--புவனேஷ்-- எழுதியவை | பிப்ரவரி 6, 2009

ஆண் உரிமை – விளையாட்டா ஒரு சீரியஸ் அலசல்!!


இங்கே எல்லோரும் பெண்ணடிமை பெண் உரிமை மீட்புனு நிறைய பேசறாங்க!! சரி அவங்க சொல்லறது எல்லாம் உண்மை தான்.. ஆனா ஆண் உரிமை எங்கும் பறிபோகவில்லையானு விளையாட்டா  யோசிச்சப்போ சீரியஸா வந்து விழுந்த விஷயம் தான் இது!!

 மக்களே, நான் முன்னவே சொல்லிடறேன் இது நல்ல பசங்களுக்கு மட்டும் தான் பொருந்தும்!!

 ஒரு பையன் பஸ்ல மகளிர்க்காக ஒதுக்கப்படாத சீட்ல (ஜென்ட்ஸ் சீட் என்று ஒன்னும் இல்லை!!)   உக்காந்துட்டு வரான்.. பக்கத்து சீட்ல ஒரு பொண்ணு வந்து உக்காருது..

 எதாவது தப்பு உங்க கண்ணுக்கு தெரியுதா?? தெரியாது!! ஏன்னா நம்ம சமுதாயம் அப்படி!!

 அதே ஒரு பொண்ணு பக்கத்துல போய் ஒரு பையன் உக்காந்தா என்ன நடக்கும்?? அவன நடக்க விடாம செஞ்சுரமாட்டாங்க?? சொல்லுங்க எஜமான் (என் மொக்க பதிவையும் மதுச்சு படிக்கிற உங்கள எஜமான்னு சொல்லாம வேற யார சொல்ல போறேன்??) சொல்லுங்க!! 

 சரி இத விடுங்க!!

 ஒரு பஸ்ல எல்லா சீட்டும் புல்லா இருக்கு!! அப்போ ஒரு பெண் ஏறராங்க.. “ஏம்பா ஒரு பொண்ணு நிக்கறேன் யாரவது ஆம்பளைங்க எடம் கொடுக்ககூடதா??” இத நீங்க பல எடத்துல பாத்துருப்பீங்க!!

 ஆனா இத பாத்துருகீங்களா?? ” ஏம்மா ஒரு ஆண் நிக்கறேன் யாரவது பொம்பளைங்க எடம் கொடுக்ககூடதா??” 

சொல்லுங்க மை லார்ட்!!

பாத்திருக்க மாட்டீங்க!! ஏன்னா நம்ம வளர்ப்பு அப்படி!!

 அட இது எல்லாம் பரவால்ல, பெண் குலத்தை பெரும படுத்த தாய்மைனு ஒரு வார்த்தை இருக்கு!! நமக்கு தந்தைமை னு ஒரு வார்த்தை இருக்கா??

 நம்ம ஜெ தமிழ்நாட்டின் “அம்மா”னு சொன்ன மாதிரி, கலைனர் தமிழ்நாட்டின் “அப்பா”னு சொல்லமுடியுமா??

 சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்!!  

 

என்னடா இவன் சீரியஸா வந்து விழுந்த விஷயம்னு சொல்லிட்டு விளையாடரானு  நினைக்காதீங்க??

அம்மானு சொல்லறது ஒரு உணர்வா, ஒரு கடவுளா, ஒரு தப்பு சொல்ல முடியாத பொருளா பாக்குற சமுதாயம் அந்த மரியாதையில பாதியாவது அப்பானு சொல்லுற சொல்லுக்கு தருதா?? அப்பாவும் சும்மா இல்ல!! ஒரு நல்ல அப்பனா வாழ்றது தவம்! இல்ல அதைவிட கஷ்டம்!! கீரை விக்கற பொம்பள, காய்கறி விக்கற பொம்பள இப்படி யாரவேனா  அம்மானு நீங்க கூப்பிடலாம்!! ஏன்னா அம்மாங்கறது ஒரு உணர்வு!! ஆனா அப்பா?? அப்பா ஒரு உணர்வு இல்லையா??  

 

 சரி சரி ரொம்ப சீரியஸ் ஆகுது!! ஓவர் சீரியஸ் ஒடம்புக்கு ஆகாது!! மேல படியுங்க!! ஆனா விளையாட்ட எடுத்துக்கோங்க!! 

இப்போ ஒரு பையனும் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு பண்ணிடாங்கனு வையுங்க (இந்த தப்ப கல்யாணத்துக்கு அப்புறம் செஞ்சா, அது  சரி!!) உலகம் எப்படி பேசும்?? அந்த பொண்ணு வாழ்கையை இப்படி பாழ் பண்ணிட்டீயே?? னு ஊர் உலகம் சொல்லுமா இல்லையா?? கூட சேந்து தப்பு செஞ்ச பொண்ணு நிரபராதின்னு சொன்னா கூட பரவால்ல யுவர் ஹானர் (உங்களை தான் சொல்லறேன்!).. அவங்கள ஒரு பாதிக்க பட்டவங்க லிஸ்ட்ல போடறாங்க?

 

இது நான் சும்மா விளையாட்டா எழுத நினைச்ச விஷயம்! இப்படி ரெண்டும் கேட்டானா வந்து முடுஞ்சிருச்சு!! அதனால என்ன?? திட்டரதுன்னா திட்டிக்கோங்க  எனக்கு தான் வலிக்காதே?? ஹி ஹி!!


Responses

 1. Haiyya I am the first one…

 2. // மக்களே, நான் முன்னவே சொல்லிடறேன் இது நல்ல பசங்களுக்கு மட்டும் தான் பொருந்தும்!! //

  ஒ.கே …அப்ப கண்டிப்பா எனக்கு பொருந்தும்.

 3. //ஒரு பஸ்ல எல்லா சீட்டும் புல்லா இருக்கு!! அப்போ ஒரு பெண் ஏறராங்க.. “ஏம்பா ஒரு பொண்ணு நிக்கறேன் யாரவது ஆம்பளைங்க எடம் கொடுக்ககூடதா??” இத நீங்க பல எடத்துல பாத்துருப்பீங்க!!//

  ஆமா ஆமா…
  நெறைய பேரு என்கிட்டே இப்படி கேட்டோ , சண்டைப் போட்டோ என்னை இருக்கையிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார்கள்.

 4. வர வர நாட்டுல ஆம்பளைங்களோட கற்புக்கு பாதுகாப்பே இல்ல மச்சி…
  பஸ்ல தனிய நைட் 10 மணிக்கு மேல போக முடியல.

 5. இடிக்கரதுக்குனே வர்றனுங்க…
  இந்த டயலாக் கூட சேர்த்துக்கலாம் இல்ல மச்சி.
  நம்ம என்னிக்காவது இடி வாங்கறதுக்குனே இப்படி டிரஸ் பூட்டு வராளுகளேன்னு பொலம்பி இருக்கமா?

 6. ஆண் பாவம் பொல்லாதது என்று வலியுறுத்திய எங்கள் அகில இந்திய ஆண்கள் சமூக நீதி கட்சியின் தலைவர் நம்ம புவனேஷ் வாழ்க…

 7. ஹாஹா ..புவனேஷ் இப்ப தான் நீங்க என் தம்பி !!!.. எதாச்சும் டெலிபதியோ !!நானும் இது போல ஒன்னை எழுதிட்டு வரேன் .. நாளைக்கு தான் போஸ்ட் பண்ண முடியும் …. எல்லாம் ஒத்துகர மாறி தான் இருக்கு எக்ஸ்செப்ட் லாஸ்ட் பாரா..

  பாருங்க ..அந்த ‘தப்பு’ நடந்துச்சுன்னா பொண்ணுங்க ‘அம்மா ‘ ஆயிடறாங்க.. ஆனா ஆம்பிலிங்க ‘அப்பா’ ஆகாம நைசா கழண்டுக்கலாம் இல்லை..!! .. அதனால தா அப்படி சொல்றாங்க.. மத்தபடி .. பெண்ணுக்கு சமமா ஆணையும் ஹிஹி ட்ரீட் பண்ணனும்.. .. இப்டி சொல்லவே நல்லருக்கு .. உங்க வாயி பலிக்கட்டும்..

  இவ்ளோ நல்லா எழுதிட்டு அப்பறம் நான் எல்லாம் வொர்த்’ இல்லைன்னு சொல்றதுக்கு பேரு தான் தன்னடக்கமா ? இன்னமும் இதே போல நிறைய எதிர் பார்கிறேன்..

 8. Sri ram ,

  cool ..romba experienced..??? I understand your feelings.. let us hope things will change.. 😉 vittaal ithai thodaraa neenga yellorum yezhuthiduveenga pola irukkee …

  padichuttu naanum naala pasangalla oruththarnu sollap pogum yellorukkum:
  unga la pola nalla pasanga peruga vaazthukkal..

 9. அப்பறம் சீரியஸா .. ஜெ வை அம்மான்னு எல்லோரும் ஏத்துக்க முடியாது ( அட் லீஸ்ட் ஐ கான்’ட் )…. அதே போல தான் கலைஞரையும் .. பட் அவர் தமிழ் நாட்டுல பாதிஜனத் தொகைக்கு நிஜமாவே அப்பா ஆகி இருக்காருன்னு தான் பல பேரு பேசிக் காதுல வாங்கி இருக்கேன் 😉 ..ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் என் வூட்டுக்கு ஆட்டோ அனுப்சிராதீங்க..

  சீரியச்லி ஸ்பீகிங் , பத்து மாசம் சுமந்து பெருவதால தான் அம்மாங்களுக்கு அவ்ளோ மதிப்பு .. மத்தபடி ஒன்னும் ஸ்பெஷல் இல்லை.. ஆனால் பாருங்க.. தேசத் தந்தை னு கொண்டாடற மாதிரி தேச அன்னை னு யாரையாவது சொல்றோமா.. அப்பாக்களுக்கும் அதை விட அதிகமாவே அளவு மதிப்பு இருக்கு ..தாய் குலம் மாதிரி தந்தை குல்ம்னும் மதிச்சு சொல்லத் தான் சொல்றோம்.. அப்பா தானே முதல் தோழன் எல்லோருக்கும் .. ஐ மிஸ் மை பாதர் .. எங்க அப்பாவை நியாபகம் கொண்டு வந்துடுச்சு உங்க பதிவு..

 10. (என் மொக்க பதிவையும் மதுச்சு படிக்கிற உங்கள எஜமான்னு சொல்லாம வேற யார சொல்ல போறேன்??)
  மொக்கையா நீங்க சொன்னதுகப்புறம்தான் தெரியுது மொக்கை எண்டு..

 11. ஹா…ஹா…….
  புவனேஷ் படிப்பதற்கு சிரிப்பு வந்தாலும், நானும் சிறு வயதில் பேருந்தில் பயணம் செய்யும் பொது, என்னை நிக்க சொல்லிவிட்டு யாராவது உட்காரும் போது கோபம் வந்ததுண்டு. இப்போதெல்லாம் நானே எழுந்து இடம் கொடுப்பதுண்டு. உங்களுக்கும் புரியும்.
  //கலைஞரை ‘அப்பா’ ன்னு கூப்பிடமுடியுமா?
  அவரை பார்த்தால் பாவமாக இல்லையாப்பா…… அவரே இப்பத்தான் குடும்பத்துல ஒரு வழியா சமாதானக் கொடிய பறக்கவிட்டிருக்காரு………திரும்பவும் குடும்பத்துல குழப்பத்த உண்டாக்கிருவீங்க போலயிருக்கு.

 12. எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?

 13. விளையாட்டா ஒரு சீரியஸ் அலசல்!! – டைட்டில் கரெக்டா புடிச்சிருக்க மச்சி… சீரியஸ் ஆன மேட்டர் தான் எல்லாமே

 14. தேச தாய் அப்படின்னு யாரையும் சொல்றதில்ல… கரெக்ட். ஆனா நம்ம நாட்டையே தாய் நாடுன்னு தானே சொல்றோம்… Mother India

 15. ஜென்ட்ஸ் சீட் என்று ஒன்னும் இல்லை!!! – உண்மை… இத சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லுவாங்க…

 16. அரை ப்ளேடிற்கு அப்புறம் ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க புதிதாய் பிறந்த அண்ணன் புவனேஷ் வாழ்க வாழ்க!!

  (நீங்க நெனக்கிற மாதிரி அரை ப்ளேட்னா ஷேவிங் ப்ளேட் இல்ல.. ஷார்பான ப்ளேடு.. மேலதிக தகவலுக்கு… <> பாக்கவும்

 17. http://araiblade.blogspot.com/search/label/%E0%AE%86.%20%E0%AE%8F.%20%E0%AE%85.%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

 18. //ஒ.கே …அப்ப கண்டிப்பா எனக்கு பொருந்தும்.
  மச்சி உன்ன மாதிரி நல்ல பசங்க வருவாங்கன்னு நம்பி தான் இந்த பதிவ போட்டேன்!!

 19. //ஆமா ஆமா…
  நெறைய பேரு என்கிட்டே இப்படி கேட்டோ , சண்டைப் போட்டோ என்னை இருக்கையிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார்கள்.

  Same Blood

 20. //வர வர நாட்டுல ஆம்பளைங்களோட கற்புக்கு பாதுகாப்பே இல்ல மச்சி…
  பஸ்ல தனிய நைட் 10 மணிக்கு மேல போக முடியல.

  //இடிக்கரதுக்குனே வர்றனுங்க…
  இந்த டயலாக் கூட சேர்த்துக்கலாம் இல்ல மச்சி.
  நம்ம என்னிக்காவது இடி வாங்கறதுக்குனே இப்படி டிரஸ் பூட்டு வராளுகளேன்னு பொலம்பி இருக்கமா? //

  இது ஏன் எனக்கு தோனல ??

 21. //ஆண் பாவம் பொல்லாதது என்று வலியுறுத்திய எங்கள் அகில இந்திய ஆண்கள் சமூக நீதி கட்சியின் தலைவர் நம்ம புவனேஷ் வாழ்க…

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ ஸ்ரீராம், நீ தான் கோ.ப.சே ஓகே வா ??

 22. // ஹாஹா ..புவனேஷ் இப்ப தான் நீங்க என் தம்பி !!!.. எதாச்சும் டெலிபதியோ !!நானும் இது போல ஒன்னை எழுதிட்டு வரேன் .. நாளைக்கு தான் போஸ்ட் பண்ண முடியும் …. எல்லாம் ஒத்துகர மாறி தான் இருக்கு எக்ஸ்செப்ட் லாஸ்ட் பாரா..

  அப்பாடி.. நல்ல வேளை உங்களுக்கு முன்னாடி நான் எழுதிட்டேன்!! இல்லைனா நீங்க பட்டாச எழுதிருப்பீங்க நான் எழுத எதுவும் இருந்திருக்காது!! லாஸ்ட் பாரா சும்மா விளையாட்டு..

  //இப்டி சொல்லவே நல்லருக்கு .. உங்க வாயி பலிக்கட்டும்..
  நடந்தா நல்லாத்தான் இருக்கும்!! ஹி ஹி!!

 23. //இவ்ளோ நல்லா எழுதிட்டு அப்பறம் நான் எல்லாம் வொர்த்’ இல்லைன்னு சொல்றதுக்கு பேரு தான் தன்னடக்கமா ?
  ஜானு அக்கா நல்லவா இருக்கு.. எனக்கு இன்னும் சந்தேகம் தான்!! இது சத்தியமா தன்னடக்கம் எல்லாம் இல்ல!!

  // இன்னமும் இதே போல நிறைய எதிர் பார்கிறேன்..
  ட்ரை பண்ணறேன் அக்கா!!

 24. அப்பறம் சீரியஸா .. ஜெ வை அம்மான்னு எல்லோரும் ஏத்துக்க முடியாது ( அட் லீஸ்ட் ஐ கான்’ட் )….
  “நம்ம ஜெ தமிழ்நாட்டின் “அம்மா”னு சொன்ன மாதிரி”
  நான் அவங்களை அவங்களே சொன்னதை தான் சொன்னேன்!!

  //அதே போல தான் கலைஞரையும் .. பட் அவர் தமிழ் நாட்டுல பாதிஜனத் தொகைக்கு நிஜமாவே அப்பா ஆகி இருக்காருன்னு தான் பல பேரு பேசிக் காதுல வாங்கி இருக்கேன் ..ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் என் வூட்டுக்கு ஆட்டோ அனுப்சிராதீங்க..
  ஹி ஹி!! இந்த மேட்டர் நான் இதை சொருகலா போடலாம்னு நினைச்சேன்.. அப்புறம் எதுக்கு திசை திருபனும்னு விட்டுட்டேன்!

 25. // சீரியச்லி ஸ்பீகிங் , பத்து மாசம் சுமந்து பெருவதால தான் அம்மாங்களுக்கு அவ்ளோ மதிப்பு .. மத்தபடி ஒன்னும் ஸ்பெஷல் இல்லை.. //
  அப்பாவும் சும்மா இல்ல!! தாய் ஆகா போற தன் மனைவியை மனசுல சொமக்கணும்.. அவங்க மனசு என்ன நினைகும்னு அவங்க நினைக்கும் முன் நினைச்சு, அவங்க மனசு சந்தோசமா இருக்கும் படி நடக்கணும்!!

  //ஆனால் பாருங்க.. தேசத் தந்தை னு கொண்டாடற மாதிரி தேச அன்னை னு யாரையாவது சொல்றோமா.. அப்பாக்களுக்கும் அதை விட அதிகமாவே அளவு மதிப்பு இருக்கு ..//

  நான் சொல்ல நினைத்த பதிலை சரவணா சொல்லிட்டார்!!

  //தாய் குலம் மாதிரி தந்தை குல்ம்னும் மதிச்சு சொல்லத் தான் சொல்றோம்.. அப்பா தானே முதல் தோழன் எல்லோருக்கும்..//

  இது எல்லாம் நடைமுறைல இருக்கா ??

  //ஐ மிஸ் மை பாதர் .. எங்க அப்பாவை நியாபகம் கொண்டு வந்துடுச்சு உங்க பதிவு..//

  நன்றி!! எனக்கு இது பெரும் பாராட்டு!!

 26. //(என் மொக்க பதிவையும் மதுச்சு படிக்கிற உங்கள எஜமான்னு சொல்லாம வேற யார சொல்ல போறேன்??)
  மொக்கையா நீங்க சொன்னதுகப்புறம்தான் தெரியுது மொக்கை எண்டு..

  கவின், இப்போ நீங்க இது நல்ல இருக்குன்னு சொல்லறீங்களா, இல்லைன்னு சொல்லறீங்களா??

 27. //புவனேஷ் படிப்பதற்கு சிரிப்பு வந்தாலும், நானும் சிறு வயதில் பேருந்தில் பயணம் செய்யும் பொது, என்னை நிக்க சொல்லிவிட்டு யாராவது உட்காரும் போது கோபம் வந்ததுண்டு. இப்போதெல்லாம் நானே எழுந்து இடம் கொடுப்பதுண்டு. உங்களுக்கும் புரியும்.
  அக்கா, சத்தியமா எனக்கு புரியல.. சின்ன வயசுல சீட்ல இருந்து எடுத்து மடில உக்கார வெச்சதை சொல்லறீங்களா?? ஏன்னா பசங்களைத்தான் எந்திரிக்க சொல்லுவாங்க.. பொண்ணுங்களை எந்திரிக்க சொல்ல மாட்டாங்க!!

 28. //எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?
  வாங்க குரங்கு சார்!!

 29. //விளையாட்டா ஒரு சீரியஸ் அலசல்!! – டைட்டில் கரெக்டா புடிச்சிருக்க மச்சி… சீரியஸ் ஆன மேட்டர் தான் எல்லமே
  ஆமாப்பா இது நம்ம வாழ்வுரிமை பிரச்சனை இல்ல ??

  //ஜென்ட்ஸ் சீட் என்று ஒன்னும் இல்லை!!! – உண்மை… இத சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லுவாங்க…
  ஹ்ம்ம்.. இந்த உலகம் அப்படி.. ஹி ஹி

 30. //அரை ப்ளேடிற்கு அப்புறம் ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க புதிதாய் பிறந்த அண்ணன் புவனேஷ் வாழ்க வாழ்க!!

  (நீங்க நெனக்கிற மாதிரி அரை ப்ளேட்னா ஷேவிங் ப்ளேட் இல்ல.. ஷார்பான ப்ளேடு.. மேலதிக தகவலுக்கு… பாக்கவும்

  வாங்க அரை பிளேடு!! முதல் வருகைக்கு நன்றி!! உங்கள் பதிவையும் பார்த்தேன்! அருமை!! (ஏன் இப்போ எழுதறது இல்ல ??)
  பொறுமையா எல்லா பதிவையும் பாத்துட்டு பதில் போடறேன்!!

 31. புவனேஷ், பிரமாதம்.

  // ஆண் பாவம் பொல்லாதது என்று வலியுறுத்திய எங்கள் அகில இந்திய ஆண்கள் சமூக நீதி கட்சியின் தலைவர் நம்ம புவனேஷ் வாழ்க… //

  சீக்கிரம் கட்சி ஆரம்பிங்க எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு.

 32. புவனேஷ் மச்சி எங்க புச்சா பதிவு ஒன்னியுமே காணோம்…
  இப்ப என் டேர்ன் மச்சி… 🙂

 33. //புவனேஷ் மச்சி எங்க புச்சா பதிவு ஒன்னியுமே காணோம்

  நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்?? (இப்போ தான் உன் இடுகையை பார்த்தேன் அத எப்படி காப்பி அடிக்கலாம்னு யோசிக்கறேன்!!)

 34. // நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்?? (இப்போ தான் உன் இடுகையை பார்த்தேன் அத எப்படி காப்பி அடிக்கலாம்னு யோசிக்கறேன்!!) //

  புவனேஷ், நீங்க தேவா-க்கு உறவா? (ஹிஹி, சும்மா காமெடி, சீரியஸ் ஆ எடுத்துகாதீங்க)

  நான் ரெம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு போட்டு இருக்கேன். அதுவும் தொடர் பதிவு. வாங்க. வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

 35. அண்ணே வாழ்க 😉

 36. //புவனேஷ், நீங்க தேவா-க்கு உறவா? (ஹிஹி, சும்மா காமெடி, சீரியஸ் ஆ எடுத்துகாதீங்க)

  அவரு என் குல தெய்வம்!! (நீங்க சீரியஸ்-௮ சொன்னாலும் நான் விளையாட்டா தான் எடுத்துக்குவேன்)

 37. //அண்ணே வாழ்க
  வாங்க கோபிநாத்!! நன்றி!!

 38. // நான் ரெம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு போட்டு இருக்கேன். அதுவும் தொடர் பதிவு. வாங்க. வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. //

  மோகன் தொடர்பதிவுன்ன உடனே எங்க நம்மள கொத்து விடுற தொடர் பதிவொன்னு நெனச்சேன். பார்த்தால் தொடரும் பதிவு அது. இப்ப தான் நிம்மதி. தொடர் பதிவு என்று சொன்னாலும் தொடருகின்ற பதிவு போட்டு என் வயிற்றில் பீர் வார்த்து விட்டார் மோகன் அண்ணாச்சி.

  தொடர் … தொடரும் பதிவு… உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பமா இருக்குதுல்ல …
  எல்லாம் நேத்து ஒரு தமிழ் படம் பார்த்த எபெக்ட்டு…

 39. // அப்பாவும் சும்மா இல்ல!! தாய் ஆகா போற தன் மனைவியை மனசுல சொமக்கணும்.. அவங்க மனசு என்ன நினைகும்னு அவங்க நினைக்கும் முன் நினைச்சு, அவங்க மனசு சந்தோசமா இருக்கும் படி நடக்கணும்!! //
  அப்பா ஆகறதுக்கு முன்னாடியே இங்க பாருங்க நம்ம தலைவரோட வசனத்தை எல்லாம்… ஹ்ம்ம்… அசத்துங்க… இப்படித்தான் இருக்கனும்…

  “உம் நு ஒரு வார்த்த சொன்னா, நானே குழந்தைய சுமப்பேன்” நு ஒரு வரியையும் சேர்த்துகோங்கனு சொல்லுவேன் !!!

  “அது என்னவோ தெரியல… உனக்கு மட்டும் எப்படிடா எல்லாமே impracticalஅ தோணுது” நு மண்டைல கொட்ட தோணுதா?… 🙂

 40. ஆண் வர்கத்தின் உரிமை குரலே ! உனக்கு நான் கொ. ப . செ ஆக என் விண்ணப்பத்தினை இங்கே கொடுக்கிறேன் . பரிசிலனை பண்ணவும் .
  // நம்ம ஜெ தமிழ்நாட்டின் “அம்மா”னு சொன்ன மாதிரி, கலைனர் தமிழ்நாட்டின் “அப்பா”னு சொல்லமுடியுமா//
  என்ன கொடுமை சரவணன் ?
  //ஏம்மா ஒரு ஆண் நிக்கறேன் யாரவது பொம்பளைங்க எடம் கொடுக்ககூடதா //
  புவனேஷ் நீங்க எங்கோயோ போய்டீங்க …
  //ஒரு பொண்ணு பக்கத்துல போய் ஒரு பையன் உக்காந்தா என்ன நடக்கும் //
  ரொம்ப ஆசை ….

  ஆனா , ஒன்னு மக்கா, இந்த பதிவுல 18 கேள்விகளை கேட்டதால் , கேள்வி சிங்கம் என்று இந்த வானகமும், வையகமும் உன் பெருமை பாடட்டும்

 41. வாங்க மந்திரன்..
  கொ. ப . செ ஆக விண்ணப்பம் போட்டுட்டு.. பேசறது கோட்சே மாதிரி இருக்கு..

  //ஒன்னு மக்கா, இந்த பதிவுல 18 கேள்விகளை கேட்டதால் , கேள்வி சிங்கம் என்று இந்த வானகமும், வையகமும் உன் பெருமை பாடட்டும்
  அவ்வளவு கேள்வியா கேட்டேன்??

 42. ஆண் உரிமை சங்கத்துல பொண்ணுங்களுக்கு என்ன பதவி கொடுபிங்க.எத்தன பர்சன்ட் பதவி கொடுபிங்க.

  • //ஆண் உரிமை சங்கத்துல பொண்ணுங்களுக்கு என்ன பதவி கொடுபிங்க.எத்தன பர்சன்ட் பதவி கொடுபிங்க.
   இது எல்லாம் செயற்குழு ல தான் முடிவு செய்ய முடியும்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: