--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 16, 2009

பெண் விடுதலை.. கல்வி.. இன்னும் சில!!


நேத்து (மார்ச் 14) பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்து ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. பெத்த பெண் குழந்தையை (மூன்று நாள் குழந்தை) ஒருத்தன் கிணத்துல போட்டு கொன்னுட்டான்!! இது பெண் பிள்ளை பிறந்ததால் செய்த சிசு கொலை இல்லை!! இப்படி செய்தவன் ஒரு பாமரனும் இல்லை!! ஒரு படித்தவன்!! இதை இங்கே சொல்ல காரணம், நாம் நம் நாட்டில் நடக்கும் பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை, எய்ட்ஸ் என எல்லாத்துக்கும் காரணம் கல்வி அறிவு இல்லை என்ற அறியாமையில் இருக்கிறோம்!! இங்கே இந்த கொலையை செய்தவன் M.E படித்தவன். அதுவும் ஏதோ நாட்டில் உள்ள அறிவாளிகள் எல்லாம் குவிந்த ஒரு இடம் என்பது போல் ஒரு மாயை உள்ள ஐ.டி துறை! அதுவும் அங்கு புற்று ஈசல் போல் நுழையும் கூட்டத்துக்கு “வழிகாட்டி” யாக இருக்கும் ஒரு மேனேஜர்!

 

நம் நாட்டில் அதவும் சென்னையில் ரெண்டு முறை பள்ளி மாணவர்கள், சக மாணவனை கொலை செய்து உள்ளனர்! நிறைய தற்கொலை வேறு நடக்கிறது. அனைவரும் படித்தவர்கள்! சரியான மன பக்குவத்தையும் மன தைரியத்தையும் தராதது என்னை பொறுத்தவரை கல்வியே இல்லை!!

 

சரி இந்த சனியன் விஷயத்துக்கு வருவோம்.. போன வருடம் கல்யாணம்.. மனைவி கருவுற்றவுடன் கருவை அழிக்க சொல்லி உள்ளான்!! முடியாது என்று அந்த பெண் சொன்னவுடன் சண்டை.. கொஞ்ச நாள் பெண்ணின் பெற்றோர் அங்கே (பெங்களூரு) இருந்துள்ளனர்! பிறகு சென்னை வந்து பெண் குழந்தையும் பிறந்தது!!

பிரசவத்தப்போ ஏதோ காரணத்தால கூட இல்லைனா, குழந்தை பிறந்ததை தகப்பனுக்கு தகவல் சொல்லுவாங்க! இங்க இந்த மூதேவியை போய் மகளை பார்க்க அழைத்திருக்கிறார்கள்!! பிறகு, உறவினர்கள் அந்த பெண்ணை வற்புறுத்தி அவனுடன் அனுப்பிவைத்துள்ளனர்! அங்கே பெண்ணிடம் அன்பாக பேசிய அவன், குழந்தயை மட்டும் பார்க்கவில்லையாம்! பிறகு இந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துவிட்டு, பிள்ளையை கிணற்றில் வீசயுள்ளான்!!

 

 இதை செய்ததற்கு காரணம் – அந்த பெண் வேலைக்கு போக வேண்டும் என்று கூறியுள்ளான்.. அவனை பார்த்து கெட்ட வார்த்தை கலந்து சில கேள்விகள் எனக்கு எழுகிறது! இருந்தாலும் இங்கே அதை சொல்ல விரும்பவில்லை. ஒரே ஒரு கேள்வி தான் “குழந்தை வேண்டாம்னு நினைக்குற நாய் எதுக்கு டா _______________? அப்புறம் அதுதான் நிமுசத்துக்கு நாலு தாட்டி “பேசறவன் தான் பிஸ்தா” னு விளம்பரம் போடறான் இல்ல, அத வாங்கி போட்டு தொலைய வேண்டியாதுதான?? ”

 

முன்னெல்லாம் வரதட்சணை கொடுமை மட்டும் தான்! இப்போ பெண் வேலைக்கு போகவேண்டும், முழு சம்பளத்தையும் மாமியாரிடம் கொடுக்கவேண்டும்! இப்படி Retail கொடுமைகள் வேறு!! இப்படி கேட்ட இவன் ஒன்னும் ஏழை இல்லை! இவன் பணக்காரன் என்று தான் சரியா விசாரிக்காம பெண் விட்டார் சம்மதம் சொல்லியுள்ளனர்!! இந்த சைகோ சிஸ்கோ என்ற நிறுவனத்தில் மேனேஜர்!! மாத சம்பளம் அறுபது ஆயிரம்!!

 

பெண் வீட்டாரிடம் ஒரு கேள்வி, குழந்தை பிறந்தால் பெண் அம்மா வீட்டில் தான் இருப்பாள்! இது தலை பிரசவம் வேறு! உங்கள் குழந்தயை ஏன் இப்படி வற்புறுத்தி அனுப்பிவைத்தீர்கள்? அதுவும் பிரசவித்த மூணே நாளில்?

 

கொஞ்ச நாள் முன்னாடி எங்கள் ரூமில் “நீயா? நானா?” பாக்கும் போது வந்த பேச்சு இது. அன்றைய தினம் டாபிக் “கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் வேலைக்கு போலாமா? வேண்டாமா?”

 

எங்கள் ரூமில் ஒருவன், “நான் வேலைக்கு போக கூடாதுன்னு தான் சொல்லுவேன்”

நான், “அவ இஷ்டம் டா, விரும்புனா போட்டும், இல்லைனா வீட்டுல உக்காந்து சீரியல் பாக்கட்டும். இதுல நாம முடிவு எடுக்க என்ன இருக்கு!”

அவன்,”வேலைக்கு போனா எல்லோரும் தப்பா பேசுவாங்க!!”

 நான், ” உனக்கு சந்தேகம் வரும்னு சொல்லு, அது என்ன ஊரு மேல பழிய போடற? ”

அவன், “எனக்கு வரவ போக வேண்டாம்.. அவ்வளவு தான்!”

இன்னொருவன், “ஏன்? காரணம் சொல்லைனா புவனேஷ் சொல்லறது உண்மை ஆகிடும்”

அவன், “பிரச்சனை வரும்டா”

 இன்னொருவன், “என்ன பிரச்சனை?”

அவன் பதில் சொல்லவில்லை..

(நான் அவனை இங்க சொன்னது, இப்படி காரணம் இல்லாமல் பெண்கள் வேலைக்கு போவதை தடக்கும் ஆட்களும் உண்டு என்று சொல்லத்தான். இத்தனைக்கும் அவன் ப்ராஜக்டில் நிறைய பெண்கள்! அவன் எல்லோரிடமும் நல்லா பேசுவான்! )

நான், “சந்தர்ப்ப சூழ்நிலை படி அவ போக வேண்டாம்னு இருந்தா, “போக வேண்டாம்னு சொல்லிருவேன்” ! எடுத்த முடிவு சரின்னு நான் சொல்லி புரிய வைப்பேன்! ”

 இன்னொருவன், “அப்ப மட்டும் நீ அவ சுதந்தரத்தை தடுக்கறது இல்லையா ?”

 நான், “இல்ல.. குடும்பம்னா சில நேரம் இப்படி இருந்துதான் ஆகணும்” இன்னொருவன், “நீ செய்ய வேண்டியது தான? அவள ஏன் செய்ய சொல்லற?”

இதற்கு நான் சொன்ன பதில் கடைசியா சொல்லறேன்.

அதுக்கு முன்னாடி ஒரு உண்மை சம்பவம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு கல்யாணம் ஆச்சு! நல்லா படித்த பொண்ணு தான் ஆனா இங்கே பொண்ணு வேலைக்கு போகல! பையன் ஆபீஸ்ல கெஞ்சி, சண்டைபோட்டு அமெரிக்கா போனான்! கூடவே Dependents விசால அந்த பொண்ணும் போச்சு! அங்க போய் இந்த பொண்ணு எனக்கு போர் அடிக்குது வேலைக்கு போகட்டுமான்னு கேட்டுருக்கு! இந்த பையன் சரின்னு சொல்லிட்டான்!!

 

ரெண்டு மாசம் நல்லா ஓடுச்சு, அப்புறம் அந்த பையன் அங்கே வேற ஸ்டேடுக்கு relocate ஆகிட்டான்!! இந்த பொண்ண இந்த வேலை வேண்டாம், அங்க போய் வேற வேல பாத்துக்கலாம்னு சொன்னதுக்கு முடியாது நான் இங்கயே இருக்கேன், வீக்-என்ட்ஸ் பாக்கலாம்னு சொல்லிருக்கு.. அப்படியே Develop ஆகி இப்போ Divorce ஆகிடுச்சு! அவன் ஆபீஸ்ல சண்ட போட்டு அங்க இருந்து இந்தியா வந்துட்டான்! இந்த பொண்ணு “Dependents” விசால போனதால அங்க இருந்து தொரத்தி விட்டுடாங்க!

 

இந்த பெண்ணை நான் குறை சொல்லவில்லை! ஆனால் இங்கே அவன் சொன்னதை கேட்டிருக்கலாம்! அப்புறம் மேடை ஏறி பெண் சுதந்திரம் பேசும் பெண்கள் எல்லாம் தன் குடும்பத்தோட சந்தோசமா இருப்பாங்க.. அவங்களுக்கு தெரியும் குடும்பனா விட்டு கொடுத்து போகனும்னு!! அவங்க பேசறத கேட்டுட்டு அதா முழுசா புருஞ்சுக்காதவங்க சின்ன விஷயத்துக்கு சண்ட போடறாங்க.. அப்புறம் அது பெரிய சண்டை ஆகுது! ஒரு விசு படத்துல வரும் “நான் வாங்கியிருக்கறது சுதந்திரம்.. நீ வாங்கியிருக்கிறது விடுதலை..”. அது தான் இங்கே நடக்குது!

திரும்ப எங்க நீயா நானா பிரச்சனைக்கு வாங்க. நாங்க பேசுன சந்தர்ப்ப சுழ்நிலை அம்மா அப்பாவை கவனிக்கிறது, குழந்தைகளை கவனிக்கறது போன்றவை!

 அவனுக்கு நான் சொன்ன பதில்: நான் வீட்டில் இருந்தால் ஊரு தப்பா பேசும்!! ஹி ஹி!

இதுவரை மூலையில் இருந்து வேடிக்கை பார்த்த அவன் நான் ஏதோ தோற்று விட்ட உற்சாகத்தில் குதித்தான்.. நீங்க சொல்லுங்க மக்கா நான் தோத்துடேனா??

 

சரி, அந்த கேள்விக்கு சீரியஸ் ஆனா பதில், எனக்கு தாலில கூட நம்பிக்கை இல்லை.. அதுக்காக நான் தாலி கட்டாமத்தான் குடும்பம் நடத்துவேன்னு சொல்லமுடியுமா? சில விஷயம் ஊரோட ஒத்து தான் போகணும்!


Responses

 1. நானும் இந்த செய்தியை படித்து பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டேன் புவனேஷ்.
  என்ன கொடுமை இது, இவனுங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணினாங்க… மனதில் இப்படி கொஞ்சம் கூட ஈரமே இல்லாதவனுக்கு எதுக்கு குடும்பம்…. ஒண்ணுமே புரியவில்லை……

  அப்புறம் பெண்கள் வேலைக்கு போனால் நன்மையும் உண்டு அதே அளவுக்கு இழப்பும் உண்டு. அவங்க குடும்ப சூழ்நிலையை பொறுத்து தான் முடிவெடுக்க முடியும். இப்பவே நீங்க ரெம்ப ப்ளான் எல்லாம் போட்டு உங்களை நீங்களே குழப்பிக்காதீங்க. வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் எப்போது சந்தோஷம் தான்.

 2. //அப்புறம் பெண்கள் வேலைக்கு போனால் நன்மையும் உண்டு அதே அளவுக்கு இழப்பும் உண்டு. அவங்க குடும்ப சூழ்நிலையை பொறுத்து தான் முடிவெடுக்க முடியும். இப்பவே நீங்க ரெம்ப ப்ளான் எல்லாம் போட்டு உங்களை நீங்களே குழப்பிக்காதீங்க. வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் எப்போது சந்தோஷம் தான்//

  பெரியவங்க சொல்லீடீங்க.. ஓகே கா..

  அப்புறம் நான் பிளான் எல்லாம் போடல.. அன்னைக்கு பேச்சு வந்துச்சு, எல்லோரும் பேசும்போது நாம சும்மா இருக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல சொன்னது! 🙂

 3. இடைவெளியில்லாமல் இருந்ததை கஷ்டப்பட்டு படித்து பின்னூட்டம் போட்டுவிட்டு பார்த்தால் , அழகாக மாற்றியிருக்கிறீர்கள்.

 4. நானும் பொதுவாக சொன்னேன் புவனேஷ்… பேசிக்கிறது நல்லதும் கூட… அப்போது தானே நிறைய கோணத்தில் நாமும் யோசிப்போம்… ஆனால், இப்படித் தான் என்று எதையுமே கட்டுக்குள் வைக்கக் கூடாது என்பது தான் என்னுடய கருத்து. ( அதுக்காக கருத்து கருத்தம்மான்னு திட்டாதீங்க …. )

 5. //பேசிக்கிறது நல்லதும் கூட… அப்போது தானே நிறைய கோணத்தில் நாமும் யோசிப்போம்… //

  நான் யோசிக்காது ‘கேன’த்தனமா இருக்கும்னு சொல்லீருக்காங்க.. ஆனா பல ‘கோண’த்துல யோசிப்பீங்கன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான் அக்கா!

 6. இத படிச்சதும் எனக்கு மொதல்ல தோணினது “இவ்வளவு சீரியஸ் blog உன்கிட்ட இருந்து எதிர் பாக்கல…” மத்தத அப்புறமா சொல்றேன்…

 7. புவனேஷ் ..
  நீங்க சொல்றது நிஜமா.. தமிழ் நட்டு நியூஸ் கொஞ்ச நாளாய் படிக்கிறது இல்லை ..கேக்கவே வருத்தமாய் இருக்கு ..
  உங்க விவாதங்கள் படிக்கவும் சுவாரஸ்யமா இருக்கு .. அழகா எழுதி இருக்கீங்க..

  உங்களை கேனைனு சொல்வர்களை நான் உரிமையுடன் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. குந்தவை சொல்றது போல நீங்க நல்ல கோணத்துடன் தான் யோசிக்கிறீங்க..

  well written ..keep going..

 8. //நம் நாட்டில் நடக்கும் பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை, எய்ட்ஸ் என எல்லாத்துக்கும் காரணம் கல்வி அறிவு இல்லை என்ற அறியாமையில் இருக்கிறோம்//

  நல்ல மனசுக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை ..

  // “கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் வேலைக்கு போலாமா? வேண்டாமா?”

  இது போன்ற கேள்விகள் இருக்கும் வரை பெண்களுக்கு சமத்துவம் வர வில்லை என்று தான் பொருள். ஆணையும் பெண்ணையும் தனிதனி தீவுகளாகவே பிரித்திடும் கேள்விகள் இவை. சமூக அளவில் முன்னேறாத , பிற்படுத்தப் பட்ட நாடுகளில் மாத்திரமே இப்படிப் பட்ட கேள்விகளை காண இயலும் .

  OPPS…Big comments ..sorry for that ..!!

 9. வணக்கம் மச்சி…நான் கொஞ்சம் லேட்டு… படிச்சிட்டு வந்து அப்பாலிக்கா கலாய்க்கிறேன்…

 10. மச்சி…நானும் இதைப் பற்றி நேற்றைய தினத்தந்தியில் படித்தேன்…சிஸ்கோ எல்லாம் கரீக்ட்ட போட்டுருக்க…ஆனா அவன்(ர்?!) சம்பளம் 60,000 இல்லை 40,000 என்று படித்ததாக ஞாபகம்.நான் கூறியது ஒருவேளை தவறாக இருந்தால் மக்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.

 11. குழந்தை வேண்டாம்னு நினைக்குற நாய் எதுக்கு டா _______________?

  Please fill up the blanks.

 12. அப்புறம் அதுதான் நிமுசத்துக்கு நாலு தாட்டி “பேசறவன் தான் பிஸ்தா” னு விளம்பரம் போடறான் இல்ல, அத வாங்கி போட்டு தொலைய வேண்டியாதுதான??

  அவன்(மறுபடியும் ர்?!) உன் அளவுக்கு ஷார்ப்பு இலை மச்சி…மன்னிச்சு விட்டுடு…

 13. //ஆனா அவன்(ர்?!) சம்பளம் 60,000 இல்லை 40,000 என்று படித்ததாக ஞாபகம்//

  மச்சி தந்தில நீ சொல்லற சம்பளம்.. தினகரன்ல நான் சொல்லற சம்பளம்.. நான் ரெண்டையும் படுச்சேன்.. மேனேஜர் 60 K என்பது நம்ப கூடியதாக இருந்தது.. நீ என்ன சொல்லற ?

 14. அவ இஷ்டம் டா, விரும்புனா போட்டும், இல்லைனா வீட்டுல உக்காந்து சீரியல் பாக்கட்டும். இதுல நாம முடிவு எடுக்க என்ன இருக்கு!”//

  மச்சி நீ சில வேளை முடிவேடுக்காம இருந்தாலும் பிரச்சினை வரும்… So please be careful

 15. //Please fill up the blanks.//

  மச்சி நாம ரெண்டு பேரும் குழந்தைகள் மறந்துட்டியா?? நாம இப்படி பேசுனா ஊர், இந்த உலகம் கேட்டு போச்சுன்னு பேசாது ?

 16. //மச்சி நீ சில வேளை முடிவேடுக்காம இருந்தாலும் பிரச்சினை வரும்… So please be careful//

  கரெக்ட் மச்சி.. நீ முழுசா படிக்காம கமெண்ட் போட்டுடியா??

 17. இங்க இந்த மூதேவியை போய் மகளை பார்க்க அழைத்திருக்கிறார்கள்!! //

  ஒரு சின்ன திருத்தம் மச்சி “மூதேவி” இல்லை “மூதேவன்”… இங்கும் ஏன் பெண் பாலினை கொச்சை படுத்துகிறாய்.

 18. Overall a good post by you in the recent days machi…Congrats

 19. //ஒரு சின்ன திருத்தம் மச்சி “மூதேவி” இல்லை “மூதேவன்”… இங்கும் ஏன் பெண் பாலினை கொச்சை படுத்துகிறாய்.//
  பத்த வெச்சுட்டியே பரட்ட ..

 20. // பத்த வெச்சுட்டியே பரட்ட .. //
  ஏதோ நம்மால முடிஞ்சது…நாராயண நாராயண…

 21. //Overall a good post by you in the recent days machi…Congrats//

  நன்றி மச்சி.. But I am writing only in recent days, you mean that this is my first good post?? ha ha ha.. let me try to Write a better post next time 🙂 Thanks a Lot for you encourgement Machi!

 22. // கரெக்ட் மச்சி.. நீ முழுசா படிக்காம கமெண்ட் போட்டுடியா?? //

  No pangaali…படிச்சிட்டு தான் பின்னூட்டம் போட்டேன்.

 23. மச்சி தந்தில நீ சொல்லற சம்பளம்.. தினகரன்ல நான் சொல்லற சம்பளம்.. நான் ரெண்டையும் படுச்சேன்.. மேனேஜர் 60 K என்பது நம்ப கூடியதாக இருந்தது.. நீ என்ன சொல்லற ?//

  ப்ரீயா வுடு மாம்ஸ்… அந்த செத்த மூதி எவ்ளோ சம்பளம் வாங்குனா நமக்கென்ன…இப்ப அதுவா மேட்டரு…

 24. //// கரெக்ட் மச்சி.. நீ முழுசா படிக்காம கமெண்ட் போட்டுடியா?? //

  No pangaali…படிச்சிட்டு தான் பின்னூட்டம் போட்டேன்.
  //

  ஏன்னா நானும் பின்னாடி பிரச்சனை வரும் என்று சொல்லி இருந்தேன்! முழுவதும் அவங்களே முடிவு எடுத்தாலும் பிரச்சனை வரும் என்று சொல்லத்தான் அந்த உண்மை கதை.. முடிவு கூட்டு முடிவாக இருக்கும் குடும்பம் சொர்க்கம்!

 25. மச்சி நாம ரெண்டு பேரும் குழந்தைகள் மறந்துட்டியா?? நாம இப்படி பேசுனா ஊர், இந்த உலகம் கேட்டு போச்சுன்னு பேசாது ?//

  Correct machi…ஆனா இப்ப எல்லாம் குழைந்தங்க கூட வடிவேலு ஜோக்கை பாத்துட்டு “அடிங் கொய்யாலே” என்று கூறுகிறார்கள்.

 26. //ப்ரீயா வுடு மாம்ஸ்… அந்த செத்த மூதி எவ்ளோ சம்பளம் வாங்குனா நமக்கென்ன…இப்ப அதுவா மேட்டரு…//
  அடப்பாவி.. நக்கீரன் மாதிரி குத்தம் எல்லாம் சொல்லீட்டு இப்போ இப்படி பேசறியே?

 27. I have to go now for a work.So அப்பாலிக்கா வரேன் மச்சி…

 28. // அதுக்காக கருத்து கருத்தம்மான்னு திட்டாதீங்க …. //
  ஆஹா நீங்களே ஐடியா கொடுக்குறீங்களே அக்கா… ஒரு சின்ன திருத்தம்…”கருத்து கண்மணி அம்மா”…

 29. நானும் இந்த செய்தியை படித்து பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டேன் புவனேஷ்.
  என்ன கொடுமை இது, இவனுங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணினாங்க… //

  அட வுடுங்க அக்கா..எல்லாருமே நம்ம அண்ணாத்த அதாங்கா உங்க புருஷரு… அவரைப் போலவே ரொம்ப ஷோக்காளியாவா இருப்பாங்க… லைப்ல இதெல்லாம் சகஜமாப் பூடுச்சி…
  இன்னிக்கு பேப்பருல கண்டுகிறதும் நாள் முழுசும் பீலிங் உடுறதும்…இதையே நெனைச்சி இவனுங்களுக்கெல்லாம் நாம பரவால நைனான்னு கூவிகினு நைட் போய் ஒரு குவார்ட்டர் உள்ளுக்குள்ள வுடுறதும் காலயில இதைப் பத்தி மறந்துகினு அடுத்த சம்பவத்துக்காக பீலிங் வுடுரதுமுன்னு வாழ்க்கை போய்கினு கீது கா..

 30. //மச்சி நாம ரெண்டு பெரும் குழந்தைகள் மறந்துட்டியா?

  இந்த கொடுமையை தட்டி கேட்க யாருமேயில்லையா ?

  //அட வுடுங்க அக்கா..எல்லாருமே நம்ம அண்ணாத்த அதாங்கா உங்க புருஷரு… அவரைப் போலவே ரொம்ப ஷோக்காளியாவா இருப்பாங்க… லைப்ல இதெல்லாம் சகஜமாப் பூடுச்சி…

  ஸ்ரீராம் நீங்க நல்லவரா கெட்டவரா?

 31. // ஸ்ரீராம் நீங்க நல்லவரா கெட்டவரா? //
  நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
  இதக் கேட்ட நான் சோழ பதில் இல்லையே…

 32. அவன் என்ற விளிப்பு முறையிலிருந்தே அச்செய்தியினாலும், அந்த ஆள் மீதும் நீங்கள் எத்தகையய கோபத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. அதில் தவறும் இல்லை.

 33. நான் கூட அந்த செய்தி பாத்து கடுப்பு ஆகிட்டேன். சம்பாதிச்சு என்ன பண்ண போறாங்க இந்த மாதிரி ஆளுங்க எல்லாம்?

  குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லுரவங்களுக்கும் இந்த ஆளுக்கும் என்ன வித்தியாசம். நல்லா அலசல் புவனேஷ்.

 34. // //ப்ரீயா வுடு மாம்ஸ்… அந்த செத்த மூதி எவ்ளோ சம்பளம் வாங்குனா நமக்கென்ன…இப்ப அதுவா மேட்டரு…//
  அடப்பாவி.. நக்கீரன் மாதிரி குத்தம் எல்லாம் சொல்லீட்டு இப்போ இப்படி பேசறியே?//

  நாங்க அப்படியும் பேசுவோம், இப்படியும் பேசுவோம் ஹிஹி

 35. வாங்க நந்தா .. முதல் வருகைக்கு நன்றி..

  வாங்க மோகன்..
  //நாங்க அப்படியும் பேசுவோம், இப்படியும் பேசுவோம் ஹிஹி//

  நாமெல்லாம் அப்படித்தான் பாஸ்!!

 36. //இது போன்ற கேள்விகள் இருக்கும் வரை பெண்களுக்கு சமத்துவம் வர வில்லை என்று தான் பொருள். ஆணையும் பெண்ணையும் தனிதனி தீவுகளாகவே பிரித்திடும் கேள்விகள் இவை. சமூக அளவில் முன்னேறாத , பிற்படுத்தப் பட்ட நாடுகளில் மாத்திரமே இப்படிப் பட்ட கேள்விகளை காண இயலும் . //

  ஜானு அக்கா, சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.. இருந்தாலும் சொல்லறேன்..
  முன்னேறிய நாட்டில் தாய்மையை தெய்வமா பாக்கறது இல்ல.. இங்க அந்த மாதிரி இருக்கமுடியுமா?

 37. இதுதான் உங்க வலைப்பூவா ரொம்ப சூப்பரா இருக்கு!

  அடிக்கடி வாரேன்

 38. Bhuvanesh ..
  bathilaaga oru periya pathivaye poda vendiya kelvi ..

  but unga kelvikkaana bathil ..thaaimai namma naattai vida valarntha naadugalil athigam potrap padugirathu..ithu thaan nijamaana kasappaana unmai..
  unga pathivileye ungalukkuth therinthirukkume ..yentha alavirku thaaymayai naama ippa mathikkiromnu .. pala inthiyap pengal thaan ippa thaaimayai rombath thallip podaraanga..

  yenathu pakkaththu veettu penmani.. periya company-la chief operations manager.. avanga kuzhanthaigalai valarkkanumnu ippa velaikku muzhukkup pottu irukkaanga.. avanga thiramayai izhakka virumbaatha company avangalukku 3 varudam viruppa ooivu koduththu irukku.. niraya per ithu pola velayai tharkaaligamaai oththukki kudumbaththai paarththuk kolvathai saathaaranamaai paarpen..

  unga pathivil vanthirukkira indian lady paarunga.. velaikkaaga kudumbaththaye othukkittaanga.. suthanthira maai vaazhum pengal kudumbaththai mukkiyamaai ninaikiraanga ..uthaaranam naan ..kunthavai .. matrum palar (kunthavai ungalai koottaniyil serththuk kondu vitten …. mannippeergalaaga .. )

  munneriya naadugalil mother’s day periya celebration pola irukkum ..valentine’s day pola..! innamum athai vida athigamaave andru gifts sales aagum enbathu thaan unmai.. 🙂

  Sorry to counter-attack .. but thaali ..mothiram yellaam samuthayaththirkaana oru muththirai ..yenakku yerkanave kayaanam aayiduchchu ..nee vera aallai paarunnu solrathu .. 🙂

  naalai oru pathivu podaren bhuvanesh ..padichchittu genuine comments sollunga..

 39. பெண்களை தெய்வமா நினைக்க வேண்டாம் சக மனுஷியா நினைத்தால் போதும் .

 40. Hi Bhuvanesh,
  Reached your blog through janu’s thiraikadal. One more tamil blog…Nice 🙂
  [sorry for posting my comments in english. would like to post it in tamil but by the time I finish struggling with google Indic … i would loose my patience…]
  Blog’s name sounded really different…. was wondering about it then when i opened it found ur explanation there… my goodness it never striked me that i can relate it with ‘COPY’… 🙂
  Then this topic made me open it similar to the one found in janu’s blog. But felt very bad after reading it. Real hard to even think that such human beings live in this world… sorry I dont wanna include him in ‘Humans’… Have heard that there are even few birds and animals who take care of babies of other species. So dont wanna insult other species by including him in any of those… sorry couldnt stop thinking him as cannibal …
  “நாம் நம் நாட்டில் நடக்கும் பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை, எய்ட்ஸ் என எல்லாத்துக்கும் காரணம் கல்வி அறிவு இல்லை என்ற அறியாமையில் இருக்கிறோம்!!” – Very true… But dont know where does our education fail…
  As Janu said “நல்ல மனசுக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை ..” True janu but I feel education should enlighten people atleast basic things .
  “இவன் பணக்காரன் என்று தான் சரியா விசாரிக்காம பெண் விட்டார் சம்மதம் சொல்லியுள்ளனர்” – I feel this kind of psychic characters cannot be found out in any type of inquiry/investigation…
  The conversation among your friends made me smile.. I think its usual topic… Even we girls get this topic…. In this regard I second kunthavai “பெண்கள் வேலைக்கு போனால் நன்மையும் உண்டு அதே அளவுக்கு இழப்பும் உண்டு. அவங்க குடும்ப சூழ்நிலையை பொறுத்து தான் முடிவெடுக்க முடியும்.”
  Hmmm Bhuvanesh I have another feedback about this blog sorry if it hurts you in any way. I felt that words like ‘சனியன்’ ‘மூதேவியை’ can be avoided… felt that even without using them we can express our feelings(hatred/anger) towards that person..
  Sorry Bhuvanesh have ended up with such a big essay…. This usually happens in Ammu’s and Janu’s blog… But this is my first visit to ur blog and hope have not scared you..
  All The Best !!! Keep going…

  Have a nice day
  Krishna

 41. வாங்க கிருஷ்ணா..
  //Blog’s name sounded really different…. was wondering about it then when i opened it found ur explanation there… my goodness it never striked me that i can relate it with ‘COPY’… //

  இந்த பேர பாத்து யோசிப்பாங்கன்னு நான் யோசிச்சதே இல்ல.. நன்றி!!

  //True janu but I feel education should enlighten people atleast basic things .//

  ரொம்ப கரெக்ட்… ஒருவரை நல்வழி படுத்துவதும் கல்வி தான்!!

  // I felt that words like ‘சனியன்’ ‘மூதேவியை’ can be avoided… felt that even without using them we can express our feelings(hatred/anger) towards that person..//
  சாரீங்க.. இனிமேல் அந்த வார்த்தைகள் சொல்லல..

  //But this is my first visit to ur blog and hope have not scared you..//
  பயமா? எனக்கா?? நாங்கெல்லாம் பயத்துக்கே பயம் காட்டுவோம்!!

  //All The Best !!! Keep going…
  நன்றி நன்றி!!

 42. Vow Bhuvanesh !!! such an immediate response… Thank you 🙂
  //இந்த பேர பாத்து யோசிப்பாங்கன்னு நான் யோசிச்சதே இல்ல.. நன்றி!!//

  கடவுளே… அப்போ நான் யோசிச்சத கேட்டா நொந்து போய்டுவீங்க … பாவம் ஔவையார் இருந்திருந்தா புரை ஏறி இருக்கும் … 🙄 …. சரி சரி சிரிங்க சிரிங்க…. ஆனா ரொம்ப சிரிக்காதீங்க … [அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு]

  //ரொம்ப கரெக்ட்… ஒருவரை நல்வழி படுத்துவதும் கல்வி தான்!! //
  நல்வழி படுத்துவதும் கல்வி தான்…. அப்படினா என்ன சொல்ல வரீங்க??
  ‘ நல்வழி படுத்துவதும்’ இதுல கடைசில ‘ம்’ எதுக்கு ???
  அப்போ என்ன கல்வி கெட்ட வழி ல போறதுக்கும் தூண்டுதலா இருக்குன்னு சொல்றீங்களா? புரிஞ்சுக்கதான் தான் கேட்டேன் … 😕
  [இதை மெயில் ல பார்த்ததும் தான் உடனே பதில் எழுதனும்னு தோணிச்சு ….]

  //சாரீங்க..//
  சாரி எல்லாம் வேண்டாம் புவனேஷ் … Its your blog…

  //இனிமேல் அந்த வார்த்தைகள் சொல்லல.. // உண்மையிலயே அந்த வார்த்தைகளை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது அதான் சொன்னேன் … மிக்க நன்றி !!!

  //பயமா? எனக்கா?? நாங்கெல்லாம் பயத்துக்கே பயம் காட்டுவோம்!!//
  என்ன வடிவேலு ஸ்டைல் ஆ ?? இப்ப சிரிப்பது என்னுடைய முறை 😀 😀 😀 … இதற்கும் நன்றி !!!

  [சொற்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும்… Sorry if there is any spelling mistake do inform me about it ]

  Have a nice day 😀
  Krishna

 43. //யோசிச்சத கேட்டா நொந்து போய்டுவீங்க … பாவம் ஔவையார் இருந்திருந்தா புரை ஏறி இருக்கும் … …. சரி சரி சிரிங்க சிரிங்க…. ஆனா ரொம்ப சிரிக்காதீங்க … [அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு]//

  அப்படியா.. அப்போ மெயில்ல அனுப்புங்க.. என் பதிவா போட்டுடறேன்..

  //அப்போ என்ன கல்வி கெட்ட வழி ல போறதுக்கும் தூண்டுதலா இருக்குன்னு சொல்றீங்களா? புரிஞ்சுக்கதான் தான் கேட்டேன் … //
  அப்படி சொல்லல.. இப்போ இருக்குற கல்வி முறை மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லவில்லை..

 44. // அப்படியா.. அப்போ மெயில்ல அனுப்புங்க.. என் பதிவா போட்டுடறேன்.. //
  உங்க mail id தெரியாதே 🙄
  பதிவா போடுற அளவுக்கு ஒன்னும் இல்ல … அதான் எது சம்பந்தமா யோசிச்சேன்ன்னு சொன்னேனே … ‘ஔவையார்’….

  //இப்போ இருக்குற கல்வி முறை மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லவில்லை.. //
  புரியவில்லை ….. can you explain it??

  Hey If u dont mind r u a student?

 45. //இப்போ இருக்குற கல்வி முறை மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லவில்லை.. //
  my view regarding this is…
  கல்வி முறைய குற்றம் சொல்ல முடியாது… அப்படி இருந்திருந்த கிட்ட தட்ட அதை பெற்ற நாம் எல்லோரும் அப்படி தான் இருந்திருக்கணும் …. ஒரு சிலரை வைத்து கல்வி முறையயே தப்பு சொல்ல கூடாதுன்னு தோணுது. அது மட்டும் இல்லாம நாம தான் எந்த வித கல்வி வேணும்னு தேர்ந்தேடுக்கிறோம் அப்புறம் அதை எப்படி குற்றம் சொல்ல முடியும் ? மனுஷங்க கிட்ட தான் தப்பு இருக்கு … நீங்க சொல்றது ” கால்ல முள்ளு குத்திடுச்சுன்னு சொல்ற மாதிரி இருக்கு ” [ஆனா உண்மைலயே நாம தானே முள்ள பாகாம அதை மிதிக்கிறோம் அப்போ குத்தாம என்ன பண்ணும் ??? ]

  Awaiting your explanation
  Krishna

 46. ஆமாங்க நான் ஸ்டுடென்ட் தான்.. (ஆமா இந்த கேள்வில தப்பா நினைச்சுக்க என்ன இருக்கு?)

  நான் பதிவுலேயே சொல்லிருந்தேன், ஸ்கூல் பசங்க கொலை செய்யறாங்க, இன்னும் பல கிரிமினல் நடவடிக்கைகளில் இடுபடறாங்க.. அப்புறம் நிறைய படித்த பசங்க/ பொண்ணுங்க தற்கொலை செஞ்சுகறாங்க.. நேத்து கூட சென்னைல ஒரு பட்டதாரி இல்லத்தரசி தற்கொலை செஞ்சுகிட்டாங்க.. அவங்களுக்கு ஒம்பது மாத குழந்தை வேறு இருக்கிறது..

  படிப்பது வாழ்கையில் சாதிக்க இருக்க வேண்டும்.. மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.. அவகளுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டும்!!

  //அது மட்டும் இல்லாம நாம தான் எந்த வித கல்வி வேணும்னு தேர்ந்தேடுக்கிறோம் அப்புறம் அதை எப்படி குற்றம் சொல்ல முடியும் ? மனுஷங்க கிட்ட தான் தப்பு இருக்கு … நீங்க சொல்றது ” கால்ல முள்ளு குத்திடுச்சுன்னு சொல்ற மாதிரி இருக்கு ” [ஆனா உண்மைலயே நாம தானே முள்ள பாகாம அதை மிதிக்கிறோம் அப்போ குத்தாம என்ன பண்ணும் ??? ]//

  ரொம்ப சரி, நான் சொல்லும் பிரச்சனை நீங்க என்ன பாடம் தேர்நேடுதாலும் சொல்லிதர மாட்டாங்க.. கடவுள் புண்ணியத்தில் நாம் நல்ல சுழ்நிலையில் வளர்கிறோம்.. அதனால் நமக்கு பிரச்சனை இல்லை.. அப்படி இல்லாதவர்களுக்கு?

  இது என் கருத்து.. நான் சொல்லுவது தவறாக கூட இருக்கலாம்.. ஆனால் ஒரு கல்வி ஒரு மன தைரியத்தை கொடுக்க வேண்டாமா ?? என்பது என் கேள்வி

 47. //ஆமா இந்த கேள்வில தப்பா நினைச்சுக்க என்ன இருக்கு?//
  தப்பா நினைச்சுக்க ஒன்னும் இல்லை .. இது உங்க பர்சனல் info adhaan…
  // ஆனால் ஒரு கல்வி ஒரு மன தைரியத்தை கொடுக்க வேண்டாமா ?? என்பது என் கேள்வி//
  நல்ல கேள்வி… I dont deny it.
  But //இப்போ இருக்குற கல்வி முறை மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லவில்லை.. //
  gave me an impression that u r blaming the education than humans..[sorry if I am wrong].
  But I feel that the persons whom u have mentioned have failed to receive the education.
  Even I feel that
  Education should Inculcate Values(Ethical value and Moral values),human rights knowledge, strength and creativity of mind,and should guide them in right way by which one can stand on one’s own feet.
  We receive education through Concentration, Self-discipline, listening, understanding etc…
  This is where we humans differ…. And moreover I feel that learning is a continuous process and we learn throughout our life….
  Even I have at times felt that our education has failed some where But when I think deeply many a times I feel its we human fail but put blame on other factors…
  This is what I feel… Sorry if I have bored u too much….
  //ஒருவரை நல்வழி படுத்துவதும் கல்வி தான்!!//
  “Idhula oru ‘ம்’ pottadhukku ivvalavu prichanai varum nnu therinjirundha adha pottirukka maataenae…… ” neenga pulambinadhu yenakku kaetiruchu…. enna seiyaa pottuteengalae….
  Enna padikireenga?
  Just asked bcas I could see your immediate replies. I was free today adhaan neenga nalla maatikiteenga.. sorry again ….

 48. //Even I feel that
  Education should Inculcate Values(Ethical value and Moral values),human rights knowledge, strength and creativity of mind,and should guide them in right way by which one can stand on one’s own feet.//

  யோவ் இங்கிலிஷ்காரா, இவங்க ஏதோ சொல்லறாங்க.. நீ வந்து இத தமிழ்ல சொல்லு!!

  //We receive education through Concentration, Self-discipline, listening, understanding etc…//

  சத்தியமா இதுல ஒன்னு கூட என் கிட்ட இல்ல!!

  //Even I have at times felt that our education has failed some where But when I think deeply many a times I feel its we human fail but put blame on other factors…//

  நான் Deep திங்கிங் எல்லாம் பண்ணறது இல்ல.. நான் பழியை கல்வி மீது போடவில்லை.. மனித குலத்தை மேன்படுத்துவது தான் கல்வியின் நோக்கம்.. இப்போதுள்ள கல்வி அதை சரியாக செய்கிறதா?

  //Just asked bcas I could see your immediate replies. I was free today adhaan neenga nalla maatikiteenga.. sorry again ….//

  எனக்கு இன்னைக்கு வேல கம்மி தான்.. சோ நோ ப்ரோப்ளம்..

  //Enna padikireenga?
  நான் எங்க படிக்கிறேன்? நீங்க என்ன பண்ணறீங்க?

 49. //எனக்கு இன்னைக்கு வேல கம்மி தான்.. சோ நோ ப்ரோப்ளம்..//
  //நான் எங்க படிக்கிறேன்?//

  Hey enna confuse panreenga. 😕 😕
  Neenga thaane //ஆமாங்க நான் ஸ்டுடென்ட் தான்..// reply panneenga???
  //நீங்க என்ன பண்ணறீங்க?// Naan unga blog aa padichitirukaen…
  Neenga mudhala clear aa reply pannunga… appuram naan reply panraen…

 50. //மனித குலத்தை மேன்படுத்துவது தான் கல்வியின் நோக்கம்..//
  //நான் பழியை கல்வி மீது போடவில்லை இப்போதுள்ள கல்வி அதை சரியாக செய்கிறதா?//
  Hey நான் பழியை கல்வி மீது போடவில்லை ன்னு சொல்லிட்டு மறுபடியும் கல்வி அதை சரியாக செய்கிறதா??? அப்படின்னா ???
  hey அது செய்யுதா இது செய்யுதா இன்னு கேக்குறது பதிலா நாம அதை ஒழுங்கா படிச்சு அதன் படி நடக்கிறோமா ??? அதான் என் கேள்வி…. இதை தான் காலைல இருந்து சொல்ல ட்ரை பண்றேன் … Sorry I think I couldnt express it properly ….

 51. முழு பழியை தூக்கி போடவில்லை.. ஆனா கல்வின் நோக்கம் நிறைவேருதானு கேக்கவந்தேன்.. கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு..

  அப்புறம் நான் சொல்வதும் இதை தான் படிப்பதை ஒப்பிபதல்ல கல்வி.. நமக்கு வாழ்கையை எதிர்கொள்ள ஒரு அணுகுமுறையை சொல்லித்தரவேண்டும்.. என்பது என் கருத்து..

  இதை இப்படி இருவர் பேசி எல்லாம் திர்த்துவைக்க முடியாது..

  நீங்க சொல்வது போல் நாமே இதை உணர்ந்து பொறுப்பா நடக்கலாம்.. ஆனால் அதை உணர கொஞ்சம் கல்வி தேவை.. தெளிவான சிந்தனை தேவை.. அப்படி இல்லாதவர்களையும் அப்படி ஆக்க தானே கல்வி?

  இதுக்கு மேல முடியல அழுதுருவேன்..

 52. வேல கம்மினா.. படிக்குற வேலை கம்மி.

  // நான் எங்க படிக்கிறேன்?
  நான் எங்க படிக்கிறேன்? சும்மா ஊரை சுற்றியே பொழுதை கழிக்கிறேன்.. புத்தகத்த கையில் தொடறது கிடையாது..
  இப்போ எல்லாம் ஓகே வா ?

 53. //நாங்கெல்லாம் பயத்துக்கே பயம் காட்டுவோம்!!//
  யாரோ காலைல தான் இப்படி சொன்னாங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா புவனேஷ் ?

  இப்போ //இதுக்கு மேல முடியல அழுதுருவேன்.. //
  😀 😀 😀
  சரி பாவம் சின்ன பையன் பொழச்சு போகட்டும் ன்னு விடுறேன் ….
  //இந்த சின்ன பையன் மனசுல இருந்தத எழுதீட்டேன்..//

  hey I have put my comments for ur post in Janu’s blog…. check it out….
  [பயமா இருந்தா விட்டுங்க… ஏற்கனவே அழற நிலைமைல இருக்கீங்க அதான் 😀 …..]

 54. //வேல கம்மினா.. படிக்குற வேலை கம்மி.//
  //நான் எங்க படிக்கிறேன்? சும்மா ஊரை சுற்றியே பொழுதை கழிக்கிறேன்.. புத்தகத்த கையில் தொடறது கிடையாது..
  இப்போ எல்லாம் ஓகே வா ?//
  Now I some how feel that u r kidding….

  //நாங்கெல்லாம் பயத்துக்கே பயம் காட்டுவோம்!!//
  இதெல்லாம் சொல்லறது மட்டும் தான்
  ஆனா Id சொல்ல பயம் … என்ன படிக்றீங்க ன்னு சொல்ல பயம்…
  மொத்ததுல நீங்க சொல்ற பதில பார்த்தா உண்மைய சொல்ல பயம் 😀 😀

 55. ஹே.. சூப்பர்.. கடைசியா நான் விளையாடறேன்னு கண்டுபுடுச்சா நம்ம கிருஷ்னாக்கு எல்லோரும் ஜோர கைதட்டுங்க..

  உண்மைய சொல்லறதுல பயம் எல்லாம் இல்ல.. நான் படிக்கல.. வேலை செய்யறேன் (அல்லது அப்படி நடிக்கிறேன்!!) .. போதுங்களா ??

  அப்புறம் அழுதுருவேன்னு சொன்னது பயத்துல இல்ல.. ஆனந்த கண்ணீர்.. என் மொக்க பதிவுக்கு இவ்வளவு சீரியஸ் பதில்கள்னு ஆனந்த கண்ணீர்.. (எனக்கெல்லாம் யாரவது பயம் காட்ட முடியுமா ??)

 56. //உண்மைய சொல்லறதுல பயம் எல்லாம் இல்ல.. நான் படிக்கல.. வேலை செய்யறேன் (அல்லது அப்படி நடிக்கிறேன்!!) ..//
  இது உண்மை எல்லோரும் செய்றது …. நன்றி 🙂

  //அப்புறம் அழுதுருவேன்னு சொன்னது பயத்துல இல்ல.. ஆனந்த கண்ணீர்.. என் மொக்க பதிவுக்கு இவ்வளவு சீரியஸ் பதில்கள்னு ஆனந்த கண்ணீர்.. (எனக்கெல்லாம் யாரவது பயம் காட்ட முடியுமா ??) //

  உங்க பதிவு எப்படின்னு நீங்க சொன்ன சரி(No comments ) . அதுல சொல்லப்பட்ட விஷயம் சீரியஸ் ஆனா விஷயமா இருந்தது …
  ஆனா For your kind info சீரியஸ் பதில்கள்
  உங்களுடைய இந்த –
  //ஒருவரை நல்வழி படுத்துவதும் கல்வி தான்!!// – கமென்ட்க்கு வந்தது…
  போதுங்களா ??

 57. Hi Bhuvanesh ..
  😀

  Then Bhuvanesh , I am here with another request..No no ..Don’t get tensed ..it’s certainly not what you think.

  On the matter of fact, I have created a separate blog for your post as i did for sri ram ..But I am not able to activate or open yours .. I don’t know why..Also some say they are not able to post comments on my blog too.. Do you know why ? It always holds comments of some ppl (including krishna’s LOL ) 😀 ..

  If you know what I have to do , do inform me .or else i will ask wordpress abt it.. My sincere apologies for not able to activate ur post.. Hope u won’t mistake me.. !

  Hi krishna ..I truly enjoyed ur comment …Keep going.

 58. // It always holds comments of some ppl (including krishna’s LOL )//
  Hey Janu idhellaam aniyaayam paa…:-( ippo I am able to post my comments (essays)… unga blog la paakaliyaaa?

  // Hi krishna ..I truly enjoyed ur comment //
  என்ன ஜானு இது வஞ்ச புகழ்ச்சி அணி ஆ??? வஞ்ச புகழ்ச்சி அணி ஆ???நான் ஏமாந்து போனத நீங்க என்ஜாய் பண்ணீங்களா ?? so sad … 😦

 59. sorry inga yum CAP error … ‘வஞ்ச புகழ்ச்சி அணி ஆ???” has come twice … sorry …

 60. வாங்க ஜானு அக்கா..I am not sure why that problem arises for you!

 61. //இது உண்மை எல்லோரும் செய்றது …. நன்றி//
  ஹி ஹி.. (சரி நீங்க உங்கள பத்தி சொல்லவே இல்ல!!)

  //உங்க பதிவு எப்படின்னு நீங்க சொன்ன சரி(No comments ) . அதுல சொல்லப்பட்ட விஷயம் சீரியஸ் ஆனா விஷயமா இருந்தது …
  ஆனா For your kind info சீரியஸ் பதில்கள்
  உங்களுடைய இந்த –
  //ஒருவரை நல்வழி படுத்துவதும் கல்வி தான்!!// – கமென்ட்க்கு வந்தது…
  போதுங்களா ??//

  அச்சச்சோ, இது எங்க கோவ படறீங்க!! நான் சும்மா சொன்னேன்!

 62. //அச்சச்சோ, இது எங்க கோவ படறீங்க!! நான் சும்மா சொன்னேன்!//
  அச்சச்சோ இதுல எதுங்க கோவமா சொன்ன மாதிரி இருக்கு ❓ புரியலீங்களே …. 😮
  நான் casual ஆ தான் சொன்னேன்…
  FYKI – Casual aa use pandra terminology thaanga…

  //இது உண்மை எல்லோரும் செய்றது …. நன்றி//
  //ஹி ஹி.. (சரி நீங்க உங்கள பத்தி சொல்லவே இல்ல!!)//
  இதுக்கு மேல என்னை பற்றி என்ன சொல்ல என்றே எனக்கு தெரியவில்லை! சாரி மனுச்சுகுங்க!! சத்தியமாக சொல்ல ஒன்றும் இல்லை! 🙄

  (எங்கயோ பார்த்த மாதிரி இருக்குக்கா 😕 ‘எனக்கே வா’ ன்னு நீங்க சொல்றது என்னக்கு கேட்க்கவில்லை 🙄 )

 63. //இதுக்கு மேல என்னை பற்றி என்ன சொல்ல என்றே எனக்கு தெரியவில்லை! சாரி மனுச்சுகுங்க!! சத்தியமாக சொல்ல ஒன்றும் இல்லை! //

  ஹி ஹி.. ஒன்னும் இல்லைனா சொல்ல வேண்டாம்..

  //(எங்கயோ பார்த்த மாதிரி இருக்குக்கா ‘எனக்கே வா’ ன்னு நீங்க சொல்றது என்னக்கு கேட்க்கவில்லை) //

  இல்ல நான் உங்க கிட்ட இருந்து இந்த மாதிரி பதிலைத்தான் எதிர்பார்தேன்!! 🙂

 64. Mygoodness replied immediately… hmmm free aa ???

  //இல்ல நான் உங்க கிட்ட இருந்து இந்த மாதிரி பதிலைத்தான் எதிர்பார்தேன்!! //
  hmm eppadi ??? 😯

  Anyways … Have a nice day 🙂

 65. //Mygoodness replied immediately… hmmm free aa ???

  ஆமாங்க.. நீங்க எப்படி ?

  //Anyways … Have a nice
  Dhanks and same to you 🙂

 66. வேலையா ? சே சே ….
  Hey nothing of that sort…. not very hectic… hmm ok kind of.. can have one or two breaks … 🙂
  eppadinnu sollavae illa yae??? fluke aa ??
  free nnu solreenga… CAP kooda paathi thaan panna mudiyudhaaa? avvalavu free aa??

 67. That incident made me sick…. Education system has failed completely..I wonder how sickos like him survive in their career..Dont they have friends, colleague who can suspect his real character and caution him or change his attitude? If he is so intolerant, how can he be a good ” manager”..Is something seriously wrong in “recruitment”?

  Also, i felt sad by some of the comments which was talking of his salary instead of the gravity of his crime!! why people are always thinking of $$$?

 68. வாங்க மேடி.. உங்க கருத்துக்கு நன்றி!!

  //If he is so intolerant, how can he be a good ” manager”..

  இதே கேள்வி எனக்கும் எழுந்தது!!

  //Also, i felt sad by some of the comments which was talking of his salary instead of the gravity of his crime!! why people are always thinking of $$$?

  அது அப்படி இல்ல மேடி.. நான் தவறான தகவல் தர கூடாதுன்னு ஸ்ரீராம் சுட்டி காட்டினார்.. மத்தபடி காசு பத்தி எல்லாம் பேசலை..

 69. என் சார்பா நான் இல்லாத பொழுது பதில் அளித்த என் அன்பு நண்பன் மச்சி புவனேஷ் அவர்களுக்கு எனது நன்றி…

 70. //என் சார்பா நான் இல்லாத பொழுது பதில் அளித்த என் அன்பு நண்பன் மச்சி புவனேஷ் அவர்களுக்கு எனது நன்றி…//

  நண்பா, நமக்குள்ள எதுக்கு இதெல்லாம் ?

 71. amazing stuff thanx 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: