--புவனேஷ்-- எழுதியவை | ஜூன் 5, 2009

என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லீறாதீங்க!!


பாஸ் சீக்கிரம் வாங்க..

எங்க டா ?

 பாஸ் மறந்துடீங்களா ?? இன்னிக்கு ஸ்பெஷல்!!

 என்ன ஸ்பெஷல் ??

 பாஸ் இத கூட மறந்துடீங்களா ??

 ஓ அதுவா.. சாரி டா மறந்தே போச்சு..

 உங்க மறதிய மொதல்ல மறந்து தொலைங்க பாஸ்..

 சரி சரி கோவப்படாத.. இப்போ என்ன பண்ணலாம் சொல்லு..

 பாஸ் ஏதாவது பண்ணனும் பாஸ்… சும்மா கலக்கலா இருக்கணும்..

 யார் கிட்ட வந்து என்ன பேச்சு பேசறா ??

 ஏன் பாஸ் ?

 ஐந்தில் வளையாததா ஐம்பதில் வளையும் ??

 பாஸ் ஏதாவது புரியற மாதிரி பேசுங்க..

 இல்ல டா… கலக்கலா எல்லாம் எதுவும் செய்ய முடியாது.. வேணும்னா ஏதாவது மொக்கையா செய்யலாம்..

 சரி பாஸ்.. அதவாவது செய்யுங்க…

 டேய் இது எல்லாம் வரம் வாங்கற மாதிரி.. தவம் இருந்து தான் செய்யணும்..

 பாஸ் இப்படி எல்லாம் சொன்னா நான் தற்கொலை செஞ்சுக்குவேன்.. அப்புறம் என்ன கொன்ன பாவம் உங்களுக்குத்தான்..

 போதும் சாமி எனக்கு அந்த பாவம் வேண்டாம்..  ஏற்கனவே உன்ன கொன்னுட்டு பாதி மனுசங்க கஷ்டப்படறாங்க…

மீதி மனுசங்க ??

உன்ன வெச்சுகிட்டு கஷ்டப்படறாங்க..

பாஸ் பட்டைய கிளப்பறீங்களே..

போதும்.. மாப்பு இத்தோட ஸ்டாப்பு..

சரி போதும் பாஸ்.. நீங்களே அந்த நல்ல விஷயத்த சொல்லீடுங்க..

வேண்டாம் டா.. அவங்களே புருஞ்சுக்குவாங்க..

சரி பாஸ் அப்போ நான் ஒரு மெசேஜ் சொல்லிக்கவா ??

இப்போ வேண்டாம்.. அவங்களா விருப்பப்பட்டு கேட்டா அடுத்த பதிவுல சொல்லீகலாம்.

விருப்பப்பட்டு கேட்கலைனா ??

அதுக்கு அடுத்த பதிவுல சொல்லீகலாம்..

அப்போ இதுக்கு பார்ட் டூ  இருக்கா ??

இருக்கலாம்.. யாரு கண்டா ?? வேற எதுவும் கிடைகலைனா வந்து பேசுவோம் !!

அப்போ நான் இப்போ அப்பீட் ஆகட்டா ??

சீக்கிரம்.. ரொம்ப நேரம் மனசாட்சி கூட பேசிகிட்டு இருந்தா உலகம்  என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீரும்..


Responses

 1. // போதும் சாமி எனக்கு அந்த பாவம் வேண்டாம்.. ஏற்கனவே உன்ன கொன்னுட்டு பாதி மனுசங்க கஷ்டப்படறாங்க…

  மீதி மனுசங்க ??

  உன்ன வெச்சுகிட்டு கஷ்டப்படறாங்க..

  அப்போ உங்களுக்கும் மனசாட்சி இருக்குதுன்னு சொல்ல வரீங்க…..
  நீங்க ரெண்டுலேயும் சேரவில்லையே தம்பி.

  மூணாவது ரகம்
  மனசாட்சியை வைச்சிகிட்டு அடுத்தவங்களை கஷ்டப்படுத்துராங்க..

 2. δεν μπορούσε να καταλάβει

 3. //δεν μπορούσε να καταλάβει //
  கிருஷ்ணா: ஒரு அம்பு விடறேன்.. பத்து அம்பா மாறி உன்ன குத்த போகுது பாருங்க… கர்ர்ர்….
  புவனேஷ்: ஹி ஹி.. ஒரு மொக்கை பதிவு விடுவேன்.. பத்தா மாற போகுது பாருங்க…
  கிருஷ்ணா: வாசகர்கள் நலத்துக்காக வாபஸ் வாங்க வேண்டி இருக்கும் போல இருக்கே… ச்ச…

 4. @Anand
  வாசகர்கள் : சே சே இதென்ன எங்களுக்கு புதுசா ??? 🙄

 5. //வாசகர்கள் : சே சே இதென்ன எங்களுக்கு புதுசா ???//

  அயயோ… என்ன இப்டி எல்லாம் freeway விடறீங்க…

 6. //சீக்கிரம்.. ரொம்ப நேரம் மனசாட்சி கூட பேசிகிட்டு இருந்தா உலகம் என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீரும்..//

  ரொம்ப நல்லவன்னு சொன்ன பரவா இல்லை மச்சி… புடிச்சு hospital ல அட்மிட் பணிடுவாங்க ல …

  [BTW indha blog…, good one machi… 🙂 ]

 7. @Anand
  //அயயோ… என்ன இப்டி எல்லாம் freeway விடறீங்க…//
  Sorry I couldnt get it….

 8. @ Kunthavai Akka
  வாங்க அக்கா .. அப்போ நாம எல்லாம் அந்த மூணாவது ரகமா ??

 9. //அப்பா நாம எல்லாம் அந்த மூணாவது ரகமா?

  அதுல வேற சந்தேகமா தம்பி.

 10. இதுக்கெல்லாம் போய் யாரவது உங்களை நல்லவன்னு சொல்வாங்களா???

 11. ////δεν μπορούσε να καταλάβει //
  தெரியலனு சொல்லறதுக்கு இப்படி ஒரு Bit-௮ ??

  @ Anand
  வா மச்சி!! வரும்போதே வில்லங்கமா ??

  //அயயோ… என்ன இப்டி எல்லாம் freeway விடறீங்க…//
  என்ன இது ??

  //அதுல வேற சந்தேகமா தம்பி.//

  ஆமா அக்கா.. நான் Tubelight மாதிரி.. லேட்டா தான் புரியும் 🙂

 12. வாங்க அருணா.. முதல் வருகைக்கு நன்றி !!

 13. //அயயோ… என்ன இப்டி எல்லாம் freeway விடறீங்க…//
  Sorry I couldnt get it….//

  “நாமே மொக்க ப்லோக் போடு ன்னு சொல்லவேண்டாமே…”..; இருந்தாலும் பயல் சின்னபிள்ள மாதிரி… செய்யாத ன்னு சொன்னா, செய்வாப்ப்டி…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: