா பையன்) ஒன்று நினைக்கும் என்று சொல்வார்களோ? 🙂
  Onsite opportunity விரைவில் வர வாழ்த்துக்கள்!!!

 2. நன்றி பிரியா.

  //இதை தான் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம்(=குழந்தை – உங்கள் அக்கா பையன்) ஒன்று நினைக்கும் என்று சொல்வார்களோ?

  ஆனா இங்க குழந்தை (நான் தான்!) ஒன்று நினைக்க தெய்வம் (குழந்தை) ஒன்று நினைச்சுருச்சு!!
  //Onsite opportunity விரைவில் வர வாழ்த்துக்கள்!!!
  இப்போ அந்த ஆசை அவ்வளவு இல்லை! வந்தால் மகிழ்ச்சி! நன்றி!!

 3. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்.
  (சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகாதுங்க தம்பி………..)
  அதனால enjoy பண்ணுங்க.

 4. ha ha ha..
  //(சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகாதுங்க தம்பி………..)
  தெரியும்.. இருந்தாலும் கண்ணுல பார்த்து “confrom” பண்ணலாம்னு பார்த்தேன்!!
  (சொர்கத்துக்கு எல்லாம் நமக்கு நோ என்ட்ரி, அதனால நரகத்துக்கு (அமெரிக்கா) போலாம்னு பார்த்தேன்!! )

 5. kundhavai akkavukku unnoda comment super da

  adhu sari veettukku varennu sollittu enda varalai

  books edhavadhu kondu varuvennu paarthen

  any way hope u go to naragam soon

 6. நன்றி சுரேஷ்! கொஞ்சம் பிஸி! அதான் வரல! நெக்ஸ்ட் மீட் பண்ணறேன்!

 7. மச்சி onsite கல்யாணம் மாதிரி…
  உள்ள இருக்குறவன் வெளிய வர பார்கிறான்… வெளிய இருக்குறவன் உள்ள வர பார்கிறான்…

  தத்துவம் ராத்திரி 2 மணி ஆனா நல்ல தான் வருது…

 8. //உள்ள இருக்குறவன் வெளிய வர பார்கிறான்… வெளிய இருக்குறவன் உள்ள வர பார்கிறான்…
  உங்க “Project Offshore” team கிட்ட சொல்லுங்க, repalacement அமுச்சுவைபாங்க!
  //தத்துவம் ராத்திரி 2 மணி ஆனா நல்ல தான் வருது…
  ராத்திரி ரெண்டு மணிக்கு கூட தத்துவமா?
  உன் அறிவு படிய நினைச்சா எனக்கு புல் அரிக்குதுப்பா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: