--புவனேஷ்-- எழுதியவை | செப்ரெம்பர் 29, 2009

கடவுள் காதல் பணம் அழகு – நான்!


தொடர் பதிவுக்கு அழைத்த நட்பு பாசகிக்கு நன்றி நன்றி நன்றி!!

கடவுள் உண்டா?

நேத்து தலைவரோட முத்து படம் பாத்தேன்.. அதுல ஒரு வசனம் “சாமிய உள்ளவே வெச்சுகிட்டு வெளிய தேடறாங்க”.. எனக்கு பிடிச்சுது..

“மனுஷன் மனுசன பாத்துகிட்டா தான் கடவுள் மனுசன பாப்பார்”.. என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? பஞ்ச் நல்லா இருக்கானு மட்டும் பாருங்க.. அதுக்குள்ள ஆராய கூடாது..

காதல் மனிதனுக்கு அவசியமா?

காதல் அவசியம் தான்.. ஆனா அந்த காதல் நியாயமா இருக்கணும்.. நிறைய பேர், உலகத்துல எல்லோரும் காதலிச்சா உலகமே பூந்தோட்டமா இருக்கும்னு எல்லாம் சொல்லி கேள்வி பட்டிருக்கேன்.. என்ன பொறுத்த வரை அது எல்லாம் சுத்த பேத்தல்.. உலகத்துல பாதி சண்ட காதலுக்கு தான் நடக்குது.. ஒன்னு பொண்ணு இல்ல மண்ணு !! முக்கியமா பெண்ணுக்காகனு சொன்னேன் இல்ல? அதுல பாதி பெத்த பொண்ணுக்காகவும் காதலிச்ச பொண்ணுக்காகவும் நடக்கற நியாயமான சண்ட.. (உஸ்ஸ்.. சொந்த வாழ்க்கை எப்படி எல்லாம் உள்ள கொண்டு வர வேண்டி இருக்கு 🙂 )

பணம் அவசியமா?

பணம் அவசியம் தான்.. அது அத்யாவசியமும் கூட.. அதனால அது மத்தவங்களுக்கும் தேவை படும்னு நெனச்சு பதுக்கி வைக்காம இருக்கணும்!

இதுவே கவி. வைரமுத்து மாதிரி சொல்லனும்னா “செல்வம், செல்லரித்து போகாமல் பார்த்துகொள்” !!

தளபதி படம் பாத்தவங்க மனசுக்குள்ளவே ரீமிக்ஸ் செஞ்சுக்கோங்க “கலெக்டர் சார் நீங்க என்னிக்காவது ஏழையா இருந்திருக்கீங்களா? பாக்கெட்ல காலணா இல்லாமா ஒரு அட்டு பிகர் கூட கிடைக்காம தெரு தெருவா சுத்தீருக்கீங்களா??”

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

நான் வேற என்னங்க சொல்ல போறேன்… பெண்கள் தான்!! நிரந்தரமா இல்லையாங்கறது உங்கள பொருத்து இருக்கு.. ஸ்டெல்லா காலேஜ் பொண்ணுங்க அழகா இருப்பாங்க னு சொன்னா அது நிரந்தரம். ஸ்டெல்லானு ஒரு பொண்ணு அழகா இருப்பா னு சொன்னா அது நிரந்தரம் இல்ல.. நீங்க ஒரே பொண்ண சைட் அடிக்கறீங்களா இல்ல ஒரே காலேஜ் பொண்ண சைட் அடிக்கறீங்கலானு பொருத்தது! ஒரே காலேஜ்னாவே அப்படி.. என்ன மாதிரி யாவரும் கேளிர் னு இருக்கறவங்களுக்கு அழகு நிரந்தரம் தான?

கொஞ்சம் ஓவரா இருக்கோ?? சரி விடுங்க.. எல்லாரும் சீரியஸா பேசியாச்சு.. நானும் எதுக்கு சீரியஸா பேசணும்?

அடுத்து, எங்க கிளாஸ் (அதாங்க LKG ‘C’)  மொழில சொல்லனும்னா .. மாட்டி மாட்டி  !!

குந்தவை அக்கா!! (இப்படியாவது நீங்க ஒரு ப்ளாக் போடுங்க அக்கா.. இப்ப எல்லாம் நெம்ப நாள் கடத்தறீங்க!!)

அடலேறு (மச்சி, நீ இந்த கேள்விகளுக்கு எல்லாம் கவிதையா பதில் போட்டு அசத்து மச்சி!)

 

டிஸ்கி: தொடர் ஆரம்பிக்கும்போது தலைப்புல எந்த வரிசைல இது எல்லாம் இருந்துச்சுனு தெரியல.. நான் தான் இந்த வரிசைல போட்டிருக்கேன்!

அதனால தலைப்பை நல்லா பாத்து அதுல “அழகு – நான்” என்பதில் இருக்கும் உள்குத்தை கவனிக்கும்படி கேட்டுகொள்கிறேன் (உங்களுக்கு விளக்கம் சொல்லியே…)


Responses

 1. //காதலிச்ச பொண்ணுக்காகவும் நடக்கற நியாயமான சண்ட.
  நீங்க எப்பவும் நியாயாமான சண்டை தான் போடுவீங்க போல.

  //“செல்வம், செல்லரித்து போகாமல் பார்த்துகொள்” !!
  செல்லரித்து போகவிடாம எனக்கு அனுப்பிவச்சிருங்க.

  பாசமுள்ள தம்பின்னு எனக்கு தெரியும் அதுக்காக இப்படியா எல்லா தொடருக்குள்ளேயும் இழுத்து போடுவது.
  சொல்லிட்டீங்க…எழுதி பாக்கிறேன்….

 2. Hi Buvanesh,
  nice answer to all question.i think your answers are may be not serious but it’s true.keep it up

 3. நேத்து தலைவரோட முத்து படம் பாத்தேன்..
  // நேத்து தான் பாத்தயா ராசா//

  //உஸ்ஸ்.. சொந்த வாழ்க்கை எப்படி எல்லாம் உள்ள கொண்டு வர வேண்டி இருக்கு 🙂 //
  அப்ப தங்கச்சிய கேட்டதா சொல்லவும்

  //அடலேறு (மச்சி, நீ இந்த கேள்விகளுக்கு எல்லாம் கவிதையா பதில் போட்டு அசத்து மச்சி!)//

  இன்னும்மா இந்த ஊரு நம்மள நம்புது.

  கண்டிப்பா முயற்சி செய்ற நண்பா

  நல்ல பதிவு அழகு பத்தின பதிவு கலக்கல் மாபி.

 4. கலக்கீட்டீங்களே நட்பு.

  பதிவு போட்டுட்டு ஒரு வார்த்தை சொல்லறதில்லை, என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு 🙂

  அப்படியே தலைவரை இதுக்குள்ள கொண்டுவந்தீங்க பாருங்க. உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🙂

  //(உஸ்ஸ்.. சொந்த வாழ்க்கை எப்படி எல்லாம் உள்ள கொண்டு வர வேண்டி இருக்கு 🙂 )//

  ரைட்டு.

 5. வாங்க குந்தவை அக்கா!!

  நன்றி உமா!!

  வாப்பா அடலேறு.. சீக்கிரம் பதிவு போடு மாப்பி..

  நன்றி பாசகி !!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: