--புவனேஷ்-- எழுதியவை | செப்ரெம்பர் 17, 2009

பெரியார் !!


அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் டிவில சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்த க.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வாழ்கைல நடந்த ஒரு சம்பவம்/உரையாடல பகிர்ந்துகிட்டார்!! அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுது.. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆனது அலுவலக நேரம்.. அதனால நிறைய பேர் பாத்திருக்க மாட்டீங்க.. சோ உங்களுக்காக..

***
பெரியாரிடம் ஒருத்தர் கேக்கறார் ..

அய்யா.. நீங்க சொல்லறது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு.. வயசுல பெரியவர் நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.. ஆனா எங்க சாமிய (சாமி சிலையை காட்டி) கல்லுனு சொல்லறீங்களே ?

நான் எங்கப்பா சாமிய கல்லுன்னு சொன்னேன்? வெறும் கல்லை தான் கல்னு சொன்னேன்..

(மௌனம்)…

சரி வேணும்னா வா.. அந்த கல்ல நான் உடச்சு காட்டறேன்.. வெறும் கல்லு தான் அது.. அதுக்குள்ள இருந்து சாமி எல்லாம் வராது..

என்னங்க அய்யா இப்படி சொல்லீட்டீங்க.. அந்த கல்லுல மந்திரம் எல்லாம் ஏத்தி சாமி ஆக்கிருக்காங்க..

ஏம்ப்பா, வெறும் கல்ல மந்திரம் ஏத்தி சாமி ஆக்க முடியும்னா நீங்க கீழ் சாதின்னு சொல்லற மனுசன மந்திரம் சொல்லி மேல் சாதி ஆக்கலாம் இல்ல ??

****

உங்களுக்கு பிடிச்சுதா ?


Responses

 1. கலக்கல் மாம்ஸ். நல்ல பதிவு நல்ல பகிர்வு. இதே மாதிரி என்கிட்ட ஒன்னு இருக்கு 🙂

 2. நல்ல பகிர்வு புவனேஷ்.

 3. ஜி, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன், தொடருங்க…

  http://mudhalezhuthu.blogspot.com/2009/09/blog-post.html

 4. @அடலேறு
  சொல்லு மச்சி.. அதையும் தெருஞ்சுக்கறேன்..

  @குந்தவை
  நன்றி அக்கா..

  @பாசகி
  அழைப்புக்கு நன்றி நண்பா.. சீக்கிரம் பதில் போடறேன்!

 5. அருமையான உரையாடல். பதிவா தந்ததற்கு நன்றி புவனேஷ். 🙂

 6. நன்றாக இருந்தது புவனேஷ்.

 7. Nice Post Friend.

 8. நன்றி கிருஷ்ணா, Karthikeyan, Tharanipathi


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: