--புவனேஷ்-- எழுதியவை | ஏப்ரல் 25, 2009

ஜோசியம்!


என் சித்தப்பா ஒருத்தரு, ” நீ தான் எதுக்கும் உதவாம இப்படி இருக்கியே, வா   ஜோசியம் பாக்கலாம்” னு கூப்டாரு..

 

எனக்கு ஒரே சந்தோஷம்.. நம்ம மேலையும் ஒருத்தரு அக்கறை எடுத்து ஜோசியம் பாக்க கூப்படராருனு இல்ல..  இவரு தான்  பக்தி மான்.. என் சந்தேகத்தை எல்லாம் இவரு கிட்ட கேட்கலாம்னு தான்.. வேற யார்கிட்ட நான் கேட்டாலும் அவங்களுக்கு சக்திமான் மாதிரி கோவம் வருது…

 

அவரு பொறுமைனா பொறுமை அப்படி ஒரு பொறுமை.. என்னையவே இத்தனை  நாள் சகிச்சிட்டு இருக்கார்னா பாத்துகோங்க.. பொறுமைசாலி மட்டும் இல்ல, புத்திசாலியும் கூட..

 

 சித்தப்பா ஜோசியம்னா என்ன ?

 

நடக்க போறத முன்னாடியே சொல்லுவாங்க டா.. இது கூட தெரியாதா?

 

அப்போ நான் என்ன வேலை செய்வேன்னு சொல்லுவாங்களா?

 

ஹம்.. நான் உன்ன கூட்டிட்டு போறதே நீ ஏதாவது வேல செய்வியா இல்ல இப்படியே தண்ட சோறு தானான்னு தெருஞ்சுக்க தான்!!

 

நான் வாழ்கைல ஜோசியம் பாக்க வருவனா மாட்டனா னு சொல்லுவாங்களா ?

 

சொல்லுவாங்க.. யார் யார் தலைல ஜோசியம் பாக்கனும்னு இருக்கோ அவங்க தான் போவாங்க.. (என்ன ஒரு விஞ்ஞான ரீதியான பதில் பாத்தீங்களா?? நான் அப்போவே என் சித்தப்பா புத்திசாலி னு சொல்லல? )

 

அப்போ நாம இந்த உலகத்துல ஒரு பொம்மை தானா? யாரோ ஒருத்தர் ஆட்டி வெக்கற மாதிரி தான் ஆடரோமா?

 

இதை தான் ஷேக்ஸ்பியர் கூட “உலகமே நாடக மேடைனு” சொல்லிருகாங்க.. யாரோ ஒருத்தர் இல்ல.. கடவுள்.. எல்லாம் அவர் சித்தம்..

 

நான் போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேன்னு சொல்லுவாங்களா ?

 

நாடி ஜோசியத்துல சொல்லுவாங்கனு கேள்வி பட்டுருக்கேன்.. ஆனா நான் போன ஜென்மத்துல பாவம் பண்ணிருக்கேன் (என் சித்தப்பா, ஒரு ஆன்மீகவாதி அவரு சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்!)

 

என்ன பாவம் சித்தப்பா?

 

என்னனு தெரில.. பெரிய பாவம் செஞ்சுருக்கேன் போல.. இல்லாட்டி உன் கூட இப்படி மாரடிக்க வேண்டி வருமா?

 

(அவரு இப்படி தான் சில நேரம் காமெடி னு நினச்சு மொக்க போடுவார் நீங்க படிங்க..) அப்படீனா போன ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு இந்த ஜென்மத்துல தண்டனை கிடைக்குமா?

 

ஹி ஹி கண்டிப்பா.. அதனால தான நான் உன் கூட இவ்வளவு நேரம் பேசறேன்.. இது தான் எனக்கு தண்டனை..

 

என்னமோ அவரு பெரிய ஜோக் சொன்னா மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சு முடுச்சுட்டு..

ஜோசியத்துல அதுக்கு பரிகாரம் சொன்னாலும் சொல்லுவாங்க.. வா போய் எனக்கு எதாவது பரிகாரம் இருக்கானு பாக்கலாம்.. ஹி ஹி..

 

நீங்க அந்த மாதிரி ஏதாவது பரிகாரம் செஞ்சிருகீங்களா?

 

ஹ்ம்ம்.. ஆனா இது வரைக்கும் எந்த மாற்றமும் தெரியல.. ஆனா சீக்கிரம் மாற்றம் வரும்..

 

நான் இந்த ஜென்மத்துல எதாவது பாவம் செய்வனானு பாத்து தெருஞ்சுக்க முடியுமா?

 

முடியும்.. எனகென்னமோ நீ பிறவி எடுத்ததே பாவம் செய்யனு தோணுது..

 

அத செய்யாம இருக்க பரிகாரம் செய்ய முடியுமா ?

 

முடியும்.. இப்போ ஏன் இவ்வளவு கேள்வி கேக்கற? என்று பொறுமைசாலி சித்தப்பா பொருமினார்..

 

சரி என் தலைல நான் ஜோசியம் பக்க மாட்டேன்னு எழுதிருக்குனு வெச்சுக்குவோம்

 

வெச்சுக்குவோம்..

 

நான் ஒரு கொலை செய்ய போறேன் வெச்சுக்குவோம்..

 

ஏன்டா இப்படி வினோதமா யோசிக்கற ? யார கொல்ல போற ?

 

(வேற யார? என் சித்தப்பனத்தான்..) சும்மா பேச்சுக்கு சித்தப்பா,,

 

சரி சொல்லு.. அப்படி எழுதிருக்கு..

 

அப்போ நான் இந்த தடவ செஞ்ச கொலைக்கு அடுத்த ஜென்மத்துல தண்டனை கிடைக்குமா?

 

 

என்ன கொலை செய்ய சொல்லி எழுதி கொடுத்தவரே அடுத்த ஜென்மத்துல எனக்கு தண்டன கொடுப்பாராதமிழ் பட வில்லன விட பெரிய மாபியாவா இருப்பாரு  போல..

 

நீ எல்லாம் என்று ஏதோ சாபம் கொடுக்க வந்தாரு.. அப்புறம் ஒன்னும் சொல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டார்..

 

சித்தப்பா, ஏன் கோவமா போறீங்க? நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்.. சித்தாப்பா பேசுங்க..

 

என் சித்தப்பா போன ஜென்மத்துல பாவம் செஞ்சிருக்கேன், அதுக்கு பரிகாரம் செஞ்சாச்சு சீக்கிரம் மாற்றம் வரும்னு சொன்னாரு, இவளோ சீக்கிரம் வரும்னு நான் நினைக்கல.. அவரே கூட நினைச்சிருக்க மாட்டாரு போல..  ஒருவேள உண்மையாலுமே ஏன் கூட பேசறது தான் அவருக்கு தண்டனையா இருந்திருக்குமோ?

 

எப்படியோ பாவ விமோசனம்  கிடைச்சிருச்சுனு அவரு கோயிலுக்கு நன்றி கடன் ச்சீ ச்சீ நேர்த்திகடன் செலுத்த போயிருக்கார்..

 

ஆனா என்னமோ தெரியலீங்க.. நான் என்ன பேசுனாலும் குடும்பத்துல யாராவது கோவப்பட்டு ஏன் கூட பேச மாட்டிங்கறாங்க.. மொதல்ல  என் ஜாதகத்த எடுத்துட்டு நல்ல போய் ஜோசியரை பாக்கணும்.. அநேகமா ஏழரை சனி உச்சத்துல இருக்கும்னு நினைக்கிறேன்!!


Responses

 1. //என் சித்தப்பா ஒருத்தரு, ” நீ தான் எதுக்கும் உதவாம இப்படி இருக்கியே, வா ஜோசியம் பாக்கலாம்”//

  மச்சி என்னடா சாதரணமா சித்தப்பானு சொல்லிடியே… உன்னை பத்தி சரியா புரிஞ்சிகிட்ட சித்தப்பானு சொல்லு…

 2. //சித்தப்பா ஜோசியம்னா என்ன ?

  நடக்க போறத முன்னாடியே சொல்லுவாங்க டா.. இது கூட தெரியாதா?//

  ஆடு நடக்கும், மாடு நடக்கும்… ஏன் மனுஷன் கூட நடப்பான். அட நான் கூட நடக்க போறதா முன்னாடியே சொல்றேன்… அப்போ எனக்கும் ஜோசியம் தெரியுமோ ?

 3. //நான் உன்ன கூட்டிட்டு போறதே நீ ஏதாவது வேல செய்வியா இல்ல இப்படியே தண்ட சோறு தானான்னு தெருஞ்சுக்க தான்!! //

  அப்பாவியா இருக்காரே டா உங்க சித்தப்பா… இன்னுமா தெரியல அவருக்கு???

 4. //ஹி ஹி கண்டிப்பா.. அதனால தான நான் உன் கூட இவ்வளவு நேரம் பேசறேன்.. இது தான் எனக்கு தண்டனை..//

  நாங்க கூட எதோ பெரிய பாவம் பண்ணி இருக்கோம் போல… இதெல்லாம் படிக்க வேண்டியதா இருக்கே 😦

 5. //என்ன கொலை செய்ய சொல்லி எழுதி கொடுத்தவரே அடுத்த ஜென்மத்துல எனக்கு தண்டன கொடுப்பாரா? தமிழ் பட வில்லன விட பெரிய மாபியாவா இருப்பாரு போல..//

  நியாயமான கேள்வி மச்சி… இத சொன்னா கிறுக்கன்னு சொல்றாங்கப்பா

 6. //நீ எல்லாம் என்று ஏதோ சாபம் கொடுக்க வந்தாரு.. அப்புறம் ஒன்னும் சொல்லாம நடக்கா ஆரம்பிச்சுட்டார்..//

  அவரு என்ன சொல்ல வந்தாருன்னு எனக்கு தெரியும்… சரி விடு அத ஏன் நான் சொல்லிக்கிட்டு… அது தான் உனக்கும் தெரியுமே 🙂

 7. //அநேகமா ஏழரை சனி உச்சத்துல இருக்கும்னு நினைக்கிறேன்!!//

  மச்சி சனி உச்சத்துல இல்ல… கண்ணாடில நல்லா வாய திறந்து பாரு… அங்க டபுள் பெட் போட்டு ஹோம் தியேட்டர் எல்லாம் வெச்சு சந்தோசமா செட்டில் ஆயிருக்காரு…

  என்ன மக்களே, நான் சொல்றது சரி தானே?

 8. // கண்ணாடில நல்லா வாய திறந்து பாரு… //
  ஹி ஹி … நம்ம பயல் அஞ்சாநெஞ்சனப்பா… சனி பகவான வாய்க்குள்ள அடக்கி வச்சிருக்காப்டில…

 9. புவனேஷ் தம்பி, உங்க பதிவை விட சரவணனோட மறுமொழிகள் நல்லாயிருக்கு.
  என்னோட பதிவை எல்லாம் படிக்கிறீங்களே அதுவே நீங்க போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலன்னு நினைக்கிறேன்.

 10. வாப்பா சரவணா..
  இல்ல மச்சி நல்ல புருஞ்சா ஏன் கூட ஏன் பேசறாரு ?

  //ஆடு நடக்கும், மாடு நடக்கும்… ஏன் மனுஷன் கூட நடப்பான். அட நான் கூட நடக்க போறதா முன்னாடியே சொல்றேன்… அப்போ எனக்கும் ஜோசியம் தெரியுமோ ?//

  ஸ்ரீல ஸ்ரீ சரவணா பவன் னு பேர மாத்தி வெச்சு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணு.. வொர்க் அவுட் ஆகும்!!

  //அப்பாவியா இருக்காரே டா உங்க சித்தப்பா… இன்னுமா தெரியல அவருக்கு???//

  ஆமாம் மச்சி அவரும் என்னை மாதிரி அப்பாவி!!

 11. //நாங்க கூட எதோ பெரிய பாவம் பண்ணி இருக்கோம் போல… இதெல்லாம் படிக்க வேண்டியதா இருக்கே //

  குழந்தாய் இது சாபம் இல்லை வரம்!!

  //அவரு என்ன சொல்ல வந்தாருன்னு எனக்கு தெரியும்… சரி விடு அத ஏன் நான் சொல்லிக்கிட்டு… அது தான் உனக்கும் தெரியுமே //

  நோ நோ.. எனக்கு எதுவும் தெரியாது..

  //மச்சி சனி உச்சத்துல இல்ல… கண்ணாடில நல்லா வாய திறந்து பாரு… அங்க டபுள் பெட் போட்டு ஹோம் தியேட்டர் எல்லாம் வெச்சு சந்தோசமா செட்டில் ஆயிருக்காரு…//

  ஆமான டா.. நாக்குல சனி, மூக்குல ஞாயிறு உக்காந்திட்டு இருக்காரு..போடா போய் புள்ள குட்டிய படிக்கவை.. காப்பி தனமா பேசிகிட்டு..

 12. //ஹி ஹி … நம்ம பயல் அஞ்சாநெஞ்சனப்பா… சனி பகவான வாய்க்குள்ள அடக்கி வச்சிருக்காப்டில…//

  அழகிரி அண்ணே.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..எங்க வீட்டுக்கு ஆட்டோ வேண்டாம்..

  //புவனேஷ் தம்பி, உங்க பதிவை விட சரவணனோட மறுமொழிகள் நல்லாயிருக்கு.//

  சரவணா நான் சொன்னப்போ நீ நம்பல.. இப்போ குந்தவை அக்கேவே சொல்லீடாங்க பாத்தியா??

 13. Good one boss

 14. உங்க சித்தப்பாவும் நாங்களும் ரொம்ப பாவம்

 15. //அவரு பொறுமைனா பொறுமை அப்படி ஒரு பொறுமை..

  yengala vidava…

  //(அவரு இப்படி தான் சில நேரம் காமெடி னு நினச்சு மொக்க போடுவார் நீங்க படிங்க..)

  Unga Chitthappavaache…

  //ஜோசியத்துல அதுக்கு பரிகாரம் சொன்னாலும் சொல்லுவாங்க.. வா போய் எனக்கு எதாவது பரிகாரம் இருக்கானு பாக்கலாம்

  Unga post viewers kum edhavadhu parigaaram irukaanga…

  Saravana – Comments ellam romba nalla irukku…

 16. Hi Bhuvanesh,
  Sorry for the delay…..
  You have addressed very serious topics….

  //என்ன கொலை செய்ய சொல்லி எழுதி கொடுத்தவரே அடுத்த ஜென்மத்துல எனக்கு தண்டன கொடுப்பாரா? //

  Hey I feel that you have confused destiny with willful action. Surely destiny has its role in our life but thats not the only cause of actions in our life we do react willfully.
  In simple words today’s destiny is result of past willful action ….
  Let me try to map my understanding or views on these two topics with some technical terminologies we know…

  God has written Design patterns or Templates. He has not made any hard and fast rule which says that a particular person has to take a particular pattern in life. He has given full freedom to choose the pattern but for sure the result depends the pattern you follow as he has clearly defined actions and their corresponding reactions. Its merely a black box to us.
  There are multiple(limited) paths a person can take depending on his destiny but only thing he has to keep in his mind is “One cannot escape the consequences of ones own actions” (What you do comes back to you – You Reap What You Sow)

  Joshiyam – It can be compared to some management system… It has all the records of your past.With the help of it the person who has learnt it properly can tell u probable future explaining the paths u can take. Ofcourse this system fails in telling your exact future as your willful action has its own role. But by analysing the patterns taken by you it can identify some errors/mistakes (pavam) and can let you know possible rectifications (pariharam) depending on the intensity or type of error conditions. Rectification might be as simple as just ‘type casting’ or as hard as a ‘design change’ or as worst as unrectifiable ‘fatal error’.

  Hey its purely my conception… Pls bear with mistakes if any.. Hope it isn’t too boring…

  Have a nice time
  Krishna

 17. //என்னையவே இத்தனை நாள் சகிச்சிட்டு இருக்கார்னா பாத்துகோங்க..//
  //ஹி ஹி கண்டிப்பா.. அதனால தான நான் உன் கூட இவ்வளவு நேரம் பேசறேன்.. இது தான் எனக்கு தண்டனை..//

  இத தான் கர்ம பலனை அனுபவிச்சே தீரனும்ன்னு சொல்றாங்களோ 🙄

  //நான் இந்த ஜென்மத்துல எதாவது பாவம் செய்வனானு பாத்து தெருஞ்சுக்க முடியுமா?//

  இதுவரைக்கும் செய்ததெல்லாம் ❓

 18. //ஆடு நடக்கும், மாடு நடக்கும்… ஏன் மனுஷன் கூட நடப்பான். அட நான் கூட நடக்க போறதா முன்னாடியே சொல்றேன்… அப்போ எனக்கும் ஜோசியம் தெரியுமோ ?//

  சரவணா இது தான் ஆத்ம ஞானத்தின் முதல் படியா ❓

  • அப்படி தான் இருக்கும். பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

 19. மச்சி இத்தனை நாளா நான் 2 மார்க் அப்படின்னு தான் நெனச்சிட்டு சின்ன சின்ன கமெண்ட் போட்டுட்டேன்… இனி பாரு நானும் 10 மார்க் வாங்குற அளவுக்கு கமெண்ட் போடுவேன் 🙂

  Disclaimer:
  இது எந்த ஒரு தனி நபரையோ அல்லது சம்பவத்தையோ குறிப்பது அல்ல. அப்படி தோன்றினால் அது முழுக்க முழுக்க அனிச்சையாய் நிகழ்ந்தது என் தெரிவித்து கொள்கிறேன்.

 20. மார்க்ஸ் ஆ அய்யோ … இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா? Do we have -ve marking ? 🙄
  நான் இந்த விளையாட்டுக்கு வரலபா

  //Disclaimer://
  எங்கிருந்து இத காப்பி பேஸ்ட் பண்ணீங்க ? 🙄
  ஏனோ இதை படித்தவுடன் ‘குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ பழ மொழி தான் ஞாபகம் வந்தது ……


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: