--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 7, 2008

கவுண்டருக்கே கலர் கொடுப்போம்ல!


 என் சினிமா சினிமா தொடர் பதிவை படித்து விட்டு என் தொலைபேசிக்கு ஒரே (இது அந்த ஒரே இல்லை..) அழைப்பு மழை!  கொலை வெறியுடன் ஒரு கும்பல் என்னை தாக்கியது (சொல் அம்புகளால் தான்!!). நானும் அவர்களுக்கு ஏதேதோ விளக்கம் சொல்லி பார்த்தேன் – ஒரு புண்ணாக்கும் வேகல (டேய் மண்டையா புண்ணாக்கு எப்படிடா வேகும்?) . அவர்கள் என்னை விடுவதாக தெரியவில்லை.  நான் மன்னிப்பு கூட கேட்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர்கள் என்னை பேசவிடமால் அர்ச்சனை செய்தார்கள்.  அவர்கள் தலைவரை நான் இழிவு படுத்திவிட்டேனாம்!! (அட கொயக்கா தலையா இப்பவாவது மேட்டர் என்னனு சொன்னியே!!). இனி அவர்களுடன் போராட முடியாது என்று என் கைபேசியை அணைத்து விட்டு படுத்தேன்!! (தண்ணி ஊத்தி அணைச்சியா இல்ல மண்ணு போட்டு அணைச்சியா?) தூக்கம் வரவில்லை. சரி  அவர பத்தி என்ன தப்பா எழுதி இருக்கோம்னு பார்க்க  அந்த பதிவ திருப்பி படுச்சேன் (உன் பதிவ நேரா படுச்சாலே ஒரு எழவும் புரியாது!!) .. திருப்பினா திருப்பி இல்ல! நேரா தான்! ஆனா திருப்பி!! (டேய் அம்லேட் மண்டையா,  இதுக்கு என்ன டா அர்த்தம்) .

கவுண்டர் சார் போதும் உங்கள் ‘Counter’ .  புதுசா சரவணா னு ஒருத்தன் எழுதரானாம் அவன போய் பாருங்க ப்ளீஸ்!!. என்ன கொஞ்சம் பீல் பண்ண விடுங்க (பெரிய சுஜாதா, பீல் பண்னறாரு!!) .. சார் மறுபடியுமா.. (சரி போறேன்!! போறேன்!!)

சாரி நண்பர்களே கவுண்டரை ஆஃப் செஞ்சாச்சு.. இனி நிம்மதியா Blog படிங்க (நீ எழுத ஆரம்பிச்சுட்ட.. அப்புறம் எங்க நிம்மதி ?) .. நீங்களுமா “Counter” (இல்ல முதலியாரு!!) ?  சரி விடுங்க!!! சமாதனமா போகலாம்!!

எங்க விட்டேன் ?? (நீ எங்க விட்ட? அதான் எழுதியே சாவடிக்கிரியே?).. மக்களே இப்போ நம்ம நோக்கம் (அப்படி எல்லாம் வேற உனக்கு இருக்கா?) என்ன தாக்கறது இல்ல.. (சரி ஓகே!!) ..

அப்பாடா!! எல்லோரையும் ஆஃப் பண்ணியாச்சு!! சரி தொடர்வோம்..
அப்படி நேரா திருப்பி படித்ததில் அவரை பத்தி நான் ஒண்ணுமே எழுதவில்லை!! சரி அவர்களிடமே கேட்போம் என்று கைபேசியை எரியவைதேன் (புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்!!!).. கம்பெனி இப்போது சிக்கன நடவடிக்கை எடுப்பதால் அவர்கள் அழைப்புக்கு காத்திருந்தேன்..  அழைப்பு வந்தது!!

“டேய் ஏன் டா ######### சுவிட்ச் ஆப் செஞ்ச ”
“(பயத்துடன்) சார் நான் அவர பத்தி தப்பாவே பேசலையே ”
“******** (இது வேற கெட்ட வார்த்தை அதான் #ல இருந்து * க்கு மாறியாச்சு) தப்பு செய்யறதே தப்பு.. தப்பு செய்யலனு சொல்லறது அதைவிட தப்பு”
“(தலை சுற்றி) சார் என்ன சார் தப்பு செஞ்சேன்?””
“$$$$$$$$$$$ உன்னை பாதிச்ச சினிமா-அரசியல் சம்பவம் எங்க தலைவர் கட்சி ஆரம்பிச்சது இல்லையா?  உனக்கெல்லாம் எங்கள் தலைவர் ‘தன்மான சிங்கம்’ பேசுனாதான் சரி வரும்”
அழைப்பு துண்டிக்கப் பட்டது!!

நண்பர்களே இப்போது நீங்க வாங்க.. என்னது தலைவர் யாருன்னு கண்டுபுடுச்சாச்சா ? ? எப்படி? தமிழ்நாட்ல தன்மான சிங்கம்னா அவரு தானா?? யாருங்க அவரு ??
இருங்க ஒரு அழைப்பு வருது

 ” டேய் என்  மகன் பேரு சிம்பு
  நீ என்னபத்தி போடாம பண்ணிட்ட தப்பு
  என்கிட்டே வச்சுகாத வம்பு
  உனக்கு வைப்பேன்டா ஆப்பு
  வி.காந்த எப்பவும் மப்பு ”

தொடர்பை துண்டித்து விட்டு.. கைபேசியை அணைத்து விட்டேன் (தண்ணி ஊத்தி தான்!!)

 

(டேய் அண்டா மண்டியா இந்த அல்கொய்தா வாயன்கிட்டைய என்ன மாட்டிவிட பாத்த? )

கவுண்டர் சார் போகதீங்க.. நில்லுங்க ..

 

சரி இவ்வளவோ நேரம் படுச்சீங்க.. அப்படியே இந்த நடை புடுச்சுதா புருஞ்சுதானு சொல்லிட்டு போங்க!!

பின் குறிப்பு:

இந்த பதிப்புக்கு தலைப்பு வைக்க உக்காந்து யோசிச்சேன் கிடைக்கல.
அதான் இப்படி கவுண்டருக்கு கலர் கொடுக்க வேண்டிவந்துருச்சு!! இந்த கலர் புடிக்கலைனா சொல்லுங்க, வேற கலர் கொடுத்தரலம்!!

என்ன இருந்தாலும் நாங்கெல்லாம் கவுண்டருக்கே கலர் கொடுக்கறவங்க!!


Responses

  1. மச்சி நீ இடுகன் ஆனத கேள்வி பட்டதும்
    என்னடா நமக்கு வந்த இடுக்கண் அப்படின்னு நெனச்சேன்…
    ஆனா உள்ள வந்து பார்த்தும் தான் புரிஞ்சது
    இனிமே “இடுகன் வருகால் நகுக” அப்படின்னு…
    உன் பணி தொடரட்டும்…

  2. வருகைக்கு நன்றி சரவணா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: