--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 23, 2009

ஐ.டி பூம்..


இப்ப சென்னைல ஐ.டிய பொறுத்த வரைக்கும் ‘காக்னிசன்ட்’ (Cognizant) தான் டாப்பு.. ஆளுகள சும்மா வளச்சு வளச்சு எடுக்கறாங்க!!
முன்னாடி எல்லாம் எங்க கம்பெனில யாராவது வேலைய விட்டு போறேன்னு சொன்னா எங்க போற? எவ்வளவு சம்பளம் ?? கேட்டு ஒரு கூட்டம் நடக்கும்.. அவங்க மேனேஜர் கூப்ட்டு ஏன் போறீங்க? உங்களுக்கு இங்க என்ன பிரச்சனை? னு எல்லாம்  கேட்டு கொடைய ஒரு மீட்டிங் நடக்கும்..
 
இப்ப எல்லாம் அந்த மீட்டிங் இப்படி தான்
யென் ?  
 காக்னிசன்ட் !!
அவ்வளவு தான் மீட்டிங் முடுஞ்சுது!! 
நம்ம தோஸ்து கோபால் க்கு  அந்த கம்பெனில வேல கெடச்சிருக்கு.. சரி நாமள்ளும் ஏதாவது டிப்ஸ் வாங்கிக்கலாம்னு என்னடா கேட்டாங்கனு கேட்டா
 
உன் பேர் என்ன??
 
கோபால்..
 
இன்னைல இருந்து நீ COBALனு சொல்லி, அவங்க கூட்டத்துல சேத்துகிட்டாங்களாம்
இன்னொருத்தருக்கு..
உன் ஊரு என்ன ??
ஊட்டி
அப்பா இன்னைல இருந்து நீ குவாலிட்டி!
 
எனக்கு ஒரே ஆச்சிர்யம்.. சரி இன்னும் சில பேர கேக்கலாம்னு பாத்தா அது வடிவேல் ஜோக் மாதிரி போகுது.. உன் பேரு என்ன ரவி மேஸ்திரி .. இன்னைல இருந்து நீ ரவி சாச்திரிங்கற மாதிரி போகுது..
***
 
நான் மேனேஜர் கிட்ட போய்  நம்ம கம்பெனில ஆள் எடுக்கறாங்க.. நீங்க ஆள் எடுக்க போறீங்களா ??
 
அப்படியா?? என்னப்பா சொல்லற ?? மார்க்கெட் அப் ஆகிடுச்சா ??
 
அப்படி தெரியலைங்க
 
அப்பா ஏதாவது பெரிய ப்ராஜெக்ட் வந்திருக்கா?? ( இந்த கேள்விய யாரு யாரு கிட்ட கேக்கணும்..
யாரு யார கேக்கறாருனு நீங்களே பாருங்க!!)
 
ஆமாம்.. காக்னிசன்ட்க்கு பெரிய ப்ராஜெக்ட் வந்திருக்கு
 
டேய் நான் நமக்கு கேக்கறேன்.. ஆள் எடுக்கறோம் இல்ல ??
 
அதாங்க அவங்களுக்கு பெரிய ப்ராஜெக்ட் வந்திருக்குன்னு நம்ம ஆள்க எல்லாத்தையும் எடுத்துடாங்க.. இப்ப வெளிய போன முப்பது நாப்பது பேருக்கு பதிலா ரெண்டு மூணு பெற எடுக்கறோம் னு சொல்லி புரிய வெச்சேன்..
இவருக்கு விளக்கம் சொல்லியே..

Responses

 1. ஒரு போஸ்ட் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா போதுமே………..
  அடுத்தது மொக்க தான் போல
  இவிங்க திருந்த மாட்டாங்கப்பா

 2. nallathaaaaaaaan இருக்கு.
  இருந்தாலும்……………………………??????
  பரவால்ல…
  இப்படியே maintain பண்ணு

 3. //கோபால்..
  இன்னைல இருந்து நீ COBAL
  ஊட்டி
  அப்பா இன்னைல இருந்து நீ குவாலிட்டி//

  🙂

 4. @ Suresh
  சுரேஷ் அண்ணா.. விடுங்க விளையாட்டு பையன் கொஞ்சம் விளையாடிட்டு போறேன்
  //nallathaaaaaaaan இருக்கு.
  இருந்தாலும்……………………………??????//
  என்ன……………………?? ஏதாவது கேட்ட வார்த்தையா ??

  @ soundr
  ஏண்ணே பிடிக்கலையா? ரெண்டு வார்த்த திட்ட கூடவா மனசு வரல ?

  • எனக்கு தெரிந்த real life incident
   நியாபகத்திற்கு வந்தது.
   சென்னையில் புகழ் பெற்ற ஒரு pharma company – trainee interview.
   Whats your name..?
   ……
   Where are you from?
   Sir, Ooty.
   Oh,…you join Quality control.
   Interview செய்த QC Head Ootyகாரர்.
   அதே இத இங்க படிச்சஉடனே
   சிரிப்ப அடக்கமுடியல.

 5. //இப்ப வெளிய போன முப்பது நாப்பது பேருக்கு பதிலா ரெண்டு மூணு பெற எடுக்கறோம் னு சொல்லி புரிய வெச்சேன்..
  //

  பினிசிங் சூப்பரு……

 6. வேலைக்கு ஆள் எடுக்க போறீங்களா ? … நானும் அப்ளை பண்ணவா புவனேஷ்.
  எங்க ஆபீசில் internet connection புடிங்கிட்டாங்க , அதனால வேற வேலைய பாக்கலாம்மான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: