--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 23, 2008

பேர் வைக்க தெரியல!!


மொதல்ல தலைப்புல என்ன வில்லங்கம் இருக்கும்னு குதர்கமா யோசிக்கரத விட்டுட்டு மேலே படிங்க!! இதுல நீங்க நினைச்ச மாதிரி தப்பா எதுவும் இருக்காது (அதுக்காக நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது!). உங்களுக்காக கதை கவிதை நகைசுவை (ஆனா நீங்க எல்லாம் அத மொக்கை னு சொல்லுவீங்க) என பூந்துவிளையாடின இந்த “கோவை வேந்தன்”   இப்போது உங்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மகிழ்விக்கபோகிறேன் (என்னது இன்னியோட எழுத்த நிப்பாட்ட போறியா??)!!
 
இதோ உங்கள அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பாரதிராஜா இங்க இடுகை எழுதாத காரணத்தினால் உங்கள் கடுப்பிற்கு உரிய இந்த புவனேஷ் வந்துளேன் (அதுக்காக நீங்க எல்லாம் போயராதீங்க)!!
 
பில்லா அஜித் ஸ்டைல்ல சொல்லாம வித்யாசமா சொல்லனும்னா “I am ABout Turn”!! புரியலையா?? சீரியஸ் பதிவு, கதைனு வேற திசைல போன நான், திரும்பி மொக்கை பதிவுக்கே வந்துட்டேன்!! Yes I am About Turn!! (யார் யாருக்கெல்லாம்  இங்கிலீஷ் டியூஷன் வேணும்?? லைன்ல நில்லுங்க)!
 
சரி சரி விஷயத்துக்கு வரேன்,
 
எங்க கம்பெனில யாரும் இனிமேல் Gtalk  யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லிடாங்க..
என்ன தான் வட்ட மேஜைல உக்காந்து பேசி சட்டம் போட்டாலும் இந்த சுட்ட பழம் சட்ட செய்யமாடன்! மனசுல பட்டதை சொல்லுவான்!! எதிர் கட்சி செய்த சதியை எங்கள் மதியால் வென்றோம்!! பின்ன, நாங்க என்ன ஆபீஸ்ல வேலை செய்யறதா??  லுச்சா தனமா யோசிகரானுங்க!!
 
சரி நாமளும் சாட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சே இன்னைக்கு போகலாம்னு நினைச்சு  நேத்திக்கு போன்னேன்!! போனவுடனே மொதல்ல பாத்தா என் பள்ளி நண்பன் ஸ்ரீகாந்த் ஹாய் னு அமுசிருந்தான்!!
 
 ஆஹா, நமக்கு கிடைத்துவிட்டான் ஒரு அடிமைன்னு கொஞ்ச நேரம் அவன மொக்க போட்டேன்!! மொக்க போடும்போதுதான்  உங்க ஞாபகம் வந்துச்சு, ஆஹா நம்ம மொக்க போடாம மக்கள் நிம்மதியா இருக்காங்களேன்னு பீல் ஆகி, எழுத ஆரம்பிச்சேன், 

“ஸ்ரீகாந்த் என் பாலிய நண்பன்!! எல்லா கிளாஸ்ளையும் யாரவது ஒருத்தர் முதல் ரேங்க் எடுப்பாங்க!! அதே மாதிரி ஒருத்தனாவது கொஞ்சம் ‘காமெடி’ யா வந்து மாட்டுவானுங்க!!”

 

என் முதுகை தட்டிய என் கம்பெனி தோழன் மேலே உள்ளதில் முதல் வரியை மட்டும் படித்து விட்டு கேட்டான் ஒரு கேள்வி!! அவன்  அப்படி கேட்ட பிறகு நான் எழுதும் எண்ணத்தை பெட்ரோல் ஊத்தி எரித்துவிட்டேன் !!

அவன் கேட்டது இது தான்!!

“என்ன டா, பாலிய (Paaliya) நண்பன் ?? ஏதாவது சீன் கதை படிக்கறியா??”

 

இதையும் படிங்க:
நீங்களும் அதை paaliya நண்பன் என்று படித்தால் நான் பொறுப்பல்ல!! நான் சொன்னது Baaliya நண்பன்!!

நம்ம நண்பர் ஸ்ரீராம் சொன்ன “வழக்கொடியும் வார்த்தைகள் …” தொடர் பதிவுல இதையும் சேத்துக்கலாமா??


Responses

 1. யோவ் புவனேஷ்… இந்த பதிவு நம்ம இயக்குனர் பாக்கியராஜ் ஸ்டைல்ல இருக்குது யா…

 2. அதுக்கு பேரு பாலிய நண்பன் இல்லை, பால்ய நண்பன்.

  தப்பா எழுதிட்டு இதுல ஒரு விளக்கம் வேற, பதிவு வேற.

 3. யோவ் உன்னைய தொடர் பதிவு போட சொன்னா, எப்படியோ ஒப்பேத்திபுட்ட போல…

 4. Cool Down Annachi…

 5. இத படிச்சிட்டு நானும் கொலை வெறியோட கடுப்புல தான் இருக்கேன்…

 6. //யோவ் புவனேஷ்… இந்த பதிவு நம்ம இயக்குனர் பாக்கியராஜ் ஸ்டைல்ல இருக்குது யா…

  வாங்க ஸ்ரீராம், இது என்னகு பாராட்டு தானே?

  //அதுக்கு பேரு பாலிய நண்பன் இல்லை, பால்ய நண்பன்

  பூவ பூனும் சொல்லலாம், பூய்பம் னும் சொல்லலாம், நீங்க சொல்லரா மாதிரியும் சொல்லலாம்!! நானும் அப்படிதான் நினைச்சேன்!! ஆனால் எல்லாம் கதைகளிலும் பாலிய நண்பன் என்று தான் சொல்லறாங்க!! வேணும்னா நம்ம கூகுளை கேட்டு பாருங்க!!(அவங்க தவறை சுட்டி காட்ட எடுக்க பட்ட முயற்சி இது!!)

 7. //இத படிச்சிட்டு நானும் கொலை வெறியோட கடுப்புல தான் இருக்கேன்
  அப்போ, உங்கள் முந்தைய மறுமொழியை (“Cool Down Annachi…”) படிக்கவும்!!

 8. //யோவ் உன்னைய தொடர் பதிவு போட சொன்னா, எப்படியோ ஒப்பேத்திபுட்ட போல…

  இது தொடர் பதிவுக்கு ஓகே வா ?? அப்ப சரி!!

 9. சரி சரி… மூணு பேர மாட்டி வுடு அண்ணாத்த…

 10. கொஞ்சம் டைம் கொடுங்க சார்!! நான் மாட்டி விட எனக்கு நிறைய வலை நண்பர்கள் இல்லை!!

 11. // கொஞ்சம் டைம் கொடுங்க சார்!! நான் மாட்டி விட எனக்கு நிறைய வலை நண்பர்கள் இல்லை!! //

  ஆமா ஆமா… இருந்த சில போரையும் நான் இழுத்து விட்டுட்டேன்…

 12. நாங்களும் அப்பப்ப தமிழை கொலை செய்வோம் தான் , ஆனாலும் நீங்க பேசும் போதும் , எழுதும் போதும் , நடக்கும் போதும் விடாமல் இப்படி துரத்தி துரத்தி கொலை பண்ணுறீங்களே தம்பி இது நியாயமா?

 13. வாங்க அக்கா!! என்ன பண்ணறது கொஞ்சம் பிஸி, நீங்க எல்லாம் என்ன மறந்தர கூடாதுன்னு அவசர அவசரமா அடுச்சது!!
  இருந்தாலும் நானும் ஒரு ஓபன் மன்னிப்பு கேட்டு வைக்கிறேன்!!
  மனுச்சுருங்க நண்பர்களே!!

 14. \\மொதல்ல தலைப்புல என்ன வில்லங்கம் இருக்கும்னு குதர்கமா யோசிக்கரத விட்டுட்டு மேலே படிங்க!!\\

  மேலே படிச்சேன் “பேர் வைக்க தெரியல!!” அப்படின்னு போட்டிருந்துச்சி …

  சரி மீண்டும் தொடரலாமுன்னு படித்தேன்

  \\மொதல்ல தலைப்புல என்ன வில்லங்கம் இருக்கும்னு குதர்கமா யோசிக்கரத விட்டுட்டு மேலே படிங்க!!\\

  மறுபடியும் மேலே படிச்சேன் “பேர் வைக்க தெரியல!!” அப்படின்னு போட்டிருந்துச்சி …

  ……………….

 15. வாங்க ஜமால்!! வரும்போதே வில்லங்கமா ??

  //மறுபடியும் மேலே படிச்சேன் “பேர் வைக்க தெரியல!!” அப்படின்னு போட்டிருந்துச்சி …

  சரி அதுக்கு மேல படிச்சீங்களா?? இல்லையா ??

 16. :-)))

 17. //:-)))
  வாங்க கிரி!!

 18. அய்யோடா.. புவனேஷ் ..அது பால்ய நண்பன் ..பால்ய கால சிநேகம்னு சொல்வாங்க இல்ல …அது போல . இது தமிழ் வார்த்தையா.. ஏன்னா இது தெலுகுவில் சாதாரணமாக மாட்லாடப்படும் வார்த்தை..பாலகுடு -என்றால் குழந்தை …சோ தெலுகு வில் இருஉன்து சுட்ட சொல்லாக இருக்கும்… நீங்க மாத்திரம் தான் சுடுவீங்கன்னு நெனக்காதீங்க..!!!! உடனே யாரச்சும் வந்து தமிழ் தான் அதுக்கு முந்தின மொழி -நு ஆரம்பிசுடாதீங்கய்யா ..

  அன்புச் சகோதரி,
  ஜானு (அப்பாட யாரும் என்ன வம்புக்கு இழுக்க மாட்டாங்க)

 19. /அது பால்ய நண்பன்
  ஆமாங்க!! ஆனா சொல்லும் போது சில பேரு பாலிய நண்பன்னு சொல்லுவாங்க!! Paalya Nanbanu சொன்னாலும் அர்த்தம் மாறுது!

  ஏன்னா இது தெலுகுவில் சாதாரணமாக மாட்லாடப்படும் வார்த்தை..
  நாக்கு தெலுங்கு தெல்லேது!!

  //உடனே யாரச்சும் வந்து தமிழ் தான் அதுக்கு முந்தின மொழி -நு ஆரம்பிசுடாதீங்கய்யா ..

  உண்மை அது தான்!! (ஹி ஹி)! தமிழில் பாலன் என்றால் குழந்தை! நீங்கள் சொன்ன தெலுங்கு சொல் இதில் இருந்து வந்திருக்குமோ ?? எப்புடி ??

  ////அன்புச் சகோதரி,
  ஜானு (அப்பாட யாரும் என்ன வம்புக்கு இழுக்க மாட்டாங்க)
  ஏன் வம்பு இழுக்க மாட்டோம் ?? உங்க தள முகவரி மட்டும் கொடுங்க, எப்படி வம்பு இழுக்கரோம்னு பாருங்க!!

 20. இது கொஞ்சம் ஓவர்தான்

 21. வாங்க sureஷ்!! நன்றி!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: