--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 15, 2009

மிஸஸ். ஆனந்த் (part – 1)


நான் தான் மிஸஸ். ஆனந்த். இந்த நர்ஸ் அம்மா வெயிட் பண்ண சொல்லிருக்காங்க.. நான் இந்த மருத்துவமனைக்கு வந்த கதைய நெனச்சு பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.. நான் இங்க வந்ததுக்கு சந்தோசபடறேன்னு சொன்னவுடனே நான் டாக்டர், நர்ஸ், கம்பௌண்டர் நல்ல சம்பளம் கிடைக்குதுனு எல்லாம் யோசிக்காதீங்க.. அதுக்காக நான் கர்பமா இருக்கேன்னு நெனச்சுக்காதீங்க.. நான் வெறும் நோயாளி மட்டும் தான்!! 

நானும் ஆனந்தும் காதல் கல்யாணம் தான் செஞ்சுகிட்டோம்.. அப்ப எல்லாம் நான் அவன பேரு சொல்லி தான் கூப்பிடுவேன்.. கல்யாணத்துக்கு  அப்புறம், அவன் னு கூப்பிட்டா தமிழ் கலாச்சாரமும், தெலுங்கு கலாச்சாரமும்  சேந்து  பாதிக்க  படுதுன்னு  சொந்த  பந்தம்  எல்லாம் பீல் செஞ்சாங்க… சரின்னு நானும் அந்த நாய்க்கு மரியாதை தர தொடங்கிட்டேன்.. நான் அவன நாய்னு கூப்ட்ட விஷயத்த அவன் கிட்ட சொல்லீராதீங்க.. நீங்க சொல்லி அவன் கோவப்பட்டு என்ன திட்டுனா கூட தாங்கிக்கலாம்! அந்த நாய் அதுக்கு சந்தோசப்பட்டு முத்தம் தரும்!! அப்புறம் ஒரு கவிதை சொல்லுவான்.. இது எல்லாம் யாரு தாங்கறது!

இப்படி தான் அன்னைக்கு நான் எங்கையோ வெளிய போயிட்டு வந்தேன்.. இவன துவச்ச துணிய காயப்போட சொல்லீருந்தேன்!!  வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே பாத்தா துணி அப்படியே இருந்துச்சு.. எனக்கு செம கோவம்..

யோவ், ஏன் துணிய காயப்போடலனு ஹால்லு ல இருந்து காத்தீட்டேன்

பதிலுக்கு பெட்ரூம்ல இருந்து

உன்னை நினைக்கவே நேரம் இல்லை

இதில் எப்படி காயப்போடுவது??

(பெட்ரூம் நோக்கி நடக்க தொடங்கி..)

அய்யா சாமி நீ வேலை செய்யலைனாலும் பரவால, தயவு செஞ்சு கவிதை மட்டும்.. ஏய், இரு இரு.. தம் அடுச்சியா ??

….

அடிக்க வேண்டாம்னு உங்களுக்கு எவ்வளவு தடவ சொல்லிருக்கேன்? அதுவும் எப்ப பாத்தாலும் வீட்டுல..

நீ வேணும்னா என்ன நாலு அடி அடுச்சுக்கோ..என்ன மரியாதையா மட்டும் கூப்படாத.. அதுல லவ் வே இல்ல!

ஆமா எனக்கு உங்க மேல லவ் இல்ல.. அதுனால அப்படி தான் கூப்பிடுவேங்க..

சரி மா கோவப்படாத (சொல்லிகொண்டே கன்னத்தில் முத்தமிட வந்தான்!)

(கன்னத்தில் மெதுவாக அறைந்து) தம் அடுச்சு அடுச்சு கருத்த உதட்டோட எனக்கு முத்தம் தராத!!

கர்ணனுக்கு கொடுத்து சிவந்தது

கைகள் என்றால்

எனக்கு 

உதடுகள்!!

இது கவிதையாடா??

ஆமாம்.. நான் கவிதை எல்லாம் எழுத வேண்டாம்

நானும் அதே தான் சொல்லறேன்.. நீ தயவு செஞ்சு கவிதை எழுதாத..

செல்ல்ல்லம்.. நான் கவிதை எழுத வேண்டாம்.. சொன்னாவே வரும் னு சொல்ல வந்தேன்.. உனக்காக ஆசையா சொன்னேன் (னு சிணுங்கினான்)

சரி சரி.. நல்லா இருந்துச்சு.. உம்மா உம்மா.. அதான் உம்மா கொடுத்துட்டேன் இல்ல? சிரி..

ஹி ஹி..

இப்ப எனக்கு ஒரு டவுட்.. கர்ணன் கொடுத்தத வாங்க மாட்டார் நீ திருப்பி வாங்கிட்ட??

கர்ணன் சுயநலவாதி.. தேவையான அளவை மட்டும் கொடுத்து தானத்தோட புண்ணியத்த அவன் யாருக்கும் தரள.. ஆனா நான் உன் உதடும் செவக்க ஊக்குவிக்கறேன்!!

இப்படியே பேசுனா.. ராத்திரி..

 ராத்த்த்த்த்திரி ??

ராத்திரி பட்டினி தான்.. இன்னும் சமைக்கல!!

சாப்பாடா.. நான் என்னமோ ஏதோ சொல்ல போறன்னு நெனச்சுட்டேன்!!  சரி இப்ப சமைக்கலாம்..

போ என்னால முடியாது.. நீயே செஞ்சு கொடு..

இரு.. என் மூஞ்சிய நேரப்பாரு..

போடா..

(என் முகத்தை ரெண்டுகையாலையும் பிடித்து) சொல்லு.. உடம்புக்கு என்ன ?

ஒன்னும் இல்ல..

சொல்லு

வயித்து வலி.

எப்ப இருந்து ? (என்று படபடப்புடன் கத்தினான்)

விட்டு விட்டு வலிக்குது

ஏன் சொல்லல? (படப்படப்பு அதிகம் ஆச்சு.. அவனுக்கு BP இருக்கும் போல.. எதுக்கும் செக் பண்ணனும்னு அப்ப நெனச்சேன்! )

சொன்னா நீ பயப்படுவ.. இப்ப பாரு எப்படி டென்ஷன்னா இருக்க.. பயப்படாத.. ஒன்னும் இல்ல!

சரி வா டாக்டர் கிட்டபோலாம்

இப்ப வேண்டாம் டா.. காலைல போலாம்

வேண்டாம்.. இப்பவே போலாம்.. அப்புறம் ராத்திரிக்கு உன்னால நிம்மதியா தூங்க முடியாது (னு துடித்தான்)

என்ன ராத்திரி தூங்கவைக்க தான் உன் கவிதை இருக்கே?

வயித்துவலிக்கு 

பதில்

காதுவலி??

நீ இப்படியே பேசு நான் சீக்கிரம் தூங்கிருவேன்

இப்ப வயித்துவலிக்கு  டாக்டர பாக்கலாம்.. வந்து கவிதை சொல்லுவேன்.. 

அப்ப காலைல காதுவலிக்கு டாக்டர் கிட்ட கூட்டீட்டு போவியா ?

அவன் என் சமதத்துக்கு எல்லாம் வெயிட் பண்ணல.. கிளம்பி என்ன இழுத்துட்டு போய்ட்டான்..

                                                                                                              (தொடரும்)

மிஸஸ். ஆனந்த் (part – 1)


Responses

 1. நா கூட தொடர்ன உடனே படிக்க பயந்தேன்.
  நல்லா இருக்குப்பா.

 2. நல்ல எழுத்து நடை நண்பா உனக்கு, கதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

 3. //….யோசிக்காதீங்க..//
  //…நெனச்சுக்காதீங்க….//
  ok…
  மிஸஸ். ஆனந்த், அப்ப யாரு…?

  //..நாய்க்கு..//
  அப்ப நாயாயிருக்குமோ…?

  //…துவச்ச துணிய காயப்போட…//
  அப்ப மிஸஸ். ஆனந்த், நாய் இல்ல.

  //…மருத்துவமனைக்கு வந்த கதைய நெனச்சு பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு…//
  ஏன் சந்தோசபடணும்….?
  மிஸஸ். ஆனந்த் யாரு?

  “ஒரு வயசு பொண்ணு” மாதிரி இதுலயும் எதுனா டிபரண்ட்டா இருக்குமோ.

  வெயிட் பண்ணி பாத்துற வேண்டியது தான்…

 4. நன்றி அதி!!

  நன்றி அடலேறு !!

  நன்றி சௌந்தர்.. இவ்வளவு ஆராய்ச்சி பண்ண இந்த கதைல விஷயம் இருக்கா ?

 5. புவனேஷ்….. ரெம்ப நல்லா இருக்கு தம்பி.

  பார்ட் 2 வை முதலில் படித்து விட்டேன் :).

  குட்டி குட்டி கவிதையும்…. ரெம்ப அழகு.
  கதாசிரியர் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

 6. mm, karnan upmanam differnt ah iruku. kavidaigal mokkaya irundalum padika nalla iruku.

 7. @kunthavai Akka
  நன்றி அக்கா!! நீங்க எல்லாம் கொடுக்கற ஊக்கத்துல தான் வண்டி ஓடுது!!

  @bhanu
  நன்றி ங்க.. கத படி அவன் மொக்கை கவிதை எழுதறவன் தான ?
  உப்மானம்னா என்னனு தெரியல சாரி..

  http://www.google.com/transliterate/ ட்ரை பண்ணிபாருங்க

 8. oh upamanam means neega examples nu eduthukalam or neega eyudi irukingale avan udadu sivandadu smoke panadala, but anand sonnadu karnan kai kuduthu sivandadunu, idula inoru meangum iruku neegalum adadan solli irupinganu nenakaren, adavadu “karnan kai dharmam pani sivandadu, en udadu unaki mutham kuduthu sivandadunu” meaning varumnu nenakaren, its correct.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: