--புவனேஷ்-- எழுதியவை | ஜூன் 15, 2009

பன்றி காய்ச்சல் !!


போன வார இறுதியில் கோவை போயிருந்தேன்.. அப்படியே ரெண்டு நாள் மட்டம் போட்டுட்டு வீட்டுல ஜாலியா இருக்கலாம்னு பிளான்.. ஆனா பாருங்க இந்த லீவ் போட்டா மட்டும் பொழுதே போகாது.. ஒரு நண்பன் என்னை செல்பேசில கூப்ட்டு, எங்க இருக்க டானு கேட்டான்.. நான் “கோவைல டா.. இன்னிக்கு லீவ் போட்டுருகேன்னு சொன்னேன்”.. அப்போ பாத்து கோவைல யாரோ ஒருத்தருக்கு பன்றி காய்ச்சல்னு நியூஸ் வந்துருச்சு.. “ஏன் டா உனக்கு பன்றி காய்ச்சலா”னு கேட்டான்.. நான் அவன் இல்லை னு சொல்லி மொக்க போடா ஆரம்பிச்சா.. அவன் “ஏன் டா ரொம்ப நாளா பதிவு போடலையே என்ன ஆச்சு”னு கேட்டான்.. ஒன்னும் இல்ல டா னு சொன்னா, அவன் லூசு மாதிரி “ஏன் என்கிட்ட சொல்ல மாட்டியா?? ஒன்னும் இல்லன்னு சொல்லற” னு சண்டைக்கு வரான்.. டேய் நான் சொன்னது பதிவு போடா ஒன்னும் இல்லைனு புரியவைகறதுக்கு படாத பாடுபட்டேன்.. இதுக்கு கம்பனிக்கு போய் எங்க மேனேஜர் க்கு Requirement ௮ புரியவெச்சிருக்கலாம்!!

“சரி டா.. நான் பதிவு போடலனு போன் செஞ்சு கேக்கறியே என் எழுத்து அவ்வளவு புடிக்குமா” னு ஆர்வம் தாங்காம கேட்டுட்டேன்.. அவன் சொன்ன பதில் உங்க மனச பிரதிபலிக்கும்.. “மண்ணாங்கட்டி.. நீ எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னா தீபாவளி கொண்டாடலாம்னு கேட்டேன்” னு சொல்லி பல்பு கொடுத்துட்டான்!!
இப்படியே விட்டா சரி வராது.. நண்பர்கள் எல்லாம் நிம்மதியா இருப்பாங்க!! விடக்கூடாதுன்னு போட்டதுதான் நீங்க படிச்சது.. அத அவன் படிச்சுட்டு “ஏன் டா இப்படி ஒண்ணுமே புரியாத மாதிரி எழுதிருக்க?? உனக்கு பன்றி காய்ச்சல் தான?” னு கேட்டான்.. அவனுக்கு நான் சொன்ன பதில கேட்டா உங்களுக்கு காய்ச்சல் வந்துரும்.. அப்புறம் மீதிய படிக்காம ஓடிருவீங்க.. சோ லெட் மீ டெல் அட் தி எண்டு ஆப் திஸ் ப்ளாக் (அப்புறம் இங்கிலீஷ் காரன் நம்ம நண்பன் இல்ல ??)

ஆனா அந்த பதில கேட்டுட்டு அவன இங்கயே குந்தவைங்க.. நான் டாக்டர் கூட்டிட்டு வரேன்னு அப்பீட் ஆகிட்டான்.. சரி பேச்சு துணைக்கு இருந்த ஒரு நண்பனையும் துரத்தியாச்சு இப்போ என்ன செய்யலாம்னு டிவி போட்டா அங்க மந்திரா பேடி எடுத்த பழைய பேட்டிய போட்டு காட்டிட்டு இருந்தாங்க!!.. என்னடா இது டிவி போட்டா மோகன மேட்டர் வருதேனு சேனல் மாத்துனா அதுல பன்றி காய்ச்சல் வந்த பையனை பத்தி சொல்லீட்டு இருந்தாங்க

அந்த பையன் பாஸ்டன் ல இருந்து வந்தவராம்.. நான் இந்த ஊரு பேர எங்கயோ கேட்ட மாதிரியே இருகேன்னு யோசிச்சா, அட நான் பழைய ப்ராஜெக்ட்க்கு இந்த ஊருக்கு தான் போகறதா இருந்துது.. போயிருந்தா இந்த நேரத்துல தான் விசா முடுஞ்சு வந்திருப்பேன்..

பாருங்களேன் என் வாழ்க்கையிலையும் ஒரு 12 B இருந்திருக்கு.. எப்படியோ நான் அங்க போயிருந்தா பன்றி காய்ச்சல் வந்திருக்கும்.. இங்க இருந்ததுல என்ன வந்துச்சு னு கேக்கறீங்களா ??

உங்களோட இந்த கேள்விக்கும் .. என் நண்பனோட அந்த கேள்விக்கும் பதில் ஒன்னு தான்..

வந்துச்சு.. ஆனா பன்றி காய்ச்சல் இல்ல… நன்றி காய்ச்சல் !!

என்னை அம்பது பதிவு போட ஊக்கம் அளித்த குந்தவை அக்கா, ஸ்ரீராம், மோகன், ஜானு அக்கா, மந்திரன், சரவணா, பிரியா அக்கா, சித்ரா (எல்லா பதிவையும் ஒரே நாளுல படிச்சு பாதிப்புக்குள்ளானவர்), கிருஷ்ணா, ஆனந்த் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!! அப்பப்போ இங்க வந்து படிச்சிட்டு கமெண்ட் போடாமல் போறவங்க அட்லீஸ்ட் ரெண்டு வார்த்தை திட்டிடாவது போங்க..

நன்றி நன்றி நன்றி!!!

 

ஹி ஹி: தலைப்பு நன்றி காய்ச்சல்னு வைக்கணும்னு நினச்சு ஞாபக மறதில பன்றி காய்ச்சல்ன்னு வெச்சுட்டேன் !!


Responses

 1. //அட்லீஸ்ட் ரெண்டு வார்த்தை திட்டிடாவது போங்க..//
  நாங்க திட்டறது போதாதா…

 2. //சோ லெட் மீ டெல் அட் தி எண்டு ஆப் திஸ் ப்ளாக்//
  எங்கப்பா… எண்டு ஆப் ப்ளாக் ல ஒன்னும் இருக்குற மாதிரி தெரியலையே… ?

  //ஹி ஹி: தலைப்பு நன்றி காய்ச்சல்னு வைக்கணும்னு நினச்சு ஞாபக மறதில பன்றி காய்ச்சல்ன்னு வெச்சுட்டேன் !!//
  இதுவா அது…? ஆண்டவா….

 3. // இதுக்கு கம்பனிக்கு போய் எங்க மேனேஜர் க்கு Requirement ௮ புரியவெச்சிருக்கலாம்!! //

  அப்ப அவருக்கு daily யும் பன்றி காய்ச்சலா? கொஞ்சம் தயவு பண்ணுங்கப்பு….

 4. //அவன இங்கயே குந்தவைங்க//
  நம்ம அக்கா பேருக்கு, “உட்காரவை” ன்னு meaning ah?

 5. வாழ்த்துக்கள் புவனேஷ்.

  //அக்கா பெயருக்கு ‘உக்காரவை’ ன்னு meaning ah?

  குந்தவைங்கிற அழகான தமிழ் பெயரை இப்படியா சென்னை தமிழில் முக்கி பாய்சன் ஆக்கிறது.

 6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் …

 7. வாழ்த்துகள் மச்சி…

 8. //நாங்க திட்டறது போதாதா…//
  ஹி ஹி.. நீங்க திட்டுனாலும் என் காதுல தேனா பாயுது.. அதான் மத்தவங்க திட்ட சொல்லிகேக்கறேன்!! 🙂

 9. //அப்ப அவருக்கு daily யும் பன்றி காய்ச்சலா? கொஞ்சம் தயவு பண்ணுங்கப்பு….

  அவரு கூட நீ ஒரு பாத்து நிமுசம் பேசி பாரு மச்சி.. முள்ளம் பன்றி காய்ச்சலே வரும் !!

  @ Kunthavai Akka
  நன்றி அக்கன்!! அமா நீங்க என்ன சாலமன் பாப்பையா மாதிரி பேசறீங்க ??

  @ Sriram
  இரு மச்சி.. கிள்ளி பாத்துக்கறேன்.. அட ஆமா.. நினைவு தான்..வா மச்சி !!

 10. வாழ்த்துக்கள் புவனேஷ்

  இது தான் பார்ட் டூ ஆ ❓


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: