--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 1, 2009

ஒரு வயசு பொண்ணு!!


ஒரு வயசு பொண்ணுங்க.. சிலருக்கு அவள புடிக்கும்.. சிலர் அவள பாக்கவே மாட்டாங்க.. ஆனா ஒரு நாலஞ்சு பேரு திரும்ப திரும்ப அவள வந்து பாக்கறாங்க.. சில நேரம் நீ இப்படி இருக்கலாம், அப்படி இரு, இப்படியும் இருந்திருக்கலாமோனு  சொல்லீட்டு போவாங்க! அப்படி வந்து பாத்துட்டு ஏதாவது சொல்லீட்டு போறதுக்கு காரணம் அவள பிடிச்சிருக்கா இல்ல இன்னும் ஒரு வருஷம் கலுச்சு இவ நல்லா இருப்பானு நம்பிக்கையா இல்ல அந்த பொண்ண வெச்சு ‘தொழில்’ செய்யறவனோட இருக்கற நட்பா, இல்ல அவன் கூட இருக்கற பழக்கமா னு தெரியல!! ஆனா வருவாங்க.. அவளுக்கு ஆறுதலா நாலு நல்ல வார்த்த சொல்லீட்டு போவாங்க.. இவங்க எல்லாம் இல்லைனா அந்த ‘தொழில்’காரன் அவள என்னிக்கோ கொன்னு போட்டிருப்பான்!! அந்த தொழில் செய்யரவனும் அடிக்கடி வரவங்கள பாத்து “இந்த பொண்ணு நல்லா இருக்கா?” னு அடிக்கடி கேட்டுட்டே இருந்தான். அதுக்கு அவங்க சொன்ன பதில்…

 

இருங்க.. நான் உங்க கற்பனைல விளையாட விரும்பல.. நான் சொல்லற வயசு பொண்ணு என் எழுத்து தான்.. அவ ஒரு வயசு பொண்ணு தான் ஆனா ஒரு “வயசு பொண்ணு” (நன்றி திரு ரா. பார்த்திபன் சார்!)..

நேத்து தான் பதிவு எழுத வந்தா மாதிரி இருக்கு ஆனா நேத்தோட ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சு!! தொடர்ந்த வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!!

நான் சோர்ந்து போறப்ப எல்லாம் யாராவது வந்து ஆதரவு தந்தீங்க.. நன்றி நன்றி நன்றி!! ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்.. நான் படிச்ச வரைக்கும் என்னை விட எல்லாம் நல்லா எழுதறாங்க.. பொறாமையா இருக்கும்/ இருக்கு… சில சமையம் இனி மேல் எழுத கூடாதுனு கூட தோணும்.. (ஆனா இதுக்கு எல்லாம் பயந்தா “தொழில்” பண்ண முடியுமா னு போய்ட்டே இருக்கேன்!!)!! நான் இப்படி சொல்லறது பலருக்கு ஏதோ ‘பார்மல்’லா சொல்லற மாதிரி இருக்கும்.. நான் ஏதாவது கதை படிச்சு அசந்தா சரவணன் கிட்ட வழக்கமா சொல்லறது இது தான்!(அவன் திருப்பி “அப்ப நீ  எழுதறத நிறுத்து”னு சொல்லமாட்டான்ங்கற தைரியம் தான்!! வேற என்ன?) சமீபத்தில் அசந்தது ‘அடலேறு’வின் காதல் கவிதை !

 நான் இந்த பதிவுலகத்துக்கு ஒன்னும் உருப்படியா செய்யல!! இந்த பதிவுலகம் எனக்கு தந்தது என்னனு யோசிச்சா, நானும் அறிவாளி மாதிரி நடிக்க நிறைய யூஸ் ஆகுது.. யாரவது விடிய விடிய புக் படிச்சு அதுல இருக்கறத ஏதாவது விவாதத்துக்கு மேற்கோள் காட்டுவாங்க.. நாம அத படிச்சுட்டு நண்பர்கள் கிட்ட பேசும்போதும், இல்ல குடும்பத்துல பேசும்போதும், நம்ம தாத்தா காலத்து அரசியல அப்பா கிட்ட பேசும்போதும் “பெரியார் என்ன செஞ்சாருன்னா..” “அண்ணா ஒரு சட்டமன்ற கூட்டத்துல.. “னு அள்ளிவிடனும்.. (உண்மைய சொல்லுங்க.. நீங்களும் இப்படி தான செய்யறீங்க?? ).. அரசியல் வட்டம் இல்லாதவங்களுக்கு இருக்கவே இருக்கு சினிமா!!  கிம் கி டுக் தெரியுமா? லெமன் ட்ரீ தெரியுமா னு அடிச்சு விடுங்க.. அன்பே சிவம் படத்துல கமல் வாய்ல இருந்து செகப்பு கலர் ரத்தம் துப்புவாரு பாத்திருக்கியா? அது ஒரு குறியீடுனு சொல்லுங்க.. அவங்களுக்கு என்ன மறுத்து பேசவா போறாங்க? நீங்க தான் அவங்கள பொறுத்த வரைக்கும் அறிவாளி வட்டத்துக்குள்ள போய்டீங்களே.. அப்படியும் ஏதாவது ஆர்வகோளாறு என்ன குறியீடுனு கேட்டா, ரத்தம் செகப்பா இருந்துச்சு பாத்தியா அது அவரு கம்யூனிஸ்ட்ங்கற குறியீடுனு வாய்க்கு வந்தத சொல்லுங்க!! நம்புவாங்க! ரத்தம் வேற என்ன கலர்ல டா இருக்கும் ங்கொய்யாலனு எல்லாம் கேக்க மாட்டாங்க! ஆனா அப்படி செய்யும்போது தமிழ் இணையம் பக்கம் வராத ஆளுகளா பாத்து கூட்டு நாட்டு வெச்சுக்கறது உங்க சாமர்த்தியம்!! அப்புறம் இந்த வார்த்தைய சொல்லாமா தமிழ் இணையம்னு சொன்னா வரலாறு மட்டும் இல்ல “காட் பாதர்” கூட என்ன மன்னிக்காது.. “பின்நவினத்துவம்” .. ( அந்த வார்த்தைய எப்படி வாக்கியத்துல அடக்கறதுனு இந்த சின்ன குழந்தைக்கு  தெரியாததால ஒன்னும் சொல்லல..! )

 சரி கடைசியா.. இல்ல வேண்டாம்.. இது கடைசியா சொல்லறதா இருக்காதுங்கற நம்பிக்கையோட

 

நன்றி நன்றி நன்றி !! நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் !!


Responses

 1. ahha…. congrats.. one year baby.

  தம்பி கூட இருக்கிற தைரியத்தில் தான் நானும் எழுதிட்டிருக்கேன். அதனால கண்டிப்பா எழுதிகிட்டே இருங்க.

 2. congratulations and wishes

 3. நட்பு கலக்குங்க.

  உங்க keyboard-ல காமெடி தாய் கன்னாபின்னா-னு நாட்டியம் ஆடறா 🙂

 4. லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

  http://ulalmannargal.blogspot.com/

 5. வணக்கம் நண்பா ,

  முதலில் வாழ்த்துக்கள் ஒரு வருடம் சிறப்பாக வலை பதிவில் கலக்கியதற்க்கு.

  இனி வர போகும் வருடங்களிலும் இதே போல் சிறப்பாக எழுதுங்க நண்பா.

  //தொடர்ந்த வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!!// உங்களுக்கும் நன்றி தொடர்ந்து ஒருவருடம் பதிவிட்டமைக்கு

  //ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்//
  உன்னுடய சிந்தனையை பதிவு செய்வது ஒரு தவம் நண்பா, தவத்தை மேற்க்கொள்ளும் போது நீ சோர்ந்து போக கூடாது நண்பா, அடி வாங்கும் கல் தான் சிற்பம் ஞாபகம் கொள்

  //ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்//
  நன்றி நண்பா

  // நான் இந்த பதிவுலகத்துக்கு ஒன்னும் உருப்படியா செய்யல//
  இதை நான் ஏற்க மறுக்கிறேன்

  நல்ல லலிதமான எழுத்து நடை நண்பா உனக்கு மென் மேலும் வளற மனமாற வாழ்த்துகிறேன்.

  நண்பனுக்கு நட்புடன்
  அடலேறு

 6. @குந்தவை
  நன்றி அக்கா..

  @பாசகி
  நட்பு.. நான் ஏதோ சிரிக்க வைக்க முயற்சி செய்யறேன்.. இந்த பாராட்டுக்கு நான் தகுதி இல்ல,,

  @Soundr
  நன்றிங்க!!

 7. @அடலேறு
  //முதலில் வாழ்த்துக்கள் ஒரு வருடம் சிறப்பாக வலை பதிவில் கலக்கியதற்க்கு.//

  மச்சி உங்க பதிவுகள பாத்து கலங்கியது தான் அதிகம்!!

  ////ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்//
  நன்றி நண்பா///
  யோவ்.. சோர்ந்து போனதுக்கு எதுக்குயா நன்றி ?? சீக்கிரம் பூஸ்ட் மாதிரி அடுத்த போஸ்ட் போடு.. (ஆனா அத பார்த்துட்டும் நான் சோர்ந்து தான் போவேன்!)

  நன்றி நண்பா!

 8. Melum Kalakka vaazhthukkal

 9. //மச்சி உங்க பதிவுகள பாத்து கலங்கியது தான் அதிகம்!//
  ஆமா நண்பா கவிதைனு சொல்லி ஏதேதோ கிறுக்கி உன்ன படிக்க வெச்சதுக்காக நீ கலங்கிருக்கலாம் தப்பில்ல.

  ///ஆனா இந்த பதிவுலகம் என்னை சோர்ந்து போக வெச்சது தான் அதிகம்//
  நன்றி நண்பா//

  கடை போடற கூட ஒரு அள் இருக்கறதால தான் நன்றி சொன்ன நண்பா

  //(ஆனா அத பார்த்துட்டும் நான் சோர்ந்து தான் போவேன்!)//

  அடுத்த கிறுக்கல போடறதுக்கு முன்னாடியே மொக்கைனு எப்படிதான் கண்டுபுடிக்கறாங்களோ

 10. வாழ்த்துக்கள் புவனேஷ். நான் கூட உங்க பதிவுகளைப் பார்த்துவிட்டு உங்க கீபோர்டுல மட்டும் எப்படி காமெடி இப்படி கபடி வெளையாடுதுன்னு யோசிச்சேன்!

  ஒரு வருஷமா கலக்குறீங்க….பின்ன எதுக்கு சோர்ந்து போறத பத்தி எல்லாம் யோசிக்கிறீங்க! சும்மா பூந்து விளையாடுங்க!

  உங்கள் இந்த பதிவு என் போன்ற பதிவர்களுக்கு ஒரு நல்ல ஊக்கமா இருக்குது புவனேஷ்! நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்,

  பத்மஹரி.

 11. மச்சி ஒரு வருஷம் ஆச்சா நீ எழுத ஆரம்பிச்சு? நம்ப முடியல… வாழ்த்துக்கள்… தங்கள் மொக்கை தமிழுக்கு தேவை… தொடரட்டும் தமிழ் பணி…

 12. மச்சி சோர்ந்து எல்லாம் போகாத… இந்த உலகம் உன் மேல கல் வீசிட்டே தான் இருக்கும்… அந்த கல்ல வெச்சி படி கட்டலனாலும் அத வித்து பொலச்சிக்கலாம்… so dont worry

 13. அப்பு இன்னொரு கேள்வி… ஒரு வருசமா இப்படி மொக்க போடறியே எங்கப்பு வெச்சிருக்க இதெல்லாம்? வார வாரம் கப்பலுல வருதோ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: