--புவனேஷ்-- எழுதியவை | ஏப்ரல் 8, 2009

செருப்பு கடை


இடம்: கோயில் வாசல் செருப்பு கடை

 நான் அங்கே சென்றவுடன் ஒரு குட்டி பெண் ஓடி வந்தாள்.. ஸ்கூல் டிரஸ் போட்டுகொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள்.. வெள்ளிகிழமை சாயந்திரம் என்பதால் உடை மாற்றவில்லை போல.. நல்ல வேளைக் படிப்பை கெடுக்காமல் வேலை வாங்குகிறார்கள் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன்..

 

வந்தவள்.. வாங்க அண்ணா, செருப்பை கொடுங்க என்றாள்.. பல தடவை செருப்பை கோயில் கடையில் விட்டு சென்றிருக்கிறேன், இன்று அந்த சிறுமி என் செருப்பின் மேல் கை வைப்பாள் என்று ஒரு உறுத்தல்.. சுத்தி முத்தி பார்த்தேன்.. வேறு ஒரு சிறுமி மட்டும் தான் இருந்தாள், ஐந்தாவது படிப்பாள் போல.. வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் காலணியை விட்டேன்..

 

 இப்போது செருப்பு என்ற சொல் எனக்கு அருவருப்பை தருகிறது.. காலணி என்பது ஏதோ அந்த தொழிலுக்கு கொஞ்சம் மரியாதை செய்வதை போல இருக்கு.. இல்லை என் குற்ற உணர்ச்சிக்கு நான் செய்த சமாதானமா கூட இருக்கலாம்.. எனக்கு வேறு வழியில்லை.. எனக்கு முன்னாடி கூட ஒரு அம்பது வயது பெண் செருப்பை கொடுத்துவிட்டு போனார்கள்.. அவங்க எந்த தயக்கமும் காட்டிய மாதிரி தெரியவில்லை.. எனக்கு மட்டும் ஏன் இந்த தயக்கம், கஷ்டம் எல்லாம்? நான் என்றோ ஒரு நாள் கோயிலுக்கு வருவதால் தான் இந்த கஷ்டமா ? தினமும் வந்தால் பழகிருமா??

 

கோயிலுக்குள் நுழையும்போது ஏதோ ஒரு பாவம் செய்து விட்டதை போல் ஒரு எண்ணம்.. எந்த தொழில் செய்தால் என்ன என்ற வியக்கானம் எல்லாம் நானும் பேசினேன், அந்த குட்டி என் காலணியை தொடும் வரை.. இப்போது என் மனதில் அந்த சிறுமி படும் கஷ்டம் மட்டும் தான் தெரிந்தது.. இந்த நினைப்பில் நான் என்ன கஷ்டத்துக்கு கோயிலுக்கு வந்தேன் என்பது மறந்தே போச்சு!! பிரார்த்தனை எல்லாம் சிறுமிக்காக இல்லை இல்லை இந்த மாதிரி சிறுவர்களுக்கு மட்டும் தான் செய்தேன்.. கோயிலுக்குள் இருக்கும் சாமி என்றாவது ஒரு நாள் வாசல் வரை வந்து இவர்களை பார்க்கும் என்று நம்புவோம்..

 

கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன்.. தயங்கி தயங்கி அந்த கடைக்கு சென்றேன்.. என்னை பார்த்ததும் ஒரு அழகு சிரிப்பு வந்தது.. ஒரு சிரிப்பு கண்ணீரை வரவழைக்கும் என்று அப்போது வரை நான் நினைத்தது கூட இல்லை..

எவ்வளவு மா ?

 அம்பது பைசா ன்னே..

இந்தா மா (ஒரு ருபாய் நாணயத்தை கொடுத்தேன்!!)..

 அண்ணே இந்த செருப்பு தான?.. (என்று கேட்டு என் காலணியை கையில் எடுத்தாள்)

ம்ம் (மனதில், கடவுளே இந்த சின்ன பொண்ணுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் ??).. ஒரு எதுக்கும் உதவாத பெரு மூச்சு.. என்னால் வேற என்ன செய்ய முடியும் ?

அண்ணா என் கிட்ட மீதி இல்ல..

பரவால்லமா..  (என்று நடக்க ஆரம்பித்தேன்)

இல்ல அண்ணா இருங்க.. எங்கிருந்தோ இருந்து ரெண்டு நாலணா நாணயத்தை எடுத்துவந்து கொடுத்து..

ரெண்டு நாலணாவில்

ஒரு நாணயம்!!

 

  உங்க காசு எங்க கிட்ட வந்தா, அப்புறம் நாங்க நிம்மதியா இருக்க முடியாது, நிறைய கஷ்டப்படணும் !! என்று மழலை மாறாமல் சொல்லி ஓடி கோயில் வாசலில் நின்றது.. ஏனோ அந்த கோயில் மற்றவர்களுக்கு செருப்புகடையாக தெரிந்தது!!


Responses

 1. மச்சி… வெளையாட்டு புள்ள இல்ல நாங்க… எங்களுக்கு சீரியஸ் மேட்டர் கூட சொல்ல தெரியும்னு அடிக்கடி நிரூபிக்கிற மச்சி… கலக்குற போ

 2. //ரெண்டு நாலணாவில்
  ஒரு நாணயம்!!//

  வாக்கியத்த மடக்கி மடக்கி எழுதி இருக்க… so இது கண்டிப்பா கவிதை தான் 🙂

 3. //என்னை பார்த்ததும் ஒரு அழகு சிரிப்பு வந்தது.. ஒரு சிரிப்பு கண்ணிரை வரவழைக்கும் என்று அப்போது வரை இந்த நினைத்து கூட இல்லை…//

  நெஞ்ச நக்கிட்ட கதா

 4. //உங்க காசு எங்க கிட்ட வந்தா, அப்புறம் நாங்க நிம்மதியா இருக்க முடியாது, நிறைய கஷ்டபடனும்//

  இத யாரவது போய் சட்ட சபைல சொல்லுங்கப்பா…

 5. திடீர் திடீர்ன்னு ரெம்ப அதிர்ச்சியெல்லாம் கொடுக்கிறீங்க தம்பி. சரவணனுடைய பதிலை ரசித்தேன்.

  //என்னை பார்த்ததும் ஒரு அழகு சிரிப்பு வந்தது.. ஒரு சிரிப்பு கண்ணிரை வரவழைக்கும் என்று அப்போது வரை இந்த நினைத்து கூட இல்லை//

  இதை விட அழகாக சொல்லமுடியாது புவனேஷ். வேலை செய்வது கூட பரவாயில்லை, இந்த மாதிரி பிஞ்சு குழந்தைகளை அநியாயமாக நடத்துராங்களே.. சில மனிதர்கள்… அதை கேட்கும் போதே….

  நல்ல பதிவு புவனேஷ். ரெம்ப உணர்ச்சிவசப்படவச்சிட்டீங்க

 6. Soooper kalakiteenga… touching… last line was superb…..

  arumai….

 7. மச்சி .. நானும் இதைப் போல நிறைய சம்பவங்களில் என் மனசாட்சியிடம் கேள்வி கேட்டிருக்கிறேன். உதாரணம் நான் எப்போதும் டீ குடிக்கும் டீ கடையில் அங்குள்ள குப்பைகளை அப்புறப் படுத்தும் 70 வயது மதிக்க தக்க பாட்டி ஒருவர் ஓயாமல் நான் குடித்து விட்டு கீழே போடும் சிகரெட் துண்டை பெருக்கி சுத்தம் செய்வதிலாகட்டும், எனது அலுவலகத்தில் நான் குடித்து விட்டு வைக்கும் எச்சி காபி மக்கை அப்புறப் படுத்தும் ஊழியர்கள் ஆகட்டும் என்னை நிரியாய தடவை இதே போல சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

  ஆனால் நம்மால் இவர்களுக்கு இந்த வேலை கிடைக்கிறதே அதன் மூலம் இவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறதே…வாழ்வுக்கு ஆதாரமாக பணம் கிடைக்கிறதே என்று சமாதானம் சொல்லிக் கொள்ளுவதுண்டு. இருப்பினும் பல நேரம் நான் இப்போதெல்லாம் அவர்களுக்கு அனாவசியமாக வேலை வைப்பதில்லை.

  செம இடுகை மச்சி…

 8. இதை விட அழகாக சொல்லமுடியாது புவனேஷ். வேலை செய்வது கூட பரவாயில்லை, இந்த மாதிரி பிஞ்சு குழந்தைகளை அநியாயமாக நடத்துராங்களே.. சில மனிதர்கள்… அதை கேட்கும் போதே….//

  @ குந்தவை அக்கா..

  மனிதர்களில் குழந்தைகள் என்றாலும் முதியவர்கள் என்றாலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது அக்கா…

  கரக்பூரில் கை ரிக்ஷா இழுக்கும் முதியவரிடம் 10 ருபாய் சொன்னதற்கு 5 ரூபாய்க்கு பேரம் பேசி கையில் திணித்த எத்தனையோ பேரை அங்கிருந்த சில நாட்களில் நான் கண்டிருக்கிறேன்.

 9. //இந்த மாதிரி பிஞ்சு குழந்தைகளை அநியாயமாக நடத்துராங்களே.. சில மனிதர்கள்… அதை கேட்கும் போதே….//

  கரெக்ட்ங்க…. சில மனிதர்கள் அநியாயமாக நடத்துகிறார்கள்… அவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து படிக்க வேண்டும் என்ற அந்த குழந்தைகளின் வேகமும், உற்சாகமும் ஒருபுறம் இருக்க, அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை…

  நல்ல பதிவு புவனேஷ்…!!!

 10. அப்புறம்…
  “அயன்” கதை விகடனில் வந்ததற்கு மனமுவர்ந்த பாராட்டுக்கள்…!!! அசத்தல்…!!!
  இது போல் மேலும் பலவகை அருமையான படைப்புகளை கொடுக்க எனது wishes…!!!

 11. \\உங்க காசு எங்க கிட்ட வந்தா, அப்புறம் நாங்க நிம்மதியா இருக்க முடியாது, நிறைய கஷ்டபடனும் !! என்று மழலை மாறாமல் சொல்லி ஓடி கோயில் வாசலில் நின்றது.. ஏனோ அந்த கோயில் மற்றவர்களுக்கு செருப்புகடையாக தெரிந்தது!!//

  no words da…

  touching

 12. ரெண்டு நாலணாவில்

  ஒரு நாணயம்!!

  romba emotional aayitta pola……
  great!!!

 13. உங்க காசு எங்க கிட்ட வந்தா, அப்புறம் நாங்க நிம்மதியா இருக்க முடியாது, நிறைய கஷ்டபடனும் !! //

  இவ்ளோ பெருசா எந்த குழந்தையும் statement குடுக்காதுன்னு நினைக்கிறேன்.

  இன்னும் கொஞ்சம் try பண்ணி எழுதி irundha செவுள்ள அறைஞ்சிருக்கலாம்….

  அது உனக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

  good post da

 14. உடல் கவிதை
  ……………………….

  கோயிலுக்கு பக்கத்தில்
  கார்த்துடைக்கக் காத்திருப்பாய்
  கூட்டமுள்ள ஹோட்டல்களில்
  சாப்டவுடன் பிளேட் எடுப்பாய்

  பாயின்றி படுத்திருப்பாய்
  பிளாட்பாரத்தில் குளிப்பாய்
  பட்டறையில் வெட்டிரும்பால்
  பகல் இரவாய் தட்டிடுவாய்

  சாயங்கால சமுத்திரத்தின் அருகில்
  சுண்டல் விற்பாய்
  சந்துகளில் இருட்டில்
  பெண்களுக்காய் ஆள்பிடிப்பாய்

  காஜா அடிப்பாய்
  கட்டடத்தில் கல்லுடைப்பாய்
  கார் அடியில் படுத்திருந்து
  கருப்பாய் எழுந்திருப்பாய்

  மேஜை துடைப்பாய்
  மேட்டினியில் இடிபடுவாய்
  மெதுவாக என்னிடத்தில்
  கருப்பிலே சீட்டுவிற்பாய்

  கூஜா எடுத்துப் போய்
  குடிதண்ணீர் கொணர்வாய்
  கூட்டத்தில் கரைந்து
  பாக்கெட்டை கத்தரிப்பாய்

  ராஜாவே உனக்கென்றே
  நாங்கள் இவ்வருஷம்
  ராஜ்ஜியம் முழுவதுமே
  விழாவேடுக்கப் போகின்றோம்

  திரைப்படங்கள் எடுப்போம்
  தின்பண்டம் தந்திடுவோம்
  தீவிரமாய் உன்நிலைமை
  உயர்த்துவது பற்றி

  வரைபடங்கள் வரைந்து
  வாதாடிப் புகைபிடித்து
  வருங்காலக் கனவுகளை
  வண்ணங்களைத் தருவோம்

  குறைபட்டுக் கொள்ளாதே
  கொஞ்சநாள் பொறுத்திரு
  கூட்டங்கள் கூட்டி
  குளிர்சாதன அறைக்குள்

  சிறைப்பட்டு சிந்தித்து
  சீக்கிரமே முடிவெடுப்போம்
  “சில்லறையாய் இல்லை
  போய் விட்டு அப்புறம் வா”
  …………………………………………………………..

  என்னை பொட்டில் அறைந்த கவிதை இது

  எழுதியவர் யார்……?

  யாராவது கண்டுபிடியுங்களேன்!!!!!!!
  ……………………………………………………………..

  புவனேஷ்
  உன் கதையை படிக்க தொடங்கியவுடனயே
  என் மனதில் நிழலாடிய கவிதை இதுதான்.

 15. ரொம்ப டச்சிங் ஆ இருந்தது. மிக அருமையான பதிவு புவனேஷ்.

  “கோயிலுக்குள் இருக்கும் சாமி என்றாவது ஒரு நாள் வாசல் வரை வந்து இவர்களை பார்க்கும் என்று நம்புவோம்”

  கோவில் வாசலில் உள்ள இவர்களை கூட என்றாவது ஒரு நாள் தான் வந்து பார்க்கும் என்றால் கோவிலுக்கு போவதன் அர்த்தம் தான் என்ன? ஒரு பாவமும் செய்யாத இவர்களை பார்க்கும் போது கடவுள் மீது உள்ள நம்பிக்கை அர்த்தமற்று போகிறது. இப்படி பேசுவதால் நான் நாத்திகவாதி கிடையாது, அனால் கடவுள் மீது உள்ள என் கோபத்தை, என் ஆதங்கத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

 16. விகடன்ல உங்க கதை வந்ததை பார்த்தேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனேஷ். மேலும் இது போல் அருசுவை கதைகளை அடிக்கடி எழுதுங்க.

 17. Hmm… touching

 18. //மச்சி… வெளையாட்டு புள்ள இல்ல நாங்க… எங்களுக்கு சீரியஸ் மேட்டர் கூட சொல்ல தெரியும்னு அடிக்கடி நிரூபிக்கிற மச்சி… கலக்குற போ//

  மச்சி நான் விளையாட்டுப்புள்ள தான்.. அதான் விளையாட்டா ஒரு கதை முயற்சி!!

  //வாக்கியத்த மடக்கி மடக்கி எழுதி இருக்க… so இது கண்டிப்பா கவிதை தான் //

  அதுல முக்கியமே அந்த ஆச்சிர்யா குறி தான்.. அத மிஸ் பண்ணிட்டியே?

 19. // சரவணனுடைய பதிலை ரசித்தேன். //
  அப்போ என் கதைய?

  //நல்ல பதிவு புவனேஷ். ரெம்ப உணர்ச்சிவசப்படவச்சிட்டீங்க//
  நன்றி அக்கா.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!!

 20. @ Sriram

  மச்சி.. இங்கே நானும் அப்படித்தான்.. நண்பர்களையும் காபி கப் களை குப்பைதொட்டியில் போட சொல்லி வற்புறுத்துகிறேன்.. வேற என்ன செய்ய முடியும் ஒரு பேரு மூச்சை தவற ?

 21. //நல்ல பதிவு புவனேஷ்…!!!//
  நன்றி ஆனந்த்.. ..

  //அப்புறம்…
  “அயன்” கதை விகடனில் வந்ததற்கு மனமுவர்ந்த பாராட்டுக்கள்…!!! அசத்தல்…!!!
  இது போல் மேலும் பலவகை அருமையான படைப்புகளை கொடுக்க எனது wishes…!!!//

  மிக்க நன்றி மச்சி.. ட்ரை பண்ணறேன்!!

 22. வாங்க சுரேஷ் அண்ணனே.. ஒரே லைன் பாராட்டவும் செய்யறீங்க, அப்படி இருக்க கூடாதுனும் சொல்லறீங்க.. உங்கள புருஞ்சுக்கவே முடியலையே ?? 🙂 🙂 ஹி ஹி..

  பொதுவாக வேலைசெய்யும் குழந்தைகள் தன் வயதுக்கு மீறி பேசும் என்ற லாஜிக் படி சரியா வரும் என்று நினைத்தேன்…

  செவுளில் அடித்த பீல் இல்லை என்பது உண்மை.. அடுத்த கதை எழுதினா இதை எல்லாம் சரி செய்ய முயற்சிகறேன்!!

  அந்த கவிதையை நான் படிச்சது இல்ல..கவிதை அருமை!! நீங்க தான எழுதுனது? உண்மை ப்ளீஸ்!!

 23. //இப்படி பேசுவதால் நான் நாத்திகவாதி கிடையாது, அனால் கடவுள் மீது உள்ள என் கோபத்தை, என் ஆதங்கத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.//

  கதையிலும் அந்த வார்த்தைகள் வந்ததற்கு இந்த கோபமும் ஒரு காரணம் பாலா!!

  வாழ்த்துகளுக்கு நன்றி!!

 24. //Hmm… touching
  நன்றி காயத்திரி!!

 25. என்று மழலை மாறாமல் சொல்லி ஓடி கோயில் வாசலில் நின்றது.. ஏனோ அந்த கோயில் மற்றவர்களுக்கு செருப்புகடையாக தெரிந்தது!!//

  இந்த லைன மட்டும் பிரிச்சு போட்டா நல்லா இருக்காதுல்ல

  அதான்!

 26. கசப்பான் உண்மைகல் இவை!
  கவிதை எழுடியவர் சுஜாதா! சரியா சுரேஸ்

 27. மச்சி .. கதை மனதை ரொம்ப தொட்டு செல்கிறது ..
  அதனால் அந்த சிறுமி என் மனதை விட்டுச் செல்லாமல் இருக்கிறாள் …

 28. சொல்லவே இல்லை ..விகடனில் உன் கதை ..
  இதோ கடைக்கு செல்கிறேன் விகடன் வாங்க ..
  நான் உண்மையாகவே பெருமை படுவேன் என்று பொறாமை பட்டு என்னிடம் சொல்ல வில்லையோ ..

 29. Hi Bhuvanesh,

  Another serious post… Bitter truth. When I read your post felt better infact happy seeing those lines which said that she was in uniform. Thank god inspite of all these worse situations she has a way to get out of it and hope that she succeeds soon. As I have seen kids who were deprived of their education. When I first saw two small kids working in our college canteen I really felt very angry on the owner and wanted to make a complaint against him for child labour but one of my friend said – ‘it might even work against the kids and they might not get proper schooling as u want but instead would loose this so called job they have for them’ . So had to keep quiet as I felt bad that they have already lost their childhood happiness and didnt want them to loose their livelihood too cas of me. The only thing I could do was just to avoid visiting canteen totally except few unavoidable situations. Even though I watch them playing on holidays I some how felt they have lost that innocence of childhood..could be because they had started their struggle in this world so early. Cant help….
  As Kunthavai and Sri ram said
  //”வேலை செய்வது கூட பரவாயில்லை, இந்த மாதிரி பிஞ்சு குழந்தைகளை அநியாயமாக நடத்துராங்களே.. சில மனிதர்கள்…”//
  //கரக்பூரில் கை ரிக்ஷா இழுக்கும் முதியவரிடம் 10 ருபாய் சொன்னதற்கு 5 ரூபாய்க்கு பேரம் பேசி கையில் திணித்த எத்தனையோ பேரை அங்கிருந்த சில நாட்களில் நான் கண்டிருக்கிறேன்.//
  There are people who fall into this category and worst part is that we just have to watch this helplessly.
  Similarly felt really bad when I saw small boys smoking very casually… looking at them could feel that they were working in that shop…. thought that forget about childhood they wouldn’t even think about humanity as they would be filled with negative thoughts about it… Really dont know if these things would be eradicated…. Hope they would be eradicated…
  Nice post. Sorry my comment has again become a big essay…..

 30. அருமையான எழுத்துநடையில்……மனதை கணமாக்கும் பதிவு:))

  அழகான சிரிப்புடன் ஒரு சிறுபெண் கண்முன் வந்து போகிறாள், உங்கள் பதிவை படிக்கையில்.

  \\ரெண்டு நாலணாவில்

  ஒரு நாணயம்!!\\

  நச்சென்றிருக்கிறது இந்த வரி….!

  மனதை தொட்டது உங்கள் பதிவு,
  தொடர்ந்து இது போல் பல அருமையான படைப்புகள் படைக்க என் வாழ்த்துக்கள் புவனேஷ்!!

 31. வாங்க கவின்.. அந்த கவிதை எழுதியது சுஜாதா தான்!!

  @ Mandhiran
  நன்றி மச்சி..
  //கதை மனதை ரொம்ப தொட்டு செல்கிறது ..
  இந்த கமெண்ட் என் மனதை தொடுகிறது.. ஹி ஹி!!

  //சொல்லவே இல்லை ..விகடனில் உன் கதை ..
  இதோ கடைக்கு செல்கிறேன் விகடன் வாங்க ..
  நான் உண்மையாகவே பெருமை படுவேன் என்று பொறாமை பட்டு என்னிடம் சொல்ல வில்லையோ ..//

  மச்சி.. அவ்வ்வ்வ்.. என் கதை விகடன் புக் ல எல்லாம் வரல.. http://youthful.vikatan.com இந்த வெப்சைட் ல வந்துச்சு..

 32. வாங்க கிருஷ்ணா.. நானும் இந்த மாதிரி பல சின்ன பிள்ளைகள் வேலை செய்வதை பார்த்து எழுதின கதை தான் இது!!

 33. வாங்க திவ்யா.. நீங்க படிச்சு பாராட்டுனது மகிழ்ச்சி!!

 34. Sorry Bhuvanesh… Had written such a big essay about the content but missed mentioning your accomplishment. You have put down the fact very well in your casual writing. Its crisp and clear. Keep Going !!!

 35. //எனக்கு மட்டும் ஏன் இந்த தயக்கம், கஷ்டம் எல்லாம்? நான் என்றோ ஒரு நாள் கோயிலுக்கு வருவதால் தான் இந்த கஷ்டமா ? தினமும் வந்தால் பழகிருமா??//

  இந்தக் கஷ்டமெல்லாம் இப்படி பதிவு எழுதும் மனம் இருப்பதால்.கஷ்டங்களுக்காக கோயில் போவதில் பலன் உள்ளதா எனத் தெரியவில்லை.ஆனா அந்த சூழல்கள் மனதுக்கு நன்றாக இருக்கும் பதிவின் கருவையெல்லாம் கடந்து போனால்.

 36. @ கிருஷ்ணா
  உங்கள் தொடர் வருகையே எனக்கு பாராட்டு தான்!! சாரி எல்லாம் வேண்டாம்.. (நண்பர்களுக்கு இடையில் எதற்கு சாரி ?)

 37. //இந்தக் கஷ்டமெல்லாம் இப்படி பதிவு எழுதும் மனம் இருப்பதால்.கஷ்டங்களுக்காக கோயில் போவதில் பலன் உள்ளதா எனத் தெரியவில்லை.ஆனா அந்த சூழல்கள் மனதுக்கு நன்றாக இருக்கும் பதிவின் கருவையெல்லாம் கடந்து போனால்.//

  வாங்க ராஜநடராஜன்..

  நான் இதை பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் கோயிலுக்கு போகவில்லை.. இது நான் எழுதிய சிறுகதை.. (அந்த கதையில் இருபது சதவீதம் மட்டுமே உண்மையில் எனக்கு நடந்தது)..

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

 38. புவனேஷ்ஜி அருமை. நம்மில் பலருடைய மன ஓட்டங்களைப் பதிவு செய்து உள்ளீர்.

 39. VERY NICE….

 40. Thanks Mohan..
  Thanks Shre 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: