--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 20, 2008

பொன்னான மனமே..


இப்போ உங்களுக்காக ஒரு மொழிபெயர்ப்பு –   கொஞ்சம் என் கற்பனையையும் சேர்த்து !
பொதுவா பொண்ணுங்கள புருஞ்சுக்க முடியாது, பொண்ணுங்க மனசு அந்த கடவுளுக்கே தெரியாதுனு சொல்லுவாங்க. ஆனா பசங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள உறவு அத விட சிக்கலான விஷயம்! அவங்க லவ் பண்ணறாங்களா இல்லையா, அவங்களுக்கு நம்மள புடிக்குமா இல்லையானு குழம்பி கிடக்கிற பசங்களுக்கு இந்த பதிவ ஆழ்ந்த அனுதாபத்துடன் சமர்ப்பிக்கிறேன் !!
இது பொண்ணுங்களோட டாவ்-௮ (அதன் பா Boy Friends) பத்தி பதிப்பு இல்ல ..  டாவு பொண்ணுங்கள பத்தியான பாதிப்பு!!
உங்களுக்கு ஒரு பெண் நண்பி இருக்கா? சபாஷ், உங்களுக்கு தான் இந்த பதிப்பு!  தொடர்ந்து படிங்க!!
நீங்க, ஏன் நமக்கு எக்ஸாம் நேரத்துல நிறையா கால் பண்ணறா? நம்மள கடுப்பு அடிக்க அவன் கூட பேசறாலோ?


 இப்படி எல்லாம் நீங்க யோசிக்க ஆரம்பிச்சா, சந்தேகமே வேண்டாம் அவங்கள பொறுத்த வரைக்கும் இந்த உறவுக்கு பேரு “Just a Friend“.

இந்த உறவுக்கான அறிகுறி:
நீங்கள் கால் பண்ணும்போதெல்லாம்
“சாரி டா, இப்போ கொஞ்சம் “Personal”-௮ வெளிய போறேன் .. அப்பொறம் கால் பண்ணறேன்”னு பதில் வரும்.. ஆனா கால் கடைசி வரைக்கும் வராது! அவங்க கால் மேல கால் போட்டு உக்காந்து டிவி பாப்பாங்க!!

உங்கள் கேள்விக்கு பதில்:
அவ உங்கள எக்ஸாம் நேரத்துல கூப்பிடறது நீங்க படிக்கரீங்கலான்னு பாக்க இல்ல!! அவங்க டவுட் கேட்க்க!
அந்த அவன் உங்கள் “சக்காலத்தன்” இல்லை.. உங்களை போல் ஒரு அப்பாவி!!

அப்பாட நான் இந்த “Just a Friend” குழில விழலனு பெருமூச்சு விட்டவர்கள் மேலே படிக்கவும்!!

நீங்க கால் பண்ணறீங்க,

நீங்க: “ஹாய்’
அவங்க: “ஹாய்.. நான் குடும்பத்தோடு வெளிய போறேன்.. அப்புறம் கால் பண்ணறேன்”

(இரண்டு நாள் கழித்து, உங்க தொலைபேசிக்கு  “ட்ரிங் ட்ரிங்’ வரும் )
அவங்க: “ஹாய், ரெண்டு நாள் முன்னாடி ஏன் கால் பண்ணுன?”
நீங்க : “சும்மாதான்”
அவங்க: “ஒ சும்மாதானா, சரி நான் அப்புறம் கூப்பிடறேன்!!”

அடுத்த கால் அவங்களுக்கு எதாவது நோட்ஸ் வேணும்னா, இல்லைனா எதாவது புது  படத்துக்கு டிக்கெட் வேணும்னா வரும்!!

இந்த உறவுக்கு பேரு “Good Friend”‘

என்ன ரெண்டு குழில தப்புச்ச சந்தோசமா? படிங்க படிங்க!

அவங்க உங்களுக்கு அடிக்கடி போன் பண்ணறாங்களா? அவங்க வீட்ல தண்ணி வரலைனா,  பக்கத்து வீட்ல சாப்பாடு வேகலைனா உங்கள திட்டுவாங்க.. ஆனா கொஞ்ச நேரத்துல நல்ல பேசுவாங்க.. மொத்தத்துல உங்களோட பேசாம இருக்க முடியாது!

இந்த லட்சணத்துக்கு பேரு  Very good Friend !!
நான் இதுல எதுவும் இல்லனு மார் தட்டுகிறவர்கள் கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்!!

அவங்க எங்க வெளிய போனாலும் உங்கள கூப்பிடறாங்களா?
வா டா காபி ஷாப் போலாம், ஷாப்பிங் போலாம், எதாவது படத்துக்கு போலாம், கோயிலுக்கு போலாமா? இப்படி உங்களை  ஊர் சுத்த கூட்டிட்டு போறாங்களா? 
அப்படினா அவங்கள பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு “இலவச டாக்ஸி”.. வேற எந்த அர்த்தமும் கிடையாது!

இதையும் மீறி நீங்க ப்ரொபோஸ் பண்ணுன
“சாரி, நான் உன்ன நல்ல friend னு நினைச்சேன்! அடுத்த வாரம் எனக்கு நிச்சியதார்த்தம்!! உனக்கு Surprise குடுக்கலாம்னு சொல்லல” னு பதில் வரும்!

இதுக்கு பேரு தான் Best Friend!! This is Called as உயிர் தோழன்!!

அப்பாடா நான் இந்த எல்லாத்திலையும் தப்புச்சிட்டேன் னு நீங்க குதுச்சா, நீங்க தான் அவங்க டாவு! நல்ல மாட்டிகிட்டீங்க!! நான் வேற எதையும் சொல்லி உங்க மனச புண்படுத்த விரும்பல!

 

தாய் குலங்கள் மட்டும் மேலே படிக்கவும்!


தாய் குலங்களே நான் வெறும் மொழிபெயர்ப்பாளர்! இந்த உலகத்துல எப்படியெல்லாம் Forward மெயில் வருதுனு பாருங்க!! இந்த மாதிரி பசங்களை எல்லாம் எப்படி தான் திருத்தறதோ?

 

 

 

 

 


Responses

 1. Hi Bhuvanesh,
  Title ரொம்ப நல்லா இருக்கு. ஒரு பாட்டு ஞாபகம் வருது : பொன்னான மனமே —————————வைக்காத பொண்ணு மேல ஆசை ….. (I don’t remember the lines fully) …தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பாட்டு linesகு உங்க subject நல்லாவே ஒத்து போகுது…..

  //இந்த மாதிரி பசங்களை எல்லாம் எப்படி தான் திருத்தறதோ?
  சொல்றதெல்லாம் சொல்லிட்டு கடைசில ஒரு லைன் நீங்க escape ஆகுற மாதி இருக்கே….

  உண்மைய சொல்லுங்க இது உங்க experience தான???
  Anyway the way of writing I really enjoyed….Nice…….

 2. //Title ரொம்ப நல்லா இருக்கு. ஒரு பாட்டு ஞாபகம் வருது : பொன்னான மனமே —————————வைக்காத பொண்ணு மேல ஆசை ….. (I don’t remember the lines fully) …தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பாட்டு linesகு உங்க subject நல்லாவே ஒத்து போகுது…..

  அந்த பாட்டு பொன்னான மனமே பூவான மனமே ….

  //சொல்றதெல்லாம் சொல்லிட்டு கடைசில ஒரு லைன் நீங்க escape ஆகுற மாதி இருக்கே….
  சே சே .. பெண்கள் என் கண்கள்!! நான் அப்படி பேசுவேனா?

  // உண்மைய சொல்லுங்க இது உங்க experience தான???

  இது என் அனுபவம் இல்லை அனுமானம்!! ( இப்படி கோத்து விடறது எல்லாம் நடக்காது!!)

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி பிரியா!!

 3. //சே சே .. பெண்கள் என் கண்கள்!! நான் அப்படி பேசுவேனா?

  பெண்கள் உங்கள் கண்கள் ஆ? ஆஹா???? Rhyming எல்லாம் நல்லா தான் இருக்கு…. அப்படியே கொஞ்சம் கடலுக்கு அப்பால் இருக்குற உங்க கண்ணுகிட்ட இத சொல்லி பாருங்க….. Plz inform us the reaction….. 🙂

 4. yaarra andha kadalukku appal irukkura kannu

  priya can u explain in detail

  en kitta sonnadhe illa

 5. Gr8 escaaaaaaaaaaaaaape…

 6. முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.. Escapeaaa ?? சீக்கிரமே ஒரு கேர்ள் friend ப்ரோப்பிரஸ்து!!

 7. யோவ் சுரேஷ், பெரிய மனுஷன் மாதிரி பேசுயா .. கஷ்டப்பட்டு (!) உங்கள மகிழ்விக்க (!!) ஒரு இடுகை போட்ட அத கமெண்ட் பண்ணாம, கமெண்ட்-௮ கமெண்ட் பண்ணற.. சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு!!

 8. dei indha mail naan erkanave padichurukken da

  openly speaking andha swarasyam konjam adi padudhu

  parthukko

  mathapadi nice attempt

  podhuma

 9. //பெண்கள் என் கண்கள்
  ஆகா…சரி உங்களுக்கு எத்தன கண்ணு இருக்கு தம்பி?

  //இந்த மாதிரி பசங்களை எல்லான் எப்படி திருத்தறதோ?
  பாருங்க தம்பி மனசு எவ்வளவு கஷ்டப்படுது.
  எல்லாரும் புவனேஷ் தம்பி மாதிரி நல்லப்புள்ளையா இருக்கணும் சரியா?

 10. //ஆகா…சரி உங்களுக்கு எத்தன கண்ணு இருக்கு தம்பி?
  இது ஒரு நல்ல கேள்வி!!
  என் கண்ணுக்கு தெரியாத கண்கள் நிறைய இருக்கிறதால, உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியல!!

  //எல்லாரும் புவனேஷ் தம்பி மாதிரி நல்லப்புள்ளையா இருக்கணும் சரியா?

  தம்பிகளா அக்கா சொல்லிடாங்க, எல்லோரும் நல்ல பிள்ளையா நடக்கணும்!!

 11. //priya can u explain in detail

  Bhuvanesh kanna pathi sonnadheyillaya suresh….Oh…. Here it is…..
  **************************************
  ******$$$$$$$$$$$$$$$((((((((((((((((())))))))))))
  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ Got the matter???
  Note : Network problem la message sariyaa kedaikalena naan porupilla….. 🙂

 12. அடப்பாவி, உங்களோட ஆளு ரெம்ப பாவம். (அல்லது கடலுக்கு அப்பாலே இருக்கிறாங்க என்ற தைரியமா?)
  ம்… நல்லாயிருங்கையா …

 13. //அடப்பாவி, உங்களோட ஆளு ரெம்ப பாவம்.
  அக்கா நீங்க ரீல் லைப் மட்டும் பாத்துட்டு பேசறீங்க.. ரியல் லைப்ல நானும் ஒரு சீமான் (ஐ மீன் “ஐயோ.. நானும் அப்படி!”)!

  குறிப்பு: என் பதில் புரியாதவர்கள் குந்தவை அக்காவின் “அட….நீங்க எப்படி?” படிக்கவும்!!

 14. // நானும் ஒரு சீமான்.

  அப்ப கல்யாணத்திற்கு பிறகு, மனைவி எள் என்பதற்குள் எண்ணையுடன் நிற்கும் பவ்வியமான புவநேஷை பார்க்கலாம்.
  ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான் புவனேஷ்.

 15. ரசிக்கும்படியான…….சூப்பர் பதிவு!!

 16. நீங்களே சொல்லறது மகிழ்ச்சி!! முதல் வருகைக்கு நன்றி திவ்யா!!

 17. ************$$$$$$$$$$$(((((((())))))))@@@@@@@@@@
  romba periya kanna irukkudhe priya

  he he idhu network problem illa
  nut work pannadhadhu naala varra problem!!!!!!!

  public a solla Mudiyaadhuna “thatsitsuresh@yahoo.com” kku mail pannunga priya!!!!

  sarida bhuvanesh

  eppo un next post????????

 18. சுரேஷ் அண்ணா,
  எதாவது எழுதனும்னு நானும் Think பண்ணறேன்.. ஒன்னும் கிடைக்கல..
  நான் கொஞ்சம் TUbe Light .. ஸ்லோவா தான் ஐடியா வரும்!
  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: