--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 26, 2008

வழக்கொடியும் வார்த்தைகள் …


தொடர் பதிவிற்கு அழைத்த ஸ்ரீராமுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

சாரிங்க, இந்த தலைப்பு என்னமோ “வழக்கொடியும் வார்த்தைகள் …” ஆனா நான் சொல்ல போற வார்த்தை வழக்கொடிந்த வார்த்தை… இன்னும் சொல்ல போன வழக்”ஒழி”ந்த வார்த்தை!

கரெக்ட்!! நான் சொல்ல போற வார்த்தை “ஒழி”!!!

என்னது?? ஒழி எங்க ஒழிஞ்சுது ?? இன்னும் வழக்கத்துல தானே இருக்குனு கேட்கறீங்களா?? ஒழி ஒழியல, ஒழியோட நல்ல பயன்பாடு தான் ஒழிஞ்சிருச்சு!!
நாம ஒழி என்பதை எதற்கு பயன்படுத்தறோம்??
“தொலைந்து போ ” என்பது ஒரு அர்த்தம்!!! “சுத்தம் செய்” என்பது இன்னொரு அர்த்தம்!!! அதிலும் இந்த சுத்தம் செய் என்பதற்காக கூறும் ஒழி வழக்கொடிந்து வருகிறது!!!

ஆனால் நான் சொல்ல வந்த ஒழி இந்த ஒழி இல்லை!!! ஒழி என்றால் மிச்சம் இருக்கும் காலம் என்று ஒரு பொருள் இருக்கு!!! இதைத் தான் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்!!<BR> <BR>
குறிப்பு:<BR>
சரி சரி, இவனுக்கு எங்கடா இவ்வளவு அறிவுனு கப்பி தனமா யோசிக்காம, இதை நாம எங்க படிச்சிருக்கோம்னு யோசிச்சு நீங்களும் பதிவு போட்ட நான் “தடா” சொல்ல மாட்டேன்!!
இது எங்க இருந்து சுட்டதுன்னு சொன்னா ஒரு பூ செண்டு பரிசு!!

கேள்வி:

வழக்கொடிந்த அல்லது வழக்கொழிந்த எது சரி ??

 

 இப்போ வேற யாரையாவது மாட்டி விடணுமே என்ன பண்ணறதுன்னு யோசிக்கும் போது, எங்கோ போற மாரியாத்தா ஏன் மேல வந்து ஏறு ஆத்தானு ஒரு மொக்கை பதிவுக்கு Intellectual(!) பதில் போட்ட நம்ம அதிகறை ஜமால்

இப்போ புதுசா கதை எழுத ஆரம்பிச்சு, பிச்சு பெடல் எடுக்கற நம்ம சரவணா!!

ரெண்டு பெரும் நல்ல எழுதி என் பேர (!) காபாத்துங்கப்பா!!


Responses

 1. செஞ்சிடுவோம் …

 2. /செஞ்சிடுவோம் …
  நல்ல பிள்ளை!!

 3. சரி சரி, இவனுக்கு எங்கடா இவ்வளவு அறிவுனு கப்பி தனமா யோசிக்காம, இதை நாம எங்க படிச்சிருக்கோம்னு யோசிச்சு நீங்களும் பதிவு போட்ட நான் “தடா” சொல்ல மாட்டேன்!!
  இது எங்க இருந்து சுட்டதுன்னு சொன்னா ஒரு பூ செண்டு பரிசு!!
  நிசமா தருவிங்களா பிரதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 4. வாங்க கவின்!! வருகைக்கு நன்றி!!

  //நிசமா தருவிங்களா பிரதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது ??

 5. //வழக்கொடிந்த அல்லது வழக்கொழிந்த எது சரி ??//

  ரெண்டுமே சரிதான்!

  பின்னிப் படல் எடுக்குறதுதான் சரி!!

 6. எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாடோம்மா? ஆனா கொஞ்சம் நேரம் குடுங்க… முடிக்க வேண்டிய இடுகை இருக்கு…

 7. //இது எங்க இருந்து சுட்டதுன்னு சொன்னா ஒரு பூ செண்டு பரிசு//

  இது ஏதோ வலம்புரி ஜான் பேசுன மாதிரி இல்ல இருக்கு… எங்க இருந்து சுட்டது அப்பு?

 8. //வழக்கொடிந்த அல்லது வழக்கொழிந்த எது சரி ??//

  வழக்கொழிந்த என்பது அடியேனின் தாழ்மையான கருத்து…

 9. வாங்க பழமைபேசி !!

  //பின்னிப் படல் எடுக்குறதுதான் சரி!!
  அப்படியா?? அதுக்கு என்ன அர்த்தம்?? (பின்னிப் பெடல் என்று தானே சொல்லுவோம்?? )

 10. வாங்க சரவணா!! எங்க இருந்து சுட்டதுனு சொல்லனுமா ?? ஹி ஹி!!
  இடுகையை திரும்ப படிங்க நான் இன்னொரு வழக்கொடிந்த வார்த்தையை சொல்லிருக்கேன்!! முடுஞ்சா கண்டுபிடிங்க!! (நல்ல 360 டிகிரிலையும் யோசிங்க! )

 11. (எடுத்துக்காட்டு)
  தினமும் கணனியில் உட்காரும் முன் கணணியை ஒழிக்கவேண்டும்.
  சமைக்கும் முன் காய்கறிகளை ஒழிக்கவேண்டும்.
  தினமும் சாப்பிடும் முன் கைகளை ஒழிக்கவேண்டும்.
  — சரியா புரிஞ்சிகிட்டேனா தம்பி

 12. @Kunthavai Akka
  வாங்க அக்கா!! நீங்க சொன்ன எல்லாமே இந்த அர்த்தத்துல இருக்கு!!!
  ” “சுத்தம் செய்” என்பது இன்னொரு அர்த்தம்!!! அதிலும் இந்த சுத்தம் செய் என்பதற்காக கூறும் ஒழி வழக்கொடிந்து வருகிறது!!!”

  நானும் நம்மாழ்வாரும் சொல்லும் ஒழி இது இல்லை!!

 13. I am pleased..

 14. இன்னாப்பா இந்த குழப்பு குழப்புறீங்க. ‘சுத்தம் செய்” என்கிற அர்த்தத்தில் பேசலாமா? கூடாதா?
  அதென்ன கடைசியில் நானும் நம்மாழ்வாரும் இந்த அர்த்தத்தில் சொல்லவில்லைன்னு ஒரு statement .
  நல்ல தெளிவா குழப்புறீங்க தம்பி.

 15. //I am pleased..
  Pleasure is mine!!

 16. //‘சுத்தம் செய்” என்கிற அர்த்தத்தில் பேசலாமா? கூடாதா?
  அந்த அர்த்தத்துல பேசலாம் அக்கா!! அது கரெக்ட் தான் !!

  நான் சொல்லவந்தது,
  “ஒழி என்றால் மிச்சம் இருக்கும் காலம் என்று ஒரு பொருள் இருக்கு!!! இதைத் தான் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்!!”

  ஓகே ?

 17. பின்னிப் ப‌(பெ)ட‌ல் எடுங்க‌!

 18. கப்பி தானே அந்த வார்த்தை??? சரியா???
  இப்போவாவது சொல்லு டா… எங்க இருந்து சுட்டது???

 19. சரவணா அந்த வார்த்தை கப்பி இல்லை!! ஆனால் இது கூட நல்ல தான் இருக்கு!!
  உனக்காக அந்த வார்த்தை – “தடா”!! புத்தகம் பற்றி நிறைய clue கொடுத்தாச்சு!! உனக்கு என் முந்தைய பதிலில் பெயரில் ஒரு பாதியை கூறி உள்ளேன்!

 20. ஒழி-‘மிச்சம் இருக்கும் காலம்.’

  ஒழிவில்லாமல் உங்களுக்காக உழைக்கிறேன் -னு கிராமத்து ஜனங்க சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். அப்ப எல்லாம் ‘ஓய்வில்லாமல்’ என்பதை தான் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

  ஒருவேளை அது இந்த ‘ஒழி’ வோ !! பர வாயில்லை ..என்னோட கிட்னியையும் வேல பார்க்க வைச்சுடீங்க புவனேஷ் ..அது வேல பண்ண ஆரம்பிச்சதுக்கு சாட்சி கீழே.

  நீங்க ‘ஒழி’வே போதாமல் ‘ஒழி’ வரை
  இப்படி நிறைய எழுத வாழ்த்துகள்.

 21. வாங்க ஜானு, முதல் வருகைக்கு நன்றி!!

  //ஒழிவில்லாமல் உங்களுக்காக உழைக்கிறேன் -னு கிராமத்து ஜனங்க சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். அப்ப எல்லாம் ‘ஓய்வில்லாமல்’ என்பதை தான் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

  நான் இப்பவும் அப்படிதான் நினைக்கிறேன்!! ஏன்னா ” மிச்சம் இருக்கும் காலம் இல்லாமல் உங்களுக்காக உழைக்கிறேன்” என்று சொன்னால் அர்த்தம் வரவில்லை! நீங்க என்ன நினைக்கறீங்க??

  //நீங்க ‘ஒழி’வே போதாமல் ‘ஒழி’ வரை
  இப்படி நிறைய எழுத வாழ்த்துகள்.
  நீங்க ஊக்குவிச்சா எழுதறேன்!! (நிறைய யோசிச்சும் “‘ஒழி’வே போதாமல்” க்கு அர்த்தம் புரியல! )

 22. ஓய்வு- சும்மா இருக்கும் காலம்- மிச்சம் இருக்கும் காலம் –கொஞ்சம் தொடர்பு வருவது போல இல்லை… (கடைசி காலம் வரை வேலை வாங்கறாங்க .. சும்மாவே விடறதில்லைன்னு பொருள் எடுத்துக் கொண்டேன்.. )

  நீங்க உங்களின் ‘மிச்சமிருக்கும் காலமே போதாமல்’ உங்களின் ‘ மிச்சமிருக்கும் காலம் ‘ வரை நு அர்த்தம்..

  எழுதின உங்களுக்கே கண்ண கட்டுதே..இப்ப தெரியுதா இந்த மாறி வார்த்தை எல்லாம் ஏன் ஒழிஞ்சு போச்சுன்னு .. சும்மா சொன்னேன் ..எனக்கு தமிழில் பாதி வார்த்தைகளுக்கு சமீபத்த்தில் தான் அர்த்தமே தெரிஞ்சது ..உதாரணம் மொக்கை ..

 23. //எழுதின உங்களுக்கே கண்ண கட்டுதே..இப்ப தெரியுதா இந்த மாறி வார்த்தை எல்லாம் ஏன் ஒழிஞ்சு போச்சுன்னு
  அவ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  //எனக்கு தமிழில் பாதி வார்த்தைகளுக்கு சமீபத்த்தில் தான் அர்த்தமே தெரிஞ்சது ..உதாரணம் மொக்கை ..

  அப்படியே மொக்கைனா என்ன னு விளக்கி ஒரு பதிவு போட்டீங்கனாரன்களை மாதிரி இளைய சமுதாயம் பயன் பெரும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: