--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 26, 2009

தேங்கா பன்..


ரொம்ப நாளைக்கு அப்புறம் ரெண்டு வாரம் முன்னாடி இந்த தேங்கா பன் சாப்டேன்.. அதுக்கு தான் இந்த நினைவூட்டல்..
 
இப்ப எல்லாம் என் அக்கா பையனுக்கும் பொன்னுக்கும் என்னென்னமோ வாங்கி தரேன், அவங்களுக்கு அது “பார்ட் ஆப் லைப்”.. வாங்கி தந்தா அதிக்கப்பட்சம் அதுல பாதிய சாப்பிடற வரைக்கும் சந்தோஷம்.. மீதிய சாப்பிடும் போதே அடுத்த பிரச்சனைக்கு வந்திருவாங்க.. 
 
நான் அவங்கள மாதிரி இருக்கும் போது எனக்கு வீட்டுல வாங்கி தர ஒரு சிலதுல முக்கியமான திண்பண்டம் இந்த தேங்கா பன்.. அதுவும் நெனச்சப்ப எல்லாம் கிடைக்காது.. இல்ல இல்ல சம்பள நாளுல மட்டும் தான் கிடைக்கும்னு தெரியும் அதுனால அன்னைக்கு மட்டும் தான் அந்த நினைப்பு வரும்..
 
ரெண்டு வாங்கி மூணு பேரு (நான், அண்ணா, அக்கா) பங்கு போட்டுக்கணும். இல்ல நாலு கிடைக்கும் அதுல பங்கு போட்டுக்கணும்..
ஆனா ரெண்டாவது கிடைக்கற நாலுல சின்ன பையன் எனக்கு கம்மியா தான் பங்கு கிடைக்கும்.. அதுக்காகவே ரெண்டு தேங்கா பன்ல எனக்கு அதிகமா பங்கு கொடுத்திடுவாங்க 🙂

என்னைக்காவது ஒரு நாள் ஒரு முழு ரோல் தேங்கா பன் (12 இருக்கும்னு நினைக்கறேன்!) கிடைக்கும்.. அந்த மாசம் தீபாவளி வரும்னு அர்த்தம்! எங்களுக்கு அது தான் தீபாவளி போனஸ்! !
 
அம்மா வந்து பங்கு எல்லாம் போட்டு தர மாட்டாங்க.. நாங்களே பங்கு போட்டுக்கணும். இருந்தும் சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டோம்.. அவங்க ரெண்டு பெரும் எனக்கு விட்டு கொடுப்பதால் 🙂  முக்கியமா நாங்க மூணு பெரும் சேந்து தான் சாப்பிடுவோம் (தினமும் இரவு சாப்பாடே இப்படித்தான்!)!! ஒருத்தர் வீட்டுல இல்லைனாலும் அவங்க வர வரைக்கும் வெயிட் பண்ணி தான் தீனி.
 
இப்ப வரைக்கும் இந்த சட்ட என்னுது, வாட்ச் அண்ணனுது னு பிரிவு எங்களுக்கு இல்ல.. எல்லாம் எங்குளுது!! இது என் அண்ணன் பைக், தம்பியோட சிஸ்டம்னு சில நண்பர்கள் சொல்லும்போது எனக்கு அந்த வார்த்தைகளே ரொம்ப அந்நியமா தெரியும்.. மே பீ, சின்ன வயசுல இருந்து எங்கள சேந்து சாப்பட சொல்லி அம்மா சொல்லிக்கொடுத்த பழக்கம்!!

எனக்கு தெருஞ்சு பாதி நாள் அவங்க (அண்ணனும் அக்காவும்) அவங்களோட பங்குல கடைசி வாய் சாப்ட்டது இல்ல.. ( மீதி நாள் எனக்கு தெரியாம சாப்ட்டாதான் உண்டு!)
 
இந்த சந்தோஷம் எல்லாம் ஆளுக்கு ஒரு Lays அல்லது குர்குரே வாங்கி தரும் இப்ப உள்ள தலைமுறைக்கு வருமான்னு தெரியல..  
 
 
தேங்கா பன் கூடவே வரும் பொம்ம பிஸ்கட் நான் சாப்பிடும் வரை வெயிட் செஞ்சு “ஏன் டா அந்த சின்ன குருவிய தின்ன” ,
அந்த வாத்து  உனக்கு என்ன டா பாவம் செஞ்சுது“,  “அரக்கன்” னு என் அண்ணனும் அக்காவும் சொல்லி என்னை  அழுக  வெச்சத  இப்ப நெனச்சாலும் கண்ணுல தன்னிவருது ஆனந்தத்தில்!!


Responses

 1. நெகிழ்ச்சி பதிவு நண்பா. என்ன சொல்லட்டும் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் என் கடந்த கால நினைவுகளுக்கு சென்று விட்டு திருப்பி வந்தேன். இந்த பதிவுல உங்களுக்கு வாழ்த்து சொல்வதை விட அக்காக்கும் , அண்ணாக்கும் தான் அதிகம் வாழ்த்தும் நன்றியும் சொல்லனும். முடிஞ்சா அக்காக்கும் அண்ணாக்கும் இந்த பதிவ காட்டுங்க,நீங்க எழுதினது என்று தெரியாமலேயே படிக்கும் போது அவங்களின் முக உணர்வை படம் பிடித்தா அது தான் பாசத்தின் சாராம்சமாக இருக்கும். நச்சத்திர பதிவு.

 2. ஏய்…….சூப்பரப்பு ………..
  நீ இப்படி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்ல பா!!!!!!!

 3. adaleru maadhiri ellam solla theriadhu maappi

  enakku theriyum

  nam kadandha kaala ninaivugal

  adhavadhu neeyum un annanum evlo close nu namma innoru annan thambi friend pol illamal

  touching da

 4. mail a padikkum podhu kooda ivlo attraction illa da

  aana posta padikkum podhu ….
  its really smart

  espesially final para impressed me so much

 5. vaarththai blog pola unnalayum mudiyudhu paaren

  7g rnbow colony dialogue

  “paaren ivanukkulleyum edho onnu irundhirukku”

  thats all machi

  pattaya kilappu

 6. சபாஷ். நல்ல நினைவுப் பதிவு

 7. //இது என் அண்ணன் பைக், தம்பியோட சிஸ்டம்னு சில நண்பர்கள் சொல்லும்போது எனக்கு அந்த வார்த்தைகளே ரொம்ப அந்நியமா தெரியும்..//
  Repeat….

  ஒரு முழு ரோல் தேங்கா பன்….
  Never happened in my life.

  பொம்ம பிஸ்கட், I miss u….
  😦

 8. புவனேஷ், ரெம்ப நல்லாயிருந்தது மலரும் நினைவுகள்.எனக்கும் ஒரு அண்ணா, அக்கா தான்… ம்… அது ஒரு காலம்…விடிய விடிய பேசி, எல்லாக் குசும்புகளையும் பண்ணி, சேர்ந்து தான் திட்டு வாங்குவோம். அதைபற்றி நானும் ஒரு நாள் எழுதுகிறேன்.

 9. @அடலேறு
  நன்றி நண்பா… நட்சத்திர பதிவுன்னு வாழ்த்துனதுக்கு நன்றி நண்பா !!

  @ Suresh

  நன்றி நண்பா.. மச்சி வார்த்தை யோட அந்த ப்ளாக் கிளாச்சிக்!! இத அதுகூட கம்பேர் செய்ய கூடாது!!

  நீயும் சீக்கிரம் ஜோதில ஐக்கியம் ஆகு நண்பா !!

  @மோட்டார் சுந்தரம் பிள்ளை
  நன்றிங்க!!

  @Vaarthai
  I too miss it !!

  @குந்தவை
  எழுந்துங்க அக்கா!! படிக்க ஆவலா இருக்கேன் !!

 10. HI BUVANESH,
  VERY NICE UPDATE.IT’S REMINDE ME MY CHILD HOOD WITH MY BROTHER AND SISTER.EVEN SMALL AMOUNT WE ARE VERY HAPPY TO SHARE AND EAT.
  COCONUT BUN IS OUR FAVORITE TOO.
  AFTER I READ I REALLY WANT TO EAT COCONUT BUN WITH MY BROTHER AND SISTER.
  KEEP IT UP

 11. //ரொம்ப நாளைக்கு அப்புறம் ரெண்டு வாரம் முன்னாடி இந்த தேங்கா பன் சாப்டேன்.. அதுக்கு தான் இந்த நினைவூட்டல்..//

  தேங்கா பன்னுக்கு ஒரு நினைவூட்டலா? இப்பவே கண்ண கட்டுதே…

 12. //எனக்கு தெருஞ்சு பாதி நாள் அவங்க (அண்ணனும் அக்காவும்) அவங்களோட பங்குல கடைசி வாய் சாப்ட்டது இல்ல..//

  சாப்பிட விட்டது இல்லன்னு சொல்லு…

 13. //வாங்கி தந்தா அதிக்கப்பட்சம் அதுல பாதிய சாப்பிடற வரைக்கும் சந்தோஷம்.. மீதிய சாப்பிடும் போதே அடுத்த பிரச்சனைக்கு வந்திருவாங்க..//

  குழந்தைங்க மட்டும் இல்ல நம்மளும் அப்படி தானே? கெடைக்கிற வரைக்கும் தான் எதுக்கும் மரியாதை… கெடைச்சதும் கண்டுக்கவே மாட்டோம்…

 14. //ஒருத்தர் வீட்டுல இல்லைனாலும் அவங்க வர வரைக்கும் வெயிட் பண்ணி தான் தீனி.//

  இனி இதெல்லாம் வெறும் கதை தான். வீட்டுக்கு ஒரு வாரிசு தான் இப்போவெல்லாம்

 15. ஒரு தேங்கா பன்ன வெச்சு இவ்வளோ touching flash back சொல்ல முடியும்னு எதிர் பார்க்கவே இல்ல டா… கலக்கற போ…

  எல்லாம் சரி, அதுக்குள்ளே ‘அந்த காலத்துல நாங்கெல்லாம்’ அப்படின்னு பேச ஆரம்பிச்சிட்ட? உன் birth certificate நான் பாக்கணுமே…

 16. Very true. Nice work Bhuvanesh. U have brought the fact well… 🙂 I feel that apart from sharing eatables, now a days the kids are missing few more things like home made snacks, out door games etc…

 17. நன்றி உமா..

  நன்றி சரவணா..

  //சாப்பிட விட்டது இல்லன்னு சொல்லு//

  அதத்தான சொல்லீருக்கேன் ? “( மீதி நாள் எனக்கு தெரியாம சாப்ட்டாதான் உண்டு!)”

  //இனி இதெல்லாம் வெறும் கதை தான். வீட்டுக்கு ஒரு வாரிசு தான் இப்போவெல்லாம்//

  //எல்லாம் சரி, அதுக்குள்ளே ‘அந்த காலத்துல நாங்கெல்லாம்’ அப்படின்னு பேச ஆரம்பிச்சிட்ட? உன் birth certificate நான் பாக்கணுமே//

  சரவணா அங்கிள் எனக்கு வயசு பதினொன்னு.. பத்து வயசு வரைக்கும் இருக்கற குழந்தை பருவத்த மிஸ் பண்ணறேன்!!

  Thanks a lot krishna..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: