--புவனேஷ்-- எழுதியவை | செப்ரெம்பர் 3, 2009

மலையாளி புரிந்து கொள்ள இது மலையாள காதல் இல்லை!!


டேய் புவனேஷ், இன்னைக்கு அவ செம அழகா இருக்கா டா.. காதல் அப்படியே பொங்கி வருது..

மச்சி.. இன்னைக்கு மழை வந்து குளு குளு இருக்கறதால எனக்கு யாரப்பாத்தாலும் அப்படி தான் டா பொங்கி வருது!

நாயே.. நான் காதல பத்தி பேசறேன் நீ என்னடானா? என் ஆளு இன்னைக்கு அழகா இருக்கா டா.. போய் ப்ரொபோஸ் செய்யட்டா?

சரி! ஆனா ஒரு லாஜிக் இடிக்குது.. நீ அழகான பொண்ணு பாக்கற மாதிரி அவளும் அழகான பையன் வேணும்னு சொல்லீட்டா?

 த்தூ.. அவ பஸ் ல இருக்கும்போது ஜன்னல் வழியா தான் பாத்தேன்.. என்ன டிரஸ் போட்டுருக்கான்னு பாத்து சொல்லேன்..

இன்னைக்கு ஓணம் ங்கறதால நயன்தாராவே அந்த சாண்டல் பொடவ கட்டீட்டு தான் பேட்டி கொடுக்கறாங்க..

நயன்தாரா பொடவ கட்டிட்டா? ச்சீ ச்சீ.. த்தூ த்தூ.. உவ்வே.. நல்ல வேல நமிதா கேரளால பொறக்கல.. அப்புறம் அவங்களும் பொடவ கட்டீருப்பாங்க அதையும் நாம பாக்கணும்..

மச்சி உன்னுது உன்னத காதல் டா..

ஏன் டா?

நயன்தாரானு சொன்னவுடனே உன் காதலிய மறந்துட்ட பாத்தியா.. அங்க நிக்கறடா..  வாழ்த்துக்கள் டா..

பக்கி.. பேச்ச மாத்தீட்டு ஏகதாளம் வேற.. சொல்லு.. இன்னைக்கு பண்டிகை, நான் போய் என் காதல சொல்லீரட்டா?

இதே வசனத்த தான் டா “கதக்களி” பண்டிகை அன்னிக்கும் சொன்ன ?

 கதக்களி பண்டிகையா ??

அது தான் டா நம்ம ஊர்ல தீபாவளினு சொல்லுவோம் இல்ல ?

 மொக்க.. கொஞ்சம் மொக்க போடறத நிறுத்து.. எனக்கு பிளாஷ் ப்ரண்ட்னு ஒரு நோய் இருக்கும் போல..

அது என்ன டா பிளாஷ் ப்ரண்ட்?

 பின்னாடி நடக்கறது எல்லாம் முன்னாடியே தெரியும் டா.. இப்ப கூட நானும் அவளும் நிக்கறோம்.. நீ கையுல ஒரு குழந்தைய வெச்சுட்டு நிக்கற.. இப்படி ஒரு காட்சி என் கண் முன்னால வந்து வந்து போகுது டா..

மச்சி அப்படியே நான் உன்ன கொலை பண்ணுவனானு அந்த பிளாஷ் ப்ரண்ட் நோய கேட்டு சொல்லேன்..

ஏன் டா ?

அப்புறம் என்ன டா? நீ உன் காதலியோட நிக்கற மாதிரி கனவு காணு.. அது என்ன என் கையுல குழந்தை?

டேய் அப்படி தான் அந்த காட்சி வருது.. சரி விடு எனக்கு நீ மலையாளம் சொல்லி கொடு..

நீ என்ன வேணும்னு கேளு..  நான் சொல்லறேன்..

ஒரு நிமுஷம் ..

ஒக்க நிமுஷம்..

மூதேவி அது கன்னடம்..

இப்ப நான் பேசுனது கன்னடம்.. ரைட்டு டா.. கண்டிப்பா அந்த பொண்ணு உனக்கு தான்..

டோர் க்ளோஸ்.. நீ எனக்கு மலையாளம் மட்டும் கத்து கொடு.. வேற எதுவும் பேச வேண்டாம்..

சரி கேளு..

ஒரு நிமுஷம் உங்க கூட பேசணும்..

நிங்களிடத்தே கொறச்சு சம்சரிக்கணும்..

டேய் நீ அதுக்குள்ள சம்சாரம் கிம்சாரம்னு ஏதேதோ சொல்லற?

சாமி.. மலையாளத்துல சம்சாரினா பேசுனு அர்த்தம்!!

சரி.. நான் உங்களை காதலிக்கறேன்..

நிங்களை பிரமிக்குன்னு

அப்படி வேண்டாம் டா.. ரெண்டே ரெண்டு வார்த்தைல சொன்னா அழகா இருக்காது.. “நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்”னு சொல்லறதுக்கு மலையாளத்துல சொல்லு

இப்படி நாலு வார்த்தைல சொன்னா மட்டும் அழகா இருக்குமா ?

 சொல்லு டா..

ஞான் நிங்களை கல்யாணம் கழிக்க நினைக்குன்னு! .. எங்க சொல்லு??

ஞான் நிங்களை கல்யாணம் கழிக்கான் நினைக்குன்னு..

மேட்டர் ஓகே.. ஆனா இதவே நீ கொஞ்சம் மூக்குல சொல்லற மாதிரி சொன்னா பிச்சுக்கும் .. சொல்லு!

ஞான் நிங்களை கல்யாணம் கழிக்கான் நினைக்குன்னு..

அவ்வளவு தான் டா !

சரி இப்ப நீ என் கூட வா.. அவளுக்கு தெரியாம மறஞ்சு நில்லு.. நான் சரியா பேசலைனா எடுத்து கொடு..

டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவர்.. இது எல்லாம் எங்க போய் முடியுமோ!!

********

ப்ரேமே..

நிங்கள் யாரானு??

நி.. நி.. ங்களிடத்தே.. நிங்களிடத்தே.. நிங்களிடத்தே கொறச்சு சம்சரிக்கணும்..

(மறைவாக இருக்கும் நான்: ஞான் நிங்களை கல்யாணம் கழிக்க நினைக்குன்னு!)

உங்க கூட பேசனும்னு வரும்போது மலையாளம் ஆலப்புழா அருவி மாதிரி கொட்டுது.. ஆனா நான் மலையாளம் பேசி அந்த மலையாளம் உன்ன தாக்கீடுமொனு நினைக்கும்போது.. வர மலையாளம் கூட நின்னுடுது.. பிரேமி பிரேமி.. !!

நிங்களு எந்தா பரயுனு ?? எனக்கு மனசில் ஆக்காம்ப்பாடில்லா! நிங்கள் கூட புவனேஷ் னு ஒரு வல்லிய சுந்தரக்குட்டன் உண்டல்லோ.. ஞான் அவரை பிரமிக்கின்னு.. நிங்கள் கொறச்சு அவரிடத்தே பறையுமோ?  

* அந்த நண்பன் மலையாள பெண்ணை காதலித்ததால் அவனை நாங்கள் மலையாளி என்று தான் அழைப்போம்.. தலைப்பில் இருக்கும் மலையாளி அவன் தான் ..(கதைல ட்விஸ்ட் எங்க வெச்சிருக்கோம் பாத்தீங்க இல்ல ?)

 * அவனுக்கு பிளாஷ் ப்ரண்ட் நோய் உண்மையா இருக்கும் போல தான் இருக்கு! அவன் பாத்தது நான், அவள், எங்க குழந்தை!! இது புரியாம அவன திட்டிட்டேன்.. இப்ப எதுக்கும் அவன் என்ன கொலை பண்ணுவானான்னு பிளாஷ் ப்ரண்ட்ட கேட்டு சொல்ல சொல்லணும் !

 

டிஸ்கி: உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அடுத்து “சுட்டப்பழா” னு ஒரு மலையாள ப்ளாக் வேற ஆரமிக்கனுமா? முடியலடா சாமி (எங்களாலையும் முடியல னு சொல்லக்கூடாது!!)


Responses

 1. முடியலடா சாமி 🙂
  நல்லா இருக்கு

 2. மச்சா , என்னால சிரிப்பா அடக்கவே முடில, செம்ம காமெடி பீசு,
  கலக்கற மாபி, எப்படி டா உனக்கு மட்டும் இப்படிலாம் தோனுது , நேத்து வரைக்கும்
  கைல ஒரு பதிவு கூட இல்லன்னு பொய் சொல்லிட்டு இப்படி ஒரு கலக்கல் பதிவு போற்றுக்கயேய் மாபி , நீ வில்லன்டா.

  அது என்ன சுஜாதாவோட கால கடிகாரம் மாதிரி யா உன்னோட பிளாஷ்
  பிரன்ட் நோய் ….
  //நிங்கள் கூட புவனேஷ் னு ஒரு வல்லிய சுந்தரகுட்டன் உண்டல்லோ //
  என்னது வல்லிய சுந்தர குட்டனா, அந்த பொண்ணுக்கு கண்ணு நால்லாதான
  தெரியுது… கேரளா பொண்ணுகிட்ட சித்து விளையாட்டு விளையாடறதே நம்ம பசங்களுக்கு பொழப்பா போட்சு..,, ஒரு ரசனையான பதிவு மாபி

 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 4. வாங்க சின்னம்மணி.. முதல் வருகைக்கு நன்றி !!

  வா மச்சி அடலேறு.. உங்கள சிரிக்க வெக்க ஒரு முயற்ச்சி தான் இந்த பதிவு!! நீ சிரிச்சதுல மகிழ்ச்சி!

  //கைல ஒரு பதிவு கூட இல்லன்னு பொய் சொல்லிட்டு இப்படி ஒரு கலக்கல் பதிவு போற்றுக்கயேய் மாபி , நீ வில்லன்டா.//

  மச்சி நான் வில்லன் எல்லாம் இல்லை.. இதுவும் ஒன்னும் இல்லாத மேட்டர் தான்.. சும்மா எழுதி பாப்போம் னு ட்ரை பண்ணினேன்.. வொர்க் அவுட் ஆகிடுச்சு !!

  //அது என்ன சுஜாதாவோட கால கடிகாரம் மாதிரி யா உன்னோட பிளாஷ்
  பிரன்ட் நோய் ….//

  பிளாஷ் பேக் மாதிரி பிளாஷ் forward னு வெக்கலாம்னு பாத்தேன்.. இருந்தாலும் மொக்க ப்ளாகுக்கு amature a வெக்கலாம்னு தான் front உஸ் பண்ணினேன் !!

  //ஒரு ரசனையான பதிவு மாபி//

  நெசமாத்தான் சொல்லறியா?

 5. யாருப்பா உங்களுக்கு மலையாளம் படிச்சி கொடுத்தாங்க.

  //அவன் பார்த்தது நான், அவள் , எங்க குழந்தை.
  அடப்பாவமே அந்த ரேஞ்சிக்கு போயிட்டீங்களா.

  என்னமோ நடக்குது எது உண்மை எது கற்பனைன்னே தெரியல.
  இங்க ஒரு அக்கா இருக்கேன் தம்பி.

  ரசித்தேன். சிரித்தேன்.

 6. வாழ்த்துகள் புவனேஷ்

 7. Anne Mohan Anne enna unalai aalaiye kaanom.

 8. //இதுவும் ஒன்னும் இல்லாத மேட்டர் தான்//
  சொல்ற ஒரு மலையாள மகளிர் அணில இருந்து வல்லிய சுந்தரக்குட்டன்னு கேட்க்கவெட்கறது ஒன்னும் இல்லாத
  மேட்டர் ஆ?

  /நெசமாத்தான் சொல்லறியா?//

  அட ஆமாங்க ஆமா

 9. மன்மதன் புவனேஷ் வாழ்க வாழ்க ..
  ஆனால் , ஞானும் மலையாளம் குறைச்சி குறைச்சி அறியும் கண்ணா ..
  பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் : யாரும் புவனேஷ்- ஐ நம்பி வீட்டுக்கு கூப்பிடாதீர்கள் ..சேதாரத்திற்கு கம்பெனி பொறுப்பு ஏற்க்க முடியாது ..அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன் ..

 10. //என்னமோ நடக்குது எது உண்மை எது கற்பனைன்னே தெரியல.
  இங்க ஒரு அக்கா இருக்கேன் தம்பி. //

  நோ நோ.. அக்கா நீங்க அப்படி எல்லாம் நினைக்க கூடாது.. இது வெறும் கற்பனை கதை மட்டும் தான்!! நான் அப்படி எல்லாம் கேரளாக்கு வாக்கப்பட்டு போக மாட்டேன் 🙂

  @ மோகன்
  மோகன் அண்ணே.. நெம்ப நாளா ஆளை காணோம்?? கதைய பத்தி ஒரு ரெண்டு வார்த்தை சொல்லலாம் இல்ல ?

  @Sriram
  வாங்க துரை!!

 11. //சொல்ற ஒரு மலையாள மகளிர் அணில இருந்து வல்லிய சுந்தரக்குட்டன்னு கேட்க்கவெட்கறது ஒன்னும் இல்லாத
  மேட்டர் ஆ?//

  நிஜமா அப்படி கேட்டா நான் என் மச்சி பதிவு போட்டு டைம் வேஸ்ட் பண்ணறேன்.. இது வெறும் கற்பனை.. கற்பனை.. கற்பனை மட்டும் தான் !!

  @mandhiran
  என் இந்த மர்டர் வெறி ?
  //ஆனால் , ஞானும் மலையாளம் குறைச்சி குறைச்சி அறியும் கண்ணா ..//
  மச்சி ஏன் மச்சி குறைச்சு குறைச்சு மலையாளம் கத்துகிட்ட?? ஏதாவது “பட்டி”காட்டுல கத்துகிட்டியா ?

 12. நல்ல போஸ்ட் புவனேஷ். எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் ஆனா உங்களுடைய மலையாளம், எழுத்து நடை, உங்களுடைய வர்ணனை(அழகு) எல்லாம் சேர்ந்து இந்த மொக்கை போஸ்டை அழகான காமெடி போஸ்ட் ஆக்கிடுச்சு. நீங்க போஸ்ட் பன்னப்போவே படிச்சுட்டேன், உங்க மலையாளம் தப்பா இருந்த மாதிரி தோணிச்சு அதனால அத விசாரிச்சிட்டு கமெண்ட் போடலாம்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன் சாரி.
  [Better late than never … 🙂 ]

  • நெம்ப நன்றி கிருஷ்ணா !!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: