--புவனேஷ்-- எழுதியவை | ஏப்ரல் 2, 2009

அயன்!!


தூங்கி எழுந்து வந்த ரமேஷ் துண்டுடன் நிற்கும் விவேக்கை பார்த்து ஏண்டா காலங்காத்தால இப்படி மும்தாஜ் மாதிரி நிக்குற?

நம்ம ரூம் சாஜகான் என்னை இப்படி நிக்க வெச்சுட்டான்”

“ரூம் சாஜகான்? யாரு நம்ம பிரகாஷா?”

“என்ன நம்ம பிரகாஷ்? நீ அவன் கூட்டாளியா? ஊருக்குள்ள இப்படி சொன்ன நீ செத்த!!”

“ஏன் டா?”

“இன்னைக்கு சார் ப்ரொபோஸ் பண்ண போறார்… நான் ரெண்டு நாள் என் அத்தை வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்!!”

“ஹ ஹ ஹ .. இன்றுடன் ஒழிந்தான் துரோகி..”                                                                                                                                                                             “நண்பா.. பிரகாஷு.. இந்த முடிவ நீ மாத்திகாத.. நீ போய்டா இங்க எல்லாத்தையும் நான் பார்த்துகறேன்.. அப்புறம் போன வருஷம் செத்த  எங்க தாத்தாவ கேட்டதா சொல்லு.. என்று குளித்துகொண்டிருபவனுக்கு கேட்கும் படி கத்தினான்!!”

 

“போங்க டா இவனுகளா.. சாய்ந்தரம் அவள நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வந்து “இனி இவனுக தான் உன் அண்ணன்கள்” னு உங்கள அறிமுக  படுத்துனா என்ன தருவீங்க ? “

 

“கவலையே படாத வீங்க வீங்க தருவோம்..”

 

“இது நடந்தா நான் தீ குளிக்கிறேன்.. ஆனா எந்த கட்சியும் என்ன சொந்தம் கொண்டாடாம பாத்துகோங்க டா ??”

“தம்பி அரசியல் எல்லாம் வேண்டாம்.. நீ ஏன் தூண்டோட நிக்கற ?”

டேய் அவன் குளுசுட்டு வந்துடான் டா.. சரி குளிக்கலாம்னு போனேன்.. அதுக்குள்ள மறுபடியும் பூந்துட்டான்..

 காதல்னா சும்மாவா? இன்னைக்கு நீ குளிக்கலைன்னு யார் அழுதா? கிளம்பு கிளம்பு.. இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்..

அரை மணி நேரமா? இன்னும் அஞ்சு நிமுசத்துல வரல, வெளி தாழ்பாள் போட்டுட்டு வெளிய போய்டுவேன்..

வந்தாச்சு டா.. காதலிக்க போகும் போது இம்ச பண்ணறது உங்கள விட்டா வேற ஆள் இல்ல டா.. என் காதலுக்கு நீங்க தான் வில்லன்..

“ஹீரோ காதலுக்கு தான் வில்லன்.. காமெடியன் காதலுக்கு ஏது  டா வில்லன்?” என்று சொல்லிய வாரே குளிக்க சென்றான் விவேக்!!

நான் தான் வில்லன்.. பொண்ணோட அண்ணன்னு சொல்லி நீ என்னை அறிமுகம் செய்..
அடுத்த நிமுசம் உன்ன அடுச்சு கொல்லறேன்.. ஆண்டி-கிளைமாக்ஸ் .. நல்லா இருக்கா ?

 

ஆண்டி கிளைமாக்ஸ், சித்தப்பா கிளைமாக்ஸ் னு மொக்க போடாம இந்த டிரஸ் நல்லா இருக்கானு பாத்து சொல்லு..

 சரி நான் டீ சாப்பட போறேன்.. வரும் போது கிளம்பி போயிரு..

பதில் சொல்லு டா..

Bye Bye டா..

ரமேஷ் திரும்பி வரும்போது, வேற சட்டையை தேய்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்.. பின்னாடி குளித்து முடித்து ஈர துண்டுடன் கடுகடுவென நின்று கொண்டிருந்தான் விவேக்..

  “டேய் நீ இன்னும் போகலையா?”

“(பதில் சொல்லாமல்…) இந்த சட்ட நல்லா இருக்கா?”

நீ முதல் போட்ட சட்டையே நல்லா இருந்துது.. அதை ஏன் மாத்தின?”

டேய் நீ வேற சும்மா இரு.. திருப்பியும் மொதல இருந்து ஆரம்பிக்காத.. இது எட்டாவது சட்டை..

ஹி ஹி ஹி ..

சிரிக்காத.. ஒரு சட்டையையும் ஒரு பேன்டையும் வேற பொசிக்கிட்டான்..

விடு காதலுக்கு ஒரு சட்ட தியாகம் செய்யட்டும்..

அவன் செய்யட்டும்.. சட்ட என்னுது.. பேன்ட் உன்னுது..

டேய்.. நீ அடங்கவே மாட்டியா ?

டேய் நண்பனுக்காக ஒரு டிரஸ் தியாகம் செய்ய மாட்டீங்களா?

நண்பனுக்காக செய்வோம் உனக்காக செய்ய மாடோம்

டேய் உன் காதலும் இப்படித்தான் பொசுங்கும்.. இதைத்தான் இந்த சம்பவம் காட்டுது..

நண்பா .. என்னோட டிரஸ் ஒன்னுமே பொசுங்களையே.. எனக்கு இது நல்ல சகுனம்.. உங்களுக்கு தான் கெட்ட சகுனம்..

இந்த வியாக்கானம் எல்லாம் பேசு.. ஏதோ உண்மையான காதல்னா கூட பரவால.. நீ இப்படி ப்ரொபோஸ் பண்ண போறது இது பதினெட்டாவது தடவை..

ஏன் பதினெட்டாவது தடவை ப்ரொபோஸ் செஞ்சா உண்மை காதல் இல்லையா ?

பாரு பாரு.. ஒரே பொண்ணுக்கு பதினெட்டு தடவை ப்ரொபோஸ் செஞ்சா மாதிரி பேசறான்..

டேய்.. இது முன்னாடி மாதிரி இல்ல டா.. அப்போ எதோ நான் சின்ன பையன்.. இப்போ அப்படி இல்ல டா..

ஏன் டா போன வாரம் தான் கடைசியா ப்ரொபோஸ் செஞ்சா.. அதுக்குள்ள வளந்துட்டியா??

 மச்சி கடைசியா ப்ரொபோஸ் செஞ்சு ஒரு வாரம் ஆச்சா டா?? பாரேன் நாட்கள் எவ்வளவு சீக்கிரமா போகுதுன்னு..

பாரேன் ஒரு வாரம் ஆனதுக்கு பீல் பண்ணறான்..
 
டேய் உன்னோட பனிரெண்டாவது காதலியோட அண்ணன் ரவி இவளோட கிளாஸ் மேட்.. பாத்துக்கோ..
 
 
டேய் நீ ஏன் டா அவன் காதலிகளோட டீடைல்ஸ் collect பண்ணற ?
 
 
டேய் நீ வேற,  இன்னொரு தாட்டி இப்படி சொல்லாத.. அப்புறம் நம்ம சாஜகான் அவன் அழகான பொண்ணுங்கள தான் லவ் பண்ணறான்னு நினைப்பு வந்துரும். சீன் தாங்க முடியாது!!
 
 
டேய் காதல் அழக பாத்து வரது இல்ல டா!! மனச பாத்து வரது!!
 
மண்ணாங்கட்டி, பஸ் ஸ்டாப் ல இருந்து லுக் விட்டதுல எப்படி டா மனசு தெருஞ்சுது?
 
“சரி உங்க கிட்ட பேசுனா இந்த லவ்வும்  அவ்வளவு தான்!! நான் கிளம்பறேன்.. இவுனிங் பாக்கலாம்..”
 
நீ உயிரோடா இருந்தா பாக்கலாம் டா.. அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்..
 
“நிஜமாவா சொல்லற ?” ஷூ போட்டு கொண்டிருந்த விவேக் ஷாக் ஆகி அருகில் வந்து கேட்டான்..
 
ம்ம்
 
இத்தன நேரம் சொல்லவே இல்ல ?
 
இவரு பெரிய பப்ளிக் பரோஸ் பிராசிகியூட்டர்.. குறுக்கு விசாரணை செய்யறார்..
 
நிஜம்டா.. நம்பு..
 
சரி டா.. நான் ப்ரொபோஸ் பண்ணறேன்.. ஒகே ஆச்சுனா இந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.. இல்லைனா அந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க..

 
மாமியார் வீடு எல்லாம் வேண்டாம் டா.. டைரெக்ட்டா மார்ச்சுவரி வரட்டா?
 
ஏன் டா.. உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா??
 

நல்ல காதலுக்கு தான் டா நல்ல வார்த்த, நொள்ள காதலுக்கு இது போதும் போ!!
 
(காரி துப்பி பிரகாஷ் நெற்றியில் திலகமிடவது போல் செய்கை செய்து சொன்னான் ரமேஷ்!!)
 
 
ஆல் த பெஸ்ட் டா!!

 

 • ***

 
போய் ஒரு ரெண்டு மணி நேரத்தில் திரும்பி வாந்தான் பிரகாஷ்.. முகத்தில் புன்னகையுடன்..

அவன் இவ்வளவு இளித்து நண்பர்கள் பாத்ததே இல்லை.. என்ன நடந்தது என்று எவ்வளவு கேட்டும் சொல்லவே இல்லை.. “டேய் நீயா இவ்வளவு அமைதியாய் இருக்க? ” என்று கேட்டும் கூட பதில் சொல்லவே இல்ல.. மெலிதாய் ஒரு புன்னைகை மட்டும் உதிர்த்தான்.. அந்த புன்னகை அவன் சந்தோசத்தை நண்பர்களுக்கு உணர்த்தியது.. காதல் மௌனமும் கத்துக்கொடுக்கும் போல ..
 
 
 
 
 
(எங்க போறீங்க, கத முடியல முழுசா படியுங்க!!)
 
 
ஏன் டா, காதல் செஞ்சா இப்படி ஆஃப் ஆகிடுவாங்களா ?
 
நமக்கு என்ன அத பத்தி தெரியும்? வா போய் ஒரு Half அடிக்கலாம்!!
 
 
அடுத்த நாள், ஆள் நடமாடும் சத்தம் கேட்டு எழுந்த  விவேக் பிரகாஷ்- ஐ பார்த்து அதிர்ந்தான்.. அதிர்ச்சியுடன் ரமேஷை எழுப்பினான்.. ரமேஷும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்..
 
 
காலை ஆறு மணிக்கு பிரகாஷ் குளித்துவிட்டு, நீட்டாக அயன் செய்த டிரஸ் போட்டுகொண்டு.. பல் தேய்த்துகொண்டிருந்தான்!! பிரகாஷ் அதிர்ந்ததுக்கு கூடுதல் காரணம் அவன் புது சட்டை பொசுங்கி கிடந்தது..
 
முதலில் ரமேஷ் சுதாரித்து, என்ன டா பண்ணற ?
 
இல்ல டா, நேத்திக்கு நான் போகும்போது வித்யாவை பார்த்தேன் டா, ஒரு பிச்சகாரனுக்கு காசு போட்டா..

 அதனால இன்னிக்கு நீ போய் பிச்சை எடுக்க போறியா?
 
ஏண்டா இப்படி வினோதமா ஏதேதோ செய்யரனு கேட்டா, எதேதோ சொல்லற ?
 
முழுசா கேளுங்கடா, பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்குற பிள்ளையார் கோயில் வாசல் பிச்சகாரங்களுக்கு பிட்சை போட்டு, உள்ளே போனா.. நானும் பின்னாடியே போன்னேன்.. அவ சாமிய சுத்திவரதுகுள்ள குருக்கள் உள்ளே போய்ட்டார்.. அவ வந்து கூப்டும் அவரு வரல..
அவ கண்ண
மூடி சாமி கும்பிடும்போது பக்கத்துல போய், அவளுக்கு குங்குமம் வெச்சேன்..அவ கண்ண தொறந்து என்ன பாத்தா .. நான் அவள பாத்தேன்.. ரெண்டு பேர் மூஞ்சியும் கிட்டத்துல.. நான் அவ கண்ண பாத்தேன்.. அவ ஏன் கண்ண பாத்தா..
 
நான் மெதுவா ஐ லவ் யு னு சொன்னேன்..

அப்போ தான் டா அவ மனசுல இருக்கறத எந்த தயக்கமும் இல்லாம சொன்னா..
 
என்னடா சொன்னா ??
 
ஓகே சொல்லிடாளா ??
 
கோயிலுக்கு வரதும் தப்பு இல்ல, ப்ரொபோஸ் செய்யறதும் தப்பு இல்ல.. ஆனா இது எல்லாம் பல்ல தேய்ச்சுட்டு வந்து பண்ணுங்கன்னு சொன்னா டா.. பாரேன் நேத்திக்கு நிறைய  தடவ குளுசேன், ஆனா பல்லு வெளக்க மறந்துட்டேன்.. Bad Luck டா..
நீங்களும் ப்ரொபோஸ் செய்யறதுக்கு முன்னாடி பல்லு தேய்ச்சுட்டு போங்க டா!!


Responses

 1. //நீ இப்படி ப்ரொபோஸ் பண்ண போறது இது பதினெட்டாவது தடவை…//

  மச்சி இவன் சாஜகான் இல்ல… கஜினி

 2. //ஒரு சட்டையையும் ஒரு பேன்டையும் வேற பொசிக்கிட்டான்..

  விடு காதலுக்கு ஒரு சட்ட தியாகம் செய்யட்டும்..

  அவன் செய்யட்டும்.. சட்ட என்னுது.. பேன்ட் உன்னுது..//

  மச்சி இது தான் அல்டிமேட் ட்விஸ்ட்…

 3. //கோயிலுக்கு வரதும் தப்பு இல்ல, ப்ரொபோஸ் செய்யறதும் தப்பு இல்ல.. ஆனா இது எல்லாம் பல்ல தேய்ச்சுட்டு வந்து பண்ணுங்கன்னு சொன்னா டா..//

  கிளைமாக்ஸ் சூப்பர் மச்சி…

 4. மச்சி டயலாக் எல்லாம் சூப்பர் டா… எப்பவும் பேசற மாதிரியே… நல்லா counter பண்ணி இருக்க…
  keep going da… கலக்கற…

 5. //மச்சி டயலாக் எல்லாம் சூப்பர் டா… எப்பவும் பேசற மாதிரியே… நல்லா counter பண்ணி இருக்க…
  keep going da… கலக்கற…//

  நன்றி மச்சி… ஆனா இது எல்லாம் நெசமாத்தான் சொல்லறியா?? என்னால நம்பவே முடியல!!

 6. Excellent write up. Enjoyed the max. Keep it up.

 7. டயலாக் எல்லாம் ரெம்ப நல்லாயிருந்துச்சு புவனேஷ். ரசித்தேன். இப்படி அடிக்கடி கதை எழுதுங்க.

 8. chance eh இல்ல டா, மாப்ள… சும்மா பூந்து விளையடிட்ட… கலக்கல்…

 9. சரி… ஏன் அயன் ன்னு தலைப்பு?

 10. வாங்க முத்து.. உங்க பாராட்டு என்னை ரொம்ப ஊக்குவிக்கிறது.. நன்றி!!
  அடிகடி வாங்க..

 11. //டயலாக் எல்லாம் ரெம்ப நல்லாயிருந்துச்சு புவனேஷ்.//

  சங்கமே டயலாக்ல தான் ஓடுது!!

  //ரசித்தேன். இப்படி அடிக்கடி கதை எழுதுங்க.//
  ரொம்ப நன்றி அக்கா.. நீங்க எல்லாம் பாராட்டும் போதுதான் இன்னும் எழுத வேண்டும்னு ஒரு எண்ணமே வருது..(ஆட்டோ அனுப்பரவங்க ப்ளீஸ் காண்டக்ட் குந்தவை அக்கா!!) நன்றி!!

 12. //chance eh இல்ல டா, மாப்ள… சும்மா பூந்து விளையடிட்ட… கலக்கல்…//

  ரொம்ப நன்றி மச்சி !!

  //சரி… ஏன் அயன் ன்னு தலைப்பு?//

  தெரியலையா.. அப்போ கண்டுபிடிக்கரவங்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசு!! பாக்கலாம் யார் இங்கே நுண் வாசகர்னு!!

 13. oh.. ok ok… iron பண்ணி பண்ணி சட்டை போடுரதுனாலையா… குட் குட் …!!!

 14. //தெரியலையா.. அப்போ கண்டுபிடிக்கரவங்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசு!! பாக்கலாம் யார் இங்கே நுண் வாசகர்னு!!//

  கதை starting லையே மும்தாஜ், ஷாஜஹான் அப்படின்னு ஆரம்பிச்சு movies side divert பண்ணிட்டு… இப்ப பேச்ச பாரு பேச்ச…

 15. நீ எங்கோயோ போய் கிட்டு இருக்க …
  பரவாயில்லை .. புவனேஷ் என் friend ன்னு வெளியில சொல்லிக்கலாம் …
  உன்னால எப்படி இப்படி எழுத முடியுதுன்னு கேட்க மாட்டேன் .. என்னா ,
  உன்னால மட்டும்தான் இப்படி எழுத முடியும் ..

 16. // ஆட்டோ அனுப்பரவங்க ப்ளீஸ் காண்டக்ட் குந்தவை அக்கா!! //
  இன்னும் கொஞ்ச கமெண்ட்ஸ் க்கு அப்புறம் அவங்களே அனுப்பினாலும் அனுப்புவாங்க…

 17. // இன்னும் கொஞ்சம் கமெண்ட்ஸ் க்கப்புறம் அவங்களே ஆட்டோ அனுப்புவாங்க.

  யாருப்பா அது… பக்கத்து வீட்டுல வந்து என்னை பத்தி பேசுறது.. எதுனாலும் எங்க வீட்டுக்கு வந்து பேசுங்க ….. ம்…. இல்லன்னா …….
  (இவ்வளவு மிரட்டுறேன் கொஞ்சமாச்சும் பயப்படுங்கப்பா)

 18. // யாருப்பா அது… பக்கத்து வீட்டுல வந்து என்னை பத்தி பேசுறது.. //
  அயோ… யாரு? நம்ம குந்தவை அக்காவா…? ச்ச… பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு… நல்ல இருக்கீங்களா க்கா..? பக்கத்து வீட்லதான் இருக்கீங்களா… நல்லதா போச்சு… வந்து காபி சாப்பிட்டு போறேன்… அங்கியே இருங்க…
  [கிசுகிசுப்பு: “மச்சி புவனேஷ்!!! என்னப்பா சொல்றதில்லையா? சுவரு மெலிசு, பேசுனா பக்கத்து வீட்டுக்கு கேட்குமுனு?”]

 19. //பல்லு வெளக்க மறந்துட்டேன்.. Bad Luck டா..//
  பல்லு வெளக்காததுக்கு அந்த பசங்க ஓட்டுனது மனசுல இன்னும் ஓடி இருக்குமே உனக்கு…!!?? 🙂
  உண்மையிலேயே சூப்பர் treat டா மச்சி இந்த பதிவு…

  //நல்ல காதலுக்கு தான் டா நல்ல வார்த்த, நொள்ள காதலுக்கு இது போதும் போ!! (காரி துப்பி பிரகாஷ் நெற்றியில் திலகமிடவது போல் செய்கை செய்து சொன்னான் ரமேஷ்!!) //
  டோட்டல் டாமேஜ் தான்…

 20. // ம்…. இல்லன்னா …….
  (இவ்வளவு மிரட்டுறேன் கொஞ்சமாச்சும் பயப்படுங்கப்பா) //

  அக்கா.. நம்ம ல எல்லாம் கண்மணி ன்னு நினைசீங்க போல…

  “உங்களுக்காண்டி வீட்ல தம்பி….பொம்மை காரு, பொம்மை ரயிலு, ரிமோட்டு plane எல்லா வாங்கி வெச்சு இருக்கேன்… உட்காந்து கல கல கல ன்னு விலாண்டுகிட்டு இருக்கனும்… தேவையில்லாம குறும்புத்தனம் பண்ணி கெழடு கட்டைகள டயர்ட் ஆக்கபடாது..”
  “தம்பி சொன்னத சமர்த்த கேட்டா… சந்தையிளர்ந்து வரும்போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவே”

 21. //oh.. ok ok… iron பண்ணி பண்ணி சட்டை போடுரதுனாலையா… குட் குட் …!!!//

  இது எல்லா வாசகர்களுக்கே புரியும்!! நான் சொல்லறது நுண் வாசகர்!!

 22. //பரவாயில்லை .. புவனேஷ் என் friend ன்னு வெளியில சொல்லிக்கலாம் …//

  நன்றி!! நன்றி !!

  //உன்னால எப்படி இப்படி எழுத முடியுதுன்னு கேட்க மாட்டேன் .. என்னா ,
  உன்னால மட்டும்தான் இப்படி எழுத முடியும் ..//

  மந்திரா, இது என் தகுதிக்கு மீறின பாராட்டு (பாராட்டே உன் தகுதிக்கு மீறினது தானே னு Counter அடிக்க கூடாது!!) !!

 23. //யாருப்பா அது… பக்கத்து வீட்டுல வந்து என்னை பத்தி பேசுறது.. எதுனாலும் எங்க வீட்டுக்கு வந்து பேசுங்க ….. ம்…. இல்லன்னா …….
  (இவ்வளவு மிரட்டுறேன் கொஞ்சமாச்சும் பயப்படுங்கப்பா)//

  அக்கா, ஒரு சின்ன குழந்தை இருக்கும் போது இப்படி மிரட்டாதீங்க.. நானும் பயப்படறேன் இல்ல ?

 24. //[கிசுகிசுப்பு: “மச்சி புவனேஷ்!!! என்னப்பா சொல்றதில்லையா? சுவரு மெலிசு, பேசுனா பக்கத்து வீட்டுக்கு கேட்குமுனு?”]//

  ஆனந்த், ஊரு கெல்லாம் மொக்க போடற என்னாலையே தாங்க முடியலையே.. பாவம் பா குந்தவை அக்கா.. வீட்டுரு..

  குந்தவை,
  Why Blood ?

 25. புவனேஷ், நல்லா இருக்கு. ஆனா சில சமயம் யாரு என்ன பேசறாங்கன்னு குழப்பமா இருக்கு. அடுத்த கதைல சரி பண்ணுங்க! அப்புறம் என்ன ஆச்சி?

 26. ஹாய் புவனேஷ் கதை படிச்சேன்.ரொம்ப நல்ல இருந்தது.படிக்கும் போது சிரிச்சி வயிறு புண் ஆயிடுச்சி புவனேஷ்.நீங்க ஏன் நிறைய எழுத கூடாது .இந்த கதைய என் பையன் கூட படிச்சி ரொம்ப சிரிச்சான் .ரொம்ப ரசிச்சேன் புவனேஷ்.

 27. Romba nalla irundhadhunga Bhuvanesh. kadhaiya padikkum podhu katchigalai karpanai panni paakka mudiyudhu..Aana dialogues ellam yaar edha pesaraangannu kandupidikka koncham kashtama irundhuchu…Seperate characters ku different colors kuduthu irukeenga.. aanalum koncham kulappam…

  Matrapadi nalla rasikkum padiyavum romba comedy a vum irundhuchu…

  Yennada mudhal thadavaye negatives solrennu kovichukaadinga.. Innum niraiya neenga eludhanumnu aasai padaren…

  Andha Prakash neenga dhaana? :)(indha kadhayil peyar maatram seyya pattulladhunnu podalaye)

 28. //புவனேஷ், நல்லா இருக்கு. ஆனா சில சமயம் யாரு என்ன பேசறாங்கன்னு குழப்பமா இருக்கு. அடுத்த கதைல சரி பண்ணுங்க! அப்புறம் என்ன ஆச்சி?//

  வாங்க மோகன்..
  கதை எழுதிட்டு எனக்கும் இது புறியுமானு சந்தேகம் வந்துச்சு// ரெண்டு பேர் கிட்ட படிக்க சொல்லி புரியுதான்னு கேட்டேன் புரியுதுன்னு சொன்னாங்க.. அடுத்த கதைல சரி பண்ண ட்ரை பண்ணறேன்!!

 29. //ஹாய் புவனேஷ் கதை படிச்சேன்.ரொம்ப நல்ல இருந்தது.படிக்கும் போது சிரிச்சி வயிறு புண் ஆயிடுச்சி புவனேஷ்.//

  நன்றி சித்ரா..

  //நீங்க ஏன் நிறைய எழுத கூடாது .//

  நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல..

  //இந்த கதைய என் பையன் கூட படிச்சி ரொம்ப சிரிச்சான் .ரொம்ப ரசிச்சேன் புவனேஷ்.//

  அப்படியா ? உங்க பையன் என்ன செய்யறார்?

 30. //Matrapadi nalla rasikkum padiyavum romba comedy a vum irundhuchu…

  Yennada mudhal thadavaye negatives solrennu kovichukaadinga..
  //

  எங்க இந்த கொலை வெறி? “Matrapadi nalla rasikkum padiyavum romba comedy a vum irundhuchu… ” உங்களுக்கு நெகடிவ் கமெண்ட்ஸ்- ௮?

  //Andha Prakash neenga dhaana? (indha kadhayil peyar maatram seyya pattulladhunnu podalaye)//

  எங்க டா இந்த கேள்வியை இன்னும் யாரும் கேட்கல னு பாத்தேன்.. நக்கல் நல்லா இருக்குங்க.. நல்லா வருவீங்க..

 31. எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க

  நம்ம youthful எழுத்தாளர் புவநேஷோட “அயன்” பதிவு youthful.vikatan.com’ல வந்திருக்கு.

  அண்ணன் பெரிய எழுத்தாளர் ஆயிட்டாரு….இனிமே பாத்து comment போடுங்கப்பா/ம்மா

  மறுபடியும் ஒருமுறை

  congrats da
  எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பார்க்கலாம்

 32. சொல்ல மறந்துட்டேன்

  உன்னோட இ மெயில் id blog முகப்புல வர்ற மாதிரி moderate பண்ணிக்கோ

 33. எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க

  நம்ம youthful எழுத்தாளர் புவநேஷோட அயன் பதிவு youthful.vikatan.com ல வந்திருக்கு

  அண்ணன் பெரிய ஆளாயிட்டாறு இனிமே பார்த்து கமெண்ட் போடுங்கப்பா/ம்மா

  மறுபடியும்
  எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க

 34. டேய் என்னன்னு பாரு
  இதோட மூணு தடவ ஒரே கமெண்ட் பண்ணிட்டேன்
  publish ஆகா மாட்டேங்குது

 35. Ungaloda indha kadhai Ananda Vikatan-la VIT section la publish ayirukkaradha paarthen..

  Congratulations…Keep up the momentum going…

  Friends, ungalukkaga link kelae,
  http://youthful.vikatan.com/youth/index.asp

  VIT section – Title – Ayan

 36. Bhuvanesh, Ungaloda indha kadhai Vikatan la- VIT section la post ayirukkaradha paarthen…

  Congratulations…

  Friends,
  Namma thalaivaroda post a Vikatan la paarunga…
  http://youthful.vikatan.com/youth/index.asp
  -> VIT section la AYAN.

 37. //சொல்ல மறந்துட்டேன்

  உன்னோட இ மெயில் id blog முகப்புல வர்ற மாதிரி moderate பண்ணிக்கோ//

  ஏங்க சுரேஷ் அண்ணா? திட்டறவங்க டைரக்ட்டா மெயில் அனுப்பி திட்டுவாங்களா? இருந்தாலும் உங்க பேச்சுக்கு மறு பேச்சு எது? செய்யறேன்!!

 38. //எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க

  நம்ம youthful எழுத்தாளர் புவநேஷோட அயன் பதிவு youthful.vikatan.com ல வந்திருக்கு

  அண்ணன் பெரிய ஆளாயிட்டாறு இனிமே பார்த்து கமெண்ட் போடுங்கப்பா/ம்மா

  மறுபடியும்
  எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க//

  நன்றி நன்றி நன்றி!!
  நான் கூட இத பத்தி “வழுக்கி விழுந்த விகடன்”னு ஒரு பதிவு போடலாமானு யோசிக்கறேன்!! he he

 39. //டேய் என்னன்னு பாரு
  இதோட மூணு தடவ ஒரே கமெண்ட் பண்ணிட்டேன்
  publish ஆகா மாட்டேங்குது//

  என்னமோ தெரியல, உங்க கமெண்ட்ஸ் Spam ல போயிருச்சு!!

 40. //Namma thalaivaroda post a Vikatan la paarunga…//

  இது வேறையா?? அம்மா புண்ணியவதி, நான் சின்ன பையன்.. ஏதோ கொஞ்சம் எழுதறேன்/கிறுக்கறேன்.. நாலு பேரு பழகுன பாவத்துக்கு வந்து கமெண்ட்ஸ் போடறாங்க.. அது உங்களுக்கு பிடிக்கலையா ??

 41. ஹாய் புவனேஷ் வாழ்த்துக்கள் .நிஜமாவே ரொம்ப காமடியா இருந்தது .என்னோட பையன் வேலம்மாள் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் படிக்கிறான்.

 42. //நம்ம youthful எழுத்தாளர் புவநேஷோட அயன் பதிவு youthful.vikatan.com ல வந்திருக்கு
  அண்ணன் பெரிய ஆளாயிட்டாறு இனிமே பார்த்து கமெண்ட் போடுங்கப்பா/ம்மா

  பார்த்து போடுறோம் அண்ணே.

  மறுபடியும்
  எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க//

  கை தட்டிட்டேன். வாழ்த்துக்கள் புவனேஷ்.

 43. migavum nanru… nagaichuvai migundha blog..vaazhthukkal…..

 44. Hello where is my comment?

 45. //ஹாய் புவனேஷ் வாழ்த்துக்கள் .நிஜமாவே ரொம்ப காமடியா இருந்தது .என்னோட பையன் வேலம்மாள் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் படிக்கிறான்//

  சித்ரா அக்கா (நியாயமா ஆன்டி னு கூப்பிடனும்) உங்களுக்கு அவ்வளவு பெரிய பையன் இருக்கானா? நான் வேற உங்கள் சித்ரா சித்ரா னு கூப்டுடேன்.. வெரி சாரி!!

 46. //கை தட்டிட்டேன். வாழ்த்துக்கள் புவனேஷ்//

  நன்றி அக்கா!!

  //Hello where is my comment?//

  என்னனு தெரியல spam ல போய்டுச்சு.. திருப்பி கூப்டுட்டு வந்து போட்டாச்சு 🙂

 47. //migavum nanru… nagaichuvai migundha blog..vaazhthukkal…..//

  நன்றி ஜே எஸ்!!

 48. நம்ம youthful எழுத்தாளர் புவநேஷோட அயன் பதிவு youthful.vikatan.com ல வந்திருக்கு
  அண்ணன் பெரிய ஆளாயிட்டாறு இனிமே பார்த்து கமெண்ட் போடுங்கப்பா/ம்மா //

  மன்னிச்சுக்க மச்சி கொஞ்சம் லேட்டா தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது அதனால லேட்டஸ்டா என்னோட வாழ்த்துக்கள்

 49. //மன்னிச்சுக்க மச்சி கொஞ்சம் லேட்டா தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது அதனால லேட்டஸ்டா என்னோட வாழ்த்துக்கள்//

  நன்றி மச்சி 🙂

 50. ஹாய் புவனேஷ் நோ ப்ராப்ளம்.உங்களுக்கு என்ன ப்ளோக்ல எழுதறவங்க வயசு எல்லாம் தெரியுமா என்ன .சாரி எல்லாம் எதுக்குப்பா .

 51. Hi Bhuvanesh,
  Congrats!!! Read this after ur serious post ‘செருப்பு கடை’ felt really better. Nice comedy. As ppl mentioned the dialogues are bit confusing…. had to scroll up to check who speaks as u had differentiated with colors. Nice and casual dialogues. Ivvalavu aniyayam pannuveengala???

 52. ஒரு சின்ன சந்தேகம்… இந்த கதை,கவிதை எல்லாம் உங்களுடையதா? இல்ல உங்க நண்பன் பிரவீனுடையதா?

 53. வாங்க கிருஷ்ணா.. பாராட்டுக்கு நன்றி..
  கதை கவிதை எல்லாம் என்னோடது தான்!! நம்புங்க!!

 54. ” கதை கவிதை எல்லாம் என்னோடது தான்!! நம்புங்க!! ”

  “பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும்! நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்! ”

  என்ன செய்ய ❓ 🙄

 55. யூத் விகடனில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துகள் புவனேஷ்ஜி.

  உங்களிக்கு இதுப்பற்றி எதாவது ஈ-மெயில் அனுப்பினார்களா?

 56. Thanks Mohan..
  Yes Mohan.. I have Recieved a Mail From them ..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: