--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 5, 2008

சினிமா – சினிமா தொடர் பதிவு….


முதலில் என்னையும் ஒரு இடுகனா (blogger) மதுச்சு தொடர் பதிவு எழுத கோத்துவிட்ட குந்தவை அக்காவிற்கு நன்றி! நன்றி!! நன்றி!!
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?

நான் நினைவு தெரிந்து பார்த்த சினிமா நினைவில்லை! ஹ ஹ ஹ!
ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, தர்மதுரை, கொடிபறக்குது போன்ற ரஜினி படங்களை அந்த கால வி.சி.டி  பார்த்த ஞாபகம்!

பின்னாளில் தெரிந்தது:
இந்த படத்தை எல்லாம் ஒருவாரம் முழுவதும் திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன்! அப்போதே ரஜினி ரசிகன்!

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

 “ஏகன்”. விமர்சனம் எழுதி உள்ளேன்! படிக்கவும்!!
 
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

“அலிபாபா”. நல்ல “Screen Play”. யார் கெட்டவன் என்று ஒரு சஸ்பென்ஸ்! நல்ல முயற்சி! ஆனால் கடைசியில் சிறுது சலிப்பு வந்துவிட்டது!  பிரகாஷ் ராஜ் வழக்கம் போல் கிடைத்த பந்தில் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். படம் தாரளமாக பார்க்கலாம்!
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அன்பே சிவம்! எனக்கு சினிமாவில் அழுகை பிடிக்காது! உண்மையாகவே மிக நல்ல படம்! ஏன் ஓடவில்லை என்று இதுநாள் வரை  தெரியவில்லை! 
ரஜினி ரசிகன் என்பதால் என்னை தாக்கிய இன்னொரு சினிமா பாட்ஷா!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தலைவரின் பாட்ஷா வெள்ளி விழா மேடை பேச்சு! ஒரு நடிகனின் பேச்சு ஆட்சியை இந்த அளவு கதிகலங்க செய்யுமா? 
(இத்தனைக்கும் நான் அப்போது ஸ்கூல் பையன்)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அந்த காலத்தில் டபுள் அக்டிங் காட்சிகள்! அப்புறம் DTS!
 இப்போது, எப்படி இவ்வளவு நல்ல பிரிண்ட் உள்ள (திருட்டு) சிடி இவ்வளவு சீக்கரத்தில் கிடைக்கிறது?  (அதுவும் தொழில்நுட்பம் தானே?)

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய! சினிமா என்றாலே படிப்பேன்! அதுவும் ரஜினி படத்தை போட்டு என்ன கருமத்தை எழுதினாலும் வாங்குவேன்!  விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் என்னைப்போல் உள்ளவர்களால் தான் குப்பை கொட்டி கொண்டு இருகிறார்கள்!

7)தமிழ்ச்சினிமா இசை?
நல்லா இருக்கு! எத்தனை இசை அமைபாளர்கள், பினனணி பாடகர்கள் என்று யாராலும் சொல்ல முடியாது! அத்தனை திறமைகள்! ஆனால் இதனால் அங்கே தனி தன்மை குறைகிறது!
       
8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

      ஏதோ கொஞ்சம் பாத்திருக்கேன். ரூமில் வேறு வழி இல்லை என்றால் பார்ப்பேன்!
தியேட்டரில் பார்த்த ஹிந்தி படம் “Tara zameen Par”.  இந்த படத்துக்கு மொழி தேவை இல்லை! பக்கத்து சீட்டில்  இருந்தவர் அழுது கொண்டு இருந்தார்! திடீரென்று திரும்பி என்னை பார்த்தார். நானும் அழுது கொண்டு இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் நிம்மதியாக அழ ஆரம்பித்தார்!!

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?

 நேரடித்தொடர்பும் (அரங்கில் படம் பார்ப்பது) உண்டு! கள்ள தொடர்பும் (திருட்டு வி.சி.டி) உண்டு!!

 10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லா இருக்கும்! நிறைய நல்ல டைரக்டர்கள் இருக்கிறார்கள்!
சூர்யா விக்ரம் ஆகியோர் கமெர்சியல், கிளாச்சிக் என்று ரெட்டை குதிரை சவாரி செய்கிறார்கள்!நமக்கு ரெண்டும் வேண்டும்!  இவர்கள் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்வார்கள்! 
     
11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
 உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்
?

       * எனக்கு ரூமில் உள்ள நல்லா புத்தகங்களை படிக்க டைம் கிடைக்கும்!
       * BCCI  இன்னும் பல கோடி  சம்பாதிக்கும்!
       * சுட்டி டிவியின் ரசிகர்கள் அதிகரிப்பார்கள். டோரா ஒரு நட்சத்திரமாக போற்றபடுவாள்!
       * நீங்கள் தலை விதியே என்று என் blog ஐ படிக்க வேண்டி வரும்! 
****************************************************************

எனக்கு வலைஉலக நண்பர்கள் ரொம்ப குறைவு! இருப்பவர்களும் இதை ஏற்கனவே எழுதி விட்டார்கள்! தொடர் பதிவு இங்கே தொடராமல் நிற்க போகிறது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிற்கிறேன்!


Responses

 1. //நிறைய! சினிமா என்றாலே படிப்பேன்! அதுவும் ரஜினி படத்தை போட்டு என்ன கருமத்தை எழுதினாலும் வாங்குவேன்!
  அடக் கடவுளே!

  //நேரடித்தொடர்பும் (அரங்கில் படம் பார்ப்பது) உண்டு! கள்ள தொடர்பும் (திருட்டு வி.சி.டி) உண்டு!!
  ஓகோ! எனக்குத்தான் இந்த கேள்வி சரியாப் புரியல போலிருக்கு.

  //எனக்கு ரூமில் உள்ள நல்லா புத்தகங்களை படிக்க டைம் கிடைக்கும்!
  புத்தகங்களை போல ஒரு நல்ல நண்பன் கிடையாது தம்பி. இதச்செயுங்க முதல்ல

 2. //புத்தகங்களை போல ஒரு நல்ல நண்பன் கிடையாது தம்பி. இதச்செயுங்க முதல்ல
  நிறைய தடவை முயற்சிசெய்து தோத்து விட்டேன்! இருந்தாலும் ட்ரை பண்ணி பாக்கறேன்!

 3. பின்னி பெடல் எடுத்துடீங்க பாஸ்

 4. புவனேஷ் நீங்க என் பதிவுல கமெண்ட் எழுதி இருந்தீங்களா!!! அவர் தான் இவரா! 🙂

  அப்படி என்றால் உங்கள் ஜிமெயில் ஐ டி ல உங்க வோர்ட் பிரஸ் விலாசம் குறிப்பிடுங்கள் ஒரு ப்ளாக் துவங்கி, அப்போது தான் அனைவருக்கும் தெரியும்.

  இது வேற புவனேஷ் என்றால் என்னை மன்னிக்கவும்.(“என்வழி” யில் பார்த்து வந்தேன்)

  யாரா இருந்தாலும் பதிவு நல்லா இருக்கு

 5. வருகைக்கு நன்றி கிரி!!
  (அது நான் தான்!! )


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: