--புவனேஷ்-- எழுதியவை | பிப்ரவரி 24, 2009

என் கேள்விக்கு என்ன பதில்??


இப்போ எல்லாம் கேள்வி கேட்கற சீசன். சரி நாமும் கேட்கலாம்னு நினைச்சப்போ சும்மா மடார் மடார்னு வந்த கேள்விகள் இது..

கேள்வி என்னமோ எனக்கு தான்.. இல்ல இல்ல என் மனசாட்சிக்கு தான்.. ஆனா பதில் சொல்ல போறது நீங்க!! எப்படி நம்ம புரட்சி??
வாங்க நாம எல்லாம் பதில் சொல்லலாம்

1) கேள்வி கேட்டா அறிவை வளத்துக்கலாம்.. நல்ல அறிவாளியும் கேட்கவேண்டாம் அடி முட்டாளும் கேட்கவேண்டாம்.. நீ ஏன் கேட்கற?
2) இப்படி எல்லோரும் கேள்வியே கேட்டுட்டு இருந்தா யாரு பதில் சொல்லறது??
3) அப்படியே கேள்வி கேட்டாலும் யார கேப்ப?? 

4) யாரும் கிடைக்கலைனா உன்ன நீயே கேள்வி கேட்டுக்க போறியா??

5) அப்படி உன்ன நீ கேள்வி கேட்டா, நமக்கெதுக்குன்னு யாரும் படிக்காமா போய்டா என்ன செய்வ??

6) அப்படி படிச்சாலும் உன்ன நீயே கேட்ட கேள்விக்கு யாரு பதில் சொல்லுவா??

7) அப்படியே சொன்னாலும் அது நீ அவங்கள பாத்து கேட்ட கேள்வி ஆகாதா??

8) நீ உன்ன பாத்து கேட்ட கேள்விக்கு அவங்க பதில் சொன்னா, அவங்க உன்ன பாத்து கேட்கற கேள்விக்கு யாரு பதில் சொல்லறது??

9) இப்படி ஒரு பதிவு போடனுமா??

10) ஒம்பது கேள்வி கேட்டா போதாதா?? எதுக்கு தேவையில்லாம (என்னமோ மத்த கேள்வி எல்லாம் தேவை இருந்து கேட்ட மாதிரி!!)  இந்த பத்தாவது கேள்வி??

ஜிங்குச்சா:
11) பத்து கேள்வி கேட்கவே மேட்டர் இல்ல.. இப்படி ஒரு தலைப்பு கொடுத்து பதினோராவது கேள்வி கேட்கனும்னு நினைக்கிறது  நியாயமா??


Responses

 1. eppadiyo intha murai naan than first comment 🙂

 2. ஒரு மேட்டரும் இல்லாம பேச சொன்னாலே மொக்க போட்டு தள்ளுவ… இப்படி ஒரு டாபிக் வேற குடுத்து எழுத சொன்னா கேக்கணுமா… நடத்துங்கப்பு… தெரியாம இந்த பக்கமா வந்துட்டேன்…

 3. என்ன தான் நீ மொக்கை போட்டாலும் அதுல சில விஷயம் புடிச்சிருது… குறிப்பா இந்த ஒன்பதாவது கேள்வி இருக்கே அது தான் என்னோட பர்சனல் favourite.

 4. //eppadiyo intha murai naan than first comment

  மச்சி நீ First கமெண்ட் பண்ணறது இது தான் First!! அதுக்குள்ள என்ன இந்த முறையும்??

 5. குடுத்த காசுக்கு மேல கூவுறத நீ எப்போ தான் நிறுத்த போறியோ… 10 கேள்வி கேக்க சொன்னா அதென்ன அதிக பிரசங்கிதனமா பதினோராவது கேள்வி???

 6. //ஒரு மேட்டரும் இல்லாம பேச சொன்னாலே மொக்க போட்டு தள்ளுவ… இப்படி ஒரு டாபிக் வேற குடுத்து எழுத சொன்னா கேக்கணுமா…

  என்னமோ இதுல ஏதோ மேட்டர் இருக்கற மாதிரி சொல்லறது எனக்கு அவமானம்!!

 7. //மச்சி நீ First கமெண்ட் பண்ணறது இது தான் First!! அதுக்குள்ள என்ன இந்த முறையும்??//

  இந்த முறையும் இல்ல மச்சி… இந்த முறை…

 8. //10 கேள்வி கேக்க சொன்னா அதென்ன அதிக பிரசங்கிதனமா பதினோராவது கேள்வி???

  எல்லாம் “பிரேக் த ரூல்ஸ்” ங்கர நினைப்பு தான்

 9. s.j surya படத்துல கதை இருக்குன்னு சொன்னாலும் சொல்வேன்… ஆனா இதுல மேட்டர் இருக்குன்னு சொல்ல மாட்டேன்… நான் சொன்னது டாபிக் இருக்குன்னு

 10. //குறிப்பா இந்த ஒன்பதாவது கேள்வி இருக்கே அது தான் என்னோட பர்சனல் favourite.

  இப்படி கேட்டிருந்தா உங்களுக்கு இன்னும் பிடிச்சிருக்கும் “நீ எல்லாம் பதிவு போடனுமா??”..

  ஆனா என மனசாட்சிக்கு மனச்சாட்சி இல்ல.. அப்படி எல்லாம் கேட்காது!!

 11. இத படிச்சிட்டு எங்கள நாங்களே கேட்குற கேள்வி என்னன்னா…
  ஏன்டா இந்த பக்கமா வந்தோம்?

 12. //ஏன்டா இந்த பக்கமா வந்தோம்?

  அப்படி எல்லாம் பேசப்புடாது!!

 13. யம்மாடி…

 14. யப்பா…இந்த பக்கம் வந்து போறவங்களா… இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி?அவ்வ்வ்வ்வ்….

 15. // ஒரு மேட்டரும் இல்லாம பேச சொன்னாலே மொக்க போட்டு தள்ளுவ… இப்படி ஒரு டாபிக் வேற குடுத்து எழுத சொன்னா கேக்கணுமா… நடத்துங்கப்பு… தெரியாம இந்த பக்கமா வந்துட்டேன் //

  இதை கன்னாபின்னா வென்று வழி மொழிகிறேன்.

 16. சுட்டபழம் என்கின்ற பேரை கெட்ட பழங் என்று மாற்ற வேண்டும்

 17. கிளம்பிடன்யா கிளம்பிடன்யா ……
  இந்த 11 கேள்வியில ஒரு கேள்விக்காவது ஒருத்தன் பதில் சொல்ல முடியுமா ?
  (ஆனா ஒன்னு , கேள்வி ஒன் வே , திருப்பி கேள்வி கேட்க கூடாது )

 18. ஆஹா… அற்புதமான,மிகவும் அறிவுபூர்வமான,சிந்திக்க கூடிய, அருமையான, ஆக்கபூர்வமான, கேள்விகள்… தொடருங்கள் 😦

 19. ஹாஹாஹாஹாஹா

 20. //யப்பா…இந்த பக்கம் வந்து போறவங்களா… இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி?

  மொத்தம் பதினோரு கேள்வி தான்… அதோட முடுஞ்சிருச்சு..

 21. //இதை கன்னாபின்னா வென்று வழி மொழிகிறேன்.
  அண்ணா, இப்படி கன்னாபின்னானு பேசக்கூடாது!!

  //சுட்டபழம் என்கின்ற பேரை கெட்ட பழங் என்று மாற்ற வேண்டும்

  அப்படி எல்லாம் முடியாது.. வேணும்னா “சுட்ட பழம் – நீங்கள் கேட்ட பழம்”னு Caption போடறேன்..

 22. //இந்த 11 கேள்வியில ஒரு கேள்விக்காவது ஒருத்தன் பதில் சொல்ல முடியுமா ?
  இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்க மந்திரன்..

 23. //ஆஹா… அற்புதமான,மிகவும் அறிவுபூர்வமான,சிந்திக்க கூடிய, அருமையான, ஆக்கபூர்வமான, கேள்விகள்… தொடருங்கள்

  தமிழர்கள் திட்டுனா கூட பாராட்டு மாதிரி இருக்கும்னு சொல்லறாங்களே அது இதுதானா??

 24. ஹா ஹா புவனேஷ் ..
  exam-ல யாச்சும் பதிலை எழுதுவீங்களா..இல்லை அதுல கூட இப்படி கேள்வியே எழுதி திணற அடிச்சுடுவீங்களா.. ?? Anyway I truly enjoyed it..

  keep going..

 25. ஹா….ஹா…
  இந்த கேள்விக்கு உங்கம்மா பதில் சொன்னாதான் நல்லாயிருக்கும் தம்பி. அவங்க கிட்ட கேட்டு பதிலை போட்டோ எடுத்து அனுப்பவும்.

 26. ஹாய் நான் குந்தவை வலி மொழிகிறேன்.நீங்க ஒரு வார்த்தைல பதில் எழுதசொன்னா.ஆசிரியர பார்த்து ௧௧ கேள்வி கேட்கிற ஆள் போல .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: