--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 17, 2009

அஜித் ரசிகர்கள் மனிக்கவும்!! (விஜய் பத்தி எழுத எதுவும் இல்லை!!)


நம்ம மச்சி ஸ்ரீராம் ஒரு பதிவு போட்டார்!! படிக்கும்போது கடைசியா ஒரு பேரு சாரி ரெண்டு பேரு வந்துச்சு!!

கோப்பெரும் சோழன், பிசிராந்தையார்..

பிசிராந்தையார், கோப்பெரும் சோழன்..

 கோப்பெரும் சோழன், பிசிராந்தையார்..

இந்த பேர நாம எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே? எங்கனு தலைய சொருஞ்சு யோசிச்சா அஜித் ரசிகர்கள் சண்டைக்குவருவாங்கனு கன்னத்துல கை வெச்சு யோசிச்சேன். கன்னத்துல வலி வந்ததுதான் மிச்சம்.. இருந்தாலும் நான் விடல.. வலிக்க வலிக்க யோசிச்சேன்.. லைட்டா ஞாபகம் வரா மாதிரி இருக்கு..

இதே மாதிரி எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.. ஆனா இப்போ அவன் கூட டச் இல்ல. சரி ஆனா இப்போ எதுக்கு அவன் ஞாபகம் வரான்?? இல்ல அவன் ஞாபகம் வரல, எங்கள் நட்புக்கு இலக்கணமான அந்த சம்பவம் தான் ஞாபகம் வருது!!

தமிழ் எக்ஸாம்! (நாங்கெல்லாம் மெட்ரிக்.. தமிழ் பரீட்சை எல்லாம் இல்லை! ஒன்லி எக்ஸாம்!)!! தமிழ்ல கோடிட்ட இடத்தை நிற்பவும் பகுதியில ஒரு கேள்வி:

 கோப்பெரும் சோழனின் நண்பர் யார் _____________ (சரியா ஞாபகம் இல்ல.. இந்த அர்த்தத்துல ஏதோ இருந்துது!!)

 இப்போ தான் நம்ம நண்பன் என்ட்ரி, என்னை கூப்பிட்டு இந்த கேள்வி நம்பர்(!) சொல்லி பதில் கேட்டான்!!

 என்கிட்ட கேட்கரான்னா அவன் எத்தன பெரிய அறிவாளின்னு யூகிச்சுகொங்க!! யூகிசாச்சா? யூகிச்சிருக்க மாட்டீங்க.. சொல்லற பேச்ச என்னிக்கு கேட்டுருக்கீங்க?? சரி சரி, அவன் அத்தனை அறிவாளியாய் இருப்பதால் பிசிராந்தையாரை கேவலபடுத்தாமல் அவனை கோ.சோ என்று வைத்து கொள்வோம்!! அதுவும் இல்லாமல் நான் வேறு எழுது பணியில் ஈடுபட்டு இருப்பதால் நானே பிசிராந்தையார் கேரக்டர் ஆகா இருக்கிறேன்.. (படிக்கறீங்க இல்ல.. அனுபவியுங்க..)

மீசை முளைக்கும் வயது என்பதால் ஒரு கெத்து காட்ட ஒரு சின்ன பேப்பரில் விடை எழுதி அவனுக்கு வீசிவிட்டேன்!!

சில நிமிடங்களுக்கு பிறகு:

 எங்கள் கணக்கு மாஸ்டர் (கணக்கு பண்ண சொல்லி தருபவர்!! ) என் தோளை தட்டி கூப்டார்.. இது என்னது ??

எது சார்?

இந்த பேபர்?

நான் அப்படியே ஷாக் ஆகி பாத்தா, அவனிடம் வீசிய பேபர் இப்போ என் பெஞ்ச் மேல இருக்கு!!

 இது ஏதோ பதில், என்ன கேள்விக்கு ??

சார் இந்த கேள்விக்கு பதில் சார் என்று அந்த கோடிட்ட இடத்தை காட்டினேன்!!

யாருக்கு எழுதி கொடுத்த?? (என் கன்றாவி கையெழுத்தை வைத்து என் எழுத்துதானா என்று கன்பார்ம் செய்து கொண்டார்!)

யாருக்கும் எழுதுல சார்.. வீட்டுல போய் பதில் சரியானு செக் பண்ண எழுதி வெச்சேன்!!

பச் (the Left)

 ஏன் டா, நேத்திக்கு ராத்திரி படிச்சு இங்க வந்து எழுத முடியும், இங்க இருந்து வீட்டுக்கு போகறதுக்குள்ள மறந்துருமா??

பச் (The Right)

 

கேட்கும் போது பதினஞ்சு தாட்டி கூப்ட்டவன், திருப்பி போடற விஷயத்தை ஒரு தாட்டி கூட சொல்லலை.. இது கூட மனிக்கலாம், ஆனா கடைசி வரைக்கும் ஒன்னுமே தெரியாத மாதிரி பரீட்சை எழுதினான்.. என்ன பாத்து ஒரு சாரி கூட கேட்கல..

 இப்போ தான் தெரியுது கன்னத்துல கை வெச்சு யோசிச்ச உடனே  ஏன் இது ஞாபகம் வந்துச்சுன்னு!! எல்லா வாத்தியும் படத்துல காட்டுற  மாதிரி இருப்பாங்கன்னு நான் நினச்சது எவ்வளவு  பெரிய தப்பு? 

இனிமேல் நோ கன்னம், தலைய சொருஞ்சு தான் யோசிக்க போறேன்.. அஜித் ரசிகர்கள் மனிச்சுருங்க..

 

நோட் திஸ் பாயிண்ட் யூர் ஹோனர்:

 நானும் தமிழ்மணத்துல பாக்றேன், முதல் மூணு சூடான இடுகையும் நம்ம டாக்டர் பத்தினது.. அதுக்காக அவர பத்தி எழுதமுடியுமா?? அதான் அவர பத்தி எழுதல!!

தலைப்பு சும்மா ஜாலிக்காக.. மத்தபடி நான் No Man’s Tea Shop ல டீ ஆத்தரதால, ஹிட் வாங்க எல்லாம் இல்ல!! நம்புங்க!!

 

நான் போட்ட மொக்கைக்கு பரிகாரமா ஒரு நல்ல கதையை பரிந்துரைக்கிறேன்..
நம்ம சரவணா ஒரு fiction கதை எழுதறார் படிச்சு பாருங்க!


Responses

 1. //அதுவும் இல்லாமல் நான் வேறு எழுது பணியில் ஈடுபட்டு இருப்பதால் நானே பிசிராந்தையார் கேரக்டர் ஆகா இருக்கிறேன்.//

  நல்ல வேலை இத கேக்க பிசிராந்தையார் இல்ல… இருந்திருந்தா இன்னொரு முறை வடகிருந்து இருப்பார்…

 2. //கோப்பெரும் சோழனின் நண்பர் யார்_____________?//

  இதே மாதிரி ஒரு கேள்விக்கு கோப்பெரும் தேவின்னு எழுதி அடி வாங்குனது ஏனோ திடீர்னு இப்போ ஞாபகம் வருது 🙂

 3. //ஏன் டா, நேத்திக்கு ராத்திரி படிச்சு இங்க வந்து எழுத முடியும், இங்க இருந்து வீட்டுக்கு போகறதுக்குள்ள மறந்துருமா??//

  அப்பாவி வாத்தியாரா இருக்காரே… அது நேத்து ராத்திரி படிச்சதில்ல, 5 நிமிசத்துக்கு முன்னாடி பக்கத்துல இருந்தவன் பேப்பர்ல படிச்சதுன்னு தெரியலியே அவருக்கு

 4. //யாருக்கு எழுதி கொடுத்த??//

  ஆமா பெரிய கள்ளிகாட்டு இதிகாசம் அது… யாருக்காக எழுதினது அப்படின்னு dedicated to வேற போட சொல்றாரு

 5. உன் தலைப்பு மாதிரியே இந்த பதிவைப் பத்தி ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல மச்சி…

 6. மீசை முளைக்கும் வயது என்பதால் ஒரு கெத்து காட்ட ஒரு சின்ன பேப்பரில் விடை எழுதி அவனுக்கு வீசிவிட்டேன்!!//

  அப்பவே அப்படினா இப்ப நீ என்னென்ன வேலை செய்வ…

 7. //நல்ல வேலை இத கேக்க பிசிராந்தையார் இல்ல… இருந்திருந்தா இன்னொரு முறை வடகிருந்து இருப்பார்…//
  மச்சி சொல்ல மறந்துட்டேன், நான் இந்த சம்பத்துக்கு அப்புறம் ஒரு நாள் கிளாசுக்கு வெளிய இருந்தேன் (கிளாஸ் வடக்கு வாசல்)..

 8. /அப்பாவி வாத்தியாரா இருக்காரே… அது நேத்து ராத்திரி படிச்சதில்ல, 5 நிமிசத்துக்கு முன்னாடி பக்கத்துல இருந்தவன் பேப்பர்ல படிச்சதுன்னு தெரியலியே அவருக்கு//

  அவுரு அப்பாவி வாத்தியார் இல்ல, அடப்பாவி வாத்தியார்.. அடுச்ச அடி இன்னும் வலிக்குது!!

 9. /உன் தலைப்பு மாதிரியே இந்த பதிவைப் பத்தி ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல மச்சி…//

  எப்ப மச்சி இப்படி சொல்லிட்ட? நீ எதாவது சொல்லீட்டு தான் போகணும்!!

  //அப்பவே அப்படினா இப்ப நீ என்னென்ன வேலை செய்வ…//

  ஒரு அப்பாவி குழந்தையை பாத்து கேட்க வேண்டிய கேள்வியா இது?

 10. நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் புவனேஷ். ரசித்தேன்.
  அதுவும் வீட்டுல போய் சரி பார்க்க எழுதி வைத்திருக்கிறேன் என்ற பதில்…. தம்பி நீங்க எங்கயோ இருக்கவேண்டியவங்க.

  ரெம்ப அப்பாவியா இந்த தலைப்ப வச்சிருக்கீங்கன்னு நாங்க நம்பிட்டோம்.

 11. வாங்க அக்கா, வாங்க..

  //நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் புவனேஷ். ரசித்தேன்.//

  அப்படியா அக்கா?? எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான்!!

  //தம்பி நீங்க எங்கயோ இருக்கவேண்டியவங்க//

  நான் எங்க போவேன்? எனக்கு மொக்க போடறத தவிர வேற என்ன தெரியும்?

  //ரெம்ப அப்பாவியா இந்த தலைப்ப வச்சிருக்கீங்கன்னு நாங்க நம்பிட்டோம்.//
  ஆமா அக்கா.. நீங்க நம்புவீங்கன்னு நானும் நம்புனேன்..

 12. AAHAA IPADIYELLAM, COPY ADIKIRATHUKKU PUTHU VILAKKAM INNAIKKU THAANPAA THERINJUKITTEN.

 13. //AAHAA IPADIYELLAM, COPY ADIKIRATHUKKU PUTHU VILAKKAM INNAIKKU THAANPAA THERINJUKITTEN

  காப்பி அடிக்க விளக்கமா ?? நான் எங்க கொடுத்தேன்?? என்ன கொடும இது?? இது நான் அடி வாங்குனதுக்கான விளக்கம்!!

 14. ஹாய் சரவணன் உங்க கதை படிச்சே ரொம்ப நல்லா இருந்தது.அந்த போட்டோ மலர் செண்டு சூப்பர் ஐடியா.

  • சரவணா சார்பில் நன்றி சித்ரா, அங்கேயே சொன்னா அவன் இன்னும் ரொம்ப சந்தோசப்படுவான்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: