--புவனேஷ்-- எழுதியவை | மே 6, 2009

இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!


“ஹே வாசு அங்க பாரு…” 
 
 “எங்க தமிழ்??”, இது வாசு
 
“லட்சுமிய பாரு.. செம அழகு இல்ல? லட்சுமியோட முடி, மூக்கு, கண்ணு, கழுத்து..” என்று தமிழ் வர்ணிக்க ஆரம்பிக்க..
 
வாசு கடும் கோபத்தோடு “போதும் நிறுத்து.. அடுத்து நீ என்ன சொல்லுவன்னு தெரியும்”
 
“ஏன் இப்போ இவ்வளவு டென்ஷன்?”
 
“உனக்கு என்ன தைரியம்? என் ஆள பத்தி என் கிட்டவே வர்ணிக்கற? இதுல ஏன் டென்ஷன் னு கேள்வி வேற ? “
 
“உன் ஆளா? உங்களுக்கு எத்தன குழந்தைங்க?” என்று தமிழ் நக்கல் செய்ய..
 
“நிறுத்து உன் விளையாட்டு தனத்தை.. நான் ரொம்ப  சீரியஸா ட்ரை பண்ணறேன்”
 
தமிழ், “நானும் சீரியஸா த்தான் ட்ரை பண்ணறேன்.. ஆனா அதுகளுக்கு இப்படி விளையாட்டு தனமா இருந்தாதான் புடிக்கும்.. அதான் இப்படி விளையாட்டாய் ட்ரை பண்ணறேன்”
 
“ஐயோ போதும் என்ன விடு.. இப்போ உனக்கு என்ன வேணும்?”
 
“ஏன் இப்படி கத்தற? நானும் நீயும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்ஸ்.. அது இப்ப வந்தது”
 
வாசு கொஞ்சம் பீலிங் உடன், “உனக்கு வேணா இப்போ வந்ததா இருக்கலாம்”
 
“உனக்கு என்ன ரெண்டாம் நூற்றாண்டுலயே  வந்துருச்சா?? லட்சுமி  இந்த வருஷம் தான் நம்ம ஸ்கூல்ல சேந்திருக்கு.. ரெண்டு மாசம் தான் ஆச்சு..” இது தமிழ்
 
“சரி அப்போ.. லட்சுமியவே யார பிடிச்சிருக்குன்னு கேப்போம்.. இன்னொருத்தர் விலகிக்கணும்.. ஓகே வா ?”
 
“எல்லாம் காதல் தேசம் கத்துக்கொடுத்து இல்ல?”
 
வாசு கிண்டலுடன் “ஓகே வா இல்லையா.. சீக்கிரம் சொல்லு முஸ்தப்பா”.. அந்த கிண்டலில் லட்சுமி தனக்குத்தான் என்ற ஆணவம் இருந்தது..
 
இவர்கள் பேசும் லட்சுமி ரொம்ப தூரத்தில் இல்லை.. முன்னாடி பெஞ்ச் தான்.. எப்பவும் போல் பாட புத்தகத்தில் இருந்த நியூட்டனிடம் சண்டை போட்டு கொண்டிருந்த லட்சுமியை கரகர “தமிழ்” குரல் “ஹே லட்சுமி” என்று அழைத்தது..
 
எப்பவும் ரவுடியா? இல்லை வாசு கிண்டல் செய்த கோவமா? என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியல..
 
என்ன என்பதை போல பார்த்த லட்சுமியை பேச விடாமல் தமிழ், “உனக்கு என்ன பிடிச்சிருக்கா? இல்ல வாசுவை பிடிச்சிருக்கா? “
 
லட்சுமி ஷாக் ஆகி,“என்னது??’
 
“இல்ல நீ யார லவ் பண்ணற?” என்று தமிழ் கேட்டதை பார்த்துகொண்டிருந்த வாசுவிற்கு விக்கியது.. தான் பார்த்து பார்த்து செதுக்கிய கோட்டை மண்ணோடு மண் ஆனது மாதிரி இருந்தது.
 
லட்சுமி பதறி அடித்துக்கொண்டு “என்னது பன்னெண்டாவது படிக்கும்போதே லவ் வா ?? போங்க போய்  நல்லா படிச்சு உருப்படற வழிய பாருங்க”
 
“ஏன் உன்ன லவ் பண்ணுனா உருபடாம போய்டுவோமா” என்று வாசு கேட்க .. லட்சுமிக்கும் சிரிப்பு வந்தது..
 
அமைதியாய் இருந்தா அடக்கம் ஆகவேண்டியது தான் என்று முடிவுக்கு வந்த வாசு அவசர அவசரமாய், “அட்வைஸ் எல்லாம் வேண்டாம்.. சொல்லு யார லவ் பண்ணற? எப்படியும் யாரையாவது கட்டிக்க போற.. அது ஏன் நாங்களா இருக்க கூடாது?”
 
லட்சுமி சிரிப்பை அடக்கிக்கொண்டு, “என்னது ‘அது ஏன் நாங்களா இருக்க கூடாது’ தா ? அப்போ உங்க ரெண்டு போரையும் கட்டிக்கவா?? “.. கடைசி வரி சொல்லும் போது சிரிப்பு வெடித்து சவுண்ட் கொஞ்சம் அதிகம் ஆனது..
 
அந்த நேரம் பாத்து அங்கு வந்த கணக்கு டீச்சர்..
 
லட்சுமி எழுந்திரி..
 
என்ன மிஸ் ?
 
சொல்லு என்ன சொன்ன??
 
ஒன்னும் இல்ல மிஸ் ??
 
எனக்கு கேட்டுச்சு .. சொல்லு என்ன சொன்ன ?
 
மிஸ் .. அது வந்து..
 
அப்போ உங்க ரெண்டு போரையும் கட்டிக்கவா?? னு தானே சொன்ன ?
 

 
சொல்லு யார பாத்து சொன்ன ?
 
“வாசுவும், தமிழும் என்ன கிண்டல் செஞ்சாங்க.. அதான் விளையாட்டுக்கு அப்படி சொன்னேன்” என்று லட்சுமி சொல்லவும் இருவர் முகமும் பயத்தில் இருண்டது..
 
அவர்களை அறியாமலே எழுந்து நின்றனர்..
 
கணக்கு டீச்சர் இருவர் முகத்தையும் பார்த்து, “ஒ.. உங்கள பார்த்து தானா ??”
 
இருவரும் ஆமாம் என்பதை போல் தலை ஆட்டிவிட்டு… பலி கொடுக்கப்படும் ஆட்டை போல் தலை குனிந்து நின்றனர்..
 
“தமிழ்செல்வி, வசுமதி உக்காருங்க”
“லட்சுமிபதி.. நீ கிளாஸ் ல இருந்து வெளிய போ.. ”
“இது எல்லாம் எங்க உருபடப்போகுது.. இப்போ எல்லாம் மீச மொலச்சவுடனே காதல், கல்யாண ஆச எல்லாம்.. இந்த காலத்து பசங்களே இப்படித் தான்..”
(Moral of the story: என்னதான் “கணக்கு” பண்ணு போது கணக்கு டீச்சர் வந்து கையும் களவுமா புடுச்சாலும், கணக்கு டீச்சருக்கு “கணக்கு” புரியலைனா இப்படித்தான்..)

Responses

 1. மச்சி வெறும் பேர வெச்சு இப்படி ஒரு ட்விஸ்ட் குடுப்பேன்னு எதிர் பாக்கலடா… right turn, left turn எடுப்பேன்னு பாத்தா, அநியாயத்துக்கு இப்படி ஒரு U-turn போட்டு கவுத்துட்டியே மச்சி…

 2. //“என்னது பன்னெண்டாவது படிக்கும்போதே லவ் வா ?? //

  போங்கப்பு… இப்போவெல்லாம் ரெண்டாப்பு படிக்கும் போதே சோடி போட்டு சுத்துதுங்க ஊருக்குள்ள… நாட்டு நடப்பு தெரியாம இருக்கியலே…

 3. //எனக்கு கேட்டுச்சு .. சொல்லு என்ன சொன்ன ?//

  அது தான் கேட்டுச்சு இல்ல… அப்பறம் என் மறுபடியும் சொல்ல சொல்றீங்க? கேள்வி கேக்கறதே பொழப்பா வெச்சிருக்காயங்க இவங்கெல்லாம்…

 4. //”தமிழ்செல்வி, வசுமதி உக்காருங்க”
  “லட்சுமிபதி.. நீ கிளாஸ் ல இருந்து வெளிய போ.. “
  “இது எல்லாம் எங்க உருபடப்போகுது.. இப்போ எல்லாம் மீச மொலச்சவுடனே காதல், கல்யாண ஆச எல்லாம்.. இந்த காலத்து பசங்களே இப்படித் தான்..”//

  இத தான் தேன் குடிக்கிறது ஒருத்தன், விரல் சூப்புறது இன்னொருத்தன்னு சொல்லுவாங்க

 5. //Moral of the story://

  இப்போ இதெல்லாம் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டியா??? சரி சொல்லு எங்க நேரம்… இதையும் கேட்டு தொலைக்கிறோம்… (முல்லா மன்னிப்பாராக)

 6. //என்னதான் “கணக்கு” பண்ணு போது கணக்கு டீச்சர் வந்து கையும் களவுமா புடுச்சாலும், கணக்கு டீச்சருக்கு “கணக்கு” புரியலைனா இப்படித்தான்..//

  எவ்வளவு பெரிய தத்துவத்தை சாதாரணமா சொல்லிட்டான்… socrates பக்கத்துல நல்ல எடமா பாத்து நம்ம பயலுக்கு ஒரு சிலை வெச்சிருங்கப்பா.

 7. மச்சி கடைசியா ஒரு எச்சரிக்கை மட்டும் சொல்லிடறேன்…

  “இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!” – இப்படி ஒரு title வெச்சிருக்க. எதுக்கும் கொஞ்சம் உசாரா இரு. நமக்கெல்லாம் சங்கம் கூட கெடையாது…

 8. //நமக்கெல்லாம் சங்கம் கூட கிடையாது.

  என்னப்பா சங்க தலைவர் கிட்ட போய் சங்கம் இல்லைன்னு சொன்னா என்னா அர்த்தம். தலைவரே நோட் பண்ணிக்கோங்க.

  கதை எழுதுவதில் சூரப்புலி ஆயிட்டீங்களே தம்பி. நல்லக்கற்பனை.

 9. Super Mokkai.

 10. வாப்பா சரவணா..

  //மச்சி வெறும் பேர வெச்சு இப்படி ஒரு ட்விஸ்ட் குடுப்பேன்னு எதிர் பாக்கலடா… right turn, left turn எடுப்பேன்னு பாத்தா, அநியாயத்துக்கு இப்படி ஒரு U-turn போட்டு கவுத்துட்டியே மச்சி//

  கத நல்லா இருக்குனு சொல்லறியா, இல்லன்னு சொல்லறியா?

  //இப்போ இதெல்லாம் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டியா??? சரி சொல்லு எங்க நேரம்… இதையும் கேட்டு தொலைக்கிறோம்… (முல்லா மன்னிப்பாராக)//
  அப்புறம் இத மட்டும் விட்டு வெச்சுடோம்னு ஒரு குறை இருக்க கூடாது இல்ல ? ( யூ மீன் முட்டாள் முன்னா ?)

  //“இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!” – இப்படி ஒரு title வெச்சிருக்க. எதுக்கும் கொஞ்சம் உசாரா இரு. நமக்கெல்லாம் சங்கம் கூட கெடையாது//

  டாப் ஸ்டார் பிரசாந்த் தலைமையில் ஒரு சங்கம் இருக்குனு நினைக்கிறன்.. (அதில் நான் உறுப்பினர் இல்லை !!)

 11. //என்னப்பா சங்க தலைவர் கிட்ட போய் சங்கம் இல்லைன்னு சொன்னா என்னா அர்த்தம். தலைவரே நோட் பண்ணிக்கோங்க.

  கதை எழுதுவதில் சூரப்புலி ஆயிட்டீங்களே தம்பி. நல்லக்கற்பனை//

  அதானே ?? சரவணா கொஞ்சம் பழசெல்லாம் ஞாபகப்படுத்தி பாரு!!

  நன்றி அக்கா.. (சூரப்புலி?? நீங்களும் கண்மணி கூட சேந்து ஹி-மேன் பாக்க ஆரம்பிச்சுடீங்களா ?)

 12. //Super Mokkai.//

  வாங்க கார்த்திகேயன் சார்.. உங்கள் பாராட்டுக்கு(!) நன்றி..

  (ஏன் மீனா னு கமெண்ட் போட்டீங்க? அப்புறம் சரவணா வந்து பாத்துட்டு உனக்கு மட்டும் பொண்ணுங்க கமெண்ட் போடறாங்கன்னு சொல்லுவான்.. இது தேவையா ?)

 13. //சூரப்புலி?? நீங்களும் கண்மணி கூட சேந்து ஹி-மேன் பாக்க ஆரம்பிச்சுடீங்களா ?//
  எனக்கு என்னவோ நம்ம தலைவர் கண்மணி போல் ஆயிட்டார்னு தோணுது… ஹீ-மேன் எல்லாம் இன்னும் டிவி ல வருதா என்ன?

 14. ஆனந்த் அங்கிள் உங்களுக்கு தெரியாதா ?? நான், கண்மணி, ஸ்ரீராம் எல்லாம் கிட்ட தட்ட ஒரே வயசு குழந்தைங்க..
  ஹிமேன் பாக்கணும்னா நீங்க சுட்டி டி.வி பாக்கணும்.. டோரா புஜ்ஜு பத்தி எல்லாம் கேள்வி பட்டது இல்லையா ?

 15. LOL.. 🙂 I was expecting some twist..from the beginning..!!but certainly not guessed it right..

  vara vara ponnungalum uruppadaama poraangale .. :(((

 16. ஹாய் புவனேஷ் இது ரொம்ப பயங்கர மொக்கை .ஆனா படிச்சதும் சிரிச்சேன்.நீங்க இப்படி கதைய மாத்துவிங்கன்னு எதிர் பார்க்ல.பேர்லயே இவ்வளவு குழப்பமா .பெற படிச்சிட்டு கொஞ்சம் ஏமாந்துட்டேன்.

 17. டேய் மச்சி .. உண்மையிலேயே நீ ஒரு குட்டி சுஜாதா டா …..

 18. வாங்க ஜானு அக்கா.. ரொம்ப நாளா காணோம்?

  //vara vara ponnungalum uruppadaama poraangale .. ((

  அப்படி எல்லாம் “ஆண்”மீகம் பேச கூடாது.. பெண்கள் நம் நாட்டின் கண்கள்..

 19. வாங்க சித்ரா ஜி, எப்படி இருக்கீங்க?

  //நீங்க இப்படி கதைய மாத்துவிங்கன்னு எதிர் பார்க்ல.பேர்லயே இவ்வளவு குழப்பமா .பெற படிச்சிட்டு கொஞ்சம் ஏமாந்துட்டேன்

  நன்றி நன்றி நன்றி !!

 20. //டேய் மச்சி .. உண்மையிலேயே நீ ஒரு குட்டி சுஜாதா டா …..//

  அண்ணா.. வேண்டாம்னா..அவரு தல.. நான் ஏதோ கிறுக்கறேன்..
  எனக்கே இது ரொம்ப ஓவரா தெரியுது.. இன்னொரு தடவ இப்படி சொன்னா நானே மறியல் செஞ்சு வன்முறைல இறங்கிருவேன்..

 21. //“இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!” //
  தலைப்பை பார்த்தவுடன் அய்யோ இப்போ என்ன குற்றச்சாட்டோ ன்னு தோனுச்சு …..
  குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்
  (- தருமியான நாகேஷ் ஸ்டைல்ல படிக்கவும் )

 22. ஹாய் bhuvanesh , இப்படி ஒரு twist இருக்கும்னு எதிர் பார்க்கவே இல்ல. very nice. முடிவு படிச்ச உடனே திரும்பவும் முதலில் இருந்து வாசிச்சேன் சிரிப்பு தான் வந்தது…

 23. weight kaateeta thalaiva…… intha ponungale ipadi dha!!!!!!

 24. //weight kaateeta thalaiva…… intha ponungale ipadi dha!!!!!!

  வாங்கணா.. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நன்றி நன்றி!! அடிக்கடி வாங்க!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: