--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 16, 2008

நானா அவனா??


நானும் எதாவது கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் எதை பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை. இருந்தாலும் கதை எழுதுவதில் உறுதியாக இருக்கிறேன். நாளை கல்லுரியில் கதை போட்டி! நிச்சயம் இந்த போட்டியில் எதாவது கதை எழுதிய பரிசு வாங்கவேண்டும்! என்ன கதை எழுதலாம் என்று தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன்!! சிந்திக்கும் போதா போன் கத்தனும்?

இந்த அர்த்த ராத்திரியில் யார் அழைகிறார்கள்?? அழைகின்றவன் என் கல்லூரி தோழன்! கதை கவிதை என்று அவன் ஒரு தனி தளத்தில் இருப்பான். அவன் கதையை நான் முகத்துக்கு நேரே விமர்சனம் செய்வதால் என்னை அவனுக்கு பிடிக்கும். இருந்தாலும் இந்த நேரத்திற்கு அவன் ஏன் அழைக்கிறான்?

“ஹலோ”
டேய் தூங்கீட்டிய?”
“இல்ல டா.. சொல்லு.. நீ தூங்கல?”
“இல்ல டா நாளைக்கு போட்டிக்கு ஒரு கதை எழுதுனேன். சொல்லறேன் கேட்டுட்டு நல்ல இருக்கானு சொல்லு”
“சரி சொல்லு””
“டே நீ தூக்க கலகத்துல இருந்தா நான் சொல்லல. நாளைக்கு கண்டிப்பா ஜெயிக்கணும். ஜெயிச்சா இந்த செமஸ்டர் பீஸ் கட்டலாம்”
“நான் இன்னும் தூங்கல டா சொல்லு”
“இன்னும் தூங்காம என்ன டா பண்ணற?”
“நாளைக்கு போட்டிக்கு கதை எழுதறேன்”
“ஒ!! ஆல் த பெஸ்ட் டா!! எதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு”
“டேய் உன் கதைய சொல்லு டா!’
இல்ல டா நாளைக்கு போட்டிக்கு நீ கதைய மோதல எழுது அப்புறம் சொல்லறேன்”
“Bye da”

அவனுக்கு போட்டியில் ஜெயிக்க நோக்கம் இருக்கிறது? நான் ஏன் போட்டியில் பங்கு பெறவேண்டும்? சற்று யோசனையில் இருந்தபின், அவனை அழைத்தேன்!!

“ஹலோ”
“டேய் நான் தன் டா”
சொல்லு டா’
“உன் கதைய சொல்லு டா”
“நீ கதைய எழுதியாச்சா?’
“இல்ல டா நான் போட்டியில் கலந்துக்கல”
“ஏன்?”
“ஒன்னும் இல்ல.. நான் ஏன் கலந்துக்கணும்? நீ கலந்து ஜெய்ச்சா உனக்கு பிரயோஜனம்!! எனக்கு?”
“ஹி ஹி.. டேய்.. நீ கலந்து கொள்ளாததால் மட்டும் நான் வெற்றிபெற முடியாது. நான் நல்ல கதை எழுத வேண்டும். உன்னால் என்னைவிட கதை எழுத முடியும்னா நீ தான் அந்த பரிசை வாங்க வேண்டும்! போட்டியில் திறமை தான் ஜெயிக்க வேண்டும், வறுமை இல்லை!  போட்டியில் சந்திப்போம்!! நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு! நீயும் அந்த நம்பிக்கைவைத்து நல்ல கதை எழுதிவை.”
“சரி டா!! நீ தூங்கு”                                                                                                                                                                                                                                                                     தூங்கறதா?? தம்பி கதை எழுதீட்டு போன் பண்ணு!! நான் மொதலா படிக்கிறேன்!!
 அது முடியாது!! போட்டின்னு வந்துட்டா நாங்கெல்லாம் Terror!!
 ஹ ஹ!! நாளைக்கு போட்டில சந்திக்கலாம்!!

அவனுடன் பேசிய பிறகு கதைஎழுத எனக்கு நோக்கம் கிடைத்தது!! நோக்கம் மட்டும் இல்லை தலைப்பும் கிடைத்தது. தலைப்பு இது தான் “தன்னம்பிக்கை மனிதர்கள்”. அவனையே கதை நாயகனாக்கி ஒரு கதை ரெடி!!

பரிசு எனக்கு தான் என்று நிச்சியம் நம்புகிறேன்!

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. இந்த கதை பரிசு பெற்றால் ஜெயித்தது நானா அவனா?


Responses

 1. நல்லா இருக்கே கதை.

  எனக்கு என்ன தோணுதுனா நம்மை சுத்தி நெறைய கதைங்க இருக்கு. ஆனா அதை எப்படி எழுத்துல கொண்டு வரோம் அப்படிங்கரதுலதான் விஷயமே இருக்கு. அதனால கதை எழுதின நீங்க தான் ஜெயிச்சீங்க. ஆனா பரிசு பணத்தை உங்க நண்பர் கூட பகிர்ந்துகொங்க. என்னா அவர் தன் மூலக்கதை உருவாக்கம், நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதி வெற்றி பெற்று இருக்கீங்க.

 2. ஹய்யா நான் தான் பர்ஸ்டு!

 3. // அதனால கதை எழுதின நீங்க தான் ஜெயிச்சீங்க. ஆனா பரிசு பணத்தை உங்க நண்பர் கூட பகிர்ந்துகொங்க. என்னா அவர் தன் மூலக்கதை உருவாக்கம், நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதி வெற்றி பெற்று இருக்கீங்க

  நன்றி மோகன்!! இதுல நீங்க “நீங்க” “நீங்க” (எப்படி?) சொல்லறது கதைல வர கதாபாத்தரத்த தானே?

 4. //ஹய்யா நான் தான் பர்ஸ்டு!
  வாழ்த்துக்கள் மோகன்!! நீங்க தான் பர்ஸ்டு! You Did It Man!!

 5. Very Nice ,

 6. (Pottikkana) Kathaiye Ithu thaanaa??

 7. ஹய்யா நான் தான் Second…

 8. //(Pottikkana) Kathaiye Ithu thaanaa??

  இது போட்டிக்கானா கதை இல்லை!! கதைல வர போட்டி!!

  //Very Nice ,

  நன்றி ரேவதி!!

 9. /ஹய்யா நான் தான் Second…

  hello நான் தான் Second… நீங்க Fifth..

 10. அட போப்பா… உன் கதையில ஒரு குத்துப் பாட்டு இல்ல … ரொமான்சே இல்ல …

  என்னய்யா ஆர்ட் பிலிம் எதாவது எடுக்க போறியா?

 11. //அட போப்பா… உன் கதையில ஒரு குத்துப் பாட்டு இல்ல … ரொமான்சே இல்ல …

  என்னய்யா ஆர்ட் பிலிம் எதாவது எடுக்க போறியா?

  ஹீரோ சார்,
  கதை எல்லாம் ஹீரோ கண்ணுல படாத வரைக்கும் ஆர்ட் பிலிம் மாதிரி தான் இருக்கும்!! நீங்களே எங்க ரோமான்ஸ் வைக்கிறது, எங்க குத்து பாட்டு வைக்கறதுன்னு சொல்லுங்க !!

 12. ஒன்னிய சும்மா கலாய்ச்சி பார்த்தேன்…கண்டுக்காத நைனா…மெய்யாலுமே கதை படா சோக்கா கீது அண்ணாத்த…

 13. // ஹீரோ சார்,
  கதை எல்லாம் ஹீரோ கண்ணுல படாத வரைக்கும் ஆர்ட் பிலிம் மாதிரி தான் இருக்கும்!! நீங்களே எங்க ரோமான்ஸ் வைக்கிறது, எங்க குத்து பாட்டு வைக்கறதுன்னு சொல்லுங்க !! //

  அந்த பயம் இருக்கணும்…
  அப்புறம் ஏன்யா நடிகருங்க கிட்ட கால்ஷீட் கேட்டு வர்றீங்க?
  கதையில ஒபெனிங் பில்ட் அப் சீன் எல்லாம் ஒண்ணுமே இல்ல …

  கதைய நிறைய மாத்தனும் போல இருக்கே… (கதைய மாத்தி அப்படியே நம்ம பேருல ஒரு காபி ரைட் போட்டுக்க வேண்டியது தான் ….)

 14. //ஒன்னிய சும்மா கலாய்ச்சி பார்த்தேன்

  நீங்க கலைக்கணும்னு தானே பதிவு போடறதே!!

 15. //மெய்யாலுமே கதை படா சோக்கா கீது அண்ணாத்த…
  நன்றி நன்றி !!

 16. //கதைய நிறைய மாத்தனும் போல இருக்கே… (கதைய மாத்தி அப்படியே நம்ம பேருல ஒரு காபி ரைட் போட்டுக்க வேண்டியது தான் ….)

  சார் நீங்க நீங்க எங்க பாட்டு வைக்கணும்னு சொல்லுங்க!! அங்க வச்சுருவோம்!!
  நீங்க தான் ஹீரோ!! இது தான் கதை!! Producer யாரு ?

 17. ஹீரோவா நான் நடிச்சா தான் படம் ஓடணும்னு இருந்தா நான் ரெடி… Producer வேற யாரு…நம்ம புவனேஷ் தான் …

 18. ரெம்ப புதுமையாக இருந்தது கதை.
  வ்ஸ்த்துக்கள் தம்பி.

  புவனேஷ் புதுசு புதுசா புகுந்து விளையாட புறப்பட்டுட்டாரு…..

 19. sorry
  வாழ்த்துக்கள் தம்பி.

 20. மச்சி கலக்கிட்ட போ…

 21. //ரெம்ப புதுமையாக இருந்தது கதை.

  அக்கா நெசமாத்தான் சொல்றீங்களா?

  //புவனேஷ் புதுசு புதுசா புகுந்து விளையாட புறப்பட்டுட்டாரு…..

  இப்படி உசுபேத்தி உசுபேத்தீயே உடம்ப ரணகளம் ஆக்கிடாங்க!!

 22. //மச்சி கலக்கிட்ட போ…
  நன்றி மச்சி!! ஆனா இந்த பாராட்டை எல்லாம் ஏத்துக்கலமா வேண்டாமானு தெரியல!!

 23. //வ்ஸ்த்துக்கள் தம்பி. //வாழ்த்துக்கள் தம்பி.
  நான் என்னோட வாளி பதிவ லிங்க் பண்ணி எதோ சொல்லறீங்கன்னு நினச்சுட்டேன்!! வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா 🙂

 24. //நான் என்னோட வாளி பதிவ லிங்க் பண்ணி எதோ சொல்லறீங்கன்னு நினச்சுட்டேன்!!

  எங்களுக்கெல்லாம் எழுதும் போதுதான் spelling mistake வரும்.

 25. Very nice:))

  dialogues realistic aa irukku…….really nice!

 26. Competition la win panna en heart filled wishes!!

 27. “தன்னம்பிக்கை மனிதர்கள்”……..Expecting ur story:))

 28. //Very nice:))

  //dialogues realistic aa irukku…….really nice!
  நீங்களே சொல்லறீங்க, அப்போ உண்மையாலுமே நல்ல இருக்கும் போல ?

  //Competition la win panna en heart filled wishes!!
  நன்றி திவ்யா!!

  //“தன்னம்பிக்கை மனிதர்கள்”……..Expecting ur story:))

  அய்யய்யோ!!

 29. புவனேஷ் நான் உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன். விவரங்களுக்கு என் வலைப் பூவிற்கு வாருங்கள்.

 30. அன்புள்ள புவனேஷ்,
  உங்க கதை வெற்றி பெற்றதா? இல்லாட்டி உங்களை ஹீரோவா போட்டு அவர் எழுதி .. 😀 .. அவரோட கதை வெற்றி பெற்றுவிட்டதா.. அதையும் சொல்லிடுங்க.. இல்லாட்டி மண்டை வெடிஞ்சுடும்…

  ரொம்ப அழகான கதை.. ரொம்ப பொறுப்பா இப்படி நீங்க எல்லோரும் எழுதறதை படிகரதுக்கு மனசுக்கு நிறைவா, ரொம்ப சந்தோஷமா இருக்கு… மேலும் எழுத வாழ்த்துக்கள்

  அன்புத் தோழி ,

 31. ஹாய் புவனேஷ் கதை போட்டிக்கு போச்சா இல்லையா அப்டின்றது எல்லாம் விசயமே இல்ல நீங்க போட்டிக்கு போன விதம் எழுதினது ரொம்ப நல்லா இருந்தது.

 32. சித்ரா, இது போட்டிக்காக எழுதின கதை இல்ல.. கதைல வர போட்டி 🙂
  இது என் கற்பனை கதை 🙂

 33. //ரொம்ப அழகான கதை.. ரொம்ப பொறுப்பா இப்படி நீங்க எல்லோரும் எழுதறதை படிகரதுக்கு மனசுக்கு நிறைவா, ரொம்ப சந்தோஷமா இருக்கு… மேலும் எழுத வாழ்த்துக்கள் //

  ஜானு அக்கா.. இன்னுமா நீங்க இந்த கருத்துல இருக்கீங்க ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: