--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 13, 2009

வில்லு!!


நேத்தைக்கு வில்லு படத்துக்கு போனேன்!! படம் “ஒ ஹோ” னு இருக்கு!! குருவி மாதிரி அற்புதமான படம் கொடுத்த விஜய் ஏன் இப்படி பட்ட படங்களில் நடிக்கிறார் என்று தெரியவில்லை!! (அடுத்த விஜய் படம் பார்த்த பின்பு வில்லு அற்புதமான படமா தெரியலாம்!!) பயப்படாதீங்க நான் விமர்சனம் எல்லாம் எழுத போறது இல்லை!!

படம் சமந்தப்பட்ட சில துணுக்குகளை  பகிர்ந்து கொள்கிறேன் (தினமலரின் துணுக்கு மூட்டைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!)

## 1:
படம் ஆரம்பிச்சு விஜய்க்கு பில்ட் அப் சீன், பில்ட் அப் சண்டை  எல்லாம் முடிந்த பிறகு பில்ட் அப் பாட்டு

“ராமனோட வில்ல கேட்டேன், பிமனோட கதைய கேட்டேன்” னு ஆடிட்டு இருந்தார்

நண்பன்: இதுக்கு நீ டைரக்டர் கிட்ட கதை கேட்டா படம் ஓடவாவது செய்யும்!!

படம் முடிந்த பிறகு நானும் அதையே உணர்ந்தேன்!!  போக்கிரி படத்தில் விஜய் போலீஸ் உடையில் மிக கம்பீரமாக இருப்பார்!! ஆனால் இந்த படத்தில் மிலிட்ரி உடை மட்டும் அவருக்கு பொருத்தமாக இல்லை (இவர் அடுத்த படம் வேட்டைக்காரன் பார்த்துவிட்டு, விஜய்க்கு மிலிட்ரி உடை கம்பீரமாக இருந்தது, இந்த வேட்டைக்காரன் உடை மட்டும் பொருத்தமாக இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை வருமோ??)

## 2:
படத்தில் ஒரு இடத்தில் வசனம் “அவன் என் பாலிய(Paaliya) நண்பன்” .. கேட்டுவிட்டு எனக்கு மட்டும் சிரிப்பு!! இந்த சோகத்திலும் உனக்கு மட்டும் எப்படி டா சிரிப்பு என்றும் எதுக்கு டா சிரிக்கிற என்றும் பசங்க கேட்டு டெரர் ஆகிடானுங்குங்க!!

சரி உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு, நானும் சொன்னேன்!!
உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி தமிழ் வார்த்தைகள் தெரியுதுனு ஷாக் ஆய்டானுங்க!!!! (புரியலையா?? இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டறது!! அவங்க சொன்னது அச்சுல ஏறாது!!)

## 3: 

 

கொஞ்சம் கடுப்பாக இருந்த நண்பன், எங்களை இழுத்து சென்ற விஜய் ரசிகனை பார்த்து
“ஏன்டா அவனே தில் இருந்த எதிர நில்லுன்னு சொல்லறான்! அப்படியும் நீ அடம்புடுசு என்ன ஸ்க்ரீன்க்கு எதிர உக்கார வெச்சு நோவடுச்சுட்டியேடா??? *******”

## 4:

அடுத்தது மொக்கை!! இல்லை இல்லை மகா மொக்கை!! அதுவும் இல்லை மகா மெகா மொக்கை! மொக்கையோ மொக்கையடா சாமி!!

நான்: ஹாய் டா!!
நண்பன்: ஹாய்!! நேத்தைக்கு வில்லு போனியா??
நான்:  (எப்படியும் மாட்ட போறேன் என்ற எண்ணத்தில்) ம்ம்ம்!
நண்பன்: மாட்னியா ??
நான்: இல்ல டா இவ்னிங் ஷோ!

(பொங்கல் அன்று என்னை மறக்காமல் இருக்க இந்த மொக்கை உதவியதா என்று சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்!!)

மேலே உள்ளது மொக்கை என்று நினைப்பவர்கள் வில்லுவை நிச்சியம் பார்த்திருக்க மாட்டீர்கள்!

அந்த படத்தை பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை கணிப்பாக பகிர்ந்து கொள்ளவும் (நாமளே தான் பா நமக்கு ஆறுதலா இருக்கணும்!!)

முழுசா படிச்சுடீங்க, எதாவது சொல்லிட்டு போங்க!


Responses

 1. Me the first…

 2. En aazhntha anuthaabangal nanba…

 3. நேர்ச்சை போட்டமாதிரி விடாப்பிடியா எல்லாத்தையும் போய் பாக்குறது, அப்புறம் வந்து குய்யோ முய்யோனு கூப்பாடுபோடவேண்டியது.

  ஒரு விஷயத்தை நான் இப்போது ஒத்துக்கிறேன், நீங்க எல்லாம் ரெம்ப நல்லவங்க தம்பிகளா. இப்படிப்பட்ட படங்களை எல்லாம் இருபது வருஷத்துக்கு முன்னாடி யாரு பொறுமையா பாத்திருப்பா.

 4. Ennatha sollurathu?

 5. மச்சி நீ போட்ட புது வருஷம் blog ல இருந்த மேட்டர் ஒன்னும் இப்போ ந்யபகம் வருது… வருசத்தோட மொதல் நாளே இப்படி விஜய் படத்தோட திகிலா ஆரம்பிக்குதே அப்போ வருஷம் முழுக்க இப்படி தானோ?

 6. குருவி படம் ரிலீஸ் ஆனதுல இருந்து சிங்கம் கூட குருவி கிட்ட போறதில்ல… நீ எவ்வளவு தைரியம் இருந்தா மறுபடியும் போய் அவரு படத்தை பாப்ப?

 7. நீ பாத்து கஷ்ட பட்டது பத்தாதுன்னு மத்தவங்கள பாக்க சொல்லி அவங்க பொலம்பல் கேட்டு சந்தோஷ படலாம்னு பாக்றியா??? நல்ல இருடா… ரொம்ப நல்ல இரு… சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க நான் தயாரா இல்ல…

 8. //மச்சி நீ போட்ட புது வருஷம் blog ல இருந்த மேட்டர் ஒன்னும் இப்போ ந்யபகம் வருது… வருசத்தோட மொதல் நாளே இப்படி விஜய் படத்தோட திகிலா ஆரம்பிக்குதே அப்போ வருஷம் முழுக்க இப்படி தானோ?

  சரவணா, நான் படம் பார்த்தது போன தமிழ் வருசத்தோட கடைசிக்கு முந்தின நாள்! அதனால எனக்கு பிரச்சனை இல்லை!!

 9. //Me the first…
  வேற யாரால முடியும் ??

  /En aazhntha anuthaabangal nanba…

  நண்பா இந்நேரம் நீயும் பார்த்திருப்ப உன் சோகத்தையும் சொல்லு!

 10. //நீங்க எல்லாம் ரெம்ப நல்லவங்க தம்பிகளா. இப்படிப்பட்ட படங்களை எல்லாம் இருபது வருஷத்துக்கு முன்னாடி யாரு பொறுமையா பாத்திருப்பா.//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அக்கா நானே சோகத்துல இருக்கேன்! அழுதுருவேன்!!

 11. //Ennatha sollurathu?

  ஏதாவது சொல்லுங்க!!

 12. //நீ எவ்வளவு தைரியம் இருந்தா மறுபடியும் போய் அவரு படத்தை பாப்ப?
  தைரியம் எல்லாம் இல்லிங்க்னா, இது அறியாமை!!

 13. ……

 14. //……
  வாங்க US!! இதனால் தாங்கள் கூற விளைவது ??

 15. இதுதான் என் அனுபவம்
  குடுகுடுப்பை: வில்லு – ஒரு முன் பழமைத்துவ காவியம்.

 16. //குருவி படம் ரிலீஸ் ஆனதுல இருந்து சிங்கம் கூட குருவி கிட்ட போறதில்ல… நீ எவ்வளவு தைரியம் இருந்தா மறுபடியும் போய் அவரு படத்தை பாப்ப?//

  –ரிப்பிட்டேய்ய்ய்ய்

 17. வாங்க குடுகுடுப்பை, ஷாஜி!! நன்றி!!

 18. fight——MAHESH BABU STYLE (TELUGU ACTOR)
  dance—SIMBU STYLE
  RAJINIKU TRY PANNI MISS PANNITARU NAMMA DR.VUJAY
  VADIVELU–WHAT HAPPEN TO HIS BROTHER CHARACTER IN THE FILM I THINK DIRECTOR FORGOT ABOUT HIM(STORY) IN THE CLIMAX.SONGla PADAM
  KONJAM MISSING..

 19. அப்பாடி (வில்லுலேர்நது) நான் தப்பிச்சேன்.

 20. வாங்க எழில்!!

  வாங்க அன்பு!! நீங்க தப்பிக்க தான் இந்த பதிவு!!

 21. கமெண்ட் போடலையேன்னு வருதபடாதேமா

  sat sunday தவிர டெய்லி உன் ப்லோக்க்கு வரேன்

  ennamo poda
  kalakkura

  adhulayum puthandu kondattam superb

  epdi da yosikkarae

 22. அட விடுங்கப்பு! தலைவருக்கு இந்த படமாவது ஓடட்டும் (தியேட்டர் விட்டு இல்ல )

 23. புவனேஷ் , புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

 24. I was bursting out laughting ! Kunthavai great ‘punch’ !! appa vijai aduthha rajini illayaa ? neenga yellaam kalaayikarathai paarthaal avara aduththa vadivel range-ku aakiduveenga pola irukke.. vadivel yennai manippaaraaga ! sorry for the tanglish!

  anbudan ,
  janu

 25. superrrrrrr anna pineetenka……..

 26. வாங்க ஹரீஷ்!! நன்றி!!

 27. Thambi Bhuvanesh ,
  I need a favor.. I want the front page of my blog to display the recent post instead of old posts.. What option should I have to use?

  I have already enabled the option in appearance->writig-> front page to display the recent post in stead of staic page….still am not getting that!! When u get time , tell me how i should fix it.

  Thanks..

 28. பதிவுகள் போடலைனா இப்படி மொக்கை தனமா கேள்விகள் கேட்கப் படும்.. இதுக்காக பார்த்துட்டு பதில் சொல்லாம இருந்திடப் போறீங்க தம்பி..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: