--புவனேஷ்-- எழுதியவை | ஏப்ரல் 15, 2009

என் பயண குறிப்பு – உடுமலை!


 

நான் சென்ற வார விடுமுறைக்கு உடுமலைப்பேட்டை சென்றிருந்தேன்..

 

 

அங்கே நான் பார்த்த சில

 

 

1) பெண்கள் இன்னும் ரெட்டை ஜடை போடுகிறார்கள்.

 

2) தாவணி என்ற பழங்காலத்து உடை உடுத்தும் பெண்கள் இன்னும் நாட்டில் இருகிறார்கள்…

 

3) சுடிதார் போடும் பெண்கள், துப்பட்டாவை போடுகிறார்கள்.. அதுவும் முறை படி போடுகிறார்கள்..

 

ஏண்டா பொண்ணுகளை தவிர  வேற எதுவும் பாக்கலையா னு கேட்கரவங்களுகாக (இந்த வயசில வேற என்னத்த பாக்கணும்?) தேடி தேடி பிடுச்ச மத்த சில விஷயங்கள்

 

 1)       அந்த ஊரை பார்க்க கொஞ்ச நாள் முன்னாடி பார்த்த கோயம்பத்தூர் மாதிரி இருக்கு.. சிட்டியும் பட்டியும் கலந்த மாதிரி இருக்கு!! அதவாது கிராமம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது..இன்னும் ஒரு ரெண்டு வருடத்தில் உடுமலையை கிராமம் என்றால் மக்கள் அடிக்கவருவார்கள் என்று நினைக்கிறன்..

 

2) இன்னும் அந்த ஊரில் மாட்டுவண்டிகள் ஓடுகிறது. மாடுகள் பார்க்க சும்மா கம்பீரமாக இருக்கிறது..

 

 

3) ஒரு மருந்துகடையில் “இங்கிலீஷ் மருந்து கடை” என்று எழுதி இருந்தது.. மருந்துகடை என்றாலே அது இங்கிலீஷ் மருந்து கடை, ஆயுர்வேத மருந்து கடை, சித்த மருத்துவ மருந்து கடை என்று தனியாக எழுதி வைக்கும் நகரத்து வாழ்கையை நினைத்து சிரிப்பு வந்தது.. அழிந்து வரும் நம் மருத்துவ முறைகளை நினைத்ததில் மன அழுத்தம் அதிகமாகி தலைவலி வந்தது.. சரி என்று ஒரு க்ரோசின் வாங்கி சாப்டேன்..

 

 

4) பேருந்தில் ஒரு அழுக்கு சட்டை அழுக்கு வேட்டி பார்ட்டி பேசியது

 

ஏக்கருக்கு பத்து லட்சம் சொல்லறான், நான் பன்னண்டு கேட்கறேன்…

 

ஆமா ஒரு நூறு ஏக்கற வித்துட்டு மீதிய வெச்சுக்கலாம்னு பாக்கறேன்”

 

 

நூறு * பத்துலட்சம் என்று கணக்கு போட்டதில் நான் இறங்க  வேண்டிய இடத்தை விட்டு ரெண்டு ஸ்டாப் தள்ளி தான் இறங்கினேன்.. (அப்படியும் விடை கண்டு பிடிக்கலை!!)


Responses

 1. //1) பெண்கள் இன்னும் ரெட்டை ஜடை போடுகிறார்கள்.

  2) தாவணி என்ற பழங்காலத்து உடை உடுத்தும் பெண்கள் இன்னும் நாட்டில் இருகிறார்கள்…

  3) சுடிதார் போடும் பெண்கள், துப்பட்டாவை போடுகிறார்கள்.. அதுவும் முறை படி போடுகிறார்கள்//

  மச்சி உடுமலைபேட்டை எந்த கிரகத்துல இருக்கு டா??? சொல்லு நானும் போய் பாத்துட்டு வரேன்

 2. //சிட்டியும் பட்டியும் கலந்த மாதிரி இருக்கு!! //

  பின்றியே சின்ன T.R

 3. //நூறு * பத்துலட்சம் என்று கணக்கு போட்டதில் நான் இறங்க வேண்டிய இடத்தை விட்டு ரெண்டு ஸ்டாப் தள்ளி தான் இறங்கினேன்.. //

  இத கணக்கு பண்ணதுக்கு பதிலா, அவருக்கு பொண்ணு இருக்கானு கேட்டு அத கணக்கு பண்ணி இருந்தா உன்ன என் நண்பன்னு பெருமையா சொல்லி இருப்பேன்… வேஸ்ட் மச்சி நீ 🙂

 4. //ஏண்டா பொண்ணுகளை தவிர வேற எதுவும் பாக்கலையா னு கேட்கரவங்களுகாக (இந்த வயசில வேற என்னத்த பாக்கணும்?)//

  சபையில சட்டுன்னு உண்மைய போட்டு உடைக்க கூடாது அப்பு… ஊரு டரியலயிடும்…

 5. Hey Bhuvanesh… This is too much….. wanted to write a lot … but first let me know where do u live on this earth ❓

 6. Hope I didnt sound harsh…. sorry if it was bit harsh…

 7. //மச்சி உடுமலைபேட்டை எந்த கிரகத்துல இருக்கு டா??? சொல்லு நானும் போய் பாத்துட்டு வரேன்//

  போ மச்சி.. அந்த ரகசியத்தை சொன்னா நீயும் அங்க வந்து சைட் அடிப்ப..

  //பின்றியே சின்ன T.R//

  இப்படி சொன்னதுகே, உனக்கு உடுமலை அட்ரஸ் தர கூடாது!!

 8. .//இத கணக்கு பண்ணதுக்கு பதிலா, அவருக்கு பொண்ணு இருக்கானு கேட்டு அத கணக்கு பண்ணி இருந்தா உன்ன என் நண்பன்னு பெருமையா சொல்லி இருப்பேன்… வேஸ்ட் மச்சி நீ //

  இந்த Angle ல நான் யோசிகலையே?

  //சபையில சட்டுன்னு உண்மைய போட்டு உடைக்க கூடாது அப்பு… ஊரு டரியலயிடும்…//

  ஆமா இத சொல்லாட்டி தெரியாத.. நாம எப்படின்னு தான் ஊருக்கே தெரியுமே ?

 9. //Hey Bhuvanesh… This is too much….. wanted to write a lot … but first let me know where do u live on this earth //

  ஹி ஹி.. என்ன பண்ணறது கிருஷ்ணா? பெண்கள் அந்த மாதிரி வித்யாசமா இருந்தது என்னை அப்படி எழுத வெச்சுருச்சு!! 🙂 🙂
  நான் இருப்பது சிங்கார சென்னை .. (ஆட்டோ எல்லாம் அனுப்ப கூடாது!!)

  //Hope I didnt sound harsh…. sorry if it was bit harsh…//

  நீங்க சொல்லி தான் திட்டு நீங்கனே தெரியுது.. நான் ஏதோ நீங்க காமெடி செய்யறீங்கனு நினைச்சு சிரிச்சிட்டு இருந்தேன்!! (சாரி எல்லாம் வேண்டாம்.. Refer my மறுமொழி in Previous Post)

 10. சென்னை யா – ‘மொக்கை’ ன்னு சொல்லும் போதே தெரிஞ்சிருக்கணும் …
  //பெண்கள் அந்த மாதிரி வித்யாசமா இருந்தது என்னை அப்படி எழுத வெச்சுருச்சு!! //

  புவனேஷ் சென்னைல உங்களுக்கு தாவணி உடுத்தும் பெண்கள் , சுடிதார் – துப்பட்டாவுடன் அதுவும் முறை படி போடுகிற பெண்கள் கண்ணுக்கு தெரிஞ்சதே இல்லையா?? முதல்ல நல்ல கண் மருத்துவரை அணுகவும். தாவணி உடுத்தும்
  பெண்கள் ரொம்ப கம்மிதான் ஆனா அடுத்து இருக்கே …. ஒரு வேள இப்படி இருக்குமோ… உங்க பார்வை இந்த மாதிரி நர்மலானத விட்டுட்டு வித்யசமானதை மட்டும் பார்க்குமோ?? இப்படி தான் இருக்கும்னு நான் நினைகிறேன் … நீங்க என்ன சொல்றீங்க ? உங்க பார்வைய நல்லா தெரிஞ்சவர் நீங்க தானே …..
  //ஆட்டோ எல்லாம் அனுப்ப கூடாது!! // – இது புரியல

  //நீங்க சொல்லி தான் திட்டு நீங்கனே தெரியுது..//
  (harsh – கடினமான
  திட்டலாம்ன்னு தான் உங்க mail Id இருக்கான்னு பார்த்தேன் .. அப்போதான் தெரிஞ்சது நீங்க ரொம்பவே தைரியசாலின்னு… )
  Hey BTW dont u reply to all comments ❓ ( yet another small doubt 🙂 )

 11. //ஒரு அழுக்கு சட்டை அழுக்கு வேட்டி பார்ட்டி பேசியது //
  அங்க பார்த்ததும் அழுக்கு தானா (என்ன ஒரு பார்வை 🙄 )
  உங்க office dress code வேஷ்டி சட்டையா ❓

 12. //புவனேஷ் சென்னைல உங்களுக்கு தாவணி உடுத்தும் பெண்கள் , சுடிதார் – துப்பட்டாவுடன் அதுவும் முறை படி போடுகிற பெண்கள் கண்ணுக்கு தெரிஞ்சதே இல்லையா?? முதல்ல நல்ல கண் மருத்துவரை அணுகவும். தாவணி உடுத்தும்
  பெண்கள் ரொம்ப கம்மிதான் ஆனா அடுத்து இருக்கே …. //

  சும்மா காமெடி யா போட்ட விஷயத்த இவ்வளவு சீரியஸ்-௮ எடுத்துக்க கூடாது!!

  //(harsh – கடினமான
  திட்டலாம்ன்னு தான் உங்க mail Id இருக்கான்னு பார்த்தேன் .. அப்போதான் தெரிஞ்சது நீங்க ரொம்பவே தைரியசாலின்னு… )//

  அச்சோ.. என் மெயில் ஐ. டி வேணுமா? மெயில் ஐ டி தரதுக்கு எதுக்கு தைரியம் எல்லாம்? எனக்கு புரியல?
  bhuvan2uall@gmail.com

  இது என் பர்சனல் மெயில் ஐ டி.. இந்த தளத்துக்காக தனியா எல்லாம் மெயில் ஐ.டி create பண்ணல!! அப்புறம் திட்டறது னா கமெண்ட் போட்டும் திட்டலாம்.. கண்டிப்பா நான் அதை நான் டெலீட் செய்ய மாட்டேன்!!

 13. //ஒரு வேள இப்படி இருக்குமோ… உங்க பார்வை இந்த மாதிரி நர்மலானத விட்டுட்டு வித்யசமானதை மட்டும் பார்க்குமோ?? இப்படி தான் இருக்கும்னு நான் நினைகிறேன் … நீங்க என்ன சொல்றீங்க ? உங்க பார்வைய நல்லா தெரிஞ்சவர் நீங்க தானே ….//

  நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.. சத்தியமாக இல்லை..

  பெண்கள் ரெடி ஜடை போடுகிறார்கள் என்றேன், ஒற்றை ஜடை போடா கூடாது என்பதற்காகவா? இல்லை ரெட்டை ஜடை அவர்களுக்கு அழகாக இருக்கும் என்பதால்..

  தாவணி போடுகிறார்கள் என்று பெருமையாக சொன்னேன், எதற்காக? மாடர்ன் டிரஸ் போடா கூடாது என்பதற்காகவா? இல்லை இங்கே சில பெண்கள் டிரஸே போடுவது இல்லை என்பதற்காக

  அங்கே ஒழுங்காக துப்பட்டாவை போடுகிறார்கள் என்றேன், இங்கே யாரும் தூப்பட்டா போடாதனாலா? இல்லை இங்கே தூப்பட்டா போடாத பெண்கள் அதிகம் ஆவதால்..

  உனக்கேன் இவளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேப்பீர்கள்..

  நானே பாதிக்க பட்டேன்.. நேரடியாக பாதிக்க பட்டேன் (நான் இவ்வளவு நீளமா பேசும்போதே தெரியலையா நான் பாதிக்க படிக்கிறேன்!! )

 14. //அங்க பார்த்ததும் அழுக்கு தானா (என்ன ஒரு பார்வை )
  உங்க office dress code வேஷ்டி சட்டையா //

  ஹி ஹி.. என்னங்க பண்ணறது ஆண்டவன் உங்கள மாதிரி நல்லவங்களா என்ன படைக்கல!!

  //Hey BTW dont u reply to all comments ( yet another small doubt )//

  எல்லா கமெண்ட்ஸ் க்கும் reply பண்ணறேன்.. எதாவது மிஸ் ஆகிடுச்சா?

 15. //தாவணி போடுகிறார்கள் என்று பெருமையாக சொன்னேன், எதற்காக? மாடர்ன் டிரஸ் போடா கூடாது என்பதற்காகவா? இல்லை இங்கே சில பெண்கள் டிரஸே போடுவது இல்லை என்பதற்காக //
  Bhuvanesh Half-saree can be worn worser than anyother apparel u have mentioned. Its not what they wear but its only the way they wear it matters. It should serve its purpose. But I think in your case you u were affected both when they wore it properly (which is the reason behind this post) as well as when they wore it improperly (in chennai as u have said). wat to do pitiable girls isnt it ❓ ❓ ❓
  I have not seen this worse in chennai as u have mentioned…. felt its exaggerated…. the last statement… mygoodness… its heights ..

  //நானே பாதிக்க பட்டேன்.. நேரடியாக பாதிக்க பட்டேன் //
  சும்மா காமெடி யா போட்ட விஷயத்த இவ்வளவு சீரியஸ்-௮ எடுத்துக்க கூடாதோ ❓ 🙄

  Hey people are affected by many things in day to day life… take for example very common act of smoking… we do get affected by it and I am sure that u might have come across with at least one such incident in your weekend travel too (if u were not a contributor) but never made u write any post on it… Girls attire has become an all time debatable topic… Cant help!!!

  //(நான் இவ்வளவு நீளமா பேசும்போதே தெரியலையா நான் பாதிக்க படிக்கிறேன்!! )//
  இது வேறயா ❓ எங்க படிக்கிறீங்க? ❓ ❓ ❓

 16. //இன்னும் அந்த ஊரில் மாட்டுவண்டிகள் ஓடுகிறது. மாடுகள் பார்க்க சும்மா கம்பீரமாக இருக்கிறது..//

  ரொம்ப சூப்பரான ஊர்… இல்லையா மச்சி…? ச்ச… அதெல்லாம் சிட்டி ஆயிடுமேன்னு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு… இருந்தாலும் நிறய வசதிகள் வந்தா நல்லது தானே…

 17. என்ன மச்சி சின்ன புள்ள தனமா வாய் தகராறு பண்ணிட்டு? உனக்கும் கிருஷ்ணாவுக்கும் ஆளுக்கு ரெண்டு உருட்டு கட்டை அனுப்புறேன்… நல்லா சண்ட போடுங்க… எங்களுக்கு இன்னும் இன்டரஸ்டிங்கா இருக்கும்ல…

 18. // ஆட்டோ எல்லாம் அனுப்ப கூடாது!! – இது புரியல//

  என்ன கிருஷ்ணா இது புரியலையா? அப்படின அடிக்க ஆளு அனுப்புறதுன்னு அர்த்தம்… தமிழ் நாட்டுல தான் இருக்கீங்களா?

 19. கிருஷ்ணா, பேசாம நீங்க ஒரு இங்கிலீஷ் Blog ஸ்டார்ட் பண்ணுங்க!!

  //இது வேறயா எங்க படிக்கிறீங்க? //

  மக்களே பாத்துகோங்க… என்ன பாத்து எங்க படிக்கறீங்கன்னு கேட்டுடாங்க.. நாங்களும் யூத் தான்..

  @ Anandh
  வா மச்சி!!

  @saravana
  அதானே, என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ?

 20. Hi Saravana,
  என்ன மச்சி சின்ன புள்ள தனமா வாய் தகராறு பண்ணிட்டு? ❓

  //உனக்கும் கிருஷ்ணாவுக்கும் ஆளுக்கு ரெண்டு உருட்டு கட்டை அனுப்புறேன்… நல்லா சண்ட போடுங்க…//
  ungalukku directa adikamudiyalannu ippadi oru plan aa??? (appadiyum ungalukku adhu yendha kiragathula irukkunnu theriyumnnu thonalayea….)
  illa unga products kku yedhavadhu free sample supply aa ❓

  //அப்படின அடிக்க ஆளு அனுப்புறதுன்னு அர்த்தம்… //
  oh!! adhaan Bhuvanesh adhukku reply pannalayaaa? Thanks saravana.

 21. கிருஷ்ணா, பேசாம நீங்க ஒரு இங்கிலீஷ் Blog ஸ்டார்ட் பண்ணுங்க!! — yen Bhuvanesh thitturadhunna inga thitunga illa mail la thittunga ….. adhukku yedhukku pudu blog???

  //என்ன பாத்து எங்க படிக்கறீங்கன்னு கேட்டுடாங்க.. //
  padikiraen nnu sonnadhu naalaa yendha kindergarten nnu kaetaen … 🙄

 22. சரவணன், என்னமா கணக்கு போடுறீங்க… புவனேஷ் இப்படி ஒரு நண்பனை வைத்துக் கொண்டு நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? பேசாமல் சரவணனிடம் tution போங்க.

 23. // பேருந்தில் ஒரு அழுக்கு சட்டை அழுக்கு வேட்டி பார்ட்டி பேசியது

  “ஏக்கருக்கு பத்து லட்சம் சொல்லறான், நான் பன்னண்டு கேட்கறேன்…”

  “ஆமா ஒரு நூறு ஏக்கற வித்துட்டு மீதிய வெச்சுக்கலாம்னு பாக்கறேன்”//

  உண்மை, கிராமத்தில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.

  கிருஷ்ணா, இந்த பதிவை அனுபவியுங்கள் ஆராய்ச்சி வேண்டாமே?

 24. // கிருஷ்ணா, இந்த பதிவை அனுபவியுங்கள் ஆராய்ச்சி வேண்டாமே? //

  கிருஷ்ணா, தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

 25. என்ன நடக்குது இங்கே?

 26. ///பெண்கள் இன்னும் ரெட்டை ஜடை போடுகிறார்கள்.///

  அட மெய்யாலுமா??
  உங்களின் ”கண்ணோட்டம்:” அருமை

 27. கணக்கு பண்னனுமா? இல்ல கணக்கு போடனுமா??

 28. Hi Mohan,
  //கிருஷ்ணா, தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்//
  Need not feel sorry for it… We all have our rights to express our thoughts provided it doesn’t hurt anybody… so nothing to worry… u can very well tell me ur views.
  // கிருஷ்ணா, இந்த பதிவை அனுபவியுங்கள் ஆராய்ச்சி வேண்டாமே? //
  Hey I dont know the moment I read this post the first thing came to my mind is “y at all …….”
  //ஆராய்ச்சி வேண்டாமே // – Idhu pazhaka dhosham aa irukalam mohan.. Inga onnum naan araichi panni yezhudhanumnu yezhudhala… Just wrote the way I felt .
  The way u guys take up these things are different from the way we girls take it up…… May be if he had skipped the the first few points in this post I might have felt different… Cant help!!!

  Have a nice time
  Krishna

 29. nalla sandai nadkkuthu inge???

 30. // சுடிதார் போடும் பெண்கள், துப்பட்டாவை போடுகிறார்கள்.. அதுவும் முறை படி போடுகிறார்கள்..//
  சென்னைப் பெண்களின் துப்பட்டா, பரமசிவன் கழுத்துப்பாம்பு போல் நம்மை சௌக்கியமா என்று கேட்கின்றன.

 31. //nalla sandai nadkkuthu inge???//

  கலைச்சு விடாம, ரசிக்கணும் … சரியா ? 🙂

 32. //the way we girls take it up…///

  ஹ்ந்காஆஆ ?????!!!!!!!!!!!!????????? ……….. கிருஷ்ணா ஒரு பொண்ணா ?????!!!!!!!!!!!!?????????
  தல சுத்துதே…
  கண்ணனின் அவதாரத்துக்கு அளவில்லையா…?

 33. //padikiraen nnu sonnadhu naalaa yendha kindergarten nnu kaetaen … //
  மச்சி … சொல்லவே இல்ல… மறுபடியும் இன்னொரு “round” ஆ…? play school ல ஸ்டார்ட் பண்ணு அப்பனே… “c[g]lass” எல்லாம் [“தூக்கலாக”] தூங்கலாம்.

 34. குந்தவை அக்கா.. நான் சூது வாது தெரியாம வளந்துட்டேன்.. இனிமேல் தான் இந்த மாதிரி வித்தை எல்லாம் கத்துக்கணும்!!

  //கிருஷ்ணா, இந்த பதிவை அனுபவியுங்கள் ஆராய்ச்சி வேண்டாமே?//

  வாங்க மோகன்.. நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க!!

 35. @ Anima
  //என்ன நடக்குது இங்கே?//

  சும்மா ஜாலியா வாக்கு வாதம் பண்ணறோம் அண்ணே!!

  //அட மெய்யாலுமா??
  உங்களின் ”கண்ணோட்டம்:” அருமை//

  அப்புறம் நமக்கு வேற என்ன வேல? இந்த மாதிரி சமூக அக்கறை உள்ள ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கேன்!!

  @krishna
  //Need not feel sorry for it… We all have our rights to express our thoughts provided it doesn’t hurt anybody… so nothing to worry… u can very well tell me ur views.//

  கிருஷ்ணா, நீங்க இன்னும் இத விடலையா? இது சும்மா ஜாலி பதிவு!! இதுக்கு சீரியஸ் ஆகா கூடாது!!

 36. மச்சி உனக்கு வர வர நெறைய பெண் ரசிகைகள் ஆயிட்டாங்க… இனிமே நீ தாலி செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட் எல்லாம் எழுதுனா தான் பொழைக்க முடியும் 🙂

 37. குந்தவை அக்கா, நீங்க தப்பா கணக்கு பண்ணிடீங்க… புவனேஷ் தான் எங்களுக்கெல்லாம் குருவே… ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருப்பாரு. நீங்களும் அதுல ஏமாந்துடீங்க…

 38. @Star
  //சென்னைப் பெண்களின் துப்பட்டா, பரமசிவன் கழுத்துப்பாம்பு போல் நம்மை சௌக்கியமா என்று கேட்கின்றன.//

  அட ஆமானே..

  @ Anand
  //கலைச்சு விடாம, ரசிக்கணும் … சரியா ? //

  இப்படி எல்லாம் பேசுனா, சந்த போடும்போது டிக்கெட் போட்டு கலெக்சன் பாத்துருவேன்!!

 39. //மச்சி உனக்கு வர வர நெறைய பெண் ரசிகைகள் ஆயிட்டாங்க… இனிமே நீ தாலி செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட் எல்லாம் எழுதுனா தான் பொழைக்க முடியும்//
  வா யா சரவணா.. நீ நல்ல KNOt கொடுத்திருக்க.. பாக்கலாம்

  // புவனேஷ் தான் எங்களுக்கெல்லாம் குருவே… ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருப்பாரு. நீங்களும் அதுல ஏமாந்துடீங்க…//

  நான் அமைதி னு சொன்னா அது அடுக்குமா ?

 40. @ Krishna
  ரெண்டு பேரும் அடிக்க கையில எதுவும் கிடைக்காம கஷ்ட படறீங்கனு உதவி பண்ணலாம்னு பாத்தேன். சரி விடுங்க,நல்லவங்களுக்கு காலமே இல்ல (சென்னை எந்த கிரகத்துல கீதுன்னு எனக்கு தான் தெரியுமே… அங்க இருந்து தான வரோம் நாங்க.)

 41. மச்சி இன்னா பா ஒரே பேஜாரா கீது இங்க…
  அல்லாத்தையும் ஷோக்கா சமாளிச்சிகினு கீற நைனா…

 42. // மச்சி உனக்கு வர வர நெறைய பெண் ரசிகைகள் ஆயிட்டாங்க… இனிமே நீ தாலி செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட் எல்லாம் எழுதுனா தான் பொழைக்க முடியும் 🙂 //

  உண்மை சரவணன்…
  என்ன கொடுமை சரவணன் இது?

 43. சண்டை போட்டு போரடிச்சி போச்சு… ரெம்ப நாள் கழிச்சி ஒரு குழாயடி சண்டையை ரசிக்கலாம் என்று வந்தால் அதற்குள் கலைந்து விட்டது… யாரப்பா அந்த துரோகி?

 44. //கிருஷ்ணா ஒரு பொண்ணா ?????!!!!!!!!!!!!?????????
  தல சுத்துதே…
  கண்ணனின் அவதாரத்துக்கு அளவில்லையா…?//

  என்ன ஆனந்த் ‘மோகினி’ அவதாரத்த மறந்துடீங்க போல.

  BTW I am Krishnaveni. 🙂

 45. // அடிக்க கையில எதுவும் கிடைக்காம கஷ்ட படறீங்கனு உதவி பண்ணலாம்னு பாத்தேன். சரி விடுங்க,நல்லவங்களுக்கு காலமே இல்ல //

  அத தான் சரவணா நானும் “நல்லதே பாக்கணும்” , “நல்லதே செய்யணும்” ன்னு சொல்றேன் யாருக்கும் காது கேக்ற மாதிரி தெரியல …. இப்போ பாருங்க உங்கள அடிக்க நீங்களே கஷ்டப்பட்டு உருட்டு கட்டை அனுப்ப வேண்டாம்னு சொன்னா அதுக்கும் கவலை படுறீங்க … என்ன செய்ய 🙄 உண்மைலேயே நல்லதுக்கே காலம் இல்லை பா … ❗ ❗ ❗

 46. //இப்படி எல்லாம் பேசுனா, சந்த போடும்போது டிக்கெட் போட்டு கலெக்சன் பாத்துருவேன்!!//
  இப்ப எல்லாம் black டிக்கெட் ப்ரீயா கிடைக்குதாமே … அட அதாம்ப்பா ஆன்லைன் database..

 47. //என்ன ஆனந்த் ‘மோகினி’ அவதாரத்த மறந்துடீங்க போல.//
  இருந்தாலும் ‘மோகினி’ இங்க வந்து கமெண்ட் பண்ணலயே… கிருஷ்ணவேணி தானே பண்ணிருக்கீங்க…

  //உண்மைலேயே நல்லதுக்கே காலம் இல்லை பா … //
  சரவணன்…, பேசாம வில்லும் அம்பும் ஏற்பாடு பண்ணலாம்ங்க… சண்டை இன்னும் சுவரிசியமா இருக்கும்…

 48. //நான் அமைதி னு சொன்னா அது அடுக்குமா ?//
  அதானே… குருவையே சிஷ்யனாக சொன்னா எப்படி….?

 49. //யாரப்பா அந்த துரோகி?//
  நீங்களும் ரசிச்சுட்டு இருந்தீங்களா அக்கா… அடுத்த ஷோ எப்பனு தெரிஞ்சா எனக்கும் ஒரு மெயில் அடிங்க… 🙂

 50. ஹாய் புவனேஷ் சண்டைக்கு கனல் கண்ணன் ஸ்டண்டா.சும்மா சூப்பராசண்ட போடறிங்க.நல்லா இருக்கு.

 51. இந்த கிருஷ்ணானு பேரு வெச்சாலே உபதேசம் ரொம்ப பண்றாங்கப்பா…

  @ ஆனந்த்
  கையில ஆயுதம் எடுக்க மாட்டேன்னு கிருஷ்ணா சொல்லிட்டாரமே, அதனால நாமளும் எடுக்க வேண்டம்… மன்னிச்சு விட்டுடுவோம்.

 52. too much. am in udumalpet. u insult our udumalpet

  • மோகன்.. நான் ஊரை பத்தி எதுவும் தவறா சொன்ன மாதிரி தெரியலையே.. எத நீங்க Insult னு சொல்லறீங்க ? எனக்கு புரியல!

 53. ஹா ஹா மச்சி மாட்டிகினியா? நல்ல கேளுங்க மோகன்.

 54. வா மச்சி.. நானே இப்போ பதிவுலகம் இருக்கற நிலைமைல “யாராவது பொண்ணு வீட்டு காரங்க என் கூட சண்டைக்கு வாங்களேன்” னு ஒரு பதிவு போட்டு யாரையாவது வம்பிளுக்கனும்னு நினச்சிருந்தேன்.. அதுக்குள்ள இவரு வந்து நான் செய்ய நெனச்சத என்கிட்டே செய்யறாரு!! 🙂

 55. 1) பெண்கள் இன்னும் ரெட்டை ஜடை போடுகிறார்கள்.

  2) தாவணி என்ற பழங்காலத்து உடை உடுத்தும் பெண்கள் இன்னும் நாட்டில் இருகிறார்கள்…

  3) சுடிதார் போடும் பெண்கள், துப்பட்டாவை போடுகிறார்கள்.. அதுவும் முறை படி போடுகிறார்கள்..

  ========
  அதே ஊரு பொண்ண சென்னைல பாத்து இருக்கீங்களா ?

 56. நல்லா கேட்டீங்க பிரவீன்! நான் சென்னைல நாலு வருஷம் குப்பை கொட்டின உடுமலைவாசிங்க! நீங்க சொன்ன மாதிரி எங்க ஊருல ரெட்டை ஜடை, தாவணி எல்லாம் போட்டுட்டு சுத்தின நிறைய பொண்ணுங்க சென்னைல சாயம் போன டைட் ஜீன்சு, டைட் டாப்சு, அல்லது டைட் சுடிதாரு, நெறைய ஜன்னல் வெச்ச ஜாக்கெட்னு ரொம்ப அல்ட்ரா மாடர்னா(??!!) சுத்தறாங்க. இது போதாதுன்னு நாய் நக்கின ஹேர்-ஸ்டைலு (அதாங்க, straightening!!) இல்லைனா தலைல புளி கொழம்பு ஊத்தின மாதிரி பிரவுன் கலர் வேற!

  என்ன கொடுமை சரவணா!!

  Thank God, not all girls are like that… still there are a few girly girls everywhere! Ofcourse, I’m not against western styles or so called modernization, as long as everything is in limits!

 57. @ Srini – This is really too much. How many girls have you seen in chennai like that? I am a girl from udumalpet, lived in chennai for 5 years and moved to US now. I know most of the girls from udumalpet who are working in chennai. I have never seen one girl like that.

  Please do not generalize and insult. If one or two are like that, I do not know why you choose to go and see those people. Why don’t you see good things and good people.

  I was born and brought up in udumalpet from my childhood till masters. I have been in Chennai for about 3 years, moved to US for an year and again moved to Chennai, for an year working for an IT company. Now doing my Phd in US again.
  Everywhere I saw only good people around me.

  Is it because I am lucky or is it because I choose such friends, I will let you think and get answers by yourself….

  Vidhya

 58. @ Vidhya,
  Sorry, I didn’t keep a count on girls from Udumalai wearing not-so-ok kind of dress 😉
  Jokes apart, as I’d mentioned in my post above, NOT ALL GIRLS ARE LIKE THIS!

  But I do have friends in a few IT MNCs in Chennai and I know how few of their female collegues (from Udumalai) dressed up for parties (the ones that doesn’t involve parents/elders).
  I just don’t want to publicize their names! Hold-on… dressing sexy doesn’t mean they are bad (ellarum nalla kudumbathula porandha nalla ponnunga dhaanpa!)

  >> Please do not generalize and insult. <> Everywhere I saw only good people around me <> Is it because I am lucky or is it because I choose such friends, <<
  I don't know! And I never mentioned how MY FRIENDS dress up. But for sure, I know I'm really lucky to have real good people as friends who are working for the society without concentrating fully on improving their bank balance 🙂
  Pls understand that dressing liberally and being good are two different things. And when did you visit Udumalai lately?
  I'm in Udumalai now for my cousins marriage and few girls came to the reception wearing single fleet saree (all were his sister's friends) and most of them had straightened hair!
  Pls do understand that in front of videographers flood light most of the sarees are semi transparent when wore in single fleet style.
  Glad that tight jeans culture didn't show up in Udumalai yet. May be I didn't look around properly…

  PS: I'm also working in US for a health-care industry for past 7 years as a lead sys engr and I've been to parties there too. No comments on few desi girls' dressings!! Probably you never came out of your room??


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: