--புவனேஷ்-- எழுதியவை | செப்ரெம்பர் 11, 2009

‘பயம்’ங்கர வியாதி (௮) பயங்கரவாதி


நான் கொஞ்சம் பயந்த சுபாவம். அதுவும் என் மேனேஜர பாத்தா ரொம்ப பயம்!! நேத்து திடீர்னு அவரு என்ன அவர் கேபினுக்கு கூப்டார். நானும் போனேன்.. அவரு என்ன நினச்சாரோ, “இன்னைக்கு ஒரு ஒம்போதரை வரை நீ ஆபீஸ்ல இரு. கால் இருக்கு. அப்புறம் கிளம்பு”னு சொல்லீட்டு கிளம்பிட்டார். இத்தனைக்கும் எனக்கு பேய்னா பயம்னு அவருக்கு தெரியும். ஆபீஸ்ல எப்படி நான் தனியா இருப்பேன்? ஆபீஸ்ல பேய் இருக்குன்னு வேற சொல்லிக்கறாங்க.. இன்னைக்கு வெள்ளிகிழமை.. பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரி வந்திருப்பாங்க.. அத வெச்சு யாராவது அப்படி சொல்லிருக்கலாம்.. அதனால ஆபீஸ்ல இருக்கறது கூட பரவால்ல, ஆபீஸ்ல இருந்து நான் எப்படி தனியா வீட்டுக்கு போவேன்? கூட யாரையாவது கூட்டிட்டு போலாம்னா வீட்டுக்காரம்மா விடமாட்டாங்க.. நீங்க வேற நேரம் காலம் தெரியாம மொக்க போட்டுட்டு.. நான் சொல்லறது ஹவுஸ் ஓனர்!

அதுவும் ஆபீஸ் ல இருந்து மூணு கிலோமீட்டர் போனா தான் மெயின் ரோடு வரும்.. இந்த மூணு கிலோ மீட்டருக்கு லைட் கிடையாது. பக்கத்துல பெரிய கம்பெனி வேலை ஒன்னு நடக்குது.. அதுனால கொஞ்சம் ஆள் நடமாட்டம் இருக்கும்.. ஆனா எல்லோரும் வெளியூர் காரங்க.. அந்த இருட்டுல ஒருத்தன் வந்து கைய காட்டி லிப்ட் கேட்டா அவன் மனுசனா பேயான்னு யோசிக்கறதுக்கு கூட எனக்கு தைரியம் இருக்காது. இதுல இந்த சீனிவாசன் வேற, இந்த இடம் ஒரு சுடுகாடாம். அந்த பெரிய கம்பெனி கட்டறதுக்கு வேலை செய்யற பல பேரு இங்க பேய பாத்திருகாங்கலாம்.. அதனால தான் அவங்க தனியா நடந்து போகாம கூட்டமா போவாங்க இல்லைனா லிப்ட் கேட்டு போவாங்கன்னு பத்த வெச்சுட்டான். இப்போ கம்பெனி முழுக்க அது தான் பேச்சு.

நானும் பயத்தோட உக்காந்து உக்காந்து யோசிச்சேன்.. நெகத்த கடுச்சேன்.. ச்ச இது என்ன புது பழக்கம்? நான் நேகத்தை எல்லாம் கடிக்க மாட்டேன்.. பயத்துல எதேதோ செய்யறேன்! கைய எச்சில் ஆக்குனா பேய் பிடிக்கும் சாத்தியம் அதிகம்னு “உடையார்”ல பாலகுமாரன் சொன்னது இப்பவா நினைப்புக்கு வரணும்? சீக்கிரம் போய் கைய கழுவனும். அப்படியே முகத்தையும் கழுவிக்கிறேன். நாளைக்கு பேபர் ல வரும்போது அழகா இருக்க வேண்டாமா? பேய் மூஞ்சில அடுச்சிருச்சுனா? எதுக்கும் மூஞ்சில அடிக்க வேண்டாம்னு இப்பவே ஒரு ரிக்வஸ்ட் லெட்டர் எழுதிக்கறேன். ஐயயோ இது தமிழ் நாட்டுல இருந்த கிராமத்து சுடுகாடு. இங்க இருந்த வர பேய்க்கு இங்கிலீஷ் தெரியுமா? எனக்கு வேற தமிழ் தப்பிலாம அடிக்க தெரியாதே. சரி விடுங்க வந்தா அப்படியே காலுல விழுந்திட வேண்டியது தான்.. அய்யய்யோ … பேய்க்கு வேற கால் இருக்காதே !! ஒரு பயம் வந்தா பரவால்ல.. இத்தன கேள்வி இத்தன பயம் வந்தா நான் என்னங்க செய்யறது ?

இன்னைக்கு கால் இல்லைன்னு சொல்ல இத்தன நேரம் வெயிட் பண்ண வெச்சுடாங்கா.. எல்லாம் நேரம்!!  சரி டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. எதுக்கும் வண்டிய ஹை பீம் ல வெச்சுக்கறேன்.. அப்ப தான் பேய் வந்தா தூரத்திலேயே தெரியும்!!

முருகா. முருகா முருகா.. முருகா.. மு..மு.ரு.க்.கா

அட பயம் எல்லாம் இல்லைங்க குளுருல நடு..டுங்குது. அட சென்னைல குளிரா? இது ஏதோ வித்யாசமா தெரியுது இல்ல? இது சம்மர் சீசன் வேற. சம்திங் ராங்.

நிதானமா யோசிச்சா எல்லாமே ஒரு அமானுஷ்ய சக்தியா தெரியுதுங்க

1) எப்பவுமே கம்பெனி பஸ்ல வர நான், இன்னைக்கு என் வண்டில வந்திருக்கேன்
2) நெகத்த கடிக்காத நான் இன்னைக்கு கடிச்சிருகேன்
3) எப்பவுமே என் கருத்த கேக்கற என மேனேஜர் இன்னைக்கு அவரா என்னை இருக்க சொல்லீட்டார்
4) சென்னைல குளுருது.. (எனக்கு மட்டும்னு நினைக்கறேன்!)

இந்த சீனிவாசன் வேற, வெள்ளிகிழமை சாய்ந்தரம் பேய் வரும்னு சொல்லிருக்கான்! அம்மனுக்கு மட்டும் தான் வெள்ளிகிழமை உகந்த நாள்னு நினச்சேன். அவன் புதுசு புதுசா சொல்லி பயமுறுத்தறான்!

யாரோ ஒருத்தன் நிக்கறான்.. சாரி நிக்கறாங்க. மரியாதை இல்லாம பேசுனா பேய்க்கு கோவம் வந்திட போகுது. ஐய்யயோ.. கை நீட்டி லிப்ட் கேக்கறாங்களே. முருகேசா முருக்குடா வண்டிய. திரும்பி பாக்கலாம்னு பாத்தா, திரும்பி பாத்தா பேய் அறையும்னு நம்ம “பேயி”ஸ்ட் சொல்லிருக்கான்!

அப்பாடி மெயின் ரோடு வந்துடுச்சு.. பேய் ஒரு வேளை என்ன கண்ணு வெச்சிருக்குமோ? இன்னைக்கு வேற நான் ரொம்ப அழகா இருக்கேன். கண்ணு வெச்சிருந்தாலும் வெச்சிருக்கும். காலைலியே திருஸ்டி பொட்டு வெச்சிருக்கணும். இந்த பயத்திலையும் எப்படித்தான் எனக்கு மொக்க போடா வருதோ? இந்த மொக்கைக்காகவே என் மேல யாராவது பேய ஏவி விட்டாகூட ஆச்சிர்யப்படறதுக்கு இல்ல!

ஒரு வழியா வீடு வந்திருச்சு.. ஆனா எனக்கென்னமோ அந்த உருவம் என்ன பின் தொடர்ந்து வர மாதிரி தான் இருக்கு! பெருமாள் கோவிலுக்கு போய் சொர்கத்துக்கு போனும் சொர்கத்துக்கு போனும்னு வேண்டிக்கிட்டது தப்பா போச்சு! தூக்கம் வேற வர மாட்டீங்குது.. கண்ண மூடுனா பயமா இருக்கு.. தனியா இருந்து பயபடறவங்களுக்கு எல்லாம் டிவி தான ஒரே கதி? சரி டி.வி போட்டு பாக்க வேண்டியது தான்!

இதுலையும் பேய பத்தி தான் பேசறாங்க.. அட என்னங்க இது ரிமோட் வேற வொர்க் ஆகா மாட்டீங்குது!

யாவரும் நலம் படத்த நான் பாத்த மாதிரியே என்ன துரத்துன பேயும்  பாத்திருக்கும் போல… அது ஹிந்தி தெருஞ்ச பேயா இருந்து 13B பாத்திருந்தா என்ன செய்யறது? ச்சே..பயத்துல சம்பந்தம் இல்லாம பேசறனோ? சாரீங்க.. சந்தேகமே இல்ல, இது பேய் வேலை தான்..

ஏதோ பேய பத்தி நிஜ கதையாம்.. இத பத்தா, “முருகேஷ் னு ஒருத்தன் உயிரோட இருந்தான்னு” யாராவது கதை சொல்லவேண்டி வரும்! ஐயோ சேனல் மாற மாட்டீங்குதே..

என்னங்க இது பேய் பத்தி பேசறாங்கன்னு பாத்தா ஏதோ கிளுகிளுப்பா பேசிகிட்டு இருக்காங்க.. அட, என்ன சந்தேக படாதீங்க.. டிவி யா பாருங்க.. ஒருத்தர் மனசு ஒடுங்சு போய் பீச்ல உக்காந்தாராம், அப்ப ஒரு பொண்ணு வந்து பேச்சு கொடுத்துச்சாம்.. அப்படியே பேசி காதல் வந்திருச்சாம்.. அட திரும்பவும் சந்தேகமா, உண்மையாதாங்க சொல்லறேன்.. முழுசா கேளுங்க..

வேண்டாம் இப்பவே நீங்க என்ன சந்தேக படறீங்க, முழுசா சொன்னா நீங்க என்னை முழுசா நம்பமாடீங்க.. ஆனா கடைசியா தொகுப்பாளர் வந்து “இது எப்படி சாத்தியம் ஒருத்தர் எப்படி மோகினி பிசாசொட வாழமுடியும்? அதுவும் கணவன் மனைவியை போல்” னு அழுத்தி சொன்னார்.. வழக்கம் போல எனக்கு புரியல.. உங்களுக்கு ஏதாவது தப்பா புருஞ்சிருக்கும்.. ஆனா பழிய தூக்கி என் மேல போடுவீங்க…சரி பொது வாழ்க்கைனாலே தியாகம் தான?

அட இருங்க, சித்தரிக்க பட்டவைனு போடறான்.. ச்ச சித்தரிக்க பட்டது பீச்ல பாத்து பேசுனது மட்டும் தான்.. படு பாவி பசங்க!! இது சித்தரிக்க பட்டவை இல்ல..வெறும்  கத்திரிக்க பட்டவை !! ஆனா மோகினியா வந்த பொண்ணு செமயா இருக்கு.. பொண்ணுங்கள பேயா பாத்த என் கல் மனச, பேயையும் பொண்ணா பாக்க வெச்சிருச்சுனா பாத்துகுங்க..

பை தி வே, இன்னைக்கு வெள்ளிகிழமை.. அதுவும் ராத்திரி நேரம்.. மோகினி வர நேரம்.. என்ன வேற ஒரு உருவம் பின் தொடர்ந்து வந்த மாதிரி இருந்துச்சு.. சோ கேன் யு ப்ளீஸ்.. ??

* “ஸ்டே வித் மீ” னு சொல்லுவேன்னு நினைச்சீங்கனா இந்த கதையோட தலைப்பு “‘பயம்’ங்கர வியாதி”

* “கெட் அவுட்” னு சொல்லுவேன்னு நினைச்சீங்கனா, கதைக்கு நான் தலைப்பு வெக்க தேவை இல்ல.. நீங்களே பயங்கரவாதி னு என்ன திட்டிருப்பீங்க!!


Responses

 1. Sorry Machi I cant able to come to that sirugathai pattarai.

 2. ஜி சூப்பரோ சூப்பரோ சூப்பர், ‘மேக்கப்”நிக்கறான், நிக்கறாங்க’ -னு அலப்பறை பண்ணீட்டிங்க…

 3. நல்லா இருக்கு நண்பா,
  மூனாவது பத்திய ரொம்ப ரசிச்சேன்.

 4. @பாசகி
  நன்றி ஜி.. ஆனா அடலேறு படுச்சுட்டு தேறாதுன்னு சொல்லீட்டான் 😦

  @எவனோ ஒருவன்
  நன்றி நண்பா..

 5. HI,
  Very nice.I couldn’t stop laughing

 6. நல்லா சிரிக்க வைக்கிற பதிவு. முதல் பாதி ரொம்ப ஜாலியா நல்லா சிரிகும்படியா இருக்கு நன்றி புவனேஷ் 🙂

  //இன்னைக்கு வேற நான் ரொம்ப அழகா இருக்கேன்.//
  இந்த ப்ளோக்ல சுய விளம்பரத்துக்கு அளவே இல்லாம போச்சு டா… புவனேஷ், முருகேஷ் ன்னு எல்லோருமே இப்படியா ? இத கேக்குறதுக்கு யாருமே இல்லையா கடவுளே … 🙄

  //பொண்ணுங்கள பேயா பாத்த என் கல் மனச//

  என்ன முருகேஷ் உங்க கண்ணுல எதாவது கோளாறா? கண்ணுல பாக்க முடியாததை தான் மனக் கண்ணுல பார்பாங்கன்னு கேள்வி. மோகினிய மட்டும் மனக் கண்ணுல பாருங்க. 🙂

 7. @ Uma
  நன்றீங்க.. அடிக்கடி வாங்க !!

  @ Krishnaa

  நன்றி கிருஷ்ணா.. வேணும்னா சொல்லுங்க அடுத்த கதைல கிருஷ்ணானு ஒரு பாத்திரம் வெச்சு சுய விளம்பரம் கொடுக்கறேன் !

 8. ம்ம்ம் இன்னும் ஒண்ணா ❓ அதான் பகவத் கீதை இருக்கே புவனேஷ் மறந்துடீங்களா 🙄
  வேற எதாவது நல்ல கதையா போஸ்ட் பண்ணுங்க. 🙂

  அமா உங்க முருகேஷ் என்ன பதில் சொல்ல மாட்டாரா ❓


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: