--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 5, 2009

ஆசையே அலை போலே..


ஆசையே அலை போலே..” என்று என் கைபேசி பாட தூக்கம் கலையாமல் அதை எடுத்தேன்..

 ஹலோ வினோத்..

 ஆமாங்க

 யாரு பேசறேன்னு தெரியுதா ??

 கண்டுப்பிடிக்கறேன்.. நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க..

 சரி கேளுங்க .. 

நீங்க வழக்கமா எத்தன மணிக்கு எழுந்திருபீங்க

 ஆறரை மணி 

 அப்ப நான் அலாரம் வெச்சு எழுந்து அஞ்சரை மணிக்கு கால் பண்ணறேன்.. நீங்க கண்டுபிடீங்க.. ஓகே வா ??

 அய்யய்யோ சாரி.. நீங்க தூங்கிட்டி இருந்தீங்களா..

 “இல்லங்க நீச்சல் அடுசுட்டு இருக்கேன்.. இருங்க கரை ஒதுங்கிக்கறேன்!”

 நான் வேணா அப்புறம் கூப்பிடட்டா..

 வேண்டாங்க எழுந்துட்டேன்.. என்னோட அத்த பொண்ணு கூட டூயட் பாடிட்டு இருந்தேன், அப்ப பாத்து எழுப்பி விட்டுடீங்க அந்த கடுப்பு தான்.. 

 ஹி ஹி.. வெரி சாரி ங்க.. உங்க அத பொண்ணு பேரு என்ன ??

 ஹ்ம்ம்.. தேனி குஜலாம்பாள்.. உங்க பேர மொதல்ல சொல்லுங்க..

 நான் உங்க அத்த பொண்ணுதான்.. ஆனா குஜலாம்பாள் இல்ல.. விமலா

 (படுத்துக்கொண்டு இருந்த நான் படார் என்று எழுந்து உக்காந்தேன்..) “ய்ய்.. யாரு”

 ஹி ஹி ஹி .. வேணும்னா டூயட் கன்ட்டிநியூ செய்யலாமா ?? 

நிஜமா விமலா தான் பேசறதா ??

 அட ஆமாப்பா.. நம்பு..

 நானும் நீயும் டூயட் பாடுனா அருண் என்ன செய்வான் ?

 ஹே.. ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல நானும் அவனும் சேந்து விளையாடுனது பிடிக்காம நீ என்ன அடுச்சு.. நான் அழுது.. உங்க அம்மா அத பாத்து உன்ன அடிக்க.. எங்க அப்பா என்ன போட்டு அடிக்க.. ஒரே பாச மழை இல்ல?

 திருத்தம்.. அது நீங்க சேந்து விளையாண்டதுக்கு அடிக்கல.. நீங்க ரெண்டு பேரும் சேந்து என்ன பிஸ்கட் தராம கடுப்படுச்சீங்க..

 ஆமா.. உன்ன கடுப்படிக்கறது தான் எங்க விளையாட்டு.. 

நாம அப்ப தான் கடைசியா பாத்தோம்.. இல்ல??

ஆமா.. அப்புறம் நாங்க பாம்பே போய்டோம்.. நான் அத்தை கிட்ட பேசுவேன்..நீ என்ன மறந்துட்டியா?

 அது எப்படி மறக்க முடியும்? நீ தான் என் காலுல மார்க் போட்டுட்டு போயிருக்கியே?

 நான் உன்னக்கு மார்க் போட்டனா? அப்படியே போட்டாலும் பெயில் மார்க் தான் போடுவேன்.. ஹி ஹி!

 மொக்க மொக்க..  அன்னிக்கு உங்க அப்பா உன்ன அடிக்க ஏதோ எடுத்தாரு நான் குறுக்கால வந்து தடுத்தப்போ அதுல இருந்த ஆணி கிளுச்சிருச்சு.. ல ல லா.. லல்ல ல ல லா ..

இப்படியே மியூசிக் போடு.. மொதல் நாளே லேட்டா தான் போவ.. நம்ம கம்பெனில எச்.ஆர் எவனும் விக்கரமன் படத்துல வரவங்க மாதிரி இல்ல.. எல்லாம் பேரரசு படத்துல வரவங்க மாதிரி இருப்பாங்க.. நாளைக்கு நான் உனக்கு மியூசிக் போடறேன் “டண்டநக்கா .. டணுக்குனக்கா.. டண்டனக்கா.. “

 ஐயோ.. ஆமா.. பை பை.. இது தான் என் நம்பர் அப்புறம் கால் பண்ணு.. 

************

 ஹலோ..

 சொல்லு டா..

 (டா வா???) சாப்படபோலாம?

போலாமவா? மவனே உனக்காக தான் வைடிங்.. 

 சரி சரி.. வா.. கான்டீன் போலாம்.

என்ன டா கான்டீன் சாப்பாடு இப்படி இருக்கு ??

மொதல் வெளிய சாப்படா எந்த சாப்பாடும் இப்படி தான் இருக்கும்.. போக போக பழக்கம் ஆகிடும்!

சரி பிரேக் போகும்போது கால் பண்ணறேன்.. 

******

ஹலோ.. எனக்கு ட்ரைனிங் முடுஞ்சுது.. 

நானும் என் வேலைய முடிச்சுட்டேன்..

நாம என்ன தகவல் பரிமாற்ற ஒப்பந்தாம போட்டுருக்கோம்.. எனக்கு ட்ரைனிங் முடுஞ்சுருச்சுனா கிளம்பிவா னு அர்த்தம்..  

மாரியாத்தா.. எனக்கு இந்த பொண்ணுங்க கூட எல்லாம் பேசி பழக்கம் இல்ல.. சோ நீ நேராவே சொல்லு..

சீக்கிரம் கெளம்பு..

 ஹாஸ்டல் போக என்ன இவ்வளவு அவசரம் ?

 உனக்கு தெருஞ்ச கெட்ட வார்த்த ரெண்டு மூணு சொல்லிகொடேன்..

 எதுக்கு?

 உன்ன திட்ட தான்..  ஹாஸ்டல் போகவா உன்ன கூப்பிடறேன் ?

 சரி சரி.. இரு வரேன்.. நான் பைக் எடுத்துட்டு வரேன்.. நீ கம்பெனி வாசல்ல நில்லு!

 ***************

 இது என்னங்க அதுக்குள்ள ராத்திரி ரெண்டு ஆகிடுச்சு?? அவள டிராப் செஞ்சுட்டு வரும்போது மணி பத்து.. அதுக்குள்ள நாலு மணிநேரம் ஓடிருச்சு.. இத்தன நேரம் இன்னைக்கு நடந்தத பத்தி மட்டும் நெனச்சுட்டு இருக்கேன்.. நெனச்சது எல்லாம் அவ கூட இருந்த நேரம் மட்டும்!

 நான் இவ்வளவு ப்ரீயா எந்த பொண்ணு கிட்டயும் பேசுனது இல்லங்க.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. இதுக்கு பேரு தான் அதா?? அட விடுங்க வெக்கப்படறேன்.. என்கிட்டே போய் அதுனா எதுன்னு எல்லாம் கேட்டுகிட்டு.. அதே தான்!!

 நாளைக்கு காலைல பசிக்குமா, நைட் தூக்கம் வருமானு த்ரில்லிங்கா இருக்கு.. இந்த தமிழ் படத்துல வேற அது வந்துச்சுனா இது எல்லாம் வரதே. எனக்கு வேற அது வந்து மொதல் நாளா.. அதான் த்ரில்!

 கண்டதும் காதல் வரும் தெரியும்.. இது என்னங்க எனக்கு கண்ட நேரத்துல காதல்?? நான் தூங்க ட்ரை பண்றேன்..

  **********

 ஆசையே அலைபோலே..

 ஹலோ.. சொல்லுங்கம்மா..

 உங்க அத்த பேசுனாங்கப்பா,, சொந்தம் விட்டு போய்டக்கூடாதுனு விமலாவ சொந்தத்துல கட்டி தரலாம்னு இருக்காங்களாம்.. உனக்கு தான் அவளப்பத்தி பேசுனவே சின்ன வயசுல இருந்து பிடிக்காதே.. அதான் அருண் கிட்ட பேச சொல்லீட்டேன்ப்பா,..

 ம்மா.. என்ன பேசவே விடமாடீங்களா.. காலங்காத்தால.. (என்று எரிந்தேன்..)

 சாரிப்பா.. அவள பத்தி பேசுனா உனக்கு பிடிக்காதுன்னு தெருஞ்சும் காலங்காத்தால இத சொல்லீருக்க கூடாது.. அவ உன் நம்பர் கேட்டா.. கொடுத்தேன்.. கூப்டாளா..

 ம்ம்

 சரி.. நான் அப்புறம் கூப்பிடறேன்..

 *********

 “ஆசையே அலைபோலே.. நாமெல்லாம் அதேன் மேலே.. வாழும் நாளில் வாழ்நாளிலே.. வாழ்நாளிலே

 அதுக்குமேல அந்த பாட்டை கேக்க பிடிக்கல..  விளையாட்டா வெச்ச பாட்டு இப்படி விளையாடுது.. செல்லை அமைதியாக்கி யார் என்று பார்த்தேன் “விமி மை லைப்”  காலிங் என்று வந்தது. அப்படியே வைத்துவிட்டு படுத்தேன்… ஹலோ..

நேத்து தான் இது தான் லைப் னு முடிவு செஞ்சேன்.. இப்ப லைப் எனக்கு இது தான் லைப் னு பாடம் எடுக்குது.. ச்ச. இது தான் லைப்!

 விடவில்லை சளைக்காமல் அஞ்சு கால் வந்தது!!

 இத்தன நேரம் என்ன செஞ்ச ?

 தூங்கிட்டு இருந்தேன்

கனவு காணலையா??

 (மயி..)  எல்லாம் கனவு தான்..

 டூயட்டா  ??

 இல்ல ?

 ஏன் ?? அதான் சொன்னேன் இல்ல.. எல்லாம் கனவு தான்!

 நீ ஏன் தத்துவமா பேசற.. சம் திங் ராங்..  நான் யாரு பேசறேன்னாவது தெரியுதா ?

 விமலா..

 ஹி ஹி.. இங்க தான் ட்விஸ்ட் வெச்சிருக்கோம்.. நான் தேனி குஜலாம்பாள்.. டூயட் பாடலாமா ?

 எப்ப இருந்து பேர மாத்துன?

 இப்ப தான்.. நீ உங்க அம்மா கிட்ட எரிஞ்சு விழுந்ததுல இருந்து..

 


Responses

 1. நல்லா இருந்தது..

 2. இதனால் தாங்கள் கூற விழைவது என்னவோ ?????????????

  உனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்குடா எழுத்துல .நல்லா இருக்கு .
  இப்பிடியே maintain பண்ணு

 3. கலக்கல் பதிவு புவனேஷ், அது தான் நேற்று சொன்னனே உன் பதிவ பாத்தா பொறாமையா இருக்குனு, Romance நல்லா வருது புவனேஷ் உனக்கு.

  //தேனி குஜலாம்பாள்// எப்படி இருக்காங்க?

 4. hi buvanesh,
  very funny how come you can write this way.i really enjoy it.keep it up.

 5. சரியா புரியலப்பா… தனியா பேசலாம்.

 6. 🙂

 7. நன்றி ஈரா அண்ணே..

  @Suresh Anna
  வாங்க சுரேஷ்.. தேங்க்ஸ் பார் தி டேமேஜ்

  @Adaleru
  மச்சி.. உனக்கு மனசாட்சியே இல்லையா ?? இந்த கதைல ரோமேன்ஸ் இருக்கா?? நீ இப்படி எல்லாம் கமெண்ட் போட்டா நான் காசு கொடுத்து போடா சொன்னேன்னு மக்கள் நெனச்சுக்க மாட்டாங்களா ??

  @Uma
  நன்றி உமா ஜி.. (உங்களுக்காவது கத புருஞ்சுதா ??)

  @அதி
  பேசலாம் நட்பு

  @ Kunthavai Akka
  😦

 8. I hope so.

 9. என்ன புவநேஷ், பேசினா… கோபப்படுரீங்க..
  சிரிச்சா…. அழுவுரீங்க… என்ன நடக்குது.
  தம்பிக்கு கோபமா?
  ஏதாவது தப்பா பேசியிருந்தேன் என்றால் பெரிய்ய மனசோடு மன்னித்துவிடுங்களேன் Please.

 10. //புவநேஷ், பேசினா… கோபப்படுரீங்க//

  இது எப்ப அக்கா நடந்துச்சு? என்னக்கே தெரியல! நான் எப்ப கோவப்பட்டேன்?

  //ஏதாவது தப்பா பேசியிருந்தேன் என்றால் பெரிய்ய மனசோடு மன்னித்துவிடுங்களேன் Please.//

  இது உங்களுக்கே ஓவரா இல்லையா? என்ன நடக்குதுனே எனக்கு புரியல !

 11. இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும் ஒரு
  பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
  நான்,
  ஒரு முட்டு சந்து ஓரமா
  புதுசா கட விரிச்சிருக்கேன்.

  http://vaarththai.wordpress.com/

  அப்டியே
  அந்தான்ட…இந்தான்ட‌
  போறசொல‌
  நம்ம கடையான்ட வந்து
  எட்டி பாருங்கோ… Senior

 12. Kalakkal Machi…

  Love Onnu Start aayiducchu….

 13. Makkale kavanicheengala vara vara intha paiyan blogla romance mazhai pozhiyaraan.

  Note pannunga pa…

 14. Machi intha kathaikku Day after tomorrow nu thalaippu vaichi moonaavathu naal marupadiyum nee theni kunjaraambaalaanu kekka athukku “avunga” illa naan vimala nu solra maathiri kathai mudichudalaamaa?

 15. //இது உங்களுக்கே ஓவரா இல்லையா? என்ன நடக்குதுனே எனக்கு புரியல !

  (I know u will ) take it easy… 🙂

 16. @Soundr
  கலக்கு மச்சி.. வாழ்த்துக்கள்

  @ Sriram
  வா மச்சி.. நீ சொல்லற தலைப்ப போட்டுருக்கலாம்.. ஆனா அது இங்கிலீஷ் படம் மாதிரி இருந்திருக்கும். அப்புறம் ஹாலிவுட் ல இருந்து நமக்கு கால் வரும்.. இதெல்லாம் தேவையா ? 🙂

  @Kunthavai Akka
  ரைட்டு கா..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: