--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 6, 2009

புளியாங்கொட்டை.. பல்லாங்குழி.. ஆண் மனசு..


நம்ம ஜானு அக்கா பட்டத்தை பெண்ணோடு இணைச்சு அவங்க பட்டதை ரொம்ப அருமையான ஒரு கதையா எழுதிட்டாங்க!! படிச்சிட்டு இந்த பொண்ணுங்களும் அஞ்சு கல், பல்லாங்குழி இப்படி நிறைய விளையாடுவாங்க அதோட பசங்க மனச இணைச்சு ஒரு சின்ன கலாய்ப்பு ட்ரை பண்ணலாம்னு தான் இந்த பதிவு!! ஜானு அக்கா மன்னிப்பாராக!!

பல்லாங்குழி – இந்த விளையாட்டை தெரியாதவர்கள் இங்கே பார்த்துக்கொள்ளலாம்!!

இது பொதுவா ரெண்டு பெண்கள் விளையாடும் விளையாட்டு!  ரெண்டு பெண்கள்.. எதிர் எதிர்  – வாழ்கையில் யோசித்தால்?? கரெக்ட் மாமியார் மருமகள்!!

இது விளையாட நிறைய புளியாங்கொட்டைகள் தேவைப்படும்!! இது தான் ஆண்களின் மனசு!! அதாவது கணவனின்/மகனின் மனசு!!

புளியாங்கொட்டைக்கு ஆட்டத்தில் எந்த முக்கிய துவமும் கிடையாது!! புளியாங்கொட்டை இல்லை எனில் வேப்பங்கொட்டையை (மாமனார்) வைத்து விளையாடுவார்கள் (சண்டை போடுவார்கள்)!! ஆனால் இவை இல்லாமல் ஆட்டம் இல்லை!!
புளியாங்கொட்டை சிந்திக்காது.. அவர்கள் சொல்லும் இடத்தில் உக்காரும்!! தேவை எனில் எடுத்துகொள்வார்கள்!! இல்லை எனில் கிழே போட்டு விடுவார்கள்!!
இதில் நீங்கள் பெண்களின் மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்!! ஆட்டம் முடியும் வரை (டிவோர்ஸ்/ தனி குடித்தனம்) விளையாடுவார்கள்!! ஆட்டத்தை பாதியில் விட்டாலும், விடும்போது நிலைமை எப்படி இருந்தது என்று எத்தனை நாள் ஆனாலும் மறக்க மாட்டார்கள்!! புளியாங்க்கொட்டைகளை சிந்தாமல் சிதறாமல் பார்த்துகொள்வார்கள்!! மீண்டும் ஒரு நாள் விட்ட இடத்தில் இருந்து விளையாடுவார்கள்!! புளியாங்கொட்டைகள் சிக்கி சின்னாபின்னம் ஆகும்!!

விளையாட்டின் முடிவு புளியாங்கொட்டையை வைத்துத்தான்!!  யாரிடம் பெரும்பான்மையான புளையாங்கொட்டைகள் இருக்கோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்!! அதாவது யார் சொல்லுவதை ஆண் மனசு அதிகமாக கேட்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள்!!

மேலோட்டமாக பார்த்தல் இதில் புளியாங்கொட்டைக்கு மதிப்பு என்று தான் தோன்றும்!!   ஆனால் மனசில் சில பகுதியை (தோற்றவர்களிடம் சென்ற புளியாங்கொட்டைகள்!!) இழந்து தவிக்கும் மீதி இருக்கும் புளியாங்கொட்டைகள் படும் பாட்டை யாரும் கண்டுகொள்வது (காண்டால் கொன்று விடுவார்கள் என்பது தனி கதை!!)  இல்லை!!
இது எல்லாம் கூட பரவால்ல, ஒருவரை திட்டுவது என்றால் கூட “படிச்சு பட்டமா வாங்க போற” என்பது கவுரவமாக திட்டுவதாக கருதப்படுகிறது!! ஆனா  புளியாங்கொட்டைமண்டையா என்றால்??

************ முற்றும் ********

அய்யய்யோ மறந்துட்டேன்!!
ஜானு அக்கா பதிவ பாத்து இம்பரஸ் ஆகி பதிவ போட்டுட்டு கவிதை இல்லைனா எப்படி??

நான் ..  ஆண் மனசு..
புளியாங்கொட்டை..
என்றுமே இயங்குவதில்லை..
இயக்கப் படுகிறேன்..

(ஒரு நல்ல கவிதையை இப்படி கொலை செய்ததற்காக  இதை கவிதை ரீமிக்ஸ் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம்!!)

குறிப்பு: ஜானு அக்கா ஐ அம் சோ சாரி!!


Responses

 1. 🙂

 2. Me the second

 3. இன்னா மச்சி இது…

 4. புளியங்கொட்டை விளையாட்டு வைத்து வாழ்க்கையை விளக்கி விட்டாய்…
  ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆன என்னைப் போன்ற ஆண்களின் மனசு இனி முழித்துக் கொள்ளும்…

 5. நான் .. ஆண் மனசு..
  புளியாங்கொட்டை..
  என்றுமே இயங்குவதில்லை..
  இயக்கப் படுகிறேன்..

  Bhuvanesh…. 😡 😡 😡 ….

  you may write like this.

  நான் .. ஆண் மனசு..
  புளியாங்கொட்டை..
  என்றுமே உடைவதில்லை ..
  உடைக்கப் படுகிறேன்…

  or

  விளையாட்டு முடித்ததும்
  தூக்கி எறியப் படுகிறேன்..

  உஙகளை மாதிரி நான் ஒன்னும் ஏட்டிக்குப் போட்டி இல்லை பாருங்க எவ்ளோ .. unbiased..

  hmmmmmmmmmn …keep going 😦

  cheers (ithu yenakke enakku)
  janu

 6. ha…ha…

  //புளியாங்கொட்டை சிந்திக்காது.. அவர்கள் சொல்லும் இடத்தில் உக்காரும்!! தேவை எனில் எடுத்துகொள்வார்கள்!! இல்லை எனில் கிழே போட்டு விடுவார்கள்!!

  hmmmmmmm…. I have to see You after marriage thambi.

 7. வருகைக்கு நன்றி சந்தன முல்லை!!

 8. //புளியங்கொட்டை விளையாட்டு வைத்து வாழ்க்கையை விளக்கி விட்டாய்…
  ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆன என்னைப் போன்ற ஆண்களின் மனசு இனி முழித்துக் கொள்ளும்

  மச்சி புளியாங்கொட்டை முழித்தாலும் பிரயோஜனம் இல்லை!!

 9. வாங்க ஜானு அக்கா!! அழகா கவிதை எழுத சொல்லி கொடுத்ததற்கு நன்றி!!

  நான் .. ஆண் மனசு..
  புளியாங்கொட்டை..
  வருபடுவதில்லை
  வருக்கபடுகிறேன்!!

  //உஙகளை மாதிரி நான் ஒன்னும் ஏட்டிக்குப் போட்டி இல்லை பாருங்க எவ்ளோ .. unbiased..
  அக்கா இது சும்மா!! நானும் unbiased.. தான்

  //hmmmmmmmmmn …keep going

  நன்றி!! (நல்லா இருந்துச்சா இல்லையானு சொல்லவே இல்ல??)

 10. //hmmmmmmm…. I have to see You after marriage thambi.

  ஹி ஹி!!

 11. Dear bhuvanesh..

  I have made a very sad pathivu about one real suttap palam.. ( not u … feeling very irritated to see ppl who pay tricks on others..)

  don’t know what to do further..just feeling sad tricked and cheated..

  I used your name and kavin’s name in that pathivu ..so i let u guys know of it..

  see this link if it works or visit my blog to have more info.. in this regard .. am sorry if i used ur name unnecessarily ..

  http://thiraikadal.wordpress.com/2009/03/09/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89/
  cheers 😦
  janu

 12. then ..unga pathivu nalla illamal ponaal keep going poduvenaa..but annikku naan mood out.. oru vaaramaave.. intha copy cats (rights !) prachchanayil irukken naan..

  kalakaa kottaigal thaan varukkap padum… pulyammbazham udaikkap padum ..athanaal udaikkap padum endru potten.. 😀 ..athayum varuhthu saapiduvaangannu theriyaathu ..irunthaal sorry

 13. //kalakaa kottaigal thaan varukkap padum… pulyammbazham udaikkap padum ..athanaal udaikkap padum endru potten.. ..athayum varuhthu saapiduvaangannu theriyaathu ..irunthaal sorry//

  கவிதைக்கு பொய் அழகு!! அதான் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை சொன்னேன்!! ஹி ஹி!!

 14. @ Jaanu Akka,

  நீங்க இங்க சொல்லறதுக்கு முன்னாடியே படிச்சுட்டேன் அக்கா!! கஷ்டமா தான் இருக்கு!! விட்டுத்தள்ளுங்க!

  //just feeling sad tricked and cheated..

  இது கொஞ்சம் கஷ்டம் தான்!! நீங்க அந்த குரூப்ல் போய் அந்த இடுகைகளை வெளியேற்ற சொல்லுங்கள்!!

 15. ஜானு புளியம்பழம் உடைக்கப்படும் ஆனால் புளிமுத்தை வறுக்கத்தான் செய்வார்கள்.
  அதிலும் வறுக்கும் போதுதான் நல்ல வாசனை வரும் (ஹி…ஹி நான் எந்த உள் அர்த்தத்திலும் சொல்லவில்லை)

 16. // இது கொஞ்சம் கஷ்டம் தான்!! நீங்க அந்த குரூப்ல் போய் அந்த இடுகைகளை வெளியேற்ற சொல்லுங்கள்!! //

  மச்சி அந்த குரூப்ல நாம ரெண்டு பெரும் இல்லையா !!!

 17. இல்ல மச்சி!! இது நம்ம குரூப் இல்ல!! இவங்க கதைய இவங்களுக்கு தெரியாம வேற ஒருத்தர் ““அன்புடன்” என்ற குழுமத்தில் அவுரு கதையா போட்டுட்டார்!! அங்க போட்டுட்டு இங்க வந்து நல்ல இருக்கு னு கமெண்டும் போட்டுருக்கார்!!

 18. இது என் பங்குக்கு ….

  நான் ஆண் மனசு..
  பெற்றவள் , உற்றவள்
  இருவரும் மற்றவராகிறார்கள்
  ஆகிறார்கள் எனக்கு .
  விரும்பியதால் வெறுப்பின்
  வெகுமதி தந்தாள்
  என் திருமதி .

 19. மந்திரன், கவிதை கலக்குது!! (ஆனா புரியல, யாரவது விளக்கம் சொல்லுங்க!! ஹி ஹி )

 20. Hi Kunthavai… ஹி ஹி … நம்ம experience எல்லாம் leak out பண்றீங்க.. 😀
  bhuvaneshu கவிதைக்கு மாத்திரம் இல்லை பதிவுக்கும் பொய் அழகு தான் .. ….hi ஹி /.. அதான் உங்க பதிவு செம அழகு..

  இவ்ளோ superbly எழுதறீங்க bhuvanesh.. எப்படி இவ்ளோ சின்ன வயசுலேயே ??.. no chance.. நீங்க ரொம்ப பெரிய ஆள் .. உங்களை நெனச்சா எனக்குப் பெருமைய இருக்கு .. சரி சரி ரொம்ப ஜல்பு புடிச்சிக்க பொது .. காரியம் இல்லைனா யாரும் யாரையும் புகழ மாட்டாங்களாம் .. எங்க பாட்டி சொல்வாங்க 🙂 😀 😆

  நீங்க எனக்கு ஒரு பதிவு போடனுமே ..அப்படியே நீங்க பதிவை போட்டுட்டு , உங்க பிரேண்ட்சை (freinds) கூட இதில் மாட்டி விடனும் ..

  திரைகடலுக்கு வரும் என் பிரேண்ட்சிற்கு என்று , பதிவை திரைகடலில் போஸ்ட் பண்ணுங்க ..புவனேஷ்.. சாரி கேட்காமல் இப்படி உங்க பெயரை மாட்டி விடுவதிற்கு ..என் மூக்கின் நுனிக்கு முன்னாலேயே மனதிற்குள் நம்ம நட்பு இருப்பதால் கொஞ்சம் அதிகப்படி உரிமை..யப்பாடா ..தப்பிச்சேன்.. அதே போல உங்களின் நல்ல நண்பர்களை திரைகடலில் தொடர்ச் செய்வது உங்கள் கைகளில்..திரைகடல் நிறைய silent readers இருக்கும் ஒரு ப்லோக்.. பெரிசா கமெண்ட்ஸ் போடா மாட்டாங்க.. கொஞ்சம் என்னை போல ஷை டைப் .. ஹி ஹி

 21. //திரைகடலுக்கு வரும் என் பிரேண்ட்சிற்கு என்று , பதிவை திரைகடலில் போஸ்ட் பண்ணுங்க ..புவனேஷ்.. //

  உங்கள நெனச்சா பெருமையா இருக்குக்கா!! ஆனா நீங்களே பாவம் ஒரு நல்ல தளத்தை நடத்திட்டு வரீங்க! நன் எழுதுறதை பார்த்து அங்க இருகரவங்களும் வேலைய போய்ட்டா நாம என்ன செய்ய?
  இருந்தாலும் முயற்சி பண்ணறேன்.. உங்க வீதி.. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க!!

 22. ஆஹா புவனேஷ் பின்னறீங்களே. ரொம்ப அடிபட்டு இருக்கீங்களோ? நல்லா இருக்கு.

 23. ஆண்கள் முன்னேற்ற சங்கத்துக்கு நீங்க தலிவர் ஆகியே ஆகணும் வேற வழியே இல்லை.

 24. வாங்க மோகன்..
  //ஆண்கள் முன்னேற்ற சங்கத்துக்கு நீங்க தலிவர் ஆகியே ஆகணும் வேற வழியே இல்லை//

  சங்கத்துக்கு பேரு வையுங்க.. ஒரு குரூப் Blog ஆரம்பிச்சரலாம்!!

 25. 🙂

 26. சங்கத்துக்கு பேரு வையுங்க.. ஒரு குரூப் Blog ஆரம்பிச்சரலாம்!!//

  ஆமா மச்சி…
  நமக்கு அன்றாடம் பெண்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்

 27. ஹாய் புவனேஷ் புளியங்கொட்டை கவிதை ரொம்ப நல்லாஇருக்கு.வருத்தா வாசம் வரும் .பொடி பண்ணினால் பசை வரும்.

 28. சித்ரா வருத்தா வாசம் வரும் ஓகே.. ஆனா எதுக்கு வருப்பாங்க?

 29. @ Sriraam
  மச்சி தலைப்பு வை .. ஆரம்’பிச்சரலாம்’!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: