--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 9, 2008

வயிர் எரிய வைக்கும் பெட்ரோல்!


இது அல்சர் சமந்தமான பதிப்பு இல்லை! இவன் எப்போதும் போல் மொக்கை போட போறான் என்று நினைத்து  நீங்கள் மேலே படித்தால் ஏமாந்து போவீர்கள்! இது நான் வயிர் எரிந்த கதை!

வயிர் எரிய மூலப்பொருள்:  பெட்ரோல்! 

வழக்கமா எனக்கு பிடித்த பொண்ணு வேற பையன் கூட பேசுனா மட்டும் தான் வைதேருச்சல் வரும்! அப்படி பட்ட என்னையவே வயிர் எரிய வச்சுருச்சு இந்த பெட்ரோல்!

சரி நீங்களும் கேளுங்கள அந்த கணக்கை!

 

பெட்ரோல் விலை ருபாய். ஐந்து குறைப்பு. இதை படித்தவுடன் எனக்கு ஒரே சந்தோஷம்!! என் Manger கிட்ட போய் இத சொன்னா, அவரு “வெறும் அஞ்சு ரூபா தான், பிச்சக்கார பசங்க! 420!!” அப்படின்னு சொல்லிட்டு  ஒரு கணக்கு சொன்னாரு! நான் அப்படியே ஷாக் ஆய்ட்டேன்!!
போன ஜூலை மாசம் Crude ஆயில் விலை ஒரு Barrel  147 அமெரிக்கா டாலர்கள்.
அதாவது நம் நாட்டு மதிப்புப் படி Rs. 5586 (ஒரு டாலர் 38 ருபாய்). அப்ப எல்லா எண்ணை நிறுவனமும் விலை ஏற்றம் வேணும்னு  குதிச்சுது. நம் அரசும் ஐந்து ரூபாய் ஏற்றியது. நாமளும் அந்த சுமையோட வாழப் பழகிட்டோம்!!

இன்று Crude ஆயில் விலை ஒரு Barrel 42 அமெரிக்கா டாலர்!! அதாவது நம் நாட்டு மதிப்பு படி Rs. 2058 (ஒரு டாலர் 49 ருபாய்).  இன்று விலை குறைப்பு ஒரு சாதனை என்று அரசாங்கம் மார் தட்டுகிறது. இந்த நாற்பத்திரெண்டு டாலருங்கறது கடந்த மூணு வருசத்துலயே கம்மியான விலை!! அதாவது ஜூலை 2008-ஐ விட கம்மியான விலை!! அப்ப  ஜூலை 2008 இல் இருந்ததை விட கம்மியான விலை வேண்டாமா?  இது வெறும் பித்தலாட்டம்!

சரி இதை எல்லாம் விட இன்னொரு கணக்கு, கொஞ்சம் ஆடித் தான் போய் விட்டேன்

ஒரு Barrel என்பது 159 லிட்டர்!!

அதாவது ஜூலை 2008 நிலவரப்படி, ஒரு லிட்டர் 35 ருபாய்! அதே இன்று வெறும் 13 ருபாய்!!

இன்று கட்சா என்னை விற்கும் விலை கிட்டத்தட்ட  2004 ஆம் ஆண்டு இருந்த விலை! 2004 ஆம் ஆண்டு பெட்ரோல் விலை வெறும் 35 ருபாய்!! இன்று?

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு பெட்ரோல் விலை குறைப்பு திருப்த்தியா ?


Responses

 1. வைகோ கூட பெட்ரோல் விலையை 2004 ம ஆண்டில் இருந்த விலைக்கு குறைக்க சொல்லி இருக்கார்.

  இந்த பெட்ரோல் விலையை மத்திய அரசு subsidised ரேட் ல தரதா சொல்லுறாங்களே, அதை கொஞ்சம் ஆராய்ஞ்சி அப்படி என்னதான் subsidise பண்ணுறாங்கன்னு ஒரு பதிவு போடுங்களேன்.

  வயிர்-னா? wire ஆ? இல்லை வயிரா?

  நான் தன் பர்ஸ்ட் கமெண்ட் போட்டு இருக்கேன். நியாபகம் வச்சிகோங்க.

 2. மொதல்ல வந்த மோகனுக்கு மொதல் பரிசா என் மொதல் மறுமொழி !!

  //வயிர்-னா? wire ஆ?
  புள்ள எப்படி எல்லாம் யோசிக்குது?

  //இந்த பெட்ரோல் விலையை மத்திய அரசு subsidised ரேட் ல தரதா சொல்லுறாங்களே, அதை கொஞ்சம் ஆராய்ஞ்சி அப்படி என்னதான் subsidise பண்ணுறாங்கன்னு ஒரு பதிவு போடுங்களேன்.

  இது வேறயா?? எதுக்கும் நேரம் வரும் போது எங்க மேனேஜர் கிட்ட கேட்டு பாக்கறேன்!!

 3. ஆமாம் புவனேஷ்
  கூட்டி கழிச்சு பார்த்தேன்…
  கணக்கு சரியா வரல…

 4. will tamilnadu govt reduce bus fare?

 5. //கூட்டி கழிச்சு பார்த்தேன்…
  //கணக்கு சரியா வரல…

  அதனால தான் எனக்கும் வைத்தேருச்சல்!

 6. //will tamilnadu govt reduce bus fare?

  ஏதோ எம்.எல்.எ கூட சாதிக்கமுடியலையாம், அத நான் சாதிகனுமாம்!! நான் என்ன கோர்ட்-ஆ ஜட்ஜ்-ஆ இல்ல வாக்கிலா ?
  எதுக்கும் அடுத்த சட்டசபை கூட்டம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க! வருகைகைக்கு நன்றி avrampillai!!

 7. Onnum Puriyala….

 8. மக்களே,

  அது வயிர் இல்லிங்கப்பா, அது வயிறு.

 9. ரேவதி என்ன புரியல? இந்த பதிவா இல்ல என் மறுமொழியா?

 10. Intha Calculation…

 11. விடுங்க பாஸ் இவனுங்க எப்பவுமே இப்படி தான்… இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

  ஒரு முறை BSNL, STD கால் ஒரு நிமிசத்துக்கு 7 ரூபாய் அப்படின்னு மாத்துனாங்க… உடனே “தோழர் இது அநீதி” அப்படின்னு அவிங்க குதிக்கவும் 3.50க்கு குறைசிட்டானுங்க…

  அதுக்கு முன்னாடி 2 ரூபாய் இருந்துச்சு… 2 ரூபாயில இருந்து 3.50 க்கு மாத்தினது எப்படி விலை குறைப்பு அப்படின்னு எனக்கு இன்னி வரைக்கும் புரியல…

  எங்கயோ ஒரு குரல் கேக்குது… “இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது?” யாருன்னு உங்களுக்கு எதாவது தெரியுமா???

 12. வாங்க அந்தோனி, திருத்தத்திற்கு நன்றி!! (ஆனா நான் எல்லாம் திருந்தாம சுத்தற ஆளு!!)

 13. Revathi,
  One Barell = 42 Dollars
  1 dollar = 49 rpess
  so, 1 Barell = 42*49 Rupess =2058 Rupees

  1 Barell = 159 Liters

  159 liters = 2058 Rupees
  1 liter = 2058 / 159 Rupees
  1 Liter = 13 Rupess

  இது தான் கணக்கு!! ஓகே வா ?

 14. வாங்க சரவணன்!! BSNL மேட்டர் புதுசா இருக்கு!!

 15. ok ok Thanks…..

 16. http://www.portfolio.com/interactive-features/2008/08/Gas-Prices-Around-the-World

 17. இன்னாபா ரெம்ப நாளா ஆளைக் காணோம்?

 18. சரி, என்ன தான் வயிரெரிஞ்சாலும், பக்கத்து தெருவுக்கு கூட நடக்கமாட்டீங்களே.
  இப்ப கணக்கு பாருங்க, சரியா வரும்.

 19. //சரி, என்ன தான் வயிரெரிஞ்சாலும், பக்கத்து தெருவுக்கு கூட நடக்கமாட்டீங்களே.
  இப்ப கணக்கு பாருங்க, சரியா வரும்.

  அது எங்கள் ( Note This point- “எங்கள்” ) இளைய சமுதாயத்தின் கலாச்சாரம் அக்கா!!

  @ Mogan

  என்ன போடறதுன்னு தெரியல மோகன்!! ஒரு விஷயமும் கிடைகல!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: