--புவனேஷ்-- எழுதியவை | ஜூன் 30, 2009

காதல் கதை!


என்ன, ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு பாக்கறீங்களா? இருக்காதா பின்ன? மனைவி, மகளோட கடற்கரைக்கு வந்து பொழுத போக்கறதுக்கு எத்தனை பேர் கொடுத்து வெச்சிருப்பாங்க?

ஹலோ, யார தேடறீங்க?? மனைவியையும் குழந்தயையுமா? என் மனைவி ஐஸ்கிரீம் வேணும்னு அடம் புடுச்சானு என் பொண்ணு அத வாங்கி தர கூட்டிட்டு போய் இருக்கா!! வித்தியாசமா நினைக்காதீங்க. எங்க வீட்டுல எப்பவும் இப்படித்தான்.. எங்க மக தான் எங்கள பாத்துப்பா..அதுவும் இல்லாம நான் ஒரு சோம்பேறி!!
 
இப்படித்தான் இந்த கடற்கரைக்கு அடக்கடி வருவோம்.. சில சமயம் நான்  தனியா கூட வருவேன்.. எனக்கு போர் அடிச்சதே கிடையாது.. இது கொஞ்சம் ஸ்பெஷல்!! ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான்.. என் காதல் இங்க தான் வளந்துச்சு.. சில நேரம் சண்டைல வளர்ந்துச்சு , பல நேரம் சந்தோசத்துல வளர்ந்துச்சு.. இத மட்டும் நினைச்சு பாக்க சலுச்சதே கிடையாது!!
 
நான் என் காதல சொன்ன விதத்துல வேற யாரவது சொல்லீருபாங்களானு தெரியல .. இப்ப நினைச்சு பார்த்தா சிரிப்பா வருது.. நான் எப்படி இப்படி அசட்டுத்தனமா  எல்லாம் செஞ்சேன்னு தெரியல..  ஆனா என் அனுபவத்துல சொல்லறேன் காதலுக்கு இப்படி அசட்டுத்தனம் தான் கை கொடுக்கும்.. (உங்களுக்கு மட்டும் ரகசியம் சொல்லறேன்.. பொண்ணுகளுக்கு புத்திசாலிய விட அசட்டு ஐடியா ஆசாமிய தான் புடிக்கும்!!)
 
நானும் அவளும் ஒரே பஸ்ல தான் காலேஜ் போவோம்.. நான் முரளி மாதிரி காதல சொல்லாம ரொம்ப நாள் பார்த்துட்டே இருந்தேன்.. அவளும் பார்ப்பா.. அவளுக்கு என்ன புடிச்சிருக்குன்னு தெருஞ்சுது.. இருந்தாலும் போய் பேச ஒரு தயக்கம்!!
நான் அவளுக்கு கொடுத்த லவ் லெட்டர் இது தான் .. காதலிக்கு கொடுத்த கடிதத்த எல்லோருக்கும் காட்டுன முதல் ஆளா இருந்துட்டு போறேன்!!
 
முதல் பக்கத்துல …


“ஹாய்,

நான் உங்கூட பேச ரொம்ப நாளா ஆச படறேன் .. ஆனா முடியல. சரி சூப்பரா ஒரு  லெட்டர் கொடுக்கணும்னு ரொம்ப நாளா நினச்சு உனக்காக யோசிச்சு யோசிச்சு எழுதுனது தான் இது .. உனக்கு இத விட வேற எதையாவது புடிக்குமான்னு தெரியல.. ஆனா கண்டிப்பா நீ இந்த உலகத்துல அதிகமா நேசிக்கறதுல இதுவும் இருக்கும்னு நம்பறேன்..  ”

 
 
ரெண்டாவது பக்கத்துல …
 
கொஞ்சம் பொறுமை.. எதுக்கும் அடுத்த பக்கத்த படிக்கறதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் தண்ணி குடி !!
 
 
மூணாவது பக்கத்துல …
 
யாதுமானவன் யாதுமானவன் யாதுமானவன் யாதுமானவன் யாதுமானவன் னு பக்கம் முழுசும் எழுதிகொடுதேன் !!
 
உங்களுக்கு இந்த லெட்டர் புடிசிருக்குமானு தெரியல.. ஆனா அத படிச்சிட்டு சிரிச்சா பாருங்க.. அவ முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்.. அந்த சந்தோசத்துல எனக்கு அவ ரொம்ப அழகா தெருஞ்சா.. அவளும் என்ன லவ் பண்றான்னு தெரிஞ்ச உடனே தயக்கம் எல்லாம் தாயகம் திரும்பிடுச்சு.. அப்புறம் என் லவ்வர் கிட்ட பேச எனகென்ன தயக்கம் ??
 

நான் பேசின முதல் வார்த்தை இன்னும் ஞாபகத்துல இருக்கு.. அத நினச்சா, மனசுக்குள்ள  ஆயிரம் பட்டாம்புச்சி பறக்குதுன்னு சொன்னா பழைய டயலாக் மாதிரி இருக்கும்.. ஆனா அது தான் உண்மை.. நான் போய் அவ கிட்ட “உங்க பேர் என்னனு” கேட்டு தெருஞ்சுகிட்டேன்.. ஹி ஹி .. பேர் தெரியாம லவ் ஓகே ஆனது எனக்கு மட்டுமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. அவ தமிழினி னு சொன்னது இன்னும் இனிமையா காதுல விழுகுது !! சொல்ல மறந்துடேனே, அந்த லெட்டர் அவளுக்கு என்ன சொல்லுச்சுன்னு தெரியல..  நான் என் பேரைத்தான் எழுதி கொடுத்தேன்!! ஆனா நூத்தி நாபத்தி மூணு தடவ எழுதி கொடுத்தேன்!!
 
நாங்க பேச பழக ஒரு இடம் தேவைப்பட்டுது.. அதுக்கு நாங்க ரீச் ஆனது தான் இந்த பீச்.. இப்பவும் எனக்கு பீச்ல எல்லோர் முன்னாடியும் மக்கள் கூட்டத்துல அழகான இடைவெளி விட்டு காதலிக்கறவங்களை பாக்க பாக்க எங்க காதல் ஞாபகம் வரும்..

அவளுக்கு இங்க விக்குற மசாலா கடலை ரொம்ப பிடிக்கும்.. இங்க வரும்போது எல்லாம் அவ கூட சேர்ந்து அத சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கும் அத ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.. இங்க நாங்க வரும்போதெல்லாம் “கடலை வித் கடலை” தான் !!
 
சரி இப்படியே எத்தன நாள் வேணா லவ் பண்ணலாம்.. இருந்தாலும் நாம கல்யாணம் செஞ்சுட்டு லவ் பண்ணுவோம்னு முடிவு செஞ்சோம்.. அவளுக்கு பயம்.. எனக்கு பயம் எல்லாம் இல்ல.. எங்க வீட்டுல சொன்னேன் ..

அவங்களுக்கு நான் ரொம்ப வருஷம் கழுச்சு பிறந்த குழந்தை.. அதனால தான் யாதுமானவன்.. இது வெறும் பேருக்கு வெச்ச பேர் இல்ல.. உண்மையாலுமே நான் அவங்களுக்கு யாதுமானவன்!!.. தமிழினி கூடவும் அடிக்கடி பேசினாங்க.. அன்பா இனிமையா போச்சு .. இருந்தாலும் முதல் முதல எங்க அம்மா அவ நம்பர் கேட்டு வாங்குனதுக்கு அப்புறம் ரொம்ப சஸ்பென்ஸ்ஸா இருந்துச்சு.. அவங்களுக்கு புடிக்குமோ புடிக்காதோ தான்.. எப்படியோ எங்க வீட்ல ஓகே சொல்லீடாங்க..  பொண்ணும் என்ன உயிரா நினைக்குது.. அப்புறம் எனகென்ன பயம்??
 
ஒரு நாள் பொண்ணு கேக்கலாம்னு அவ வீட்டுக்கு போன்னேன்.. நான் போகும் போது அங்க ஒரு தரகர் இருந்தார்.. அவர் இது தான் சொன்னார்..  “இவர் ரொம்ப நல்ல பையன்.. உங்க குடும்பம் எப்படி எனக்கு வேண்டிய குடும்பமோ அப்படித்தான் இந்த குடும்பமும். என்கிட்டே இருந்த உங்க பொண்ணு  போட்டோ பாத்தார், ரொம்ப பிடிச்சிருக்காம். அந்த பையன் இது வரைக்கும் கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொல்லீட்டு இருந்தான்.. உங்க பொண்ணு போட்டோ பாத்து ரொம்ப பிடிச்சு போய் சமதம் சொல்லீட்டான்!!.. அவங்க அப்பா கேக்கறார்.. என்ன சொல்லறது??” னு கேட்டு ஒரு கவர்ல போட்டோ கொடுத்தார்.. இதை கேட்ட அவங்க அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம்.. ஐஸ்வர்யா ராய பெத்த சந்தோஷம்!!  அதுவரை நான் வந்ததை அவங்க யாரும் கவனிகல.. என்ன என்பதை போல அவங்க அப்பாவும் அம்மாவும் பாத்தாங்க..
 
நான்..
“உங்க பொண்ண பாத்தேன்.. ரொம்ப பிடிச்சுது.. அதான் பொண்ணு கேக்கலாம்னு வந்தேன்னு” சொன்னேன் .. அவங்க அம்மா ஷாக் ஆகிடாங்க..

அந்த தரகர் சொன்னதுக்கும் நான் சொன்னதுக்கும் என்ன வித்யாசம்னு என் இப்ப வரைக்கும் எனக்கு புரியல!!
 

அவங்க அப்பா இத்தனை நேரம் அமைதியா இருந்தவர் கோவமா என்னை பாத்தார்.. நேரா வந்தார்.. ஏதோ திட்ட வாயெடுத்தார்.. நிறுத்தினார்.. கண்ணை மூடி யோசிச்சார்!! ரெண்டு நாள்  யோசிச்சு சொல்லறேன்னு சொல்லீட்டு உள்ள போய்ட்டார்.. உள்ள போனவர் என்ன நினச்சாரோ வெளிய வந்து, “தரகர் கொடுத்த போட்டோவ கொடுத்திரு.. அவரையும் ரெண்டு நாள் கழுச்சு வந்து பாக்க சொல்லு” ன்னு அவங்க அம்மா கிட்ட சொன்னார்.. எனக்கு பாதி  சந்தோஷம்..  அப்புறம் அந்த “நல்ல பையன்” போடோவையும் திருப்பி கொடுத்துட்டாங்க இல்ல ??  அவங்க அம்மா ஏனோ  அழுக ஆரம்பிச்சுடாங்க!!
 
என்னோடயே வெளிய வந்த தரகர், ” சித்தப்பாவ அப்புறம் பேச சொல்லுப்பா.  இந்தா உன் போட்டோ .. ரெண்டு நாள் ஆகட்டும் அப்புறம் வரலாம்.. நீ ஒன்னும் கவலைப்படாத பேசி முடிச்சிரலாம்”னு கேரக்டர் ரோல் செஞ்சுட்டு போனாரு..

ரெண்டு நாள் தான ?? வெயிட் பண்ணினேன்..  
 

ரெண்டு நாள் எனக்கு ரெண்டாயிரத்தி எட்நூத்தி எம்பது நிமுசமா போச்சு.. அவங்க அப்பா கால் பண்ணவே இல்ல.. தமிழினி தான் கால் செஞ்சா. வீட்டுல முடியாதுன்னு சொல்லீடுவாங்க போல இருக்குன்னு அழுதா.. “நம்ம காதல அப்பா ஏத்துக்கிடாலும்  அம்மா ஏத்துக்க மாட்டாங்களாம்.. விஷம் குடிச்சிருவேன்னு மிரட்டறாங்க.. எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல” னு அழுதுட்டே சொல்லி, அதுக்கு மேல  பேச முடியாம விக்கினா..  எனக்கும் கஷ்டமா இருந்துச்சு.. கொஞ்சம் இல்ல நிறையவே பயம் வந்துச்சு..  இருந்தாலும் “சரி நீ வை, நான் உங்க அப்பா கிட்ட பேசறேன்னு” ஆறுதல் சொல்லீட்டு வெச்சுட்டேன்!!

 

நானே அவங்க அப்பாவுக்கு கால் செஞ்சேன்.. எடுத்தது அவங்க அம்மா.. “நான் யாதுமானவன் பேசறேன்.. ரெண்டு நாளைக்கு முன்ன உங்க வீட்டுக்கு வந்தேன் இல்ல?” என்ன பேச விடாமா ஒரு விசும்பல் சத்தம் கேட்டுச்சு.. உடனே அவங்க அப்பா எடுத்த எடுப்புல “சொல்லுங்க”னு  சொன்னார்.. அந்த விசும்பல் சத்தம் இல்ல, மொழி னு எனக்கே அப்போ தான் புருஞ்சுது..

 நான் என்ன கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்கன்னா சொல்ல போறேன்? திக்கி தெணறி நீங்க இன்னைக்கு பேச சொன்னீங்கனு சொன்னேன்.. இல்ல சொல்ல முயற்சி செஞ்சேன்.. அவரே புருஞ்சுகிட்டு பதில் சொன்னார்..

“நான் என் சொந்த காரங்க கிட்ட எல்லாம் கேட்டேன், எல்லோரும் வேண்டாம்னு சொல்லறாங்க” னு படபடத்தார்

“சொந்த காரங்க கிட்ட எல்லாம் கேட்டீங்க சொந்த பொண்ணு கிட்ட கேட்டீங்களா?” னு கேக்கனும்னு ஆசை தான்.. ஆனா வாய் வரல.. ச்சீ வார்த்தை வரல. இப்பவே இப்படி குழறுதே.. ச்சீ குளறுதே.. அப்போ எப்படி குளறி இருக்கும் ?? 

 

அப்புறம் ஒரு வாரம் அவ கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல..  அப்புறம் அவளே கால் பண்ணுனா.. என்ன பேசறதுன்னு தெரியல போல, நிறைய அழுதா.. அழுகைக்கு நடுவுல ஏதோ பேச முயற்சி செஞ்சா.. அவ அழுகும் போது எனக்கு நெஞ்சு வெடிக்கற  மாதிரி இருந்துச்சு..

 அப்போ தான் நான் கொஞ்சமும் எதிர்பார்காதத அவ சொன்னா..  பொண்ணுங்க அதிகமா அன்பு வெச்சவங்களுக்காக என்ன வேணா செய்வாங்கன்னு அப்போ தான் தெருஞ்சுகிட்டேன்..

 

அப்படி அவ என்ன சொன்னானா..

 ஐயயோ, தமிழினியும் யாழினியும் வந்துட்டாங்க.. அப்புறம் பேசறேன்.. யாழினி கையுல எனக்கு பிடிச்ச கார கடல.. என்னது தமிழினி மனைவியா மகளானு கேக்கறீங்களா ?? அத நீங்களே கண்டு பிடிச்சுகொங்க!!

 

இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது


Responses

 1. இயல்பான மொழி நடையிலேயே இன்றைய சூழலில் யதார்த்தமாய் நடக்கக்கூடிய கதை…. நன்றி 🙂

  தமிழினி,யாழினி,யாதுமானவன் – பெயர்கள் நன்றாக உள்ளன … 🙂

  அட இங்க ஐந்தில் வளையாதது , ஐம்பதிலும் வளையாதது…. ஐம்பத்திமூனில் வளஞ்சிருகே …. 🙄

  //சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது// –
  இத ரொம்ப லேட்டா தான் பார்த்தேன் ….
  போட்டியில் வெற்றிபெற வாழ்துக்கள் 🙂

 2. புவனேஷ் – உங்க மத்த கதையில் எல்லாம் மோஸ்ட்லி காமெடி தான் இருக்கும்..
  இது யதார்த்தமான காதல் கதை… இதை படிக்கும் போது எங்களோட காதல் கதை ஞாபகம் வருது … 🙂 நாங்க, எங்க அப்பா அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம்.. நான் இந்த கதைக்கு positive எண்டிங் போட்டுகறேன்..

  கதா பாத்திரங்களுக்கான பெயர்கள் எல்லாம் சூப்பர்.. நல்ல தமிழ் பெயர்களை செலக்ட் பண்ணி இருக்கீங்க…

  ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க.. உங்க சொந்த அனுபவமா? 🙂

 3. நல்ல கதைநடை மச்சி…!!
  வாழ்த்துக்கள்…!!!

 4. //அட இங்க ஐந்தில் வளையாதது , ஐம்பதிலும் வளையாதது…. ஐம்பத்திமூனில் வளஞ்சிருகே …. 🙄 //

  என்னங்க… கிருஷ்ணா… ஒரே riddle ஆ போட்டு இருக்கீங்க… புரியலையே… ஒரு வேல.. இப்படி சொன்னீங்களோ… “143 times யாதுமானவன் பேர் எழுதுனதுனால (1+4)3”–> 53 வந்துச்சா…? நான் ஒரு tubelight ங்க… நீங்களே சொல்லீருங்க…:roll:

 5. கலக்கிட்ட மச்சி தாறு மாறு போ. என்னமோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு ,வார்த்தை வடிவம் தர முடியாத ஒரு நெகிழ்வு இந்த கதைல இருக்கு. அருமை

 6. புவனேஷ் கதையின் நடை ரெம்ப அனுபவிச்சு எழுதின மாதிரி நல்லா இருக்கு. முதலில் உங்கள் காமடி டச் இருந்தாலும் அப்புறம் ஏன் கொஞ்சம் சீரியசா போயிட்டீங்க. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
  உங்கள் கதாநாயகனின் காதல் கடிதம் சூப்பர்.

 7. வாங்க கிருஷ்ணா..

  //தமிழினி,யாழினி,யாதுமானவன் – பெயர்கள் நன்றாக உள்ளன … :-)//

  நன்றி!! ரொம்ப யோசிச்சு யோசிச்சு வெச்சேன்.. இந்த பேர்ல இருந்து யார கல்யாணம் செஞ்சுகிட்டான்னு கண்டுப்பிடிக்க முயச்சி செய்யுங்க!!

  @ Shwetha
  வாங்க.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.. (அப்படியே உங்க காதல் கதைய சொன்னீங்கன்னா அத வெச்சு ரெண்டு மூணு கடை எழுத உதவியா இருக்கும் !! 🙂 )

  //ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க.. உங்க சொந்த அனுபவமா? :)//

  பாஸ் 🙂

 8. வா மச்சி ஆனந்த்.. நன்றி ..

  //… “143 times யாதுமானவன் பேர் எழுதுனதுனால (1+4)3”–> 53 வந்துச்சா…?//
  ஒரு மனுஷன் அறிவாளியா இருக்கலாம்.. ஓவர் அறிவாளியா இருந்தா இப்படித்தான் ஏதாவது யோசிக்க தோணும் 🙂

 9. @அடலேறு
  நன்றி மச்சி!!
  //கலக்கிட்ட மச்சி தாறு மாறு போ. என்னமோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு ,வார்த்தை வடிவம் தர முடியாத ஒரு நெகிழ்வு இந்த கதைல இருக்கு. அருமை//

  மச்சி இது என் கதைக்கு போட்ட கமெண்ட்டு தானா? கதை அவ்வளவு நல்லா வா இருக்கு ?

  @குந்தவை
  தெரியல அக்கா.. ஏனோ காமெடி வரல.. அடுத்த கதை எழுதினா காமெடியா எழுத முயர்ச்சி செய்யறேன்!! 🙂

  //உங்கள் கதாநாயகனின் காதல் கடிதம் சூப்பர்//
  இந்த மாதிரி ஐடியா எல்லாம் இப்ப வருது.. ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி வந்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் !!

 10. வாழ்த்துகள் சொல்லிக்கிறேன் மச்சி…

 11. அப்போ தான் நான் கொஞ்சமும் எதிர்பார்காதத அவ சொன்னா.. பொண்ணுங்க அதிகமா அன்பு வெச்சவங்களுக்காக என்ன வேணா செய்வாங்கன்னு அப்போ தான் தெருஞ்சுகிட்டேன்..

  அப்படி அவ என்ன சொன்னானா..//

  என்ன மச்சி சொன்னா?

 12. சொந்த அனுபவம் போல தெரியுது…

 13. // அப்படி அவ என்ன சொன்னானா..// என்ன மச்சி சொன்னா? //
  வேற என்னங்க ஸ்ரீராம்… காதலுக்கு மரியாதை தான்… என்ன மச்சி… சரியா, நான் சொல்றது?

 14. // நன்றி!! ரொம்ப யோசிச்சு யோசிச்சு வெச்சேன்.. இந்த பேர்ல இருந்து யார கல்யாணம் செஞ்சுகிட்டான்னு கண்டுப்பிடிக்க முயச்சி செய்யுங்க!! //

  மறுபடியும் கணக்கு தான்… (யா)துமானவன் + தமி(ழினி) =>யாழினி… யாழினி பெண் குழந்தை…
  ஆண்குழந்தை பிறந்தா “தமிழானவன்” பேரா?

 15. // அவ தமிழினி னு சொன்னது இன்னும் இனிமையா காதுல விழுகுது !! //

  ?????

 16. //இந்த மாதிரி ஐடியா எல்லாம் இப்ப வருது.

  கடவுள் இருக்காருன்னு அப்பப்ப நம்பவேண்டியது இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் வந்திருந்தால் அநியாயமா ஒரு பெண்ணோட வாழ்க்கை இல்ல பாழாய்போயிருக்கும்.

  ஆனந்து……. ஒங்க ஆராய்ச்சிக்கு அளவே கிடையாதா?

 17. //ஒரு பெண்ணோட வாழ்க்கை இல்ல பாழாய்போயிருக்கும்//
  இல்லங்க… நெறய பொண்ணுங்களோட… 🙂 இவ்ளோ வயசாகி இவ்ளோ பேர் உருகிட்டோம், காலேஜ் ல பொண்ணுங்க சும்மாவா…?

  //ஆனந்து……. ஒங்க ஆராய்ச்சிக்கு அளவே கிடையாதா? //

  ஆராய்ச்சி பத்தலைங்க… மறுபடியும் தப்பா தான் போட்டு இருக்கேன்…

 18. @sriram
  வா மச்சி.. வாழ்த்துகளுக்கு நன்றி!! இது கற்பனை கதை மட்டும் தான்!! 🙂 (எப்படியும் நீங்க யாரும் நம்ப போறது இல்ல !!)

  @ anand
  மச்சி நீ சொல்லறது கரெக்ட் தான்!! ஆனா ஏன் அவன் யாழினியை கல்யாணம் செஞ்சுட்டு பிறந்த பெண் குழந்தைக்கு காதலி பெற வெச்சிருக்க கூடாது ?

  //?????//
  ?????

  @குந்தவை அக்கா
  வயசாகியும் இன்னும் வில்லத்தனம் போகல 🙂

 19. //வயசாகியும் இன்னும் வில்லத்தனம் போகல.

  வயசா……. யாருக்கு? குழ்ந்தை மனசுக்காரங்களுக்கு எப்போதும் சின்ன வயசுதான்.

 20. // ஆனா ஏன் அவன் யாழினியை கல்யாணம் செஞ்சுட்டு பிறந்த பெண் குழந்தைக்கு காதலி பெற வெச்சிருக்க கூடாது ? //

  கரெக்ட் மச்சி… ஆராய்ச்சி பத்தாம போச்சு…

 21. //குழ்ந்தை மனசுக்காரங்களுக்கு எப்போதும் சின்ன வயசுதான்.//

  அக்காவுக்கு எப்பவுமே தமாஷ்ஷ்ஷ்தான்… 🙂

 22. //என்னங்க… கிருஷ்ணா… ஒரே riddle ஆ போட்டு இருக்கீங்க… புரியலையே…//
  புதிர் எல்லாம் ஒன்னும் இல்லை ஆனந்த். ஐம்பதாவது பதிவுல
  ” ஐந்தில் வளையாததா ஐம்பதில் வளையும்” அப்படின்னு அவரோட பதிவுகளோட இயல்ப சொல்லி இருந்தார் ( அதாவது மொக்கை யா தான் பதிவு போட முடியும்ன்னு சொல்லி இருந்தார் ).
  இது ஐம்பத்தி மூனாவது பதிவு. இதனுடைய இயல்பு மாறி இருந்தது அதனால தான் அப்படி சொன்னேன்.
  சரி யா ❓ கொஞ்சமாவது புரியறமாதிரி இருக்கா 🙄

  [Hope I have made it clear. Just wanted to mention that its type/nature is different from his normal ones… so used his own words for it… thats it 🙂 ]

  இதுக்கு நீங்க ரொம்பவே ஆராய்ச்சி செஞ்சிருகீங்க போலயே ….
  ஆனா நான் தூக்க கலக்கத்துல எழுதின ஒரு வரிக்கு யாரும் இவ்வளவு ஆராய்ச்சி பண்ண வேண்டி வரும்னு நினைகலைங்க 🙂 ஏதோ என்னால முடிஞ்சது 🙂

  [Sorry Bhuvanesh yet another essay….]

 23. //இந்த பேர்ல இருந்து யார கல்யாணம் செஞ்சுகிட்டான்னு கண்டுப்பிடிக்க முயச்சி செய்யுங்க!! //
  (புவனேஷ் இததான் கதையிலயே சொல்லிடீங்களே … 😡 )
  சே சே இத கண்டுப்பிடிக்க முயற்சி செய்றதெல்லாம் கஷ்டங்க….. 🙄 ஏன்னா… நான் ஒரு சோம்பேறி!! 😛

 24. //சரி யா ❓ கொஞ்சமாவது புரியறமாதிரி இருக்கா 🙄 //

  crystal clear ங்க … 🙂 ..
  உங்க புதிர்க்கு “out of the blog” ல விடையா … wowww.. very good… யோசிக்காம போயிட்டேன்… 🙂

 25. கதை நன்றாக இருக்குது கண்ணா …
  தமிழினி , யாழினி … என்ன பேர் எல்லாம் ஒரே தூய தமிழ் …
  தாங்க முடியல …
  ரெண்டு தடவை படிச்சாதான் கடைசியில நீ சொன்னது புரியுது ..
  எனக்கு கொஞ்சம் short term memory loss ..
  ஆமாம் , இப்ப வெல்லாம் , ஏன் நம்ம வீட்டு பக்கம் வரதில்ல ..புரியும் என்று நினைக்கிறன் ..

 26. //சே சே இத கண்டுப்பிடிக்க முயற்சி செய்றதெல்லாம் கஷ்டங்க….. ஏன்னா… நான் ஒரு சோம்பேறி!! //

  ஆ.. எங்கேயோ கேட்ட குரல் 🙂

  @ mandhiran
  வாங்க ஜி.. நன்றி.. நான் நேத்துக்கூட வந்து நாடோடிகள் படிச்சேன்.. கமெண்ட் போட முடியல.. தப்பா நெனச்சுக்காதீங்க.. சீக்கிரம் வறேன் !!

 27. அதை யாருக்கும் forward நான் பண்ணல ..என்ன இது புது கலாட்டா ? பதிவு திருட்டா ?
  நண்பா , யார்கிட்டே இருந்து வந்தது ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: