--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 3, 2008

மும்பை கலவரம்!!


நம் இந்திய தேசத்தின் இறைஆண்மையை நான் சந்தேகித்த நாள்!!

சத்தியமாக அந்த இடத்தில் நம் போலீசை கையில் ஓட்ட லத்தியுடன் (அதை நாம் துப்பாகி என்று சொன்னால், தீவிரவாதி கையில் இருந்தது பீரங்கி என்று சொல்ல வேண்டும் ) பாக்க பாவமாக இருந்தது.

 இந்த தாக்குதலுக்கு காரணம் “Intelligence Failure “ஆம்.. மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால் இப்படி சொல்ல கூடாது.. ரெண்டு தடவை இந்த ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருக்கு என்று உளவு துறை சொல்லிருக்கு! கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று எச்சரித்து இருக்கார்கள்! மர்ம நபர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று மீனவர்கள் சொல்லியிருகிறார்கள்!! இன்னும் என்ன செய்ய வேண்டும்??

இது நம் அரசியல்வாதிகளின் “Intelligence Failure ”  என்று வேண்டுமானால் சொல்லலாம்!!
அரசியல்வாதிகளிடம் இருந்து நம் நாட்டை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை!!

அரசியல்வாதிகளே எங்களை காப்பற்றுங்கள்!!
உங்கள் பேரன் பேத்தி சம்பாதிக்க
எங்கள் பேரன் பேத்தி வேண்டும்!!

மத்திய உள்துறை மந்திரி ராஜினாமா!! நல்ல முடிவு!!  ஆனால் இதற்க்கு முன்னால் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஏன் இந்த ‘தியாகத்தை’ செய்யவில்லை!!  அந்த சம்பவத்திற்கு பின்னால் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேட்பார் யாரும் இல்லை!! சரி உள்துறை விஷயத்தை வெளியில் சொல்ல முடியாது என்றால், அதை RAW விடமோ CBI யிடமோ  கொடுத்துவிடலாமே.. அவர்கள் படித்தவர்கள்!! அந்த துறையில் இருப்பவர்கள்!! பொருளாதாரம் மேதாவி ப.சிதம்பரத்தை ஏன் உள்துறை அமைச்சராய் போட்டார்கள்? யார் வேண்டுமானாலும் உள்துறை மந்திரி ஆகலாமா? அதற்க்கு என்ன தகுதி? (அதுக்காக மற்ற அமைச்சர்களுக்கு எல்லாம் தகுதி அடிப்படையில் தான் பதவி கொடுத்தாங்கன்னு சொல்லல)
அவர் பதவிவகுச்ச துறையே படுத்து கிடக்கு!! இங்க என்ன சாதனை பண்ண போறாரு?  இதை விட நம் நாட்டிற்க்கு உயிர் தியாகம் செய்யும் அவர்கள் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார்கள்!!

 

வந்த செய்தி:
இந்தியாவில் நடந்த  தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் தன் ஹாங்காங்  சுற்றுபயனத்தை ரத்து செய்து விட்டார்!!

  எங்க ஜனாதிபதியே இந்தோனேசியாவில் சுற்றுபயணதுல  இருந்து இப்போ தான் வந்துருக்காங்க .. நீங்க ஏன் சார் கஷ்டப்படறீங்க? உங்க திட்டம் sucess தானே? அப்புறம் என்ன, சும்மா ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க!!


இன்னும் பல கேள்விகள் இருக்கு, அதை மற்ற பதிவாளர்கள் போட்டுவிட்டதால் அதை சொல்ல வேண்டாம் என விட்டுவிட்டேன்!!


Responses

 1. //நீங்க ஏன் சார் கஷ்டப்படறீங்க//

  சார் = மேடம்.

  உங்க தப்பில்லை.
  இந்த லட்சணத்துலதான், அவங்க, ‘இருப்பே’ இருக்கு 🙂

 2. வாங்க சர்வேசன், முதல் வருகைக்கு நன்றி!!

  பாகிஸ்தான் பிரதமர் பெயர் யூசுப். அதனால் சார் கரெக்ட் என்று தான் நினைக்கிறேன்!!

 3. my bad then. நான் நம்ம பிவிய பத்தி சொல்றீங்களோன்னு நெனச்சுட்டேன்.

 4. //பொருளாதாரம் மேதாவி ப.சிதம்பரத்தை ஏன் உள்துறை அமைச்சராய் போட்டார்கள்? யார் வேண்டுமானாலும் உள்துறை மந்திரி ஆகலாமா? அதற்க்கு என்ன தகுதி? (அதுக்காக மற்ற அமைச்சர்களுக்கு எல்லாம் தகுதி அடிப்படையில் தான் பதவி கொடுத்தாங்கன்னு சொல்லல)//

  I agree this point.

 5. எங்கேயோ போற மாரியாத்தா
  கொஞ்சம் என் மேலயும் வந்து ஏறாத்தா…
  என்கிற கதை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது…
  ஒருவரை ஒருவர் குற்றஞ் சொல்லி கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல் வாதிகள்…

 6. காலையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது…
  அதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு நம் இந்திய அரசு மூன்று கோடி பரிசு தொகை அளித்திருந்தது பற்றியும் அண்மையில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேச பாதுகாப்புக்காக உயிர் நீத்த காவல் அதிகாரிகளுக்கு ஐந்து லட்சம் உதவி தொகை வழங்கியதையும் ஒப்பிட்டு நம் இந்திய ஜனநாயகத்தை வாழ்த்தி இருந்தது.

  முன்னவர் விளையாட்டில் துப்பாக்கியில் சுட்டு வெற்றி பெற்றதற்கு மூன்று கோடி…
  பின்னவர்கள் தேச பாதுகாப்புக்காக துப்பகியில் சுட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு ஐந்து லட்சம்…

  எண்ணி பாருங்கள் நம் ஜனநாயக நாட்டின் லட்சணத்தை…

 7. //இது நம் அரசியல்வாதிகளின் “Intelligence Failure “ என்று வேண்டுமானால் சொல்லலாம்!!//

  நம் அரசியல்வாதிகளுக்கு intelligence கிடையாது. அவர்க்களுக்கு இருப்பதெல்லாம் வஞ்சகம் தான். எங்க பணம் பண்ணலாம். எப்படி நாற்காலி புடிக்கலாம் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணங்கள்.

  மீனவர்கள் கூட நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள். உளவுத்துறை சொல்லி இருக்குறது. அமெரிக்காவும் சொல்லி இருக்கிறது. ஒரு வேளை அந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளே சொல்லி இருக்கணும் போல. என்னத்தை சொல்லுறது

 8. /நம் இந்திய தேசத்தின் இறைஆண்மையை நான் சந்தேகித்த நாள்!!/

  அருமையான வார்த்தை ஜாலம்…

  /இது நம் அரசியல்வாதிகளின் “Intelligence Failure “ என்று வேண்டுமானால் சொல்லலாம்!/

  வண்மையாக கண்டிக்கிறேன்… இல்லாத ஒன்று எப்படி ‘failure’ ஆகும்???

  /அரசியல்வாதிகளே எங்களை காப்பற்றுங்கள்!!
  உங்கள் பேரன் பேத்தி சம்பாதிக்க
  எங்கள் பேரன் பேத்தி வேண்டும்!!/

  உண்மை… அரச வம்சாவளி ஒழிந்தது ஆனால் வாரிசு அரசியல் மட்டும் ஒழியவில்லை… அரசியலுக்கு வர இது மட்டுமே தகுதி ஆகி விட்டதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு காரணம்

 9. //அமெரிக்காவும் சொல்லி இருக்கிறது. ஒரு வேளை அந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளே சொல்லி இருக்கணும் போல.

  அவர்களே சொன்னாலும் இவர்கள் பதில் “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று தன் இருக்கும். அரசியல்வாதிகள் கடமையை செய்யவே மாட்டார்கள்!!

 10. @ Sriram
  அந்த மின்னஞ்சலை பார்த்து நானும் வெந்தேன்!! அந்த விளையாட்டு வீரர் (??) ஏற்கனவே கோடிஸ்வரர் என்பது பலருக்கு தெரியாது!!
  அவர் பயிற்சி பெற்றது எல்லாம் வெளிநாட்டில்!! அவருக்கு ஒரு கோடி என்பது பெரிய விஷயம் இல்லை!! பாவம் நம் நிஜ வீரர்கள்!!

 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன், ஸ்ரீராம்!!

 12. //அரச வம்சாவளி ஒழிந்தது ஆனால் வாரிசு அரசியல் மட்டும் ஒழியவில்லை… அரசியலுக்கு வர இது மட்டுமே தகுதி ஆகி விட்டதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு காரணம்

  உண்மை.. நேரு குடும்பத்தை விட்டால் நம்மை ஆட்சி செய்ய ஆளே இல்லையா?
  இல்லை காங்கிரஸ் வேறு தலைவர்களை உருவாக்கவில்லையா?

  அன்று விடுதலைக்காக பாடுபட்ட காங்கிரஸ்
  இன்று நேரு குடும்பத்தின் அடிமையாய்!!

 13. neraya sollanum

  urgenta velai irukku

  appuram varen

 14. OK OK………

  PLS COOL FRIENDS

 15. //வண்மையாக கண்டிக்கிறேன்… இல்லாத ஒன்று எப்படி ‘failure’ ஆகும்??? //

  IT’S REALLY CORRECT

 16. மெதுவா வந்து சொல்லுங்க சுரேஷ்!! இந்த பிரச்சனை இப்போதிக்கு முடியாது!!

 17. //PLS COOL FRIENDS
  வாங்க சமாதான புறா!! You are correct. நாம பேசி ஒன்னும் ஆகாது!! ரெண்டு நாள் பேசுவோம். அப்புறம் வேலைய பாக்க போய்ருவோம்!!

 18. […] இருந்த குச்சியை (நன்றி புவனேஷ்@சுட்டபழம் ) வைத்து என்ன பண்ணுவார்கள் பாவம். […]

 19. Kid, I didn’t expect a serious post from U.(just kidding)

  No words about the tragedy.

 20. //Kid, I didn’t expect a serious post from U.
  சீரியஸ் போஸ்ட் வேண்டாம்னு தான் பார்த்தேன். ரொம்ப யோசிச்சு எழுதி ரெண்டு நாளைக்கப்பரம் தான் போட்டேன்!!

  //(just kidding)
  நீங்களும் KID(ing) a?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: