--புவனேஷ்-- எழுதியவை | ஓகஸ்ட் 24, 2009

ஆடி.. போங்கடா ஓடி!!


இடம்: எம லோகம்..

வாரும் அய்யா நீர் தானே.. சிவ நாராயண மூர்த்தி..

ஆமாங்க.. வணக்கம்.. நீங்க தானே எமன்?

மூடனே.. என்ன எமன் ?? நான் தான் எமர்..

சாரி ங்க..

நீ சிவ நாராயண மூர்த்தி.. இறந்தது ஆவணி திங்கள் முதல் நாள்.. இறந்திருக்க வேண்டிய நாள்..

என்னது இறந்திருக்க வேண்டிய நாளா ? என்ன எமா? என்ன ஏமாத்த பாக்கறீங்களா? இந்த பிரச்சனைய நான் சும்மா விடமாட்டேன்!

என்ன செய்வதாய் உத்தேசம்?

நான் சிவனை பார்க்க வேண்டும்..

அவர் உன் மேல் கோபத்தில் இருக்கிறார்.. நீ அவரை பார்க்க முடியாது!! நீ நேராக நரகத்துக்கு செல்லலாம்!!

நரகத்துக்கா?? நான் என்ன பாவம் செய்தேன்?

நீ பிறரை துன்புறுத்தி இருக்கிறாய்.. உன்னால் இங்கே கடவுள்களுக்கு கெட்ட பேர்!

நான் என்ன செய்தேன்? ஆடி மாத கடைசி நாள் கூட மனதார இறைப் பணி செய்துவிட்டு தான் வந்தேன்..

நீ மனதார செய்த இறைப்பணி இங்கே மும்மூர்த்திகளின் மனதை ஆறவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.. ஆடி மாதம் பாட்டு போட சொல்லி உன்னை யார் கேட்டது ?

இறைவனை துதித்தது தப்பா?

அது தவறு இல்லை.. ஆனால் அந்த பாடலை ஏன்  ஊரெல்லாம் கேட்கும்படி அலறவிட்டாய்? உன் வீடு இருந்த தெருவில் மட்டும் சத்தம் குறைவாக இருந்தது!
அதில் கடுப்பானவர்கள்
“சிவ $$$$$$$$$$$$$ “”
“பெருமாள் #############”

என்று கடவுளை திட்டுகிறார்கள்.. பாவம் மும்மூர்த்திகள் அன்று மதியம் சாப்பிடவே இல்லை..

என்னது என் தெய்வங்கள் சாப்பிடவில்லையா ? சரி இதில் ஏன் பிரம்மா சாப்பிடவில்லை ?

மூர்த்தி மூ.. என்று திட்டும் போது அவரும் வந்து விடுகிறார்.. அதுவும் நீ இருக்கும் தெருவில் மக்கள் மிகவும் மோசம்.. அத்தனையும் கெட்ட வார்த்தை.. பிறகு எப்படி அவர்கள் சாப்பிடுவார்கள்?? சரி நீ கேட்ட விளக்கம் கொடுத்தாகிவிட்டது.. நீ எண்ணை சட்டிக்கு போலாம்..

சரி இதற்க்கு இவ்வளவு பெரிய தண்டனையா ??

இது மட்டும் இல்லை மானிடா.. நீ செய்த இம்சையால் “என்னை தூங்க விடாத கடவுள் என்ன கடவுள்??” என்று சொல்லி நாலு பக்திமான்கள் நாத்திகர்களாக மாறிவிட்டார்கள்! அதிலும் ஒரு பாலகன் வார்த்தைக்கு வார்த்தை முருகா முருகா என்று சொல்லிக்கொன்டிருன்தவன்!!

கருமாரியம்மா .. நீ தான் என்னை காப்பாத்தனும்!!

அக்காங்.. சொல்ல மறந்துட்டேன்.. உன்னை “அசால்ட்’ செய்ய தான் மும்மூர்த்திகள் நினைத்திருந்தார்கள்.. தன் ஸ்பெஷல் கோட்டாவில் உன்னை மர்டர் செய்ய உத்தரவிட்டதே அவர்தான் !

அசால்ட், மர்டர் ?? என்ன எமா இப்படி பேசுகறீர்கள்?? கருமாரி அம்மன் ஏன் என் மீது கோபப்பட வேண்டும் ??

உங்களிடம் இருந்து வந்தது தான்.. உன்னிடம் இருந்த ஒரே பாட்டு காச்செட் ஒரு நாள் முழுவதும் ஓட விட்டிருக்கிறாய்.. அதில் மூணு பாட்டு கருமாரி அம்மனுடையது..

இந்த புண்ணிய காரியதுக்கா தண்டனை ??

நீ பண்ணியதா புண்ணிய காரியம்? அன்று முழுவதும் கருமாரி அம்மனுக்கு அரச்சனை விழுந்து கொண்டே இருந்தது.. நீ தான் அதற்க்கு காரணம்.. அதான் இந்த தண்டனை!!

எமா..

இனி நீ கேள்வி கேட்டால் என் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்..

இதற்க்கு மேலும் கோபமா ?

இது கோபம் இல்லையடா., எனக்கு வந்த கட்டளைகளை நிறைவேற்றுகிறேன்..

(அப்போது பூலோகத்தில் இருந்து சத்தம் கேட்கிறது.. எமன் அங்கு கேட்க்கும் சத்தம் அனைவருக்கும் கேட்கும்படி செய்கிறார்!!)

இந்த பாவி பய எமன் இப்படி செஞ்சிட்டானே.. பாவம் இந்த சிவா நாராயண மூர்த்தி! யாருக்கும் எந்த கெடுதலும் மனசாலக்கூட நினைக்காத நல்ல மனுசன இப்படி அநியாயமா கூட்டிட்டு போய்ட்டானே ??

 


Responses

 1. நல்ல ஜாலியான அப்டேட் புவனேஷ் … வாழ்த்துக்கள் 🙂
  உண்மையிலயே இங்க விநாயகர் சதுர்த்திக்கு பக்கத்துக் கோவில்ல போட்டிருக்கிற பாட்டுச் சத்தம் ரொம்ப படுத்திட்டு இருக்கு… அதனால இத படிக்கும் போது ஜாலியா இருந்தது… நன்றி 😀

 2. ஆனா டைட்டில் தான் கொஞ்சம் வினோதமா இருக்கோ 🙄

 3. கடவுளுக்கு கோபம் வந்தா எதுனாச்சும் பண்ணுவாரு… நமக்கு கோபம் வந்தா ஏதாவது பண்ணமுடியுமா? ம்… சும்மா எதுனாச்சும் கமெண்ட தான் முடியும். 🙂

 4. ஒரு நல்ல புனைவு

 5. வாங்க கிருஷ்ணா. கொஞ்சம் பிஸி ஆனதால ரிப்ளை பண்ண முடியல.. டைட்டில் கொஞ்சம் வினோதமா இருக்கட்டும்னு வெச்சது தான் !

  @குந்தவை akka!
  வாங்க அக்கா.. இந்தியால என்ஜாய் செஞ்சீங்களா ?

  @அடலேறு
  மச்சி.. புனைவா ?? சரி நீ சொல்லற.. ஓகே !!

 6. என்ன ஒரே நாத்திக வாடை அடிக்குது .. எப்படி இருந்த புவனேஷ் இப்படி ஆய்ட்டான்
  (பத்தவச்சிட்டியே பரட்டை அப்படின்னு என்னை யாரும் சொல்லாதீங்க..)

 7. புவனேஷ் உங்களுக்கு கடவுள்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்டோவில் கிங்கரர்களை அனுப்பி இருக்கங்கலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: