--புவனேஷ்-- எழுதியவை | ஜூலை 9, 2009

எக்ஸ்யூஸ் மீ.. கேன் யு டு மி எ ஃபேவர் ?


டேய் என்ன டா சொல்லற? நான் அவ கூட பேசுனதே இல்ல.. நான் போய் எப்படி கேக்க முடியும்??

டேய் நான் திரும்பவும் சொல்லறேன்.. நீ தான் கேக்கணும்.. வேற வழியே இல்ல..

சும்மா இருடா.. விளையாடாத..

நானா விளையாடறேன்? வேலை வெட்டிய விட்டுட்டு உனக்காக அலையறேன் பாரு எனக்கு இதுவும் வேணும்.. இதுக்கு மேலையும் வேணும்..

ஆமா பெரிய கலெக்டர்.. வேலைய விட்டுட்டு அலையறாரு! அடங்கு டா.. ஓவரா சீன் போடாத .

சரி இப்ப நீ போய் கேக்க போறியா இல்லையா?  இல்லைனா சொல்லு, வீட்டுக்காவது போய் தூங்கறேன்!

டேய் நான் எப்படி டா?

டேய் ஒரு சப்ப மேட்டர் கேக்கறதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையா ?

எனக்காக இந்த ஹெல்ப் செய்வாளா டா ?

அதத்தான் ஏன் கிட்ட கேக்காத அவ கிட்ட போய் கேளுன்னு சொல்லறேன்..

டேய் அவ முடியாதுனா என்ன டா செய்யறது ?

உன்ன என்ன தற்கொலையா செய்ய சொல்லப்போறேன்? வேற யார் கிட்டவாவது கேக்க வேண்டியது !

டேய் நானா செஞ்சாத்தான் தற்கொலை. நீ என்ன செய்ய சொன்னா அது கொலை டா!!

ஆமா இது எல்லாம் நல்ல பேசு.. அவ கிட்ட ஒரு சப்ப மேட்டர் கேக்கறதுக்கு யோசி..

டேய் இப்படி அலட்சியாம பேசறியே, எங்க நீ போய் கேளு பாப்போம்!!

டேய் எல்லா வேலையையும் நான் தான் செஞ்சேன். இத மட்டுமாவது நீ செய்!

சரி ஓவரா பேசறா.. நானே கேக்கறேன்..

*** *** ***

எக்ஸ்யூஸ் மீ.. ஹாய்..

ஹாய்.. சொல்லுங்க..

உங்களுக்கு என்னை தெரியுமா..

நாம ஒரே ஆபீஸ் தான?.. அடிக்கடி பாத்திருக்கேன்.. என்ன விஷயம் சொல்லுங்க..

ஒன்னும் இல்ல.. ஒரு சின்ன ஹெல்ப்.. கேன் யு டு மி எ ஃபேவர் ?

சொல்லுங்க.. செய்யறேன்..

எனக்கு கல்யாணம்..

வாவ்.. காங்கிராட்ஸ்..

கண்டிப்பா வரேன்..

வந்தா மட்டும் போதாது..

நல்லா சாப்படறேன்..போது மா ? ஹி ஹி

நீங்க வந்து கை எழுத்தும் போடணும்..

ஏங்க உங்க கல்யாணத்துக்கு எழுத படிக்க தெருஞ்சவங்க மட்டும் தான் வரணுமா? கை எழுது போடா தெரியாதவங்கள உள்ள விட மாட்டீங்களா?

இல்ல.. நீங்க வந்து கை நாட்டு கூட வைக்கலாம்!!

 ஏங்க பொண்ணுக்கு சாட்சி கை எழுத்து போட ஆள் இல்லையா ?

அப்படி இல்ல..

சரி டோன்ட் வொர்ரி.. நான் வந்து போடறேன்.. ஆல் தி பெஸ்ட்!!

இல்லங்க நீங்க தப்பா புருஞ்சுகிட்டீங்க..

என்ன ?

சாட்சி கை எழுத்து போட ஆள் இருக்கு.. நீங்க வந்து மணமகள் னு இருக்கற இடத்துல கை எழுத்து போட்டா போதும்!!

 


Responses

 1. குட் பினிஷிங்

 2. மச்சான்..அது கூர்கா பொண்ணு தான…அவ நேப்பாளி நிகி தானே…

 3. “அட” போட தோன்றியது…
  நல்லாயிருக்கு… நன்றி படிக்கத்தந்தமைக்கு !!!
  🙂

 4. ஹா…..ஹா….. கதை நல்லாயிருக்கு புவனேஷ். வாழ்த்துக்கள்.
  பேசாம இத நீங்க போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.

 5. //மச்சான்..அது கூர்கா பொண்ணு தான…அவ நேப்பாளி நிகி தானே…//

  தெரிலியே மச்சி.. ஒரு கொட்டர் சொல்லேன்..

  //“அட” போட தோன்றியது…
  நல்லாயிருக்கு… நன்றி படிக்கத்தந்தமைக்கு !!!//

  வாங்க கார்த்திகேயன்.. இவ்வளவு பெரிய பாராட்டுக்கு நான் தகுதியா? (“அட” நு சொல்லறீங்களே நீங்க சுஜாதா சார் ரசிகர ? )

  //ஹா…..ஹா….. கதை நல்லாயிருக்கு புவனேஷ். வாழ்த்துக்கள்.
  பேசாம இத நீங்க போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.//

  அக்கா.. இதுக்கு என்ன அர்த்தம்? இது அதா விட நல்லா இருக்குன்னு அர்த்தமா? இல்ல அது இத விட மொக்கையா இருக்குன்னு அர்த்தமா ? 🙂

 6. நல்லாருக்குங்க ஃபினிஷிங்.(வாழ்த்து உங்களுக்கு சொல்லணும்மா இல்லை பிரவீன்-ஜிக்கா) 🙂

 7. வாங்க பாசகி.. வாழ்த்துக்கள் எனக்கே சொல்லுங்க.. இப்போ நானே எழுத்தாளர் ஆகிட்டேன் (அய்யோ வெளில ஆட்டோ சதம் கேக்குது.. )!!

 8. நல்லா இருக்கு புவனேஷ்.
  சப்ப மேட்டர் ன்னு சொன்னதால் ஆரம்பத்தில் இப்படி ஒரு ஃபேவர் தான் எதிர்பார்க்கபடுதுன்னு தெரியல…. அவங்க பேச ஆரம்பித்ததும் தெரிந்தது …
  அவங்க உரையாடலை வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம்னு தோணிச்சு…

 9. // நீங்க வந்து மணமகள் னு இருக்கற இடத்துல கை எழுத்து போட்டா போதும்!! //
  நம்மாளுங்களுக்கு அடி, உதை வாங்கரதுல எவ்ளோ சந்தோசம் போ… 🙂

  BTW, சூப்பர் சிறுகதை…

 10. அட ஆமா கிருஷ்ணா.. அடுத்த கதை எழுதினா இத மனசுல வெச்சுக்கிறேன் !

  @ Anandh

  நன்றி மச்சி !

 11. மச்சி கலக்கற போ… இந்த பையனுக்குள்ள எவ்வளவு இருக்குன்னே தெரியலையே. குந்தவை அக்கா சொன்னது கரெக்ட்… நீ இத அனுப்பி இருக்கலாம் போட்டிக்கு…

 12. //சாட்சி கை எழுத்து போட ஆள் இருக்கு.. நீங்க வந்து மணமகள் னு இருக்கற இடத்துல கை எழுத்து போட்டா போதும்!!//

  அப்படியா? சாட்சி கையெழுத்து போடத்தான் ஆளு இல்லன்னு நான் நெனச்சேன்…

 13. //ஒன்னும் இல்ல.. ஒரு சின்ன ஹெல்ப்.. கேன் யு டு மி எ ஃபேவர் ?//

  இப்போ ஃபேவர் மாதிரி தான் தெரியும் ஆனா அப்புறம் தான் ஃபீவர்னு புரியும்…

 14. புதிதாக வலைப் பதிவு ஒன்றை ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் நலாதரவை தருமாறு வேண்டுகிறேன்.

 15. அமர்க்களம், உங்க தள முகவரியை கொடுங்க.. வந்து விழாவை சிறப்பித்து வைக்கிறேன் ! 🙂

 16. //இப்போ ஃபேவர் மாதிரி தான் தெரியும் ஆனா அப்புறம் தான் ஃபீவர்னு புரியும்…

  எதுகை மோனை எல்லாம் நல்லா பேசு.. ஆனா ப்ளாக் மட்டும் போட்டுறாத !

 17. அப்புறம் போலிஸ் ஸ்டேசன்ல ஜாமீன் கையெழுத்து போட்டது யாரு ??!! :))

 18. நண்பனுக்கு கேட்க சொன்ன , உனக்கு கேட்டுடியே..பாவி

 19. வாங்க துபாய் ராஜா.. அங்க யாராவது கேட்டா கஜாக்கா தோஸ்த் னு சொல்லணும்!! புருஞ்சுதா?

  வாப்பா மந்திரா.. ஊர்ல தான் இருக்கியா ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: