--புவனேஷ்-- எழுதியவை | ஓகஸ்ட் 4, 2009

பாண்டிச்சேரி டூ மெட்ராஸ்!


சனி கிழமை பாண்டிச்சேரி சென்று திரும்ப வேண்டி இருந்தது.. அங்கே குதுகளிக்க எல்லாம் செல்லவில்லை.. அதானால் நீங்கள் நினைப்பது “புல்”லா தப்பு!!

பேருந்து ஏறிய பிறகு தான் தெரிந்தது, அதில் தொலைக்காட்சி இல்லை! நமக்கு தான் திண்டாட்டதுல இருந்தாலும் கொண்டாட்டம் கேட்குமே.. இறங்கி வேறு பஸ்சில் ஏற சோம்பேறித்தனம்.. “இப்ப நான் என்ன செய்ய”னு வேடிக்கை பார்த்துட்டு வந்தேன்!!
அப்படியே வரும் போது பேருந்தில் ஒருத்தர் ஏறினார்.. பளபளக்கும் வெள்ளை சட்டை, புது மோதிரம், புது செயின், புது வாட்ச் (கோல்ட் பிரேம்), புது பிரேஸ்லெட்! நீங்கள் நினைத்தது சரி.. அவர் புது மாப்பிளை!! புது பொண்டாட்டியும் இன்னும் ஒரு பெண்ணுடன் ஏறினார்!! அவர்களை பார்த்தவுடன் மனதுக்குள்ளையே துள்ளி குதித்தேன்.. காட் இஸ் கிரேட்! டைம் பாஸ் பண்ண இத விட வேற என்ன வேணும்? பேருந்து கிட்ட தட்ட காலியாகதான் இருந்தது!!கூட வந்த பெண் மச்சினிச்சி போல் தெரிந்தது! ஏறியவர்கள் நேராக என் முன்சீட்டில் வந்து அமர்ந்தார்கள்.. காட் இஸ் டபுள் கிரேட்!

மச்சினிச்சி, புதுப்பெண், மாப்பிளை சார் என வருசையாக அமர்ந்தார்கள்! பொழைக்க தெரியாத மனுஷன் என்று மனசு ஏனோ கூவியது!! மூவரும் போய் அமர்ந்தவுடன், நம்ம மச்சி (அதாங்க மச்சினிச்சி!) ஜென்னல் திறக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள்.. நம்ம மாப்பள எழுந்து அதை ஒரே இழு.. ஜன்னல் அழகாக திறந்தது.. அப்ப விட்டாரு பாருங்க ஒரு லூக்கு.. நில்லுங்க.. அவன் பொண்டாட்டி அவன் லூக்கு விடரான்னு தான சொல்லறீங்க? லூக்கு விட்டது நம்ம மச்சிக்குங்க! நல்ல வேளை வாட்டர் பாட்டில் வாங்கி இருந்தேன்.. ரெண்டு லார்ஜ்.. ச்சி ரெண்டு வாய் தண்ணி குடித்து வந்த அசிடிட்டியை சரி செய்தேன் !

அப்புறம் மச்சி வேடிக்கை பார்த்தது.. நான் மச்சியை வேடிக்கை பார்த்தேன்! மற்ற இருவரும் குசு குசு வென ஏதோ பேசிக்கொண்டு வந்தனர்.. பார்பதற்கு அவ்வளவு அழகா இருந்தது .. அட நான் மச்சியை சொல்லல.. மத்த இருவரும் செய்ததை சொல்லறேன்.. “இப்படி அவங்கள பாத்துடே வரியே சென்ஸ் இல்ல? மேனர்ஸ் இல்ல? “என்று பீட்டர் விடுபவர்களுக்கு “அழகை பாக்கறது தப்பு இல்ல. அனுபவிக்க நினைக்கறது தான் தப்பு” என எங்கள் “குல கொழுந்து” எஸ்.ஜே.சூர்யா சொல்லியுள்ளதை நினைபடுத்த கடமைப்பட்டுள்ளேன்!

புது பெண் வேண்டுமென்றே மச்சி மீது சாய்ந்து தூங்குவது போல் செய்து மாபிள்ளையை கடுப்படித்து கொண்டிருந்துது.. இப்ப தெரியுதா என் மனசு அவனை பொழைக்க தெரியாத மனுஷன் என்று ஏன் கூவியது என்று? இதே அவன் ரெண்டு பேருக்கும் நடுவுல உக்காந்திருந்தா.. இருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி “இவன் மச்சி மேல சாஞ்சு அவங்கள கடுப்படிக்கலாம்” னு எல்லாம் சொல்ல வரல! நான் சொல்ல வந்தது, அப்படி உக்காந்திருந்தா அந்த புது பொண்ணு இவன இப்படி கடுப்படுச்சிருக்க முடியாதுன்னு!!அதுக்குள்ள நீங்க வழக்கம் போல தப்பா எதேதோ நினைச்சுடீங்க.. அய்யோ அய்யோ!!

வண்டி மறக்காணத்தை நெருங்கி கொண்டு இருந்தது.. பஸ்சில் இருந்து அஞ்சு இளைஞர்கள் பின் படிக்கட்டு அருகில் வந்தார்கள்.. நான் அந்த படிக்கட்டுக்கு நேராக உக்காந்திருந்தேன்.. என்னை பார்த்து சார் வரட்டா என்றான் ஒருவன்,.. நான் புக் படித்து கொண்டிருந்ததாலும், கொஞ்சம் டியூப் லைட் என்பதாலும் முதலில் புரியவில்லை. பிறகு சுத்தி பார்த்தேன்.. மாப்பிள்ளை பளபள வென அமர்ந்திருந்தார்!! அவரை பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.. சிரித்துகொண்டே வாழ்ந்துகோ மச்சி என்றேன்.. அவனும் சிரித்துவிட்டான்.. பிறகு என்னை பார்த்து எதேதோ சொன்னான்.. அந்த மெசேஜ் எனக்கு இல்லை என்பதால் அதை நான் கேட்க்கவில்லை!

இப்படி இனிதாய் போய்க்கொண்டிருந்த பயணத்தில் ரெண்டு மணிநேரம் போனதே தெரியல!! வெளியில் மழை வேறு பெய்ய ஆரம்பித்திருந்தது.. திடிரென்று பஸ் பறப்பது போல் ஒரு உணர்வு.. நான் சீட்டை விட்டு நாலு அடி மேலே பறந்துவிட்டு வந்து மீண்டும் சீட்டில் உக்காந்தேன்.. அனைவரும் மெல்ல முனங்கிகொண்டிருந்தார்கள்! மழையில் ரூட்டில் இருந்த வேகத்தடையை பார்க்கவில்லை போல! நான் கடைசிக்கு முந்தின சீட்டில் இருந்தேன். எனக்கு முன் சீட்டில் இருந்த மாப்பிளை சார் எழுந்தார்.. சுத்தி பார்த்தார்.. இருவரையும் ஒரு லுக்கு..ஓட்டுனரிடம் சென்றார்.. நான் ரொம்ப தூரத்தில் இருந்ததால் எனக்கு அவர் பேசியது கேட்க்கவில்லை.. 7 ஜி ரவி கிருஷ்ணா வந்து “பாத்து மா பாத்து.. லேடீஸ் எல்லாம் இருக்காங்க இல்ல?” னு டப்பிங் கொடுத்தார்!

மாப்பிளை இப்படி செய்தது மற்ற இருவரையும் நெளிய வைத்தது. புது பெண் தலையில் அடித்துக்கொண்டு மச்சி மேல் படுத்து தூங்குவது போல் நடிக்கவில்லை.. தூங்கவே ஆரம்பித்துவிட்டார்.. வந்து பார்த்த மாப்பிளைக்கு ஷாக்!
இருந்தாலும் அதை மேக் அப் செய்துவிட்டு, “சரி நீங்க இங்க ப்ரீ யா உக்காந்துட்டு வாங்க. நான் அங்க உக்காந்துக்கறேன்” னு சொல்லீட்டு முன்னாடி செஅத்ள போய் உக்காந்துட்டார்!!

அதுக்கப்புறம் னு ஆர்வமா கேக்கறவங்களுக்காக மட்டும் இத சொல்லறேன்!!

அதுக்கப்புறம் எனக்கு பயங்கரமா போர் அடுச்சுது? நானே ஷோ பாதில முடுஞ்ச கடுப்புல இருக்கேன்.. இங்க வந்து அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு னு கேட்டு என்ன கடுப்படிக்கவேண்டியது!!

போங்கையா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.. இங்க வந்து கப்பிதனமா கேள்விகேட்டுட்டு!!


Responses

 1. nice, with photos it would have been muhc better

 2. Vazhkkam pola kalakkal machi.

  -Sriram

 3. ஆமாம் உனக்கு வேற சிந்தனையே இல்லையா ?
  ஆனால் எங்களுக்கு வேற வேலை இல்லை .. அதானால படிக்கிறோம் .
  இனிமே கிளைமாக்ஸ் சுபம் என்றால் மட்டுமே , பதிவிடுமாறு கேட்டு கொள்கிறோம்
  -எக்கு தப்பா கடுப்பானோர் சங்கம்

 4. வாங்க குப்பன்.. பஸ்ல இப்படி ஒரு மேட்டர் கிடைக்குன்னு தெரியல.. தெருஞ்சிருந்தா போட்டோ என்ன வீடியோவே எடுத்து உங்களை எல்லாம் சந்தோச படுத்தீருப்பேன்! 🙂

  //Vazhkkam pola kalakkal machi.//

  மச்சி எப்பவும் போல கலக்கலா?? இது உனக்கே ஓவரா இல்ல ?

  மந்திரன்.. பதினஞ்சு நிமுஷம் படிச்சதுக்கே கோவம் வருதே.. ரெண்டுமணிநேரம் பொறுமையா பாத்துட்டு இருந்தேன்.. பாதில போய்டாங்க.. எனக்கு எப்படி இருக்கும்? அப்படி பாத்தா நான் தான் யா அந்த சங்கத்து தலைவரா இருக்கணும் !

 5. அழகை ரசிக்கிறது தப்பில்லே,அனுபவிக்க நினைக்கிறதுதான் தப்புன்னு எஸ்.ஜெ.சூர்யா சொன்னதாகச் சொல்கிறீர்கள். அதை இன்னும் கொஞ்சம் ரிபைன் பண்ணா, அனுமதி இருந்தா அனுபவிக்கிறதும் தப்பில்லே!

  http://kgjawarlal.wordpress.com

 6. நல்லாத்தான் நோட் பண்ணிருக்கீங்க 🙂

  //அதுக்கப்புறம் எனக்கு பயங்கரமா போர் அடுச்சுது? நானே ஷோ பாதில முடுஞ்ச கடுப்புல இருக்கேன்.. இங்க வந்து அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு னு கேட்டு என்ன கடுப்படிக்கவேண்டியது!!

  போங்கையா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.. இங்க வந்து கப்பிதனமா கேள்விகேட்டுட்டு!!//

  இது டூ மச் இது டூ டூ மச் (தலைவர் பாஷைல) 🙂

 7. கலக்கல் மாபி

 8. //அவர்களை பார்த்தவுடன் மனதுக்குள்ளையே துள்ளி குதித்தேன்.. காட் இஸ் கிரேட்! டைம் பாஸ் பண்ண இத விட வேற என்ன வேணும்//

  மத்தவங்கள வேடிக்க பாக்கரதுல அவ்வளவு சந்தோஷம் 🙂

 9. @jawahar
  தல நல்ல வசனம் தான்.. இனி இத யூஸ் செஞ்சுக்கறேன் !

  @பாசகி
  வாங்க ஜி!!

  @ அடலேறு
  மச்சி.. என்ன இப்படி சொல்லிட்ட?? இன்னைக்கு நாம கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தாலும் ஒரு காலத்துல தெரு கூத்தப்பாத்து விசில் அடுக்கா கூட்டம் தான ?

 10. கரெக்ட் அப்பு


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: