--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 12, 2009

பட்டாம்பூச்சி விருது!


bf

வணக்கம் நண்பர்களே,
போன வாரம் குந்தவை அக்கா கையில “Coolest Blog I ever Know” அவார்ட் வாங்குனதுல மகிழ்ச்சி! (அவார்ட் கொடுத்த பாவத்தை செய்ததிற்கு குந்தவை அக்காவை இங்கே வைய்யலாம்!!) என்னதான் போங்கு விளையாட்டா இருந்தாலும், இந்த அவார்ட் கிடைச்சா ஒரு சைஸா தான் இருக்கு!! நான் அவார்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம், “Coolest Blog” என்பது ஒருமை, அப்புறம் அதை மூணு பேருக்கு கொடுக்க சொன்னா எப்படி?? இந்த மொக்கை கேள்விக்கு படு மொக்கையா பதில் சொன்னா, இந்த மாதிரி மொக்க கேள்விகளை மேலும் மேலும் கேட்க என்ன ஊக்குவிச்சா மாதிரி இருக்கும்!!

சரி சரி, அவார்ட் கொடுக்கிறேன்!!

சரவணா: புதுசா ப்லோக் எழுதறான். இங்கிலீஷ்ல எழுதுனான். அப்புறம் தமிழ் கதை ஒன்னு எழுதறான். அந்த ‘சொந்த’ காதல் கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது! முதல் கதை மாதிரியே தெரியல. நல்ல நடை! அதிலும் முதல் கதையே தொடர் கதை எழுதற தில் எப்படி தான் வருதோ??

மந்திரன்: இவரும் முதல் கதையே தொடர் கதையா எழுதினார்! அதிலும் அது கண்டிப்பாக சுவாரஸ்யமாக இருக்கும் என்று முன்னுரை வேற கொடுத்தார்! (இந்த நம்பிக்கை நல்ல எழுத்தாளர்களுக்கு வரும் போல! அத பத்தி எனக்கு என்ன தெரியும்?) இவரு ஒரு ஆறு மாசம் எழுதல! சரி அவார்ட் கொடுத்து எழுத வைக்கலாம்னு பார்த்தா, போன வாரம் ஒரு பதிவ போட்டு என் நினைப்புல மண்ண போட்டுடாரு!!

கவின்: இவரு இலங்கை வாசி! இவருக்கு நான் அவார்ட் கொடுக்கறது  சூப்பர் ஸ்டாருக்கு சிம்பு அவார்ட் கொடுக்கறது மாதிரி!! இருந்தாலும் இவரின் இலங்கை தொடர்பான பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்!! சில நேரம் மொக்க பதிவையும் போட்டு மகிழ்விப்பார்!!

எல்லோரும் ஜோரா ஒரு தபா கை  தட்டுங்க!! விருது வாங்குன எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!

 

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

 

புவனேஷ் <———-

குந்தவை <———

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>


Responses

 1. Congrats to all award winners…

 2. வாழ்த்துக்கள்…………

 3. பொங்கல் வாழ்த்துக்கள் Bhuvanesh…
  ஆமாம் பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லுறதா…
  இல்லை புத்தாண்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லுறதா..
  ஒரே குழப்பமா இருக்கே…

 4. பொங்கல் வாழ்த்து நண்பா!!
  பொங்கல் வாழ்த்துனே சொல்லுவோம்! (அப்போ தான் தமிழ் புத்தாண்டுக்கு இன்னொரு லீவ் எக்ஸ்ட்ரா கிடைக்கும்)!! எப்புடி??

 5. விருது வாங்கின அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  எல்லோருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

 6. //பொங்கல் வாழ்த்துனே சொல்லுவோம்! (அப்போ தான் தமிழ் புத்தாண்டுக்கு இன்னொரு லீவ் எக்ஸ்ட்ரா கிடைக்கும்)!! எப்புடி??//

  இப்படி தான் நானும் யோசிச்சேன் நண்பா……
  ஆனா அதுக்கெல்லாம் எங்க ஆபீஸ்ல லீவ் கொடுக்கலையே…

 7. விருது வாங்குகிற அளவுக்கு நான் ஒன்னும் எழுதல. ஆனாலும் எனக்கு இந்த விருது வேணும்.
  யார் கொடுகிறாங்க? எதுக்காக கொடுகிறாங்க ? எதுவும் தேவை இல்லை எனக்கு.
  நம்மளை மதிக்க தெரிஞ்ச நாலு சாதி சனங்க கூட இருங்காங்க. என்ற நெனைப்பே போதும் எனக்கு …
  உங்கள் விதிமுறைகளில் முதல் 2 மட்டும் என்னால் நிறைவேற்ற முடியும் . மற்றதை நிறைவேற்ற முடியது.
  என்னா,விருது கொடுக்கிற அளவுக்கு ,சத்தியமா நான் எனக்கு அருகதை இல்லை.

 8. //விருது வாங்குகிற அளவுக்கு நான் ஒன்னும் எழுதல.
  நாங்க தான் தெளிவா உங்க எழுத பத்தி சொன்னோம் இல்ல ??

  //நம்மளை மதிக்க தெரிஞ்ச நாலு சாதி சனங்க கூட இருங்காங்க. என்ற நெனைப்பே போதும் எனக்கு..
  உண்மை!எனக்கும் அப்படி தான் இருந்தது!!

  //என்னா,விருது கொடுக்கிற அளவுக்கு ,சத்தியமா நான் எனக்கு அருகதை இல்லை.

  அப்படியெல்லாம் விட முடியாது!! நீங்கள் விருது வாங்கின உடனேயே கொடுக்கும் பொறுப்பும் உங்களுக்கு வந்து விட்டது!! (நான் என்ன அருகதை இருந்த கொடுத்தேன் ??)

 9. ஹாய் மந்திரன்,சரவணன் உங்க ப்ளோக்ல எல்லாம் படிச்சேன் ரொம்ப நல்ல இருந்தது.மந்திரன் உங்க புலம்பலும் படித்தேன் .உங்க சொந்த அனுபவமா.எப்படி இருந்தாலும் நல்ல இருக்கு.தொடர்ந்து இந்த மாதிரி ரொம்ப போலம்புங்க

 10. ஹாய் மந்திரன் கண்ணாடில இத்தன விஷயம் இருக்கா? இத படிச்சபின்ன நான் அழகா தெரிய்ரனா இல்ல ,எப்படி தெரியரன்னே எனக்கு தெரியல .ஆனா கதை ரொம்ப அழகா இருக்கு .ஏன்னா கதை தன்னை கண்ணாடில பார்கல இல்ல


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: