--புவனேஷ்-- எழுதியவை | பிப்ரவரி 26, 2009

உங்களில் யார் அடுத்த உண்ணாவிரதம்??


இப்போ தமிழ் நாட்டில் உண்ணாவிரத சீசன்!!

 போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம்!! – வக்கீல்கள் சங்கம்

 வக்கீல்கள்போலீஸ் சமாதானம் ஏற்பட வலியுறுத்தி போலீசாரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம்!!

 வக்கீல்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு, சமரசம் ஆகும் வரை  உண்ணாநோம்பு போராட்டம்!! – கலைனர் கருணாநிதி

 கலைனர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும் வரை  உண்ணாவிரதம்!! – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் (யார் சாகும் வரை என்று சொல்லல!!)

 

 

 இப்படியே போனா தமிழ் நாடு என்ன ஆகும்??

 அமைதிக்காக கருணாநிதி இருக்கும் இந்த உண்ணாவிரதத்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் நிர்பந்தத்தால் கைவிட்டால் கருணாநிதி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கும் வரை உண்ணாவிரதம்முக்கிய  தி.மு. நிர்வாகி செல்வ கணபதி பேட்டி!!

 

கல்நேஞ்சுகாரர் கருணாநிதி ஆடும் உண்ணாவிரத நாடகத்தை பெரும்பான்மையான  மக்கள் புரிந்து  கொண்டுதான் இருகிறார்கள்!!   இன்னும் புரியாத சிலருக்காக சாகும் வரை உண்ணாவிரதம். இதற்காக கழக கண்மணிகள் வருந்தவேண்டம்.. அஞ்ச வேண்டாம்.,. வேதனைப்பட வேண்டாம்.. அடுத்த வரும் எனது ஆட்சியில் இதற்க்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்செல்வி ஜெ

 எங்களையும் இந்த உண்ணாவிரத ஆட்டத்தில் சேர்த்துகொள்ளும் வரை உண்ணாவிரதம் –  ராமதாஸ், வைகோ கூட்டு அறிக்கை!!

 உண்ணாவிரதம் என்பது எங்கள் சொத்து, அதை மற்ற கட்சிகள் பயன்படுத்த தடை விதிக்க கோரிக்கை வைத்து உண்ணாவிரத ஆர்பாட்டம்கம்யூனிஸ்ட்!!

 

 

எப்பா தாங்க முடியல.. முன்னெல்லாம் வீட்டுல அம்மா கூட சண்ட போட்டுட்டு சாப்பாடு வேண்டம்னு சொன்னா கொஞ்சம் மதிப்பாங்க..

இப்போ சொன்னா,

உண்ணாவிரதம் இருந்து செத்ததா இந்த பூலோகத்துல சரித்தரம் இல்ல..”

உண்ணாவிரதம் தானே?? நல்லா இரு.. சாப்பாடு மிச்சம்.. “

உனக்கு வெச்ச சாப்பாடு மிச்சமானா பழைய சாப்பாட்டை நீ தான் நாளைக்கு சாப்படனும்..”

முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள அரசியல்னு காட்டு திட்டு வாங்க வேண்டியாதா இருக்கு..

எப்படியோ இவங்க நாட்டுல அரசியல் செஞ்சு, வீட்டுல நம்ம அடிப்படை உரிமையே போச்சு!! இப்போ இந்த உரிமை பரிபோனதுக்குஉங்களில் யார் அடுத்த உண்ணாவிரதம்” ??


Responses

 1. நான் தான் முதல்ல வந்தேன்.

 2. // கலைனர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும் வரை உண்ணாவிரதம்!! – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் (யார் சாகும் வரை என்று சொல்லல!!) //

  வீரபாண்டி ஆறுமுகம் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும் வரை உண்ணா விரதம் – இன்னொரு ஆளும்கட்சி அமைச்சர்

 3. // இப்போ இந்த உரிமை பரிபோனதுக்கு “உங்களில் யார் அடுத்த உண்ணாவிரதம்” ?? //

  ஏன் நாங்களும் நீங்க உங்க வீட்டுல வாங்கின மாதிரி திட்டு வாங்கணுமா?

 4. // “முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள அரசியல்” னு காட்டு திட்டு வாங்க வேண்டியாதா இருக்கு.. //

  உங்க அம்மா இன்னுமா உங்களை அப்படி நம்பிக்கிட்டு இருக்காங்க?

 5. //நான் தான் முதல்ல வந்தேன்
  வாங்க மோகன்..

  //வீரபாண்டி ஆறுமுகம் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும் வரை உண்ணா விரதம் – இன்னொரு ஆளும்கட்சி அமைச்சர்
  உங்க கன்னாபின்னா செய்தயில் இந்த மாதிரி வரும்னு யோசிச்சேன்… இங்க போட்டுடீங்க..

 6. //ஏன் நாங்களும் நீங்க உங்க வீட்டுல வாங்கின மாதிரி திட்டு வாங்கணுமா?

  அண்ணே, இது என் பிரச்சனை இல்லை.. தமிழ் நாட்டு “யூத்” களின் பிரச்சனை..

  //உங்க அம்மா இன்னுமா உங்களை அப்படி நம்பிக்கிட்டு இருக்காங்க?
  பாருங்க நீங்க இப்படி பேசி பேசி என்ன விட வயசு அதிகம்னு நிருபிக்கறீங்க.. நான் எல்லாம் சின்ன பையன்..

 7. ஹா..ஹா இந்த விளாட்டுக்கு நாவரலப

 8. //ஹா..ஹா இந்த விளாட்டுக்கு நாவரலப
  இப்படி சொன்னா எப்படி? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாவது இருங்க 🙂

 9. ஹா ஹா புவனேஷ்..
  உங்க பதிவுகல்லையே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இதான்.. ஐ மீன் நான் படிச்சதில் … நானும் இப்படி தான் கலாய்ப்பேன் இவங்களை ..

  பேசாம உண்ணும் விரதம்னு ஒன்னை தொடங்கலாம்.. obesity தான் ரொம்ப டேஞ்சரான விஷயம்னு விஜய காந்த் கட்சி காரங்க பேசிட்டு இருந்தாங்களாம் .. காத்து வாக்குல கேட்டது.. 😉

  கீப் கோயிங்

  அன்புடன்
  ஜானு

 10. //“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள அரசியல்” னு காட்டு திட்டு வாங்க வேண்டியாதா இருக்கு.. //

  இதுக்கு முன்னாடி ராஜ மரியாதை இருந்த மாதிரியும்… இப்போ தான் அது போயிடுசுங்கற மாதிரி சொல்ற??? எப்பவுமே நமக்கெல்லாம் அவ்வளவு தானே…

 11. வாங்க ஜானு அக்கா..

  //உங்க பதிவுகல்லையே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இதான்.. ஐ மீன் நான் படிச்சதில் …

  ரொம்ப நன்றி.. மேலும் உங்களுக்கு பிடித்த மாதிரி எழுத முயற்சிகறேன்!!

  //விஷயம்னு விஜய காந்த் கட்சி காரங்க பேசிட்டு இருந்தாங்களாம் .. காத்து வாக்குல கேட்டது..

  என்னது விஜயகாந்த் கட்சி இன்னும் இருக்கா??

  //கீப் கோயிங்
  எனக்கும் ஆசையா தான் இருக்கு!! பாக்கலாம்..

 12. //இதுக்கு முன்னாடி ராஜ மரியாதை இருந்த மாதிரியும்… இப்போ தான் அது போயிடுசுங்கற மாதிரி சொல்ற???
  ராஜ மரியாதை இல்லை தான்.. இப்போ இன்சுல்ட் இல்ல பண்ணறாங்க??

 13. //இப்போ இன்சுல்ட் இல்ல பண்ணறாங்க??//
  இதெல்லாம் நமக்கு ஜகஜமப்பா… வடிவேலு “இப்போ அடிக்க இல பண்றாங்க?” நு சொல்ற மாதிரில இருக்கு…

 14. //“உண்ணாவிரதம் இருந்து செத்ததா இந்த பூலோகத்துல சரித்தரம் இல்ல..”//
  கொப்பெருன்ச்சோழன் , பிசிராந்தையார் கதை கேள்வி பட்டது இல்லையா

  //” உனக்கு வெச்ச சாப்பாடு மிச்சமானா பழைய சாப்பாட்டை நீ தான் நாளைக்கு சாப்படனும்..”//

  புது சாப்பாடு , போடும் வரை உண்ணாவிரதம் என்று ஒரு அறிக்கை விட வேண்டியதுதான்

 15. எனக்கு உண்ணாவிரதம் மாத்திரம் பிடிக்காது. ஆனால் இவ்ளோ பேரு இருக்கும் போது நாமளும் ஏன் இருக்கக்கூடாது என்று ஆசை வந்துவிட்டது.

  நானும் இன்னைக்கு உண்ணாவிரதம் இருக்கபோறேன். ஆனா எதுக்குமே எனக்கு ஒரு பிரேக் இருக்கணும், அதனால காலையில், மத்தியானம் அப்புறம் இரவில் ஒரு பத்து நிமிடம் மட்டும் பிரேக் கொடுப்பேன். சரி, உண்ணாவிரதத்துக்கு யாரெல்லாம் வர்ரீங்கப்பா?

 16. //கொப்பெருன்ச்சோழன் , பிசிராந்தையார் கதை கேள்வி பட்டது இல்லையா

  படிக்கும் போது “வடகிருந்து இறந்தார்” னு வந்துது!! அது உண்ணாவிரதம்னு சத்தியமா தெரியல!!

 17. என்ன மச்சி இப்படி ஒரு பதிவு போட்டு என் உண்ணா விரதத்தில் மண் அள்ளி போட்டுட்டியே…
  சாப்பாடுல மண் அள்ளி போட்டா தான் சாப்பிடாம உண்ணா விரதம் இருக்க முடியும். உண்ணா விரதத்துலேயே மண் அள்ளி போட்டா நான் என்ன மச்சி செய்ய முடியும்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: