--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 17, 2008

நான் ஏன் எழுதல?


என்ன நண்பர்களே,  எப்படி இருக்கீங்க?  சரி நான் ஏன் இத்தனை நாளா எழுதுல தெரியுமா?
மச்சான் நீ கேளேன்? மச்சி நீ கேளேன்? கேக்க மாட்டீங்களா? கேட்கவே மாட்டீங்களா?  சரி நானே சொல்லறேன்!!

உங்கள எப்படியாவது மகிழ்விக்க நானும் ரொம்ப முயற்சி பண்ணினேன்!! ஒரு மேட்டரும் சிக்கல!! சரி இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கணும்னு முடிவு பண்ணி, அதையும் நான் செஞ்சேன்!!

அப்போ தான் ஒரு உண்மை எனக்கு புருஞ்சுது!!

“வாழ்கையில் சில நேரங்களில் ரூம் போட்டு யோசுச்சா கூட எழுதருக்கு plot கிடைக்காது”னு  உண்மையை புருஞ்சுகிட்டேன் !!
சரின்னு என் நண்பரிடம் விஷயத்தை சொன்னேன்!! பூண்டு சாப்பிட்டா மூளை வேலை செய்யும்னு சொன்னான். (எனக்கு மூளை இருந்திருந்தா, மூளை இருந்தா தான் வேலை செய்யும்னு அப்போவே சொல்லிருப்பேன்)

நானும் வெள்ள பூண்டு சாப்பிட்டு யோசிச்சேன் !!  அப்போ இன்னொரு உண்மை புரிஞ்சுது!!

“வாழ்கையில் சில நேரத்துல வெள்ள பூண்டு சாப்ட்டா கூட ஒரு வெங்காயமும் எழுத முடியாது”
 
இப்ப தான் ஏன் முன்றாவது கட்ட முயற்சியை தொடங்கினேன்!! விடியகாலைல எழு மணிக்கு எந்திருச்சு எழுதாலம்னு பிளான்! சரின்னு அலாரம் வெச்சேன்! காலைல எதோ கால் வந்துச்சு, அப்போ பாத்தா மணி பத்து! இதுலையும் ஏதாவது உண்மை இருக்கும்!! ஆனா அது என்னனு எனக்கு தெரியல!! உங்களுக்கு தெருஞ்சா சொல்லுங்க!

“சரி நண்பர்களே உங்களுக்கே மேட்டர் புருஞ்சிருக்கும்” (என் வசாகரல்லவா? )
நிஜமா என்ன எழுதறதுனு தெரியல , அதான் எழுதல!! நானும் உங்களை மகிழ்விக்க உக்காந்து யோசுசேன்!! ஒண்ணும் கிடைகல!!

சரி நின்னுட்டு யோசுச்சா ஏதாவது கிடைக்கும்னு ட்ரை செஞ்சப்போ வந்த மேட்டர் தான் இது!!
 
நான் என்ன வச்சுட்டா வஞ்சகம் பண்ணறேன்? CPU ல இருந்தா தானே monitor ல வரும்?

நெக்ஸ்ட் மீட் பண்ணறேன் (இத விட ஒரு சுப்பர் பதிவில்!!)!! ஹி ஹி ஹி!!

Advertisements

Responses

  1. தம்பி என்னடா இவ்வளவு கரிசனமா நம்மள விசாரிக்கிரானேன்னு பாத்தா….ம்.
    தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறதுல தம்பி கில்லாடி போல….

    //மூளை இருந்தா தான் வேலை செய்யும்னு ….
    தெரியுதில்ல..அப்புறம் எதுக்கு கஷ்டபடுறீங்க…. விட்டுருங்க தம்பி….
    அத வேற உலகத்துக்கே இப்படி வலுகட்டாயமாக அறிவிச்சாகணுமா?

    சரி உங்க ஆளு கிட்ட இந்த பதிவ படிக்க சொல்லிராதீங்க.

  2. //தம்பி என்னடா இவ்வளவு கரிசனமா நம்மள விசாரிக்கிரானேன்னு பாத்தா….ம்.
    தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறதுல தம்பி கில்லாடி போல….
    அக்கா நான் எழுத்தாளரா(!) உங்கள் விசாரிக்கல, உங்க ரசிகனாதான் விசாரிச்சேன்..
    (எப்படியோ கேப்ல என்னை எழுத்தாளர்னு சொல்லிட்டேன்)

    //சரி உங்க ஆளு கிட்ட இந்த பதிவ படிக்க சொல்லிராதீங்க.
    அவங்களுக்கு (சபை நாகரீகம்) என்னை விட மூளை கம்மி தான் (இல்லைனா எனக்கு எப்படி ‘ஆள்’ ஆவாங்க?).. So No Probs..

  3. நீங்க விஷயத்தோடு (?) எழுதற பதிவை விட விஷயம் இல்லாம எழுதற பதிவு சூப்பருங்க ஹிஹி.

  4. //நீங்க விஷயத்தோடு (?) எழுதற பதிவை விட விஷயம் இல்லாம எழுதற பதிவு சூப்பருங்க ஹிஹி.

    உங்கள் மறுமொழி என்னை காலரை தூக்கிவிட்டு கொண்டு இந்த பாடலை பாட தூண்டுகிறது!!
    ” மடியினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை.. கொம்பிலும் நான் கொஞ்சம் கறபேன் அது தான் சாதனை!!..) ஹி ஹி ஹி ..

    (கொஞ்சம் ஓவரா இருக்கில்ல?)

  5. விஷயமே இல்லாம கூட……..இவ்வளவு நல்லா[?] பதிவு எழுத முடியுமா??

    சூப்பர்!!

  6. வருகைக்கு நன்றி திவ்யா,
    இங்க அந்த மூனாவது உண்மையை சொல்ல ஆளே இல்லையா ?

  7. Idhoo Naan irukken!!!!.

    Kalakkittinga

  8. நான் இருக்கேன்னு சொல்லீட்டு, அந்த மூனாவது உண்மைய சொல்லாம போய்டீங்களே ?

  9. \\வருகைக்கு நன்றி திவ்யா,
    இங்க அந்த மூனாவது உண்மையை சொல்ல ஆளே இல்லையா ?\

    அது என்ன மூனாவது உண்மை???

  10. //அது என்ன மூனாவது உண்மை???
    திரும்பவும் இந்த பதிவ நீங்க படிக்கணும் திவ்யா!! போன போகுதுன்னு அந்த கொடுமையை உங்களுக்கு கொடுக்காமல் நானே சொல்கிறேன்!!

    “விடியகாலைல எழு மணிக்கு எந்திருச்சு எழுதாலம்னு பிளான்! சரின்னு அலாரம் வெச்சேன்! காலைல எதோ கால் வந்துச்சு, அப்போ பாத்தா மணி பத்து! இதுலையும் ஏதாவது உண்மை இருக்கும்!! ஆனா அது என்னனு எனக்கு தெரியல!! உங்களுக்கு தெருஞ்சா சொல்லுங்க! “


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: