--புவனேஷ்-- எழுதியவை | செப்ரெம்பர் 30, 2009

நோ நோ அழக்கூடாது!


நானும் பெரிய இவன் மாதிரி கதை, பெரியார் பத்தின பதிவு எல்லாம் போட்டு பாக்கறேன், நம்ம கடை காத்து வாங்குது… சரி இது எல்லாம் சரி வராது கவிதை தான் நம்ம ரூட்டுனு முடிவு செஞ்சு எழுத ஆரம்பிக்கறேன்..

இனி என் இந்த செயல்களுக்கு அந்த வடிவேல் முருகன் தான் துணை இருக்க வேண்டும் !!

அடாவடியாக என் கரம் பற்றி இழுத்து

நீ “ஐ “லவ் யூ” சொல்கையில்

கேட்க நினைத்தேன்

“ஏன் இந்த கொலை வெறி?”

 

நாம் காதலிக்க ஆரம்பித்த பின்

உன் தங்கையை பார்த்தேன்

“அடடா வடை போச்சே!!”

 

அவளை பார்த்த நான் பார்த்து கொண்டே இருந்தேன்

என்னை பார்த்த நீ கேட்டாய்

சுடிதார் அழகா இருக்கு இல்ல ?? –

“இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது?”

 

என்னருகே வந்த அவள் ஹாய் என்றாள்

நானும் ஹாய் டார்லிங் என்றேன்

பாக்கத்தில் இருந்த உன்னை பார்த்தாள்

“விடுங்க பாஸ் இதுக்கு எல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?? “

 

உன் குடும்ப புகைப்படத்தில்

உன் அப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன் என

வரிசையில் நிற்கும்போது புரிந்தது –

“இது ரத்த பூமி”

 

சினிமா,

மல்லிகை பூ,

அல்வா,

தங்க வளையல்,

தங்கைக்கு வளையல்,

விடுமுறை பிக்-அப்

வீடுவரை டிராப்

“உஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணகட்டுதே”


Responses

 1. ஜாலியான பதிவு சுட்டபழம். இன்னும் நிறைய முயற்சி பண்ணு புவனேஷ்.

 2. கேட்க நினைத்தேன்
  “ஏன் இந்த கொலை வெறி?”

 3. நன்றாக இருக்கிறது உங்கள் நடை… வாழ்த்துக்கள்

 4. அய்யா சுட்டபழம் அவர்களே…..சான்ஸே இல்ல! பேசாம நீர் வடிவேலுவுக்கு போட்டியா சினிமாவுல காமெடியிலே இறங்கிவிடலாம்!

  //சினிமா,

  மல்லிகை பூ,

  அல்வா,

  தங்க வளையல்,

  தங்கைக்கு வளையல்,

  விடுமுறை பிக்-அப்

  வீடுவரை டிராப்

  “உஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணகட்டுதே”//

  காமெடி (கவிதை) சூப்பர் அப்பு! வாழ்த்துக்கள்.

 5. ரசித்தேன், சிரித்தேன் புவனேஷ்.

 6. இனிமேல்

  சுட்டபழம் ஃபிளாக்குக்கு

  உஷாராத்தான் போகணும்

  “நான் என்னைச் சொன்னேன்”

 7. பாசகி, …. பதில் டாப்பூ…

 8. பாருங்க நண்பர்களே.. இந்த அடலேறு மாதிரி ஆளுகதான் என்ன இந்த மாதிரி முயற்சி பண்ண வைக்கறாங்க.. ஆட்டோ அனுப்பறவாங்க நோட் பண்ணுங்க!!

  எவனோ.. நாங்களும் தொழில் பண்ணனும் இல்ல ?? 🙂

  அஹா.. ஈ ரா இங்க வந்தீங்களா? நெம்ப நன்றி கவிஞர்!!

 9. @பத்மா ஹரி.. உங்க பாராட்டுக்கு நன்றி நன்றி நன்றி!!
  //அய்யா சுட்டபழம் அவர்களே…..சான்ஸே இல்ல! பேசாம நீர் வடிவேலுவுக்கு போட்டியா சினிமாவுல காமெடியிலே இறங்கிவிடலாம்!//
  ஆகா மொத்தம் இனிமேல் பதிவு எழுதாத னு சொல்லறீங்க ?

  @ குந்தவை அக்கா!!
  நன்றி நன்றி !!

  @பாசகி
  அருமையான கவிதை (!) நட்பு.. ச்சே நான் இத மிஸ் பண்ணிட்டேனே?

 10. @ Soundr
  என்ன ஒரு வில்லத்தனம்? ராப்பகலா யோசிச்சு மாங்கு மாங்குன்னு அஞ்சு கவிதை எழுதினா பாசகி பதில் நல்லா இருக்குன்னு கமெண்ட்.. உங்களுக்கு எல்லாம் இன்னொரு ரவுண்டு கவிதை எழுதினா தான் சரிப்பட்டு வருவீங்க!!

 11. முயற்சி பண்ண வெச்சாலும் சரக்கு இருந்தாதான கடை நடத்த முடியும் நண்பா. உனக்கு திறமை பல உண்டு, நாங்கெல்லாம் சும்மா உந்துகோல் தான். வானம் முழுக்க சிறகடித்து பறக்கட்டும் உன் நினைவுகள்.

 12. ரைட்… நெக்ஸ்ட் மீட் பண்றேன்…

 13. ஐய்யய்யோ.. ரத்தம் ரத்தம்..

  கலக்கல் நண்பா.. பின்னி இருக்கீங்க..
  //நாம் காதலிக்க ஆரம்பித்த பின்

  உன் தங்கையை பார்த்தேன்

  “அடடா வடை போச்சே!!”

  //
  🙂 superb


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: