--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 4, 2008

ஏகன்!!


விமர்சனம் ட்ரை பண்ணிபாக்கலாம்னு ஒரு ஆசை! சரி வாங்க!!
படத்தோட மேட்டர் இதுதான். தேவன் ஒரு மெகா வில்லனின் (சுமன்) முன்னால் கையாள்! அவர் அப்ருவராகி நீதிமன்றம் செல்லும் வழியில் சுமனின் அடியாட்கள் தேவனை கொள்ள முயற்சிசெய்கிறார்கள்!! இப்போ என்ன நடக்கும் – கரெக்ட் – தேவன் மட்டும் தப்பித்து ஓடிவிடுகிறார்!!  இதை பற்றி விவாதிக்க ஒரு மகா மட்ட (அதாவது உயர் மட்ட!!)  கூட்டம் கூடுகிறது! அங்கே ஒரு புண்ணாக்கும் பேசாமல் இருக்கும் நாசர் தான் உயர் அதிகாரி! கூட்டத்தில் ஒரே கூச்சல் குழப்பம்! முடிவில் நானே பர்சனல்-ஆ இந்த கேஸ்-அ Deal பண்ணறேன் என்று கத்துகிறார்! அஜித்துக்கு ஒரு “INTRODUCTION” வேறு! அதில் இருந்து நீங்களும் நானும் புரிந்து கொள்ள வேண்டியது இதை தான் “யாரை பார்த்தாலும் போட்டு தள்ளும் “C.B.C.I.D” அதிகாரி அஜித்”! தேவனை பிடிக்கும் மிஷன் இப்போது அஜித்துக்கு!! அதுவும் எப்படி? அஜித் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக ஊட்டி போக வேண்டும்! ஏனெனில் தேவனின் மகள் அங்கே படிக்கிறாள்!
“உஸ் இப்பவே கண்ணு கட்டுதே!”என்று நாம் நெளியும் பொது ஒரு ட்விஸ்ட்! அஜித்தே கேட்கிறார் “தொந்தி, தாடி நான் எப்படி ஸ்டுடென்ட்ஆ போறது?”  நாசர் வற்புறுத்துகிறார்! இந்த இடத்தில் இன்னொரு ட்விஸ்ட் “அஜித் நாசரின் மகன்” எங்கே மறுத்தால் நாசரே ஸ்டுடென்ட் ஆக போய்விடுவாரோ என்ற பயத்தில் அஜித் செல்கிறார்! அங்கே “யூத் புல்” காலேஜ் என்ற பெயரில் எல்லா படத்திலும் காட்டும் காலேஜ்! அஜித் அங்கே ஒதுக்கப்படுகிறார்! தேவனின் மகள் பியாவும் நவ்திபும் காதலர்கள்! அவர்களிடத்தில் நட்பு கேட்டு
அஜித் அலைகிறார்! அவர்கள் நீங்க எங்க trend-க்கு வரணும்  என்கிறார்கள்! அஜித் புது trend செட் பண்ண அங்கு வரும் “Professor” -ஐ (நயன்) காதலிக்கிறார்! இடையில் சுமனின் ஆட்களும் தேவனை தேடுகிறார்கள்! அப்புறம் ரெண்டு பைட் நாலு சாங்! அப்புறம் ஒரு ட்விஸ்ட் நவ்திப் நாசர் – சுஹாசினியின் மகன்!
 
அஜித் அங்கே சென்றது தேவனை பிடிக்க! அதற்காக அவர் ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை!  தேவனே தன் மகளை பார்க்க வந்து, அஜித்துக்கு கை குடுக்கிறார்! வில்லனே கை குடுக்கும் போது ஹீரோ கை என்ன பூ பறிக்குமா? நைஸ் ஆகா விலங்கு மாட்டுகிறார்! எங்கே இருந்து என்று தெரியாமல் ஒரு போலீஸ் படை வருகிறது! இங்கே ஒரு ட்விஸ்ட்! தேவனை நீதி மன்றம் அழைத்து செல்லாமல்  சுமனிடம் அழைத்து செல்கிறார்! அங்கே ஒரு பைட்! சுமனை கொலை செய்கிறார்! அப்புறம் நாசருடன் சுஹாசினி சேர்கிறார்! சுபம்!

படத்தில் என்ன பிளஸ் என்று எனக்கு தெரியவில்லை! அஜித் மட்டும் மற்ற படத்தைவிட இதில் கொஞ்சம் துரு துருவென  இருக்கிறார்! ஜெயராம், சத்யன், ஹனிஃபா போன்றவர்கள் காமெடி என்று சொல்லி நம் பொறுமையோடு கபடி விளையாடுகிறார்கள்!அஜித் கடைசியாக பேசும் வசனம் “போய் பீல் பண்ணு”, நானும் சரி தல என்று, “ஏன் வந்தோம்” என்று பீல் பண்ணிகொண்டிருகிறேன்!! நீங்க எப்போ பீல் பண்ண போறீங்க?

இலவச இணைப்பு :
படத்தை நான் பார்ப்பதற்கு முன் ஒரு நண்பர் பார்த்தார்! எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்!
 “”டேய் படம் எப்படி இருக்கு?”
“ஆழ்வார் சூப்பர் டா!! “


Responses

 1. ஊருக்குள்ள கெத்தா சுத்துறவனையே ஒட்டி தள்ளுவோம்… பாவம் அஜித்…
  இருந்தாலும், அதுல இருக்குற உண்மைய பாத்தாவது நாலு பேரு தப்பிச்சா சந்தோசம்…

 2. // நீங்க எப்ப பீல் பண்ணப்போறீங்க ?
  பாத்தாத்தானே பீல் பண்ணுவதற்கு. சுதாரிச்சுட்டோம்ல….

  நான் உங்களை ஒரு தொடர் எழுத அழைப்பு விடுத்திருந்தேனே?
  அதை எழுதாம…..படம் பாத்து டைமை வேஸ்ட் பண்ணிகிட்டுயிருக்கீங்களே……..
  இது நல்லாவாயிருக்கு ?

 3. அழைபதற்கு முன் இதை எழுதியாச்சு அக்கா! அப்புறம் படம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணலை! படம் பார்த்தா தன் உங்கள் தொடர் பதிவை எழுத முடியும்!
  தொடர் எழுதி கொண்டு இருக்கிறேன்! எதிர்பாருங்கள் விரைவில்!

 4. முதல் வருகைக்கு நன்றி சரவணா!

 5. விமர்சனம் முதல் முயற்சி நன்றாய் இருக்கிறது bhuvanesh….
  இதை படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது, ஆபத்து வருதுனா Fire Alarm குடுப்பாங்களே அதுமாதி இருக்கு…. 🙂

 6. //இதை படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது, ஆபத்து வருதுனா Fire Alarm குடுப்பாங்களே அதுமாதி இருக்கு….
  ஹ ஹ ஹ… அது “Fire Alarm” இல்ல!! தீயில் மாட்டியவருடைய அலறல்!!

 7. படம் பாக்க போகும் முன்னாடி என்னாண்ட கேட்டு இருந்தா நீங்க தப்பிச்சு இருப்பீங்க

 8. வாங்க பிரபு!! Same Blood ??


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: