--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 5, 2009

வினய்க்கு பஸ் கிடைச்சுதா??


“ஹாய் ஹேமா என்ன பண்ணற?” என்று உற்சாகமாக ஓடிவந்தான் வினய்!! ” சும்மா தான் இருக்கேன்” என்று சீரியஸ் ஆகா மடியில் இருந்த புக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்!! இதை கவனித்த வினய் சிரித்துகொண்டே அந்த புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல் செய்ய.. “ஏன்டா படிக்க படிக்க அத எடுத்த??” “படுச்சுட்டு இருந்தியா?? சாரி நீ சும்மா இருக்கேன்னு சொன்னதால படிக்கலனு நினைச்சுட்டேன்” என்று சிரித்து கொண்டே சொல்ல ஹேமா எரிச்சாலுடன் “நீ வினய் இல்ல வினை” “இங்க பாருடா இங்கிலீஷ் வாத்தியார் பொண்ணு தமிழ் வார்த்தை விளையாட்டு விளையாடறா.. உங்க அப்பா சொல்லி கொடுத்தாரா ??” “இப்போ எதுக்கு எங்க அப்பாவ பத்தி பேசற??” “நான் என் மாமாவை பத்தி பேசறேன்” “மாமா வா?? உனக்கா?? குட் ஜோக்.. நான் உன்ன கல்யாணம் பண்ணறதுக்கு பதிலா கடல்ல குதிக்கலாம்” “எம்மா ரொம்ப ஆசைய வளத்துகாத, அப்புறம் நீ தண்ணி அடிச்சுட்டு சோகாமா பாட்டு பாட வேண்டி வரும்.. நான் சொன்னது உன் தங்கச்சிய பத்தி” “என்னது தங்கச்சியா??” “ஆமாம் அப்போ அவரு எனக்கு மாமா தானே??” “ஆட பாவி.. இந்த கொடுமை எங்கையாவது நடக்குமா??” “எது உன் தங்கச்சிய எல்லாம் ஒருத்தன் லவ் பண்ணற கொடுமையா??” “ஹ ஹ.. ஜோக் அடிக்கரனு நினைப்பா.. சீரியஸ்-௮ பேசு??” “நான் சீரியஸ்-௮ தான் பேசறேன்” “இப்போ எதுக்கு தனியா பேசனும்னு சொன்ன?” “உன் தங்கச்சிய பத்தி பேச தான்” “நீ என்ன படுத்தற கொடுமை போதாதா??.. என் தங்கச்சி பாவம்.. அதுவும் இல்லாம அவ புத்திசாலி, உன்னை எல்லாம் லவ் பண்ண மாட்டா” “அப்போ எனக்கு வேற வழியே இல்லையா??” “என்ன கேட்கற.. எனக்கு புரியல?” “என்னை புத்திசாலிக லவ் பண்ண மாட்டாங்கன்னா, நான் உன்ன லவ் பண்ணறத தவர வேற வழி இல்லையானு கேட்டேன்!!” “இருக்கே.. நீ காலம் பூரா கல்யாணம் பண்ணிக்காம சாமியாரா போயிரு” “போயிருவேன்.. அப்படி போய்ட்டா உன்ன வேற எவன் கட்டிக்குவான்?? நானே இந்த தியாகதையும் செய்யறேன்!!” “ஒன்னும் வேண்டாம்.. நீ போ நான் நிம்மதியா இருப்பேன்” “நீ நிம்மதியா இருப்பன்னா நான் போக மாட்டேன்!!”

 

பேச பேச.. ஹேமாவின் தங்கை சுதா ஓடிவந்து.. “என்னாடா இது.. ரெண்டு பேரும் காதலிச்சவங்க தான? அப்புறம் எதுக்கு Formalitikku பொண்ணு பாக்க வந்துட்டு தனியா பேசனும்னு கேட்கரார்னு பாத்தா இங்க வந்து ஒரு மணிநேரம் பேசிட்டு இருக்கீங்க.. மாமா, உங்க அப்பா அம்மா தட்டு மாத்தீட்டு கிளம்பியாச்சு.. உங்க வீட்டுக்கு நீங்க பஸ் ல தான் போகணும்”


Responses

 1. Me the first???

 2. மச்சி ஏதும் சொந்த அனுபவமா?

 3. நீ பொண்ணு பாக்க போன விஷயத்தை சொல்லவே இல்லை…

 4. //Me the first???

  ஆமா மச்சி!!

 5. //மச்சி ஏதும் சொந்த அனுபவமா?

  மச்சி இது சொந்த கற்பனை மட்டும் தான்!!

  //நீ பொண்ணு பாக்க போன விஷயத்தை சொல்லவே இல்லை…

  நான் தான் பொண்ணு பாக்க போவே இல்லையே?

  கஷ்ட பட்டு யோசிச்சு ஒரு கத எழுதுனா, நல்லா இருக்கா இல்லையானு சொல்லற பொறுப்புணர்ச்சி கொஞ்சமாவது இருக்கா ??

 6. கதை நல்லாருக்கு மச்சி…இப்ப எனக்கு பொறுப்புணர்ச்சி திடீர்னு ரொம்ப அதிகமா வந்திருக்குமே…

 7. //இப்ப எனக்கு பொறுப்புணர்ச்சி திடீர்னு ரொம்ப அதிகமா வந்திருக்குமே…

  இது பொறுப்பு இல்ல மச்சி கடமை!!

 8. உங்க(!!!!) கதை நல்லா இருக்கு புவனேஷ்.

 9. //உங்க(!!!!) கதை நல்லா இருக்கு புவனேஷ்.//

  ஒரு சின்ன திருத்தம் அண்ணாச்சி…
  உங்க(!!!) கதை(???) நல்ல இருக்கு புவனேஷ்.

 10. //உங்க(!!!!) கதை நல்லா இருக்கு புவனேஷ்.//
  வாங்க மோகன்.. வரும்போதே வில்லங்கமா ??

 11. //ஒரு சின்ன திருத்தம் அண்ணாச்சி…
  உங்க(!!!) கதை(???) நல்ல இருக்கு புவனேஷ்.//

  இன்னொரு சின்ன திருத்தும்
  உங்க (!!!) கதை(??) எங்க இருக்கு புவனேஷ் ?

 12. மச்சி அடுத்து போடலாமுன்னு வெச்சிருந்த பின்னூட்டத்தையும் இப்படி காலி பண்ணினா எப்படி?

 13. மச்சி உண்மைய சொல்லணுமுன்னா கதை …சரி வேண்டாம் அந்த கேரக்டர்களுக்குள்ள நடக்குற கான்வர்சேஷன் நல்லார்ந்துச்சு

 14. //மச்சி அடுத்து போடலாமுன்னு வெச்சிருந்த பின்னூட்டத்தையும் இப்படி காலி பண்ணினா எப்படி?

  தெரியும் மச்சி!! பாம்பின் கால் பாம்பறியும்!!

 15. //வேண்டாம் அந்த கேரக்டர்களுக்குள்ள நடக்குற கான்வர்சேஷன் நல்லார்ந்துச்சு

  தாங்க்ஸ் மச்சி!! நீயே சொன்ன நல்லா இருக்குனு நம்பறேன்! (சும்மா லுளுலாய்க்கு சொன்னேன்னு எல்லாம் சொல்ல கூடாது!!)
  இன்னும் கொஞ்சம் எழுதலாம்னு நினச்சேன்.. அப்புறம் உங்கள நெனச்சு பாவா பட்டு எழுதல!!

 16. கொன்றால் பாவம் தின்றால் போச்சு மச்சி…
  நீ தொடர்ந்து எழுது …
  உண்மையாலுமே ரொம்ப சின்ன கதையா இருந்தது…
  கொஞ்சம் எலாபரெட் பண்ணி எழுதுனா நல்ல இருக்கும்…

 17. //தாங்க்ஸ் மச்சி!! நீயே சொன்ன நல்லா இருக்குனு நம்பறேன்! (சும்மா லுளுலாய்க்கு சொன்னேன்னு எல்லாம் சொல்ல கூடாது!!)
  இன்னும் கொஞ்சம் எழுதலாம்னு நினச்சேன்.. அப்புறம் உங்கள நெனச்சு பாவா பட்டு எழுதல!!//

  நான் அப்படி நீங்க பாவம்னு நெனச்சி எழுதாம விடறேனா, அதெல்லாம் பாக்காதீங்க!

 18. //உண்மையாலுமே ரொம்ப சின்ன கதையா இருந்தது…
  கொஞ்சம் எலாபரெட் பண்ணி எழுதுனா நல்ல இருக்கும்…//

  எழுதலாம் மச்சி!! இது நான் ஒரு பக்க கதை எழுத முயற்சித்தேன்.. ரொம்ப சிறுசா போயிருச்சு!!

 19. //நான் அப்படி நீங்க பாவம்னு நெனச்சி எழுதாம விடறேனா, அதெல்லாம் பாக்காதீங்க!
  அடுத்த கத எழுதும் போது பெரு… சா எழுதறேன் அண்ணாச்சி!! !!

 20. கலக்கிட்டடா புவனேஷ்
  என்ன flow கதைல
  englishkaran சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் eloborate பண்ணி இருக்கலாம்
  dialogues அமர்க்களம் டா

 21. para para வா எழுதுடா
  ரொம்ப நெருக்கி எழுதற
  இடையில ஒரு dialogue யார் பெசுராங்கன்னே ஒரு confusion varudhu

 22. வாங்க சுரேஷ்!! பாராட்டுக்கு நன்றி!!

  //para para வா எழுதுடா
  ரொம்ப நெருக்கி எழுதற//

  நீங்க சொன்னா ரைட்ங்கனா!!

  //இடையில ஒரு dialogue யார் பெசுராங்கன்னே ஒரு confusion வருது

  அதுக்கு தான் கலர் கொடுத்தேன்!! இனி இன்னும் கொஞ்சம் கவனமா எழுதறேன்!!

 23. Nice and cute story bhuvanesh, Especially interesting dialogues. Really enjoyed.

 24. ஹாஹா.. ரொம்ம்ம்ப நல்லா இருந்துச்சு:)

 25. //Nice and cute story bhuvanesh, Especially interesting dialogues. Really enjoyed.

  Thanks a lot ka 🙂

 26. //ஹாஹா.. ரொம்ம்ம்ப நல்லா இருந்துச்சு:)

  ரொம்ப நன்றி தமிழ்!!

 27. மச்சி கலக்கிட்ட போ… இப்படி ஒரு கதைய உன் கிட்ட இருந்தி எதிர் பார்கவே இல்ல… எப்படி இதெல்லாம்… உனக்குள்ளவும் ஏதோ இருந்திருக்கு பாரேன்…

  சரி இத அவங்க கிட்ட காட்டினியா???

 28. //மச்சி கலக்கிட்ட போ… இப்படி ஒரு கதைய உன் கிட்ட இருந்தி எதிர் பார்கவே இல்ல… எப்படி இதெல்லாம்… உனக்குள்ளவும் ஏதோ இருந்திருக்கு பாரேன்… //

  அதான் பாரேன்.. என்னமோ இருந்திருக்கு!!

  //சரி இத அவங்க கிட்ட காட்டினியா???//

  நீயும் எதையும் கேட்கல!! நானும் எதையும் பாக்கல!!

 29. நீ எதுவும் பாக்கலியா? சரி விடு… நானே அவங்க கிட்ட காட்டிட்டு, கேட்குறேன்…

 30. புவா , (சும்மா செல்லமா )
  ரொம்ப நல்லா இருக்கு , ரொம்ப நல்லா இருக்கு …
  ஆனால் கொஞ்சம் format சரி பண்ணுனா ரொம்ப நல்லா இருந்திருக்கும்

 31. //ஆனால் கொஞ்சம் format சரி பண்ணுனா ரொம்ப நல்லா இருந்திருக்கும்//

  format னா? நான் சும்மா ஏதோ கிறுக்கினேன்!!format, நடை அப்படினா எல்லாம் என்னனு தெரியாது!!

 32. வினய்க்கு பஸ் கெட்சிதா இல்லியாபா, அத்தை சொல்லவே இல்லை நீ?

 33. hi kathai yarr ezhuthiningane puriyalappa.neenga adikira kuthula.muthalla writers pre podungappa.simply supr.

 34. hi buvanesh kathai ,coment padichathu neenga thaan ezhuthi irukkiringannu theriyuthu.padichittu romba sirichen.nice.amaa vinai veedu poi sernthaanaa.

 35. வாங்க சித்ரா.. அடிக்கடி வாங்க..

  //amaa vinai veedu poi sernthaanaa.//

  அது சஸ்பென்ஸ்!!! (அப்போ இது சஸ்பென்ஸ் ஸ்டோரி-ஆ ? )

 36. HI ATHU UNGALUKKE THERIYALAYA.VISARINGAPPA.

 37. //HI ATHU UNGALUKKE THERIYALAYA

  இப்படி எல்லாம் கேள்வி கேட்டா, கடைசியா தொடரரும் போட்டு திரும்பவும் கதை எழுத ஆரம்பிச்சுருவேன்..

  மக்களே இந்த பொண்ண பாத்துகோங்க.. அப்புறம் நான் திரும்பவும் கதை எழுத ஆரம்பிச்சா நான் பொறுப்பில்ல!!

 38. KATHIANALE PORUPPAA EZHUTHANUM.PORUPILLAMA KATHAI ELLAM EZHUTHA KUDATHU.MAKALE NEENGALE PAARUNGA BUVANESH PORUPILLAMA KATHAI EZHUTHA PORAANGALAAM.

 39. பொறுப்பா? எனக்கா? இங்க என்ன நடக்குது??

  Plese use this link for Tamil Translation.
  http://www.google.co.in/transliterate/indic/Tamil

 40. ஒ நீங்க நடக்கலையா

 41. ஆமாங்க நான் எல்லாம் பொறுப்பு ன்னா .. அந்த பருப்பு எந்த கடைல கிடைக்கும்னு கேட்குற ஆளு!

 42. ஹாய் புவனேஷ் கடுப்பு ஆகிட்டிங்கன்னு நினைக்கிறேன் .

  • அய்யய்யோ.. கடுப்பா? நீங்க எவ்வளவு வேணா கலாயுங்க!! கடுப்பெல்லாம் ஆக மாட்டேன்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: