--புவனேஷ்-- எழுதியவை | ஜூன் 18, 2009

மனைவியை கடுப்படிப்பது எப்படி??


ஏங்க சண்டே போலாமா..

என்னமா கேட்ட ??

(சலிப்புடன்) சண்டேடேடே போலாம்ம்..மான்னு கேட்டேன்…

இல்ல.. எனக்கு சண்ட போடலாமானு கேட்டுச்சு அதான் திருப்பி கேட்டேன்!..

(முறைப்புடன்) நீங்க எப்பவும் இப்படித்தான்.. ஒரு நாள் நான் ஏதாவது பிளான் பண்ணினா ஏதாவது கொறை சொல்ல வேண்டியது !!

பாத்தியா இப்போவே சண்ட ஆரம்பிக்குது..

சாரீங்க.. அத விடுங்க.. இந்த வாழ்க்கை நமக்கு பொற்காலம்

என்னமா ??

(பல்லை கடித்துக்கொண்டு) பொற்ற்ற்காலம்ம்ம்..

பொற்காலமா.. எனக்கு போர்க்களம்னு கேட்டுச்சு

(விழி ஓரத்தில் ரெண்டு சொட்டு வழிய வழிய) ஆமாங்க நான் ஒரு பட்டு புடவ  கேட்டா உங்களுக்கு வாழ்க்கை போர்க்களமாத்தான் தெரியும்..

நீ ஒரு பட்டு புடவையா கேக்கற ?? கண்ணுல பட்ட புடவை எல்லாம் கேக்கற!!

இப்படி எல்லாம் நீங்க பேசுனா..

ஏம்மா துவச்சாச்சா ??

என்னங்க ??

(சலிப்புடன்) துவசாச்சாசாசா??

இல்லங்க எனக்கு துவச்சிடறேன்னு கேட்டுச்சுங்க..

சரி இன்னைக்கு எண்ண கத்திரிக்கா கொளம்பு வச்சு கொடு..

வெரி குட்.. சூப்பர்ங்க ..

இப்போ எதுக்கு வெரி குட் ??

நீங்க “என்ன கத்திரிக்கா கொளம்பு வைக்க விடு”ன்னு தான சொன்னீங்க ??

கடுப்படிக்கர நான் கிளம்பறேன்..

என்னங்க சொன்னீங்க ??

(பல்லை கடித்துக்கொண்டு) உனக்கு என்னனு கேட்ட்ட்டுச்சு ??

அடுப்படிக்கு நான் கிளம்பறேன்னு கேட்டுச்சு..

அவங்க இப்படி எல்லாம் ரிவஞ் எடுத்து ரீவிட் அடிப்பாங்க ..
அதனால நீங்களே பாத்து சூதனமா நடந்துகோங்க !!

கண்டுக்க 1: பெண்கள் கணவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஆங்கங்கே புகுத்தி இருக்கிறேன்.. மத்தபடி உங்களுக்கு இவ்வளவு டீஜென்ட்டா ரெஸ்பெக்ட் எல்லாம் கொடுத்து பேச மாட்டாங்க 🙂

கண்டுக்க 2:பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை !!


Responses

 1. இப்படி எல்லாம் கற்பனை பண்ண உங்களுக்கு யாருப்பா ஐடியா கொடுத்தது. சின்ன புள்ளையா லட்சணமா கற்பனை பண்ணுங்க. சும்மா நானும் கற்பனை பண்ணுறேனு அப்பாவியா கற்பனை பண்ணி கணவன் மனைவியை சண்டையை இதுக்க மேல insult பண்ணாதீங்க.

  சின்ன புள்ளதனமா இல்ல இருக்கு.

 2. //சின்ன புள்ளதனமா இல்ல இருக்கு.//
  இதெல்லாம் கண்டுக்காத மாப்ள… சூப்பெரா இருக்கு… 😀

 3. //சின்ன புள்ளதனமா இல்ல இருக்கு.//
  இதெல்லாம் கண்டுகாத மாப்ள… சூப்பரா இருக்கு… 😀

 4. எங்கேடா உனக்கு இந்த மாதிரியெல்லாம் idea தோணுது … பின்னர
  நல்ல form”ல இருக்க
  அப்படியே தொடர்ந்து ஒரு நாலு அஞ்சு பதிவு போடுடா.
  பட்டய கிளப்பு

 5. Avvvvvvvvvvvvvvv

 6. இப்பவே கண்ணை கட்டுதே ..
  ஆமாம் , இது எல்லாம் உனக்கு எப்படி தெரியுது ?
  ஒ ,,ஒ ..ஒ ..புரியுது .. அப்ப எல்லாம் ஓகே வா ..
  சொல்லவே இல்லை ………. எங்க ,? எப்போ ?
  கடைசியில நான் சொன்னதுதானே நடக்குது ..
  இந்த பசங்களே இப்படிதான் ..ம்ஹும்
  (நாராயணா ,நாராயணா )

 7. நல்ல கற்பனை..

  //நீ ஒரு பட்டு புடவையா கேக்கற ?? கண்ணுல பட்ட புடவை எல்லாம் கேக்கற!!//

  நல்ல வாக்கிய அமைப்பு .. படிச்சிட்டு நல்லா சிரிச்சேன் 🙂

  //பெண்கள் கணவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஆங்கங்கே புகுத்தி இருக்கிறேன்.. மத்தபடி உங்களுக்கு இவ்வளவு டீஜென்ட்டா ரெஸ்பெக்ட் எல்லாம் கொடுத்து பேச மாட்டாங்க //

  எப்படி எல்லோர் வீட்டிலையும் உங்கள உள்ள விட்டாங்க 🙄

 8. Machi … Ippave ithukkellaam training eduthukkura pola…

 9. @ Kunthavai Akka
  Insult a?? சிவ சிவா!!

  //இதெல்லாம் கண்டுகாத மாப்ள… சூப்பரா இருக்கு… //
  சரீங்னா.. 🙂

 10. அஹா ஹா //இல்லங்க எனக்கு துவச்சிடறேன்னு கேட்டுச்சுங்க// 🙂

 11. நாங்க பேசிக்கிறதே இப்பிடித்தான். இத சண்டைன்னு சொன்னா சண்டையை insult பண்ணுவது போல் இருக்கிறது.
  பாத்தா எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க, .. ம்….. ஒருவேளை நான் தான் ரெம்ப சண்டை போடுகிறேனோ என்னமோ.

 12. //எங்கேடா உனக்கு இந்த மாதிரியெல்லாம் idea தோணுது … பின்னர
  நல்ல form”ல இருக்க
  அப்படியே தொடர்ந்து ஒரு நாலு அஞ்சு பதிவு போடுடா.
  பட்டய கிளப்பு//

  வாங்கனா.. நீங்க தான் சொல்லறீங்க.. அப்புறம் லாங் டைம் நோ சி.. வொய்?

  //Avvvvvvvvvvvvvvv//
  இந்தப் பக்கம் வரதே அதிசியம்.. வந்து கமெண்ட் சரியா போடாம போறதுக்கு நான் தான்யா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 13. @ manthiran
  வாங்க மந்திரன் ஜி.. வயசாகியும் அந்த வில்லத்தனம் மாறல 🙂

  @Krishna
  //எப்படி எல்லோர் வீட்டிலையும் உங்கள உள்ள விட்டாங்க//
  ஹி ஹி… பசங்க வெளியில வந்து உள்ள நடந்தத சொன்னாங்க…

  //Machi … Ippave ithukkellaam training eduthukkura pola…//

  மச்சி உங்களுக்கு எல்லாம் ட்ரைனிங் கொடுக்கிறேன் 🙂

 14. //அஹா ஹா //

  உங்க கமெண்ட் பாத்தா உங்க வீட்டுல்ல இதே கதை தான் போல இருக்கு ??

  //நாங்க பேசிக்கிறதே இப்பிடித்தான். இத சண்டைன்னு சொன்னா சண்டையை insult பண்ணுவது போல் இருக்கிறது.
  பாத்தா எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க, .. ம்….. ஒருவேளை நான் தான் ரெம்ப சண்டை போடுகிறேனோ என்னமோ//

  அக்கா சண்டைங்கறது ரெண்டுபேரும் போடறது.. ஒருத்தரு மட்டும் அடுச்ச்சா/திட்டுனா அதுக்கு பேரு தாக்குதல் 🙂

 15. சுவாரசியமான “சுட்ட பழம்” தான்….

 16. //சண்டைங்கறது ரெண்டுபேரும் போடறது.. ஒருத்தரு மட்டும் அடுச்ச்சா/திட்டுனா அதுக்கு பேரு தாக்குதல்.//

  ha….ha….ha

  //அவங்க இப்படி எல்லாம் ரிவஞ் எடுத்து ரீவிட் அடிப்பாங்க ..
  அதனால நீங்களே பாத்து சூதனமா நடந்துகோங்க !! //

  ஆ.பா.ச ஆளா நீ…..?
  (ஆ.பா.ச ‍‍‍ஆண்கள் பாதுகப்பு சங்கம்)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: