--புவனேஷ்-- எழுதியவை | மே 15, 2009

பசங்க !!


 

மே 13 விடுமுறை தினம் என்பதால்.. நானும் நண்பனும் எதாவது படத்துக்கு போகலாம் என்று கிளம்பினோம். எங்களை பொறுத்தவரை என்ன படம் என்பது முக்கியம் இல்லை.. தியேட்டர் தான் முக்கியம்.. போவது ஏ/சி தியேட்டராக இருந்தால் மட்டும் போதாது ஏ/சி போடும் தியேட்டராக இருக்க வேண்டும் என்பது முடிவு.. சென்னை வெயிலில் வதங்கும் நல்ல உள்ளங்கள் பலர் இந்த முடிவை ஆமோதிப்பார்கள்.

மாயாஜால் கிளம்பினோம்.. அடிக்கும் வெயிலில் அனிமல்ஸ் கூட வெளியில் வர வில்லை போல.. அங்கங்கே காதலர்கள் மட்டும் சென்று கொண்டு இருந்தார்கள்.. அதுவும் வழக்கத்தை விட கம்மி..

ஒரு வழியாய் அங்கே போய் சேர்ந்தோம்.. பைக் பார்கிங் பத்து ரூபாய்.. வெயிலில் தான் நிறுத்தவேண்டும்.. என் பைக் ரொம்ப பாவம்..ஏன்னா அதுக்கு இந்த வெயில் எல்லாம் பழக்கம் கிடையாது.. கோவைல ஹாயா இருந்துச்சு.. இங்க கொண்டு வந்து நூடுல்ஸ் ஆக்கறேன்… அதுக்கு வாய் இருந்தா “இதுக்கா டா என்ன உங்க அண்ணன் கிட்ட இருந்து தத்து எடுத்துட்டு வந்தனு” கத்தும்..
மதியம் மூணு மணிக்கு போய் சேந்தோம்.. அந்த நேரத்துக்கு எந்த படமும் அங்க இல்ல.. சரி 4:45 PM க்கு பசங்க இருக்கு.. வீட்டுக்கு போனாலும் டி.வி தான் பாக்கணும்.. அதை இங்க ஏ/சில பாப்போம் னு முடிவு செஞ்சு டிக்கெட் வாங்கி உள்ளே போனோம்..

அங்க பிக் ஸ்க்ரீன்ல சன் மியூசிக் ஓடுச்சு.. பொழுது போகாம அதுல வர எஸ் எம் எஸ் படிச்சு டைம் பாஸ் பண்ணினோம்..

அங்க இருந்த ஒன்னு ரெண்டு கன்னிகள (அதான் பிகர் னு சொல்லுவாங்க இல்ல.. ) பாத்தோம்.. அந்த கன்னிகள் கூட இருந்த ‘கண்ணி’யவான்கள் என்னை முறைத்திருக்கனும்.. நான் தான் அவங்கள பாக்கவே இல்லையே அதனால சரியா தெரியல..
 
சரி படம் எப்படி இருந்தது னு தான கேக்கறீங்க?? படம் கலக்கல்.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாம இருப்பது அந்த படத்துக்கு நான் செய்யும் மரியாதை.. இயக்குனர் புதுவரவாம்.. நல்வரவு..

படத்தில் ரொம்ப பிடித்தது:
 

 1. அந்த குழந்தைகள், அவர்கள் நடிப்பு. அவர்கள் நடித்தார்களா இல்லை இப்படி தான் ஷூடிங்கில் சண்டை போட்டார்களா என்ற சந்தேகம் இப்பவும் உண்டு..
 2. ஒரு சில இடங்களை தவிர, குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பது. அவர்கள் வயதுக்குரிய முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது மிக அழகு. பல படங்களில் குழந்தை நட்சத்திரம் வயதிற்கு மீறிய அறிவுடன் நடந்து கொள்ளும் (உதாரணம் : கன்னத்தில் முத்தமிட்டால்)..
 3. இயல்பான திரைக்கதை.. தேவை இல்லாத ட்விஸ்ட் எல்லாம் இல்லை.. வீணாக படம் பார்பவர்களை பரபரப்பு ஆக்க எல்லாம் முயற்சிக்கவில்லை..
 4. வேகா.. ச’ரோஜா’ இந்த படத்தில் கரிசகாட்டு பூவாக மலர்ந்திருக்கிறார். இவர் சமந்தப்பட்ட காதல் காட்சிகள் எல்லாம் சூப்பர்.. அந்த பையனும் (பேரு தெரியல) நல்லா நடித்திருக்கிறார்..
 5. செல் போன் ரிங் டோன் வைத்து காதல் காட்சிகளை நகர்த்தியிருப்பது அருமை..
 6. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ்.. காதலர்கள் ஓடுவதும் ஊர் மக்கள் துரத்துவதும் செம சேசிங்.. (இது எல்லா படத்திலும் தானே வருதுனு சொல்லறவங்க படம் பாத்துட்டு சொல்லுங்க 🙂 ஹி ஹி !!)
 7. கேமரா, ஒளிப்பதிவு, இசை, மற்ற நடிகர்கள்னு சொல்லீட்டே போகலாம்..

குறை:
ஒரு நல்ல படம் எடுத்தா அதில் குறை கண்டு’பிடிப்பது’ எனக்கு பிடிப்பதில்லை..

மொத்தத்தில் பசங்க – புள்ள குட்டியோட பாருங்க.


Responses

 1. //மே 13 விடுமுறை தினம் என்பதால்.. நானும் நண்பனும் எதாவது படத்துக்கு போகலாம் என்று கிளம்பினோம்//

  காலேஜ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போயிட்டு இருந்தோம் இப்போ லீவுன்னு படத்துக்கு போற நிலமைக்கு வந்துட்டமே… 😦 ஒரு வேலை வயசாயிருச்சோ???

 2. //போவது ஏ/சி தியேட்டராக இருந்தால் மட்டும் போதாது ஏ/சி போடும் தியேட்டராக இருக்க வேண்டும் //

  ரொம்ப கரெக்ட் மச்சி… திடமா வழிமொழிகிறேன்

 3. //அடிக்கும் வெயிலில் அனிமல்ஸ் கூட வெளியில் வர வில்லை போல//

  இல்லையே மச்சி… எனக்கு தெரிஞ்சே ரெண்டு கெளம்பி மாயாஜால் போச்சே…

 4. //அந்த பையனும் (பேரு தெரியல) நல்லா நடித்திருக்கிறார்..//

  அதானே பையனாச்சே எப்படி பேரு தெரியும்? out of focusla ஒரு பொண்ணு வந்தா கூட அந்த பொண்ண பத்தி full bio-data ஒப்பிப்பீங்க…

 5. //அந்த கண்ணிகள் கூட இருந்த ‘கண்ணி’யவான்கள் என்னை முறைத்திருக்கனும்..//

  பின்ன என்ன பண்ணுவாங்க? பாராட்டி பத்மாபூசனா தருவாங்க?

 6. //மொத்தத்தில் பசங்க – புள்ள குட்டியோட பாருங்க.//

  புள்ள குட்டி இல்லாத ஒண்டி கட்டைங்க பாக்க கூடாத அப்போ?

 7. //காலேஜ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போயிட்டு இருந்தோம் இப்போ லீவுன்னு படத்துக்கு போற நிலமைக்கு வந்துட்டமே… ஒரு வேலை வயசாயிருச்சோ???//

  நான் ஸ்கூல் பையன்.. நான் லீவ் னு சொன்னது எக்ஸாம் லீவ் சரவணா அங்கிள் .. 🙂

  //இல்லையே மச்சி… எனக்கு தெரிஞ்சே ரெண்டு கெளம்பி மாயாஜால் போச்சே…//

  கரெக்ட் மச்சி ரெண்டு சிங்கம் படத்துக்கு போச்சு!!

  //அதானே பையனாச்சே எப்படி பேரு தெரியும்? out of focusla ஒரு பொண்ணு வந்தா கூட அந்த பொண்ண பத்தி full bio-data ஒப்பிப்பீங்க//

  அது தான ஆண் சிங்கங்களுக்கு அழகு ?

 8. //பின்ன என்ன பண்ணுவாங்க? பாராட்டி பத்மாபூசனா தருவாங்க?//

  பத்மா பூசுனா தான் தருவாங்களா? ஸ்லிம்மா இருந்தா தரமாடாங்களா?

  //புள்ள குட்டி இல்லாத ஒண்டி கட்டைங்க பாக்க கூடாத அப்போ?

  அப்போ புள்ள = பெண் .. சோ பெண்குட்டியோட போய் படத்த பாரு .. அதுவும் இல்லைனா அங்க போய் பெண்குட்டிய பாரு..

 9. //பசங்க !! //
  – படத்தை பார்த்து விட்டு அதைப் பற்றி மறுமொழி கூறுகிறேன்.

  //இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாம இருப்பது அந்த படத்துக்கு நான் செய்யும் மரியாதை.. //
  ❓ ❓ ❓

  நல்ல விமர்சனம் ….

  //கரெக்ட் மச்சி ரெண்டு சிங்கம் படத்துக்கு போச்சு!!//
  //அது தான ஆண் சிங்கங்களுக்கு அழகு ?//

  ” சிங்கம் ஒரு சோம்பேறி என்றும், சுயநலம் பிடித்த விலங்கு” – இதை நான் கூறவில்லை… விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்..
  “வஞ்சப் புகழ்ச்சி அணி” மற்றவர்களுக்கு தானே உபயோகப்படுத்துவார்கள் 🙄

 10. அந்த சிங்கத்த பத்தின கமெண்ட்க்கு எனக்கு பதிலா கிருஷ்ணா பதில் சொல்லிடாங்க… நீ என்ன சொல்ல போற?

 11. என்னங்க கிருஷ்ணா இந்த தகவல் அசிங்கத்த பற்றியா இல்ல இசிங்கத்த பற்றியா , தெளிவாச் சொல்லுங்க…

  அதெனெப்பா கண்ணி? எங்கூர்ல ‘கன்னி’ ன்னு தான் சொல்லுவாங்க.

  பசங்க படத்தை உங்களை நம்பி பார்க்கலாமா தம்பி?

 12. //என்னங்க கிருஷ்ணா இந்த தகவல் அசிங்கத்த பற்றியா இல்ல இசிங்கத்த பற்றியா , தெளிவாச் சொல்லுங்க… //

  சொல்லிட்டா போச்சு …
  ***
  எவ்விடத்தில் வசித்தாலும் ‘ஏறு’ – சோம் பேறி; சுயநல விலங்கு என்று விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  (ஆப்பிரிக்கால இருந்தா என்ன , இந்தியால இருந்தா என்ன அதோட இயல்பு இது தான்னு சொல்றாங்க.)
  ***
  குந்தவை…
  ஏதோ என்னால முடிஞ்சது 🙂
  தெளிவா இருக்கான்னு நீங்க தான் சொல்லணும்… 😀

 13. யக்கா… இதுக்க மேல விளக்க முடியுமா?

  எனக்கு புரிஞ்சிடுச்சி…. நீங்க படு strong ஆ விளக்குனதுல புவனேஷ் தம்பிக்கும் தெளிவாயிருக்கும்ன்னு நினைக்கிரேன்.

  (என்னோட தம்பின்னு தைரியத்துல எழுதுறேன்… ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்க தம்பி. )

 14. //” சிங்கம் ஒரு சோம்பேறி என்றும், சுயநலம் பிடித்த விலங்கு” – இதை நான் கூறவில்லை… விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்..//

  வாங்க கிருஷ்ணா..

  இப்போ நான் சுறுசுறுப்பு, பொது நலம் உள்ளவன் னு யாரு சொன்னா??

 15. //அந்த சிங்கத்த பத்தின கமெண்ட்க்கு எனக்கு பதிலா கிருஷ்ணா பதில் சொல்லிடாங்க… நீ என்ன சொல்ல போற?//

  நீ கேட்ருந்தா வேற பதில் சொல்லிருப்பேன்.. (பம்மல் கே சம்பந்தம் படத்த பாத்து என்னனு தெருஞ்சுக்கோ!!)

  நானும் நீயும் சோம்பேறி இல்லையா?? நான் கூட கொஞ்சம் பரவாயில்ல கம்பெனி பஸ் ல போனாதால ரெண்டு மாசம் கம்பெனிக்கு டைம்க்கு போயிருக்கேன்.. ஆனா நீ ??

 16. //அதெனெப்பா கண்ணி? எங்கூர்ல ‘கன்னி’ ன்னு தான் சொல்லுவாங்க//

  சிஸ்டர் கண்ணி வெடின்னு சிம்பாலிக்கா சொல்லீருக்கேன்.. உங்களுக்கு புரியலையா ?? அய்யோ அய்யோ ..

  //பசங்க படத்தை உங்களை நம்பி பார்க்கலாமா தம்பி?//

  போய் பாருங்க அக்கா .. உங்களுக்கும் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற பாடம் இருக்கு..

 17. //(என்னோட தம்பின்னு தைரியத்துல எழுதுறேன்… ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்க தம்பி//
  உங்களுக்கு ஆடோவா ?? நீங்க வலையுலகின் அக்கா.. எங்க பாத்தாலும் உங்க தம்பிகள் தான்..
  நான் ஆட்டோ அனுப்பீட்டு இங்க வாழ முடியுமா?

 18. //வலையுலகின் அக்கா.
  //எங்க பாத்தாலும் உங்க தம்பிகள் தான்…

  இதெல்லாம் ரெம்ப ஓவராத்தெரியலையா உங்களுக்கு?
  பாசமுள்ள தம்பி பேசுற பேச்சா இது.
  யாரையும் நம்பக்கூடாது போல.

 19. //அந்த குழந்தைகள், அவர்கள் நடிப்பு. அவர்கள் நடித்தார்களா இல்லை இப்படி தான் ஷூடிங்கில் சண்டை போட்டார்களா என்ற சந்தேகம் இப்பவும் உண்டு//

  குழந்தை நட்சத்திரங்களை வைத்து யதார்த்தமான படங்கள் தமிழில் வருவதை கேட்க நன்றாக இருக்கிறது…

 20. //அங்க இருந்த ஒன்னு ரெண்டு கன்னிகள (அதான் பிகர் னு சொல்லுவாங்க இல்ல.. ) பாத்தோம்.. அந்த கன்னிகள் கூட இருந்த ‘கண்ணி’யவான்கள் என்னை முறைத்திருக்கனும்..//

  என்னாப்பா நீ…? அக்கா சொன்ன உடனே “கன்னி” ன்னு மாத்திட்ட? “‘கண்ணி’யவான்கள்”–> இவங்க மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க…
  [குசு குசு: அக்கா ன்ன அப்படி தான் இருப்பாங்க.. ஒரே advice, ஒரே டயலாக் ஆ தான் இருக்கும்… பயந்துக்க கூடாது…சரியா?]

 21. மாப்பி உனக்கு தெரியுமா பசங்க படத்தோட டைரக்டர் AVM ஸ்டுடியா watch man ah இருந்தவரு.

 22. //மாப்பி உனக்கு தெரியுமா பசங்க படத்தோட டைரக்டர் AVM ஸ்டுடியா watch man ah இருந்தவரு.

  அப்படியா?? எனக்கு தெரியாது.. சந்தேகமே இல்லை இவர் செஞ்சது சாதனை தான் !!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: